கோடி கோடியாய் செல்வங்கள் இருந்தாலும் அவற்றை அனுபவிப்பதற்கு நல்ல ஆரோக்கியம் அவசியம். மனிதனுக்கு ஆசைகளும் தேவைகளும் ஏராளம் என்றாலும், உழைப்பதும் ஓடியோடி சம்பாதிப்பதும் ஒரு ஜாண் வயிற்றுக்காகத்தான். கொலைப் பசியுடன் இருப்பவனுக்குப் பணமோ பொருளோ ஒரு பொருட்டாகத் தெரியாது.

st

மனிதனின் உடலுறுப்புகள் அனைத்துமே முக்கியமானவை. ஒன்று சரியாக இல்லாவிட்டாலும் வாழமுடியாது. குறிப்பாக, வயிறு என்பது முக்கியமான உறுப்பாகும். மனிதன் மூன்றுவேளையும் சாப்பிட்டுத் தெம்பாக இருந்தால் மட்டுமே மற்ற தேவைகளை அவன் ஓடியோடி உழைத்துப் பூர்த்தி செய்து கொள்ளமுடியும்.

ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீடு வயிறு, குடல், சிறுகுடல், குடலின் கீழுள்ள பாகம், உணவு செரிமான உறுப்பு, குடல்புண், அமிலக்கோளாறு, செரிமானக் கோளாறு போன்றவற்றைக் குறிக்கிறது. ஜென்ம லக்னத் திற்கு 5-ஆம் வீடு பாதிக்கப்பட்டாலும், காலபுருஷ விதிப்படி 5-ஆம் வீடான சிம்ம ராசி பாதிக்கப்பட்டாலும் வயிற்றுக் கோளாறு உண்டாகும்.

5-ஆம் வீட்டிற்கு பாவகிரகப் பார்வையோ, 5-ஆம் அதிபதி பாவகிரக ச் சேர்க்கையோ பெறாமலிருந்தால், நல்ல ஜீரண சக்தி, ஆரோக்கியமான உடல் நிலை உண்டாகும். 5-ஆம் வீட்டில் சூரியன் அமையப்பெற்றால், நல்ல ஜீரண சக்தியும், சூடான உணவு உண்ணுவதில் அதிக விருப்பமும் உண்டாகும்.

சூரியன் பாவகிரகச் சேர்க்கையோ, செவ்வாயின் சம்பந்தமோ பெற்றிருந்தால் செரிமானக் கோளாறு, குடல் புண் உண்டாகும்.

5-ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் விதம்விதமான உணவுண்பதில் ஆர்வம் இருக்கும்.

வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் ஜீரண சக்தி உண்டாகும். தேய்பிறைச் சந்திரனாக இருந்து, பாவிகள் சேர்க்கைபெற்றால் குடல் புண், உடல் உபாதைகள் உண்டாகும். சந்திரனுக்கு கேது சம்பந்தம் ஏற்பட்டால் குடல்புண் ஏற்பட்டு அதிக பாதிப்பை உண்டாக்கும்.

5-ஆம் வீட்டில் செவ்வாய் அமையப் பெற்றால் சூடான உணவுண்பதில் அதிக விருப்பம் உண்டாகும். என்றாலும், இதனால் குடல் புண் ஏற்படும். கேஸ்ட்ரிக் அல்சர் போன்றவற்றால் அதிக பாதிப்புகள் ஏற்படும். செவ்வாய் பலம்பெற்றிருந்தால் அதன் தசாபுக்திக் காலத்தில் பாதிப்புகள் ஏற்படாது. செவ்வாய் பகை, நீசம் பெற்றிருந்தாலும், 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும் அதிக பாதிப்புகள் உண்டாகும்.

5-ஆம் வீட்டில் புதன் அமைந்து சூரியன் சேர்க்கைப் பெற்றால், புதன் தசாபுக்திக் காலத்தில் செரிமானக்கோளாறு, வயிற்றுப்போக்கால் மயக்கம் போன்றவை உண்டாகும்.

5-ல் குரு அமையப்பெற்றால் நல்ல பசி எடுக்கும் தன்மை, ஜீரண சக்தி யாவும் கொடுக்கும். அதுவே, குரு, செவ்வாய், ராகு- கேது சேர்க்கைப் பெற்றால் செரிமானக் கோளாறு, வயிற்றில் புண் உண்டாகும்.

5-ல் சுக்கிரன் அமையப்பெற்றால் இனிப்பான உணவு வகைகளில் விருப்பம் அதிகமிருக்கும்.

சுக்கிரனுடன் சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால் எண்ணெய்ப் பண்டங்களை விரும்பி உண்பார்கள். இதனால், கேஸ்டிரிக் அல்சர் போன்றவற்றால் வயிற்றுப் பிரச்சினைகள் உண்டாகும்.

சனி 5-ல் இருந்தால், எந்த நேரமும் எதையாவது தின்றுகொண்டே இருக்கக்கூடிய சுபாவமும், இதனால் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, வயிற்றில் புண் போன்றவற்றால் வயிற்றில் பாதிப்பு ஏற்படும்.

ராகு 5-ல் இருந்தால், சரியான நேரத்தில் உணவுண்ண முடியாத சூழ்நிலையில் வயிற்றில் பாதிப்புகள் ஏற்படும்.

கேது 5-ல் இருந்தால், கேது புக்திக் காலங்களில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

5-ல் பாவிகள் அமையா திருந்து, குரு பார்வை பெற்றால் கெடுதிகள் குறையும். ஜென்ம லக்னத் தையோ, சந்திரனையோ குரு பார்வை செய்தால் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படாது

செல்: 72001 63001.