ஒருவர் வன்முறை குணமுள்ளவராக இருக் கிறாரென்றால், அவருடைய மனதில் தைரிய மில்லையென்று அர்த்தம். அவரது ஜாதகத் தில் செவ்வாய் சரியாக இருக்காது. செவ்வாய் பலவீனமாக இருந்து சனியால் பார்க்கப் பட்டால், அவருக்கு அடிக்கடி கோபம் வரும். அதன்காரணமாக அவர் வன்முறையில் ஈடுபடுவார்.
சிலர் பிறரிடமிருக்கும் வசதிகளைப் பார்த்து, அவற்றை ஆக்கிரமிக்க வேண்டுமென்று ஆசைப்படுவர். அப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தில் செவ்வாய், சனி 6, 8, 12-ல் இருக்கும். அவர்கள் நிதானமாகப் பேசமாட்டார்கள். சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். எப்போதும் கோபத்துடன் காணப்படுவார்கள். அடிதடியில் இறங்குவார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் கேந்திரத்தில் இருந்து, அதற்குக் கேந்திரத்தில் சனி இருந்தால், அவருக்கு கோபம் அதிகமாக வரும். அவர் வன்முறையில் இறங்குவார்.
லக்னத்தில் செவ்வாய், 4-ல் சனி, 10-ல் நீசச் சந்திரன் இருந்தால், சனி, சந்திரனையும் செவ்வாயையும் பார்க்கும். செவ்வாய் தன் 4-ஆவது பார்வையால் சனியைப் பார்க்கும். அதனால் அந்த ஜாதகருக்கு கோபம் அதிகமாக வரும்.
தான் செய்வதெல்லாம் சரியென்று நினைப் பார். வன்முறை எண்ணத்துடன் பேசுவார். வன்முறைச் செயலில் இறங்குவார். லக்னத்தில் நீசச் சந்திரன், 7-ல் சனி, 8-ல் செவ்வாய், சூரியன் இருந்தால், அவரின் மனதில் சந்தோஷம் இருக்காது. பிறரைப் பார்த்து எரிச்சலுடன் இருப்பார். தீவிர வாதியைப்போல நடந்துகொள்வார்; பேசுவார்.
லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகர் எப்போதும் வன்முறையாகப் பேசுவார்; செயல்படுவார்.
லக்னத்தில் நீசச் சூரியன், 6-ல் சந்திரன், கேது, 10-ல் செவ்வாய், 12-ல் சுக்கிரன், ராகு இருந்தால், அவர் தான் செய்வது அனைத்தும் சரியென்று கூறிக்கொண்டிருப்பார். தீவிர வாதியைப்போல நடந்துகொள்வார்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக இருந்து, 2-ல் சனி, 3-ல் சுக்கிரன், ராகு, 4-ல் சூரியன், 9-ல் சந்திரன், கேது இருந்தால், தன் பேச்சா லேயே பிறருடனான உறவைக் கெடுத்துக் கொள்வார். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார். தான் செய்வதே சரியென்று வாதிடுவார். வீட்டிலிலிருக்கும் பொருட்களை உடைப்பார்.
6-ஆம் பாவத்தில் சூரியன், 7-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு இருந்தால், அந்த ஜாதகர் அரசியலில் இருப்பார். தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவார். வீட்டிலிருக்கும் அனைவரிடமும் சண்டை போடுவார்.
2-ல் ராகு, செவ்வாய், 7-ல் சனி, 12-ல் சூரியன் இருந்தால், அவருடைய வன்முறை நிறைந்த பேச்சு காரணமாக குடும்பத்தில் சந்தோஷமற்ற சூழ்நிலை நிலவும். அரசியல்வாதியாக அவர் இருக்கும்பட்சம், தேவையற்ற வன்முறைச் செயல் களில் ஈடுபடுவார்.
10-ல் நீசச் சந்திரன், 12-ல் ராகு, செவ்வாய், 6-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் மகிழ்ச்சி யாகவே இருக்கமாட்டார். தேவையற்றதைப் பேசி, குடும்பத்தில் பிரச்சினைகளை உண்டாக்கு வார். வெளியே சென்றால் அவசியமற்ற விவா தங்களில் ஈடுபட்டு, சண்டைகளை உண்டாக்கு வார்.
3-ல் நீசச் சூரியன், 7-ல் சந்திரன், சனி, 8-ல் செவ்வாய் இருந்தால், அவர் வீணான விவாதங் களில் ஈடுபடுவார். மகிழ்ச்சியென்றால் என்னவென்றே தெரியாது.
ஜாதகத்தில் சந்திரன், சனி, கேது 5, 9, 11-ல் இருந்து, சூரியன் நீசமாக இருந்தால் அவர் எப்போதும் வீண்பேச்சில் ஈடுபடுவார். அதனால் தேவையற்ற சண்டை உண்டாகும்.
ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் நீர்த் தொட்டி அல்லது கிணறு இருந்து, அங்குள்ளவர் தென்கிழக்கில் அல்லது வடமேற்கில் படுத்தால் அவர் தேவையற்றதைப் பேசுவார்.
ஒரு வீட்டின் தென்கிழக்கு திசையில் நீர்த் தொட்டி அல்லது கிணறு இருந்து, அந்த வீட்டின் மத்தியப் பகுதியில் அல்லது தென் மேற்கில் சமையலறை இருந்தால், அந்த வீட்டில் எப்போதும் விவாதம் நடக்கும். சண்டை ஏற்படும்.
பரிகாரங்கள்
லக்னாதிபதி, 9-ஆம் அதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும். மேற்கு திசையில் தலைவைத்துப் படுப்பது நன்று. வீட்டை சுத்தமாக வைக்கவேண்டும். இரவில் துணி துவைப்பதைத் தவிர்க்கவும். இரவில் சாப் பிட்டபிறகு, பாத்திரங்களைக் கழுவி வைக்க வேண்டும். தினமும் ஆஞ்சனேயர் அல்லது ஆலமரத்தை நான்குமுறை சுற்றிவந்து வணங் கவும். அங்கு தீபமேற்றவேண்டும். வீட்டில் நீலம், பச்சை வண்ணங்களைத் தவிர்க்கவும். படுக்கைறையில் தெற்குதிசையில் சிவப்பு நிறம் கூடாது. தினமும் பைரவருக்கு தீபமேற்றி வழிபட்டால் வன்ம குணம் மாறும்.
செல்: 98401 11534.