"இல்லறமே நல்லறம்' என்பது ஆன்றோர் வாக்கு. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு அன்போடு வாழ்க்கை நடத்தினால் அதுவே சொர்க்கம்.

Advertisment

ஆனால், முன்பு சந்தோஷமாக வாழ்ந்த சில கணவனும் மனைவியும் காலப்போக்கில் ஒருவரையொருவர் வெறுக்க ஆரம்பித்துவிடுகி றார்கள். ஒரே வீட்டில் சரியாகப் பேசிக்கொள்ளாமல், அந்நியர்களைப்போல வாழ்கிறார்கள். இந்நிலை ஏன்?

life

கணவனும், மனைவியும் இப்படி மாறிவிடுவதற்கு முக்கியமான காரணம்- அந்த ஜாதகரின் 7-ஆம் பாவத்திற்கு அதிபதி. ஒரு ஜாதகத்தில் 7-ஆம் பாவாதிபதி 6 அல்லது 8-ல் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவர்கள் ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பார்கள். காலப்போக்கில் ஒரே வீட்டில் தனித்தனி நபர்களாக வெறுப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

Advertisment

ஜாதகத்தில் செவ்வாய், புதன், சூரியன் லக்னம், 4, 7, 8 அல்லது 12-ல் இருந்தால், அந்த கணவனும் மனைவியும் பிள்ளைகள் வளர்ந்த பிறகு, ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். பேசு வதைத் தவிர்த்து, வேற்று நபர் களைப்போல ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

2-ஆம் வீட்டில் செவ்வாய், 7-ல் சனி, ராகு இருந்தால், அவர்கள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்நியர்களைப்போல வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஜாதகத்தில் சுக்கிரன் நீசமடைந் தால் அல்லது சுக்கிரன், ராகுவுடன் 3, 6, 8, 12-ல் இருந்தால், அவர்கள் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள். பின்னர் ஒருவரோடொருவர் பேசுவதையே குறைத்துக்கொள்வார்கள்.

Advertisment

4-ல் சனி, 6-ல் புதன், செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், ராகு, சூரியன் இருந்தால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அதிக கோபம் கொண்டவர்களாக மாறுவார்கள். கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். சண்டை போட்டுக்கொண்டே, ஒரே வீட்டில் தனி நபர்களாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.

4-ல் சனி, 6-ல் செவ்வாய், ராகு, 7-ல் குரு இருந்தால், அந்த கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் சந்தோஷமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஜாதகத்தில் 4-ல் நீசச் சுக்கிரன், 7-ல் செவ்வாய், 9-ல் ராகு இருந்தால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கணவனும் மனைவியும் தேவையில்லாமல் விவாதத்தில் ஈடுபடுவார்கள். தங்களுக்குள் வேறுபாட்டை வளர்த்துக்கொண்டு, சிறிதும் ஒட்டாமல் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

3-ல் சுக்கிரன், ராகு, 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், பிள்ளைகள் வளர்ந்தபிறகு, அவர்கள் ஒரே வீட்டில் அந்நியர்களைப்போல வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஜாதகத்தில் 4-ல் சுக்கிரன், கேது, 7-ல் செவ்வாய், 7-க்கு அதிபதி 8 அல்லது 12-ல் இருந்தால், அந்த கணவர் தன் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுவிடலாமா என்று நினைப்பார். வீட்டில் கணவனும் மனைவியும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். தனித்தனி நபர்களாக ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவர் பிறரைக் குறைகூறிக்கொண்டே இருப்பார். வீட்டில் சண்டை போட்டவாறு, தனித்தனி அறைகளில் கணவனும் மனைவியும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4-ல் சூரியன், 6-ல் செவ்வாய், சனி இருந்தால், அவளும் அவளுடைய கணவனும் எப்போதும் வாக்குவாதம் செய்துகொண்டே இருப்பார்கள். அந்நியர்களைப்போல ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

4-ல் சூரியன், 9-ல் ராகு, 3-ல் சுக்கிரன், கேது இருந்தால், பிள்ளைகள் பிறந்தபிறகு அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு, ஒரே வீட்டில் சந்தோஷமே இல்லாமல், முகத்தை வேறுபக்கம் திருப்பியபடி வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

இதுபோல இன்னும் சில காரணங்களும் உள்ளன.

பரிகாரங்கள்

படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடி வடக்கு அல்லது தெற்கு திசையில் இருக்கக்கூடாது. படுக்கையறையின் தென்கிழக்கிலும், தென்மேற்கிலும் அலமாரி இருப்பது நல்லதல்ல.

தினமும் காலையில் சிவனை வழிபட்டு, அபிஷேகம் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி வணங்கவேண்டும்.

தன் லக்னாதிபதி, 5-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணியலாம்.

பெண்கள் வெள்ளிக்கிழமையன்று விரதமிருப்பது சிறந்தது. ஆண்கள் திங்கட்கிழமையன்று விரதமிருக்கவேண்டும்.

தோசை சுடும்போது, கல் சூடானபிறகு அதன்மீது நீரைத் தெளித்துவிட்டு பிறகு தோசை சுடவேண்டும். அதன்மூலம் செவ்வாய், சனி ஆகியவற்றின் தாக்கம் குறையும்.

செல்: 98401 11534