சென்னை மாம்பலத் திலுள்ள அலுவலகத்தில் அரசு உயரதிகாரி ஒருவரும், அவரது மனைவியும் நாடியில் பலன்கேட்க வந்தனர்.

அவரின் மனைவி "ஐயா, என் கணவர் உயர்ந்த பதவியில் உள்ளார். பணம், சொத்து, அந்தஸ்து என எதிலும் குறைவில்லை. ஆனால் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போல், நிம்மதியிழந்து வாழ்கிறோம்.

எங்களுக்கு இரண்டு பெண்கள், மூத்தவளுக்கு இப்போது 34 வயது; இளைய மகளுக்கு 30 வயது. இருவருக்கும் திருமணம் தடைப்பட்டு, காலம் கடந்துகொண்டே வருகிறது. மூத்தவளுக்கு கடந்த எட்டு வருடங் களாகத் திருமணம் செய்துவைக்க முயற்சி செய்துவருகிறோம்.

இதுவரை நாங்கள் அனைத்துக் கோவில்களுக்கும் சென்று பரிகாரம், பூஜை, திருக்கல்யாணம் என அனைத் தையும் செய்தோம். ஆனால் பலன் தான் இல்லை. மூத்த மகள், "எனக்கு திருமணமே வேண்டாம்' என்கிறாள்.

Advertisment

dd

எங்கள் உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறவும் முடியவில்லை. என் மகள்களின் திருமண காரியத்தடைக்கான காரணத்தைக் கூறி, அவர்களுக் குத் திருமணம் நடைபெற அகத்தியர் தான் நல்வழி காட்டவேண்டும்'' என கண்கலங்க கூறினார்.

அந்தத் தாய் கூறியதைக் கேட்டு விட்டு ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தி யர் ஓலையில் தோன்றி, "இவன் மகள்கள் திருமணத் தடைக்கு இவள் கணவனின் வம்ச பாவ- சாபப் பதிவுகள் காரணமல்ல. இந்த தாயின் முன்னோர்கள் காலத்தில், இவள் குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும், வாழவந்த பெண்ணுக்கும் இவள் வம்ச முன்னோர்கள் செய்த பாவம்தான் காரணம்.

இவளது தந்தையின் பாட்ட னாரில், பெருமாள் பெயர்கொண்ட ஒருவன், மனைவி, குழந்தைகள் இருக்கும்போதே, தன் மனைவியின் தங்கையை விரும்பிப் பழகி, அவளை இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டான். அவளுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குடும்பத்தின் அனைத்துப் பொறுப்பு களையும் மூத்த மனைவிதான் நிர்வகித்துவந்தாள்.

மூத்த மனைவி, தன் பிள்ளை களுக்கு பருவவயதில் சிறப்பாகத் திருமணம் செய்துவைத்தாள்.

ஆனால் தங்கை மகளுக்குத் திருமணம் செய்துவைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. கணவனும் அந்தப் பெண்ணின் திருமணம் பற்றி கவலைப்படவில்லை. இறுதியில் அந்தத் தாய் தன் முயற்சியால் ஒருவனுக்கு மகளைத் திருமணம் செய்துவைத்தாள். அந்த திருமணத்திற்கு மூத்தவளான அக்காளும் செல்லவில்லை; கணவனையும் செல்லவிடாமல் தடுத்துவிட்டாள்.

இளைய மனைவி, "பெற்ற தந்தைகூட, தன் மகள் திருமணத்திற்கு வரவில்லையே' என்று மனம் வெறுத்து, "என் மகளின் திருமணத் திற்கு தடை செய்து, அவளின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தடுத்தது என் அக்காள்தான். அவள் எங்களுக்குச் செய்த இந்த பாவத்தால், நான்பட்ட கஷ்டத்தை, இனி அவள் எத்தனை பிறவி எடுத்தாலும் அனுபவித்துத் தீர்ப்பாள்.

என் மகளுக்குத் திருமணம் தடைப்பட்டது போல், அடுத்தடுத்த பிறவிகளில் அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கும் திருமணம் தடையாகும். என் மகள் திருமணம் பற்றி எல்லாரும் கேட்டதுபோல், அவள் மகளின் திருமணம் எப்போது என்று ஊரே கேட்கும். நான் மனம் நொந்ததுபோல், அவளும் தன் பெண்களை நினைத்து மனமொடிந்து வாழ வேண்டும். அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தை களில், இளைய மகளுக்குத் திருமணம் நடந்த பின்பு தான் மூத்த மகளுக்கு நடக்கும்' என தான் அனு பவித்த அனைத்து துன்பங்களையும் சாபமாக வாரியிறைத்துவிட்டு மாண்டுபோனாள்.

அந்த ஆத்மாவின் கோபம், இப்பிறவி யில் இவளைத் தொடர்ந்து, இவள் மகள்களின் திருமணத்தை தடைசெய்து வருகிறது. இவளின் இளைய மகளுக்குத் திருமணம் நடந்து முடிந்தால்தான் மூத்த மகளுக்குத் திருமணம் நடக்கும்'' என்று கூறி அகத்தியர் மறைந்தார்.

இவற்றையெல்லாம் கேட்ட அந்தத் தாய், "ஐயா, மூத்தவள் இருக்க இளையவளுக்குத் திருமணம் செய்தால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா? மூத்த மகளுக்கு ஏதோ குறை இருப்பதால்தான் இளைய மகளுக்குத் திருமணம் செய்கிறார் கள் என உறவுகள் கூறாதா? இதனை நாங்கள் எப்படி செய்வது?'' என்று கேட்டார்.

"அம்மா, சாஸ்திரம், சம்பிரதாயம், பரிகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அல்லது அகத்தியர் கூறிய வழியை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைப்பதும் உங்கள் முடிவுதான். இதுவரை செய்த பரிகாரங்களால் என்ன பலன் அடைந்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும்'' என்றேன்.

"அகத்தியர் கூறியபடியே செயல் படுகிறோம். எங்கள் குழந்தைகள் இருவருக்கும் மாப்பிள்ளைகள் யார்? அவர்களைப் பற்றிய விவரங்களை அகத்தி யரிடமே கேட்டுக் கூறுங்கள்'' என்றார்.

ஓலையைப் பிரித்துப் படித்தேன், அகத்தியர், இரண்டு பெண்களுக்கும் அமையும் வரன்கள், அவர்கள் செய்யும் தொழில், குடும்பம் பற்றிய விவரங்கள், திருமணம் நடைபெறும் காலம் என அனைத்தையும் கூறிவிட்டு மறைந்தார்.

மனதில் வேதனையுடன் வந்த கணவன்- மனைவி மனக்களிப்புடன் விடை பெற்றுச் சென்றனர்.

இன்றைய நாளில், நிறைய ஆண்கள், பெண்கள் திருமணம் தடையாவதற்கு இதுபோன்று வம்சத்தில் உண்டான பாவ- சாபம்தான் காரணம்.

செல்: 99441 13267