பல பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் மூன்று நாட்களைக் கடந்து 10, 15 நாட்கள் என்றுகூட ரத்தப்போக்கு இருக்கிறது. உடல்ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் இதற்குக் காரணம் இருந் தாலும், கிரகங்களும் காரணமாகின்றன.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லாமலிருந்து 5-ஆவது பாவாதிபதி அஸ்தமனம் அல்லது நீசமடைந்தால் அல்லது 5-ஆவது பாவத்தை இரண்டுக் கும் மேற்பட்ட பாவகிரகங்கள் பார்த்தால், அந்தப் பெண்ணுக்கு கர்ப்பப் பையில் பிரச் சினை இருக்கும். அதனால் மாதவிடாய் சமயத்தில் ரத்தம் அதிகமாக வரும்.
5-ல் ராகு இருந்து, 5-க்கு அதிபதி நீசமடைந்து சூரியன், செவ்வாயுடன் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு சூரிய தசையில் சனி புக்தி அல்லது செவ்வாய் புக்தி நடக்கும் சமயத்தில் வயிற்றில் பிரச்சி
பல பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் மூன்று நாட்களைக் கடந்து 10, 15 நாட்கள் என்றுகூட ரத்தப்போக்கு இருக்கிறது. உடல்ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் இதற்குக் காரணம் இருந் தாலும், கிரகங்களும் காரணமாகின்றன.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லாமலிருந்து 5-ஆவது பாவாதிபதி அஸ்தமனம் அல்லது நீசமடைந்தால் அல்லது 5-ஆவது பாவத்தை இரண்டுக் கும் மேற்பட்ட பாவகிரகங்கள் பார்த்தால், அந்தப் பெண்ணுக்கு கர்ப்பப் பையில் பிரச் சினை இருக்கும். அதனால் மாதவிடாய் சமயத்தில் ரத்தம் அதிகமாக வரும்.
5-ல் ராகு இருந்து, 5-க்கு அதிபதி நீசமடைந்து சூரியன், செவ்வாயுடன் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு சூரிய தசையில் சனி புக்தி அல்லது செவ்வாய் புக்தி நடக்கும் சமயத்தில் வயிற்றில் பிரச்சினை இருக்கும். கர்ப்பப் பையில் நீர் கட்டிவிடும். அதனால் ரத்தம் அதிகமாக வரும்.
11-ல் சூரியன், செவ்வாய், சனி இருந்து 5-க்கு அதிபதி 6 அல்லது 8-ல் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் சரியாக வராது. பாவகிரகங்களின் தசை நடக்கும்போது கர்ப்பப் பையில் சிறியசிறிய கட்டிகள் உண்டாகும். அதன்காரணமாக ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்.
லக்னத்தில் கேது, 4-ல் சூரியன், புதன், 5-ல் சனி இருந்தால், அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் சரியாக வராது. ஏனென் றால், 5-ல் இருக்கும் சனி, கர்ப்பப் பையில் பிரச்சினையைக் கொடுக்கும். 4-ல் இருக்கும் சூரியன் சந்தோஷத் தைக் குறைக்கும். அதனால் அந்தப் பெண்ணுக்கு இரண்டுமாதம், மூன்று மாதம் என்றுகூட மாதவிடாய் வராம லிருக்கும்.
5-ல் சனி, 6-ல் ராகு, 11-ல் சூரியன் இருக்கும் பெண்ணுக்கு மாதவிடாய் சரியாக வராது. வயிற்றில் பிரச்சினை ஏற்படும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ல் ராகு, சூரியன், செவ்வாய், புதன், 10-ல் சனி இருந்தால், சந்திர தசையோ சூரிய தசையோ நடக்கும்போது வயிற்றில் பிரச்சினை ஏற்படும். மாத விடாய் சரியாக வராது. அப்படியே வந்தாலும், பல நாட்கள் ரத்தம் வந்துகொண்டேயிருக்கும்.
7-ல் ராகு, சனி, சூரியன் இருந்து, 11-ல் செவ்வாய் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு கர்ப்பப் பை சிறியதாக இருக்கும். மாதவிடாய் சரியாக வராது.
5-ல் சனி, செவ்வாய், சூரியன் இருந்தால் வயிற்றில், கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். மாதவிடாய் சரியாக வராது.
7-ல் புதன், சூரியன், சனி, 5-ல் செவ்வாய் இருந்தால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு குழந்தை பிறக்காது.
ஒரு வீட்டின் தென்கிழக்கு திசையில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அந்த வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். வடமேற்கில் குப்பைத்தொட்டி அல்லது தேவையற்ற பொருட்கள் தேங்கியிருந்தால், அங்கு வாழும் பெண்ணுக்கு கர்ப்பப் பையில் கோளாறு இருக்கும். ஒரு வீட்டிற்கு தெற்கு திசை அதிகம் காலியாக இருந்து, தென்மேற்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அந்தப் பெண்ணின் கர்ப்பப் பையில் கட்டி உருவாகும். கர்ப்பப் பையில் புற்றுநோய் வருவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் சரியாக இல்லையென்றால், அவளுக்கு உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்.
அந்தப் பெண்ணின் வீட்டில் தென்கிழக்கில் குளியலறை, கழிவறை இருக்கும். அதனால் மாதவிடாய் சரியாக வராது.
லக்னத்தில் சூரியன், சுக்கிரன், ராகு இருந்து, 3-ல் செவ்வாய், சனி இருந்தால், அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய்ப் பிரச்சினை, வயிற்றில் கட்டி இருக்கும். மனபயம் காணப்படும். சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை தோன்றும்.
பரிகாரங்கள்
தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் பச்சை, நீல வண்ணங்கள் கூடாது. கறுப்புநிற ஆடைகளைத் தவிர்க்க வும். படுக்கையறையின் தெற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது. சமையலறையின் மேடைக்குக்கீழே நீர்பிடித்து வைப்பது கூடாது. லக்னாதிபதி, 5-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம். மிருத்யுஞ்ஜய கவசத்தை (தாயத்து) அணிவது நல்லது. சனிக்கிழமை அரச மரத்திற்கு நீர் வார்ப்பது சிறந்தது. அங்கு தீபமேற்றுவதும் நல்ல பரிகாரம்.
செல்: 98401 11534