Advertisment

ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் ஏன்? -அஸ்ட்ரோ பாபு

/idhalgal/balajothidam/why-does-star-have-four-legs-astro-babu

ரு கிரகத்திற்கு ஏன் மூன்று நட்சத்திரம் என்ற கட்டுரையின் தொடர்சசி இந்தக் கட்டுரை. இங்கு ஏன் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் என்ற விஷயங்களைப் பார்ப்போம்.

Advertisment

பிரபஞ்ச அடக்க சக்திகளான பஞ்சபூதங் களை மூலமாகக் கொண்டுதான் அனைத்துப் படைப்புகளும் படைக்கபட்டிருக்கின்றன. அவ்வாறு படைக்கப்பட்ட படைப்புகளில் ஒன்றான மனித இனத்திற்குள் இந்த பஞ்பூதங் கள் எவ்வாறு செயல்படுகின்ற

ரு கிரகத்திற்கு ஏன் மூன்று நட்சத்திரம் என்ற கட்டுரையின் தொடர்சசி இந்தக் கட்டுரை. இங்கு ஏன் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் என்ற விஷயங்களைப் பார்ப்போம்.

Advertisment

பிரபஞ்ச அடக்க சக்திகளான பஞ்சபூதங் களை மூலமாகக் கொண்டுதான் அனைத்துப் படைப்புகளும் படைக்கபட்டிருக்கின்றன. அவ்வாறு படைக்கப்பட்ட படைப்புகளில் ஒன்றான மனித இனத்திற்குள் இந்த பஞ்பூதங் கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் கணக்குதான் இந்த நான்கு பாதங்கள்.

Advertisment

நான் சென்ற கட்டுரையில் விவரித்த இயக்கப் புள்ளியான 120 டிகிரி இடைவெளியில் அல்லது ஒவ்வொரு பரிமாணத்தில் இந்த பஞ்சபூதத் தத்துவம் எவ்வாறு செயல்படும் என்கின்ற கணக்குதான் இது.

ஒரு நட்சத்திரத்தின் செயல்பாடு இந்த பஞ்சபூதங்கள் மூலமாகத்தான் நடை பெறும். ஏனெனில் படைப்பே இந்த பஞ்ச பூதத்தால்தானே ஆனது. அதில் நாமாகிய இந்த பூமி ஆகாயத் தத்துவத்தில் இயங்குவதால், அதைப் பொதுவாகக்கொண்டு மற்ற நீர். நிலம், நெருப்பு, காற்று என்ற தத்துவங்கள் எவ்வாறு செயல்படும் என்ற கணக்குதான் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள்.

star

120 டிகிரி இயக்கப் புள்ளியில் இந்த பஞ்சபூத தத்துவங்கள் எவ்வாறு செயல் படும் என்பதைத்தான் நான்குவித குண மாறுபாடுகளை நான்கு பாதங்களாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அதேபோல் மூன்றுவித காலங்களில், பருவகால மாற்றங்களில் நீர், நிலம், நெருப்பு, காற்று என்ற தத்துவங்கள் எவ்வாறு செயல்படும் என்பதும்தான்.

உதாரணமாக மேஷத்தில் பரணி நட்சத்திரத்தின் தன்மை இந்த பஞ்சபூதத் தத்துவங்களாக எவ்வாறு செயல்படும்? ஒரு கிரகம், உதாரணமாக செவ்வாய் பரணி நட்சத்திரக் காலில் இருந்தால் ஒரு பாதம் நெருப்பு, இரண்டாம் ம் பாதம், நிலம், மூன்றாம் பாதம் காற்று, நான்காம் பாதம் நீர் என்ற பஞ்சபூதத் தத்துவத்தின் குணாதிசியங் கள் அடிப்படையில்தான் தன பலன் களை- அதாவது செயல்களை வெளிப் படுத்தும்.

ஒரு கிரகம் மூன்று நட்சத்திர குண பேதங் களைக்கொண்டு நான்குவித தத்துவங்களை உள்ளடக்கிதான் தன செயல்பாட்டை வெளிப் படுத்தும் என்பதை நம் முப்பாட்டன்களான யோகிகளும் சித்தர்களும் மனித செயல் பாடுகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நமக்கு கொடுத்ததுதான் ஜோதிடக்கலை.

ஜோதிடத்தை வணங்குவோம்; சுவாசிப் போம்.

செல்: 73394 44035

bala140423
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe