வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்த பல இளைஞர்கள் என்ன காரணத்தாலோ, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகி விடுகிறார்கள். அதற்கு ஜோதிடரீதியாக காரணமென்ன?
ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், ஜாதருக்கு மனநோய் வர வாய்ப்புண்டு.
மனநோயில் பலவகை உள்ளன. ஒரு ஜாதகத் தில் சூரியன், சுக்கிரன் சரியில்லையென்றால் பணவசதி இருக்காது. முன்னோர்களின் சாப மிருக்கும். அதனால் அவருக்கு மனநோய் வரும்.
ஜாதகத்தில் 12-ஆம் பாவத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் இருந்தால், அவர் பித்ரு தோஷத்தின் காரணமாக அதிகமாகக் கோபப்படுவார். சில நேரங்களில் தன் பெற் றோரையே அடிப்பார். யாருடனும் சரியாகப் பேசமாட்டார்.
12-ல் சனி, புதன், சூரியன் இருந்தால், பித்ரு சாபத்தின் காரணமாக மனநோய் வரும். ஜாதகர் எப்போதும் பயத்துடன் இருப்பார். சிலர் வெளியே பார்ப்பதற்கு இயல்பாக இருப்பதைப்போல தெரிவர்.
ஆனால் திடீரென்று தான் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியான சூரியன் விரய ஸ்தானத்தில் ராகுவுடன் இருந்தால், சந்திர தசை நடக்கும்போது மனம்போனபடி எதையாவது பேசிக்கொண்டிருப்பார். சில நேரங்களில் பைத்தியம் பிடித்ததைப்போல நடந்துகொள்வார்.
ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, லக்னத்திற்கு 6-ல் செவ்வாய், 10-ல் சனி இருந்தால், அவருக்கு சிலர் சூனியம் செய்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. சிலர் பைத்தியம் பிடித்ததைப்போல நடந்துகொள்வார்கள். பல நேரங்களில் தூக்கமே வராது. அப்படியென்றால், அவருடைய வீட்டில் தெற்கு திசையில் நீர்த்தொட்டி இருக்கும் அல்லது நீர் பிடித்து வைத்திருப்பார்கள். கிழக்கு மத்தியப் பகுதியில் சமையலறை இருக்கும்.
ஒரு வீட்டின் பிரதான வாசல் நீசமடைந்து, அந்த வீட்டின் தெற்கு திசை அதிகமாக காலியாக இருந்தால், அந்த வீட்டில் படுப்பவர் வடகிழக்கில் படுத்தால் அவருக்கு மனநோய் வரும். சிலர் யாரையாவது கைநீட்டி அடித்துவிடுவார்கள். கோபத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை எடுத்து வீசியெறிவார்கள்.
ஒரு வீட்டிற்கு தென்கிழக்கில் கழிவறை, தெற்குப் பகுதியில் கிணறு அல்லது நீர்த்தொட்டி இருந்து, அந்த வீட்டில் இருப்பவர் வடமேற்கு திசையில் படுத்தால், அவருக்கு மன நோயின் பாதிப்பிருக்கும். அந்த வீட்டில் பணப்பிரச்சினை ஏற்படும். சிலருக்கு பெண்ணின் சாபம் இருக்கும்.
2-ல் செவ்வாய், சுக்கிரன், ராகு இருந்து, 8-ல் சந்திரன் இருந்தால், அவர் எப்போதும் மனபயத்துடன் இருப்பார். அதன்காரணமாக எதையாவது பேசிக்கொண்டிருப்பார்.
ஜாதகத்தில் பலவீன சந்திரன் 11-ல் இருந்து, லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்தால், தேய்பிறைக் காலத்தில் அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்.
ஒரு வீட்டிற்கு பிரதான வாசல் வடக்கு திசையில் வடமேற்கில் இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, எதையெதையோ பேசிக் கொண்டிருப்பார். அவர்களுடைய ஜாதகத்தில் சந்திரன், புதன் சரியாக இருக்காது.
செவ்வாய், சனி, சந்திரன் சேர்ந்து 6, 8, 12-ல் இருந்து ராகு 5 அல்லது 11-ல் இருந்து, அந்த ஜாதகருக்கு ராகு தசை நடந்தால், மனநோய் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது.
ஜாதகத்தில் சூரியன், ராகு, சனி 6-ல் இருந்து, 8-ல் சந்திரன் இருந்தால், அவருக்கு மனநோய் இருக்கும்.
8-ல் சந்திரன், புதன், சுக்கிரன் இருந்தால், அவர் தூங்கும்போது பேசிக்கொண்டிருப்பார். 8-ஆம் பாவத்தில் சந்திரன், சனி, ராகு இருந்தால், அவர் தூக்கத்தின்போது கத்துவார்.
காலையில் புலம்பிக் கொண்டே எழுந்திருப்பார்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் தனித்திருந்தால், சந்திரன் தனித்திருந்தால் சந்திரனுக்கு முன்னும் பின்னும் எந்த சுபகிரகமும் இல்லாமலிருந்து, அந்த சந்திரனை சனி பார்த்தால், 8-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், அவருக்கு சந்திர தசையோ ராகு தசையோ நடக்கும்போது, எதையெதையோ பேசிக்கொண்டிருப்பார். சிலர் வீட்டைவிட்டு ஓடிவிடுவார்கள். சிலர் வீட்டிலிருக்கும் பொருட்களை எடுத்து வீசியெறிந்து உடைத்துவிடுவார்கள்.
பரிகாரங்கள்
பெற்றோர் செய்ய வேண்டியவை:
தினமும் சிவனுக்கு நீரில் கருப்பு எள்ளைக் கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
தினமும் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவரவேண்டும். அவரின் காலில் இருக்கும் செந்தூரத்தை மகனுக்கு இடவேண்டும். ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு தீபமேற்றி வழிபடவேண்டும்.
தினமும் நாய்க்கு இனிப்பு பிஸ்கட் தருவது நல்லது. குலதெய்வ வழிபாடு அவசியம்.
வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு இருக்கக்கூடாது. வீட்டில் வேப்பமரம் இருக்கக்கூடாது. வீட்டின் வடகிழக்கில் அவசியமற்ற பொருட்களைச் சேர்த்துவைப் பதைத் தவிர்க்கவேண்டும்.
செல்: 98401 11534