ளம்பெண்கள் பலர் ஆண்களிடம் ஏமாந்துவிடுகிறார்கள். அவர்களிடம் சிக்கி அல்லல்படுகிறார்கள். ஏன் இந்த அவல நிலை? இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன பரிகாரம்?

Advertisment

பல ஆண்கள் பெண்களிடம் பழகி அவர்களுக்குத் திருமண ஆசை காட்டி குழந்தையையும் கொடுத்துவிட்டு ஓடிவிடுவார்கள். வசதியாக வாழ்ந்த பல பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்பட்டு கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருப்பார்கள். அதற்குக் காரணம்- பெண்களின் ஜாதகத்திலுள்ள சுக்கிரனும், 5-க்கு அதிபதியான கிரகமும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-க்கு அதிபதி சரியில்லையென்றால் அல்லது 5-க்கு அதிபதி பாவகிரகத்துடன் சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப்பட்டால், அந்த ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி கெட்டுப் போயிருந்தால், அந்தப் பெண் தவறான முடிவை எடுத்து ஆணிடம் ஏமாந்துவிடுவாள்.

kaliஒரு ஜாதகத்தில் 5-ல் சுக்கிரன், சனி, ராகு இருந்தாலும் அல்லது சந்திரன் பலவீனமாக இருந்தாலும், செவ்வாய் 7 அல்லது 8-ல் இருந்தாலும் அந்த இளம்பெண்ணுக்கு அறிவு சரியாக வேலை செய்யாது. அவள் வேறு மதத்தைச் சேர்ந்த ஆணால் மூளைச்சலவை செய்யப்படுவாள்.

அதன் காரணமாக பல கஷ்டங்களை அனுபவிப்பாள்.

Advertisment

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ல் ராகு, 7-ல் சுக்கிரன், செவ்வாய், 8-ல் சனி அல்லது சந்திரன் இருந்தால், அவள் இளம்வயதிலேயே ஆணால் ஏமாற்றப்படுவாள்.

4-க்கு அதிபதி நீசமாக இருந்து, 5, 7-க்கு அதிபதியான கிரகம் 8 அல்லது 12-ல் இருந்தால், அந்தப் பெண் ஆணால் ஏமாற்றப்படுவாள்.

11-ல் சூரியன், சனி, ராகு, 7-ல் அல்லது 8-ல் செவ்வாய் இருந்தால், அவள் இளம்வயதிலேயே ஏமாற்றப்படுவாள்.

Advertisment

லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் விரய ஸ்தானாதிபதியுடன் இருந்து, 5-ல் ராகு, சுக்கிரன் அல்லது சுக்கிரன், சனி, ராகு இருந்தால், அந்தப் பெண் படிக்கும் காலத்தில் ஆணால் ஏமாற்றப்படுவாள்.

லக்னாதிபதி நீசமடைந்து, 6-ல் சுக்கிரன், புதன், சந்திரன் அல்லது சூரியன், புதன், சந்திரன் இருந்தால், அந்தப் பெண் இளம்வயதிலேயே ஆணால் ஏமாற்றப்படுவாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் நீசமடைந்து அவை 2-ஆவது வீட்டிலோ அல்லது 3-ஆவது வீட்டிலோ இருந்தால், படிக்கும் காலத்திலேயே அறிவு வேலை செய்யாமல் ஆணிடம் ஏமாறுவாள்.

ஒரு ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் 2-ல் இருந்து, 5-ல் ராகு இருந்தால், அந்தப் பெண் இளம்வயதிலேயே ஆணிடம் ஏமாறுவாள்.

படிக்கும் காலத்தில் பெண்களுக்கு ராகு தசை நடந்தால், ஜாதகத்தில் ராகு 5, 9, 11-ல் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு சிந்தனை சரியாக வேலை செய்யாது. ஆணிடம் ஏமாந்துவிடுவாள்.

லக்னத்தில் ராகுவுடன் சூரியன் இருந்து, 2-ஆவது வீட்டில் சனி, செவ்வாய் இருந்தால் அந்தப் பெண் இளம்வயதிலேயே ஏமாற்றத்தைச் சந்திப்பாள்.

12-ல் செவ்வாய், சனி, லக்னத்தில் புதன், சுக்கிரன் இருந்தால், படிக்கும் காலத்திலேயே அந்தப் பெண் நண்பர்களுடன் சேர்ந்து தன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்வாள்.

4-ல் குரு, சனி, 12-ல் செவ்வாய், சூரியன், லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், அந்தப் பெண் இளம்வயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வாள்.

லக்னத்தில் செவ்வாய், 3-ல் சந்திரன், 5-ல் ராகு இருந்தால், அந்தப் பெண்ணுக்கு படிக்கும் காலத்தில் ராகு தசையோ செவ்வாய் தசையோ நடந்தால், அவள் அயோக்கியகுணம் கொண்ட ஆண்களிடம் ஏமாந்துவிடுவாள்.

பரிகாரங்கள்

படிக்கும் பெண்ணுக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால், அவள் தினமும் சிவனுக்கு நீர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும். கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும். கருப்புநிற ஆடையைத் தவிர்க்கவேண்டும்.

தினமும் விநாயகரை நான்குமுறை சுற்றிவந்து வழிபட வேண்டும் வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். பெண்ணின் தாய் வெள்ளிக்கிழமை துர்க்கை அல்லது காளிக்கு தீபமேற்ற வேண்டும்.

சமையலறையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் தேவையற்ற பொருட்களை நீக்கிவிட வேண்டும்.

மேற்கண்ட பரிகாரங்களைக் கடைப்பிடித்து வந்தால், பெண்கள் ஆண்களிடம் ஏமாறுவதிலிருந்து தப்பிக்கலாம்.

செல்: 98401 11534