Advertisment

தொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்? - மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/why-sudden-fall-business-mahesh-verma

பொருளாதாரரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் பலர் திடீரென்று வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். பணத்தை இழந்து வாடுகிறார்கள். இந்நிலை ஏன் ஏற்படுகிறது? ஒருவர் ஜாதகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருந்தால் அல்லது மூன்று கிரகங்கள் சுய வீட்டில் இருந்தால் அல்லது குருவால் பார்க்கப்பட்டால் அல்லது குருவுடன் இருந்தால், அந்த மனிதருக்கு தொழிலிலில் பெயர், புகழ் வந்துசேரும். அப்போது அவர் தொழில் செய்யும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். தான் செய்வதுதான் சரி என்று நினைப்பார். அப்போது அவருக்கு 2-ஆம் அதிபதி தசை அல்லது 8-ஆம் அதிபதி தசை அல்லது விரய ஸ்தானாதிபதியின் தசை நடந்தால், விரோதமாக இருக்கும் வாசல் உள்ள வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ வாங்கிவிடுவார். அதனால் பல தொல்லைகளை சந்திக்க நேரும். வேறு இடத்திற்கு அவர் மாறிவரும்வரை பிரச்சினைகள்

பொருளாதாரரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் பலர் திடீரென்று வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். பணத்தை இழந்து வாடுகிறார்கள். இந்நிலை ஏன் ஏற்படுகிறது? ஒருவர் ஜாதகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருந்தால் அல்லது மூன்று கிரகங்கள் சுய வீட்டில் இருந்தால் அல்லது குருவால் பார்க்கப்பட்டால் அல்லது குருவுடன் இருந்தால், அந்த மனிதருக்கு தொழிலிலில் பெயர், புகழ் வந்துசேரும். அப்போது அவர் தொழில் செய்யும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். தான் செய்வதுதான் சரி என்று நினைப்பார். அப்போது அவருக்கு 2-ஆம் அதிபதி தசை அல்லது 8-ஆம் அதிபதி தசை அல்லது விரய ஸ்தானாதிபதியின் தசை நடந்தால், விரோதமாக இருக்கும் வாசல் உள்ள வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ வாங்கிவிடுவார். அதனால் பல தொல்லைகளை சந்திக்க நேரும். வேறு இடத்திற்கு அவர் மாறிவரும்வரை பிரச்சினைகள் உண்டாகும். வீழ்ச்சி ஏற்படும். பணச்சிக்கல் உண்டாகும்.

Advertisment

business

சிலர் வாஸ்து தோஷம் உள்ள பூமியை வாங்கிவிடுவார்கள். அதன் பிரதான வாயில் சரியான இடத்தில் அமையாமல் இருக்கும். அதனால் பிரச்சினைகள் உண்டாகும்.

சிலரின் ஜாதகத்தில் ராகு 2 அல்லது 8-ல் இருந்து, அவருடைய வீட்டின் வடமேற்கு திசை வளர்ந்து, படுக்கை அறைக்கு வடகிழக்கு இல்லாமல் இருக்கும். சிலரின் ஜாதகத்தில் ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கும்போது, அவர்கள் வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய வீட்டின் தென்மேற்கு திசை காலிலியாக இருக்கும். வடகிழக்கில் இருட்டு இருக்கும். காற்று வசதி இருக்காது. தென்மேற்கு திசையில் காற்று அதிகமாக இருக்கும்.

சிலருக்கு கர்ம ஸ்தானாதிபதி தசை நடக்கும் 8-ஆம் அதிபதியின் அந்தரம் நடந்தால், அவருடைய அலுவலகத்திற்கு வடகிழக்கு இல்லாமல் இருக்கும் அல்லது துண்டிக்கப்பட்டிருக்கும்.

அத்தகைய அலுவலகத்தில் வர்த்தகம் செய்தால், பணக்கஷ்டம் ஏற்படும். பெரிய அளவில் சிக்கல்களில் மாட்டிக்கொள்வார்கள்.

ஒரு ஜாதகத்தில் குரு பகவான் 6, 8 அல்லது 12-ல் இருந்தால், குரு தசை வருவதற்கு முன்பே, ராகு தசையின் முடிவில் அவர் தவறிழைக்க ஆரம்பித்துவிடுவார். தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வார். அவருடைய வீட்டில் தேவையற்ற பொருட்கள் அதிகமாக வந்துசேரும்.

கடுமையான பணப்பிரச்சினைகளை சந்திப்பார். பல நேரங்களில் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஓடிவிடலாம் என்றுகூட நினைப்பார்.

ஒரு மனிதருக்கு சூரிய தசை நடக்கும்போது, அந்த சூரியன் நீசமாக அல்லது 8-ல் அல்லது 9-ல் இருந்தால், அவர் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வார். சொத்துகளை இழக்கவேண்டிய நிலை உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்து 8 அல்லது 12-ல் இருந்தால், அல்லது சனி தசையில் குரு புக்தி அல்லது குரு தசையில் சனி புக்தி வந்தால் அவர் தன்னுடைய சக்திக்குமேல் வர்த்தகம் செய்வார். பேராசை காரணமாக பணப்பிரச்சினை உண்டாகும். அவருடைய நெருங்கிய நண்பர்களே ஏமாற்றிவிடுவார்கள்.

ஒரு ஜாதகத்தில் ராகு, சுக்கிரனுடன் 2 அல்லது 3-ல் இருந்தாலும், சுக்கிர தசையில் சனி புக்தி அல்லது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்தாலும் அவர் பெரிய அளவில் சிக்கலில் மாட்டிக்கொள்வார். வியாபாரத்தில் பல பிரச்சனைகள் உண்டாகும்.

ஜாதகத்தில் ராகு 9-ல் இருந்து, 4-ல் சூரியன் இருந்தாலும், ராகு தசையில் சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்தாலும் அவருக்கு அவமானப்படும் அளவுக்கு சூழல்கள் உண்டாகும். சிலருக்கு தொழில் நடக்கும் இடத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அதை மூடவேண்டிய நிலையும் உண்டாகும். அவர் வீட்டின் வாசல் தெற்கு வாசலாக இருந்து, அதற்கு தென்மேற்கு திசை காலிலியாக இருந்தால், அவருக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் உண்டாகும்.

பரிகாரங்கள்

தினமும் பசுவுக்கு வெல்லம் அல்லது மஞ்சள் வாழைப்பழம் தரவேண்டும்.

குரு பகவான் அல்லது விஷ்ணு பகவானின் ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்யவேண்டும்.

வீட்டில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக் கூடாது. தெற்கு திசையில் தலையை வைத்துப் படுக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு துண்டிக்கப்பட்டிருந்தால், அதை சரிசெய்யவேண்டும். தெற்கு திசை காலியாக இருந்தால், அதை மூடிவிடவேண்டும். ஞாயிற்றுக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்வது நற்பலன் தரும். தினமும் சூரிய பகவானை வணங்கவேண்டும். குலதெய்வத்தின் ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்யவேண்டும்.

தன் லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

செல்: 98401 11534.

bala210918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe