Advertisment

தள்ளாத வயதிலும் தஸிமையில் வாடுவது ஏன்? -ஆர். சுப்பிரமணியன்

/idhalgal/balajothidam/why-do-you-languish-old-age-r-subramanian

வ கிரகங்களில் கண்ணெதிரே தோன்றும் சூரியன், சந்திரன் ஆகியவை ஒளிரும் கிரகங்களாக அமைகின்றன. இவற்றின் ஒளியானது, தேய்ந்து வளர்வது வளர்பிறை- தேய்பிறைச் சந்திரனுக்கு மட்டுமே உரியது. இதனையொட்டியே சந்திரன் தரும் யோகங்கள் நன்மைதரும் சுபயோகம் மற்றும் தீமைதரும் அவயோகம் என்று அமைவதாக ஜோதிட சாஸ்திரம் சுட்டிக்காட்டுகிறது.

Advertisment

அதாவது, சந்திரன்மூலம் மனிதன் பெறும் யோகங்கள் அவரவர் ஜாதகத்திலுள்ள சந்திரனின் நிலைப்பாட்டை ஒட்டியே உண்டாகும். அதுபற்றி இங்கு சுருக்கமாகக் காணலாம்.

சில முக்கிய நன்மை தரும் சுபயோக அமைப்புகள்:

கஜகேசரி யோகம்

சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து கேந்திர வீடுகளில்- ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய வீடுகளில்

வ கிரகங்களில் கண்ணெதிரே தோன்றும் சூரியன், சந்திரன் ஆகியவை ஒளிரும் கிரகங்களாக அமைகின்றன. இவற்றின் ஒளியானது, தேய்ந்து வளர்வது வளர்பிறை- தேய்பிறைச் சந்திரனுக்கு மட்டுமே உரியது. இதனையொட்டியே சந்திரன் தரும் யோகங்கள் நன்மைதரும் சுபயோகம் மற்றும் தீமைதரும் அவயோகம் என்று அமைவதாக ஜோதிட சாஸ்திரம் சுட்டிக்காட்டுகிறது.

Advertisment

அதாவது, சந்திரன்மூலம் மனிதன் பெறும் யோகங்கள் அவரவர் ஜாதகத்திலுள்ள சந்திரனின் நிலைப்பாட்டை ஒட்டியே உண்டாகும். அதுபற்றி இங்கு சுருக்கமாகக் காணலாம்.

சில முக்கிய நன்மை தரும் சுபயோக அமைப்புகள்:

கஜகேசரி யோகம்

சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து கேந்திர வீடுகளில்- ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய வீடுகளில் குரு இருப்பது கஜகேசரி யோகம் எனப்படும். இந்த யோகம்பெற்ற நபர்கள் பெயர், புகழ், தீர்க்காயுள், செல்வச் செழிப்பு, பகைவரை வெல்லும் திறமை, பெருந்தன்மை, கௌரவம், புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சந்திரமங்கள யோகம்

சந்திரனும் செவ்வாயும் ஒரே வீட்டில் சேர்ந்திருப்பது சந்திர மங்கள யோகம் எனப்படும். இந்த யோகம் பெற்றவர்கள் வற்றாத நிதி நிலைமை, பணவரவு, வீடு, நிலம், அதிர்ஷ்டம், கல்வித் திறமை, முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். சிலசமயம் மன சஞ்சலங்கள், மனப் போராட்டங்களும் அமையும்.

அதி யோகம்

Advertisment

சந்திரன் வீட்டிலிருந்து ஆறு, ஏழு, எட்டாம் வீடுகளில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்திருந்தாலோ சந்திர அதியோகம் எனப்படும். இந்த யோகம் பெற்றவர்கள் திடீர் செல்வம், அந்தஸ்து, பதவி, நீண்ட ஆயுள், கல்வி, உடல் ஆரோக்கியம் என சகல யோகமும் பெறுபவர்களாக அமைகிறார்கள்.

dd

துருதுரா யோகம்

சந்திரன் இருக்கும் வீட்டின் இரு புறங்களிலும்- அதாவது முன்வீடு மற்றும் அடுத்த வீடுகளில் தாரா கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியவற்றில் ஏதாவதொரு கிரகமாவது இருப்பது துருதுரா யோகம் எனப்படும். இந்த யோகம்பெற்ற நபர்கள் சொத்து, சுகம், வாகன வசதி, நற்குணம், எதிர்காலம் உணர்தல், மிக்க மகிழ்ச்சியான வாழ்வு பெறுபவர்களாக அமைகிறார்கள். இனி, தீமை தரும் அவயோக அமைப்புகளைக் காண்போம்.

சகட யோகம்

சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து ஆறு அல்லது எட்டாம் வீடுகளில் குரு இருப்பது சகட யோகம் எனப் படும். இந்த அவயோகம் பெற்றுள்ள ஜாதகர்களின் வாழ்க்கை, சக்கரம் சுழல்வதுபோல ஏற்ற- இறக்கங்களுடன் நிலையற்றிருக்கும். ஒற்றுமை, ஏழ்மை, கவலை, பிறரைச் சார்ந்து வாழ்தல், சிரமங்கள் போன்றவை இவர்களது வாழ்க்கையில் அமையும்.

கேம துரும யோகம்

சந்திரன் இருக்கும் வீட்டின் இரு பக்கங்களிலும், முன்பின் வீடுகளில் எந்தவொரு கிரகமும் இல்லாத அமைப்பு கேம துரும யோகம் எனப் படும். இந்த யோகம் பெற்றவர்கள் ஏழ்மை, கவலை, முன்கோபம் தவறான முடிவெடுப்பது, பிறரை மதிக்காதது, வஞ்சக எண்ணம் கொண்டவர்களாக அமைகிறார்கள். இந்த அமைப்புபெற்ற ஜாதகர் வயதான காலத்தில் தனித்திருக்க நேரிடும். சிலரை புலம்பும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும். தனிமையில் வாடும் நிலையும் வரலாம். இதற்கு விதிவிலக்கும் உண்டு.

பரிகாரங்கள்

அவயோகம்பெற்ற நபர்கள் கீழ்க்காணும் மந்திரத்தை உச்சரித்து வரலாம்.

"ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

க்லீம் திரிபுரசுந்தர மூர்த்தையே நமோ நம.'

கீழ்க்காணும் சந்திர காயத்ரி மந்திரத்தையும் உச்சரித்து வரலாம்.

'ஓம் பத்மத் வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

தன்னோ சோமப் பிரசோதயாத்.'

வீட்டில் திங்கட்கிழமை விரதமிருந்து, அம்பிகை படம் வைத்து, வெள்ளை அரளி, முல்லை மலர் தூவி, பால்சாதம் நிவேதனம் படைத்து அம்பிகையை வழிபட்டு வரவேண்டும். திங்கட்கிழமைகளில் அரசமரத்தை வலம்வந்து வழிபடவேண்டும். துன்பம் நீங்கி நன்மையைப்பெற இதுவே உத்தமம்.

செல்: 74485 89113

bala130123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe