Advertisment

தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் பெரும் இழப்‹கள் தொடர்வது ஏன்? முனைவர் ஆர் மகாலட்சுமி M.A. M.Phil.(Astrology

/idhalgal/balajothidam/why-huge-losses-continue-december-tamil-nadu-dr-r-mahalakshmi-ma

டிசம்பர் மாதமும், தலைவர்களின் மறைவும்!

வ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் சிலபல முக்கிய நிகழ்வுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது தமிழ் மாதக் கணக்குப்படி- கார்த்திகை 15 முதல்- மார்கழி 15 வரை உள்ள நாட்கணக்கே ஆகும்.

Advertisment

டிசம்பர் மாதம் முதல் பாதியில் சூரியன் விருச்சிகத்திலும், டிசம்பர் மாத பின் பாதியில் தனுசிலும் உள்ளார்.

Advertisment

சூரியன், கிரகங்களுள் இராஜ கிரகம் ஆவார். சூரியன், அரசனைக் குறிப்பவர். எனவே தற்போதைய காலக்கட்டத்தில் சூரியனைக்கொண்டே அரசு, அரசியல் நிகழ்வுகளை ஜோதிடம் கணக்கீடு செய்கிறது.

சூரியன் காலபுருச தத்துவப்படி 5-ஆம் அதிபதி ஆவார். 5-ஆம் அதிபதி என்பவர் அரசின் மந்திரி பதவியைக் குறிப்பார்.

எனவே இந்த சூரியன், விருச்சிகம், தனுசில் அமரும் போது, அவர் கால புருசனின், 8-ஆம் வீடு மற்றும் 9-ஆம் வீட்டில் அமர

டிசம்பர் மாதமும், தலைவர்களின் மறைவும்!

வ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் சிலபல முக்கிய நிகழ்வுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது தமிழ் மாதக் கணக்குப்படி- கார்த்திகை 15 முதல்- மார்கழி 15 வரை உள்ள நாட்கணக்கே ஆகும்.

Advertisment

டிசம்பர் மாதம் முதல் பாதியில் சூரியன் விருச்சிகத்திலும், டிசம்பர் மாத பின் பாதியில் தனுசிலும் உள்ளார்.

Advertisment

சூரியன், கிரகங்களுள் இராஜ கிரகம் ஆவார். சூரியன், அரசனைக் குறிப்பவர். எனவே தற்போதைய காலக்கட்டத்தில் சூரியனைக்கொண்டே அரசு, அரசியல் நிகழ்வுகளை ஜோதிடம் கணக்கீடு செய்கிறது.

சூரியன் காலபுருச தத்துவப்படி 5-ஆம் அதிபதி ஆவார். 5-ஆம் அதிபதி என்பவர் அரசின் மந்திரி பதவியைக் குறிப்பார்.

எனவே இந்த சூரியன், விருச்சிகம், தனுசில் அமரும் போது, அவர் கால புருசனின், 8-ஆம் வீடு மற்றும் 9-ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார் என்றாகிறது.

இந்த சூரியன், பாவ கிரகங்களின் சம்பந்தம் பெறும்போது, உலகில் அதுவும் குறிப்பாக, அரசியலில், ஆன்மிக, உலக புகழ்பெற்றவர்களுக்கு பெருத்த இடையூறு உண்டாகிவிடுகிறது.

எல்லா வருடமும், சூரியன் டிசம்பர் மாதத்தில் விருச்சிகம், தனுசில்தான் இருப்பார். அப்போது சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் என இவர்களின் சம்பந்தம் ஏற்படும்போது, அக்கோட்சாரம் அரசியலில் புகழ்பெற்றவர்களை மிக பாதிக்கிறது.

dd

ராஜகோபாலச்சாரியார்

இவரின் மறைவு தினம்: 25-12-1972

இந்த கோட்சாரம், சூரியனை ராகு- கேது பார்வைக்குள் அடைபட செய்தது. காலபுருசனின் 8-ஆம் அதிபதி செவ்வாயை காலபுருசனின் பாதகாதிபதி சனி பார்வையிடுகிறார். சூரியனுடன் சேர்ந்த குருவும், ராகுவும் கிரக யுத்தம் பெற்றுள்ளனர். எனவே இந்த கோட்சார நிலை, சூரியன் பலமிழக்கச் செய்து, ராஜாஜி எனும் புத்தி நுட்பமான மனிதரை, மாமனிதராக மாற்றியது.

பெரியார்

இவர் மறைந்த தினம்: 24-12-1973

இந்த கோட்சாரம், சூரியனுடன் ராகு மற்றும் சந்திரன், புதன் எனும் கிரக கூட்டணி ஏற்பட்டு, கிரக யுத்த நெரிசல் உண்டாகி உள்ளது. மேலும் இந்த கூட்டணியை சனியும் கேதுவும் நேர் பார்வையாக பார்க்கிறார்கள். இடம் கொடுத்த குரு நீசமாகியுள் ளார். சூரியன்+ராகுவுடன் மற்றும் கேது பார்வையில் அமர்ந்த தால், கிரகண சேர்க்கை ஏற்பட்டு, சூரியன் முழுமையாக பலமிழந்தார். இக்கோட்சாரம், பெரியார் எனும் புகழ்பெற்ற மனிதரை இழக்கச் செய்தது.

vv

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி. ராமச்சந்திரன் எனும் புகழ்பெற்ற நடிகரும், வள்ளலும், முதலமைச்சராக இருந்தவரின் மறைவு தினம்: 24-12-1987.

மேற்கண்ட கோட்சாரத் தில், சூரியன், சனி எனும் பாவியுடன் சேர்ந்துள்ளார். மேலும் சூரியன், சனி, புதன் என இம்மூன்று கிரகங்களும், மூல நட்சத்திரத்தில் நின்று கிரக யுத்த நிலை அடைந்துள்ளனர். இடம் கொடுத்த குரு, ராகுவுடன் சேர்ந்துள்ளார். எனவே சூரியபகவான் சனியுடன் சேர்ந்ததும், கேது சாரத்தில் கூடி நின்றதும், சூரியனை பலமிழக்கச் செய்து, இந்த புகழ்பெற்ற மனிதரை மறைத்தது.

ஜெயலலிதா

இந்த புகழ்பெற்ற இரும்பு மனுஷி யான முன்னாள் முதல்வர் மறைந்த தினம் 5-12-2016. இது டிசம்பர் மாதம் ஆனாலும் தமிழில் கார்த்திகை மாதமாகி, சூரியன், விருச்சிக ராசி யில் நின்றார்.

மேற்கண்ட கோட்சாரத் தில், சூரிய பகவான் கால புருசனின் 8-ஆம் வீட்டில், காலபுருசனின் கர்மாதிபதியும், பாதகாதிபதியுமான சனியுடன்கூடி, ஒரே நட்சத்திர சாரத்தில் நின்று கிரக யுத்தம் பெற்றனர். மேலும் காலபுருசனின் 8-ஆம் அதிபதி செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை. சூரியனுக்கு இடம் கொடுத்த, செவ்வாய், கர்ம வீட்டில் உச்சமடைந்துள்ளார். இதனால் சூரியன் பலமிழந்துள்ளார். இக்கோட்சாரம், இரும்பு மனுஷியை அடித்து தூளாக்கி, மறையச் செய்தது.

விஜயகாந்த்

இவர் நடிப்பாலும், கருணை வள்ளல் குணத்தாலும் அறியப்பட்டவர். இவரது மறைவு தினம்: 28-12-2023.

viji

மேற்கண்ட கோட்சாரத்தில், சூரியன், பாவகிரகமான செவ்வாயுடன் மூல நட்சத்திரத்தில் ஒருசேர நின்று கிரக யுத்தம் பெற்றார். சூரியனுக்கு கேந்திரத்தில் ராகுவுள்ளார். சனி, காலபுருசனின் 8-ஆமிடத் தைப் பார்வை செய்ததும் பல மற்ற நிலை யாகும். சூரிய னுக்கு இடம் கொடுத்த குரு, சனியினால் பார்க்கப் பட் டார். சூரியன், செவ்வாயும் சேர்ந்து கிரக யுத்தம் பெற்று பலமிழந்ததால், ஒரு நல்ல மனிதரின் மறைவு ஏற்பட்டது.

ஆக, டிசம்பர் மாதத்தில், தர்மமிகு வீடான தனுசில், அரச கிரகமான சூரியன் பலமிழந்து அமரும்போது பிரபலமானவர்களின் மறைவு ஏற்படுகிறது.

செல்: 94449 61845

bala120124
Show comments
Read more...
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe