ஒருவர், தான் வாழும் வீட்டில் சந்தோஷமான மனநிலையுடன் இருப்பதற்கு, அவரின் ஜாதகத்திலிருக்கும் கிரகங்கள் உதவவேண்டும். ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லாமலிருந்தால், அவர் எப்படிப்பட்ட வீட்டில் வசித்தாலும் அமைதி கிடைக்காது.
ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 4-ஆவது பாவம் ஒரு மனிதரின் வீடு, இல்லற சுகம் ஆகியவற்றைக் காட்டும். 3-ஆவது பாவம் அவர் வசிக்கும் வீட்டிற்கருகில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், நன்கு பழகக்கூடியவர்களா அல்லது தொல்லை தரக்கூடியவர்களா என்பது போன்ற விஷயங்களைக் காட்டும்.
4-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அந்த ஜாதகருக்கு சரியான வீடே அமையாது. அவர் எங்கு வாழ்ந்தாலும் பிரச்சினைகளும் தொல்லைகளும் உண்டாகும். 4-ஆம் பாவத்தில் பாவகிரகம் இருந்தால், அந்த ஜாதகருக்கு இளம்வயதிலிருந்தே மனதில் சந்தோஷம் இருக்காது. அங்கு செவ்வாய்- ராகு, சனி- ராகு இருந்தால், அந்த ஜாதகர் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு ஏதாவது சண்டையோ பிரச்சினையோ இருந்துகொண்டேயிருக்கும்.
ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்து, 4-ஆம் பாவாதிபதியும் நீசமடைந்து, அந்த ஜாதகர் வசிக்கும் இடத்தில் வடகிழக்கு துண்டிக் கப்பட்டிருந்தால் அல்லது வடகிழக்கில் குப்பைகள் தேக்கிவைக்கப்பட்டிருந்தால் அல்லது அங்கு கழிப்பறை இருந்தால், அவருக்கு மனதில் அமைதியே இருக்காது.
ஜாதகத்தில் லக்னாதிபதி 12-ல் இருந்து, செவ்வாய் லக்னத்தில் இருந்து, அந்த ஜாதகர் வசிக்கும் வீட்டிற்கு எதிரே பூங்காவோ மைதானமோ இருந்தால், அந்த வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். அங்கு வசிப்பவர்கள் கோப குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனதில் அமைதியே இருக்காது.
ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சனி, 8-ல் ராகு இருந்தால், அந்த வீட்டின் சமையலறை சரியான இடத்தில் இருக்காது. வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருக்கும். அதனால் அங்கு வாழ்பவர்கள் எப்போதும் சண்டைபோட்டவண்ணம் இருப்பார்கள். சரியாகத் தூங்கமாட்டார்கள். கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை இருக்கும்.
ஜாதகத்தில் லக்னம் அல்லது 4, 7, 8, 12-ல் செவ்வாய், சனி இருந்தால், அந்த ஜாதகர் வசிக்கும் வீட்டின் சமையலறை மத்தியப் பகுதியில் இருக்கும். சில வீடுகளில் வடகிழக்கில் சமையலறை இருக்கும். அதனால் அந்த ஜாதகருக்குத் திருமணம் தாமதமாக நடக்கும். சிலருக்கு இருமுறை திருமணம் நடக்கும். சிலருக்கு விவாகரத்து ஏற்படும். பிள்ளைகள் தங்களின் பெற்றோரு டன் ஒத்துப்போக மாட்டார்கள்.
6-ல் சுக்கிரன், 8-ல் சந்திரன் இருந்து, அந்த நபர் வசிக்கும் வீட்டின் பிரதான வாசல் தெற்கு திசையில் இருந்து, அவர் வடகிழக்கில் படுத்தால், அவருக்கு மனதில் அமைதியே இருக்காது. எப்போதும் பிரச்சினைகள் இருக்கும். மனதில் பயம் இருக்கும்.
12-ல் சூரியன், சனி, ராகு, புதன் இருந்தால், அவருக்கு பித்ரு தோஷம் இருக்கும். அதனால் அவர் எந்த வீட்டில் வசித்தாலும், அந்த வீட்டின் பிரதான வாசல் சரியான திசையில் இருக்காது. அது நீசமாக இருக்கும். அந்த வீட்டின் தெற்கு மத்தியப் பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருக்கும். அதனால் வாழ்வில் பல சிக்கல்கள் உண்டாகும்.
வாடகை வீட்டில் வாழும் ஒருவர் மீண்டும் மீண்டும் வீடுகளை மாற்றிக் கொண்டேயிருந்தால், அவருடைய ஜாதகத்தில் 4-ஆம் பாவாதிபதி நீசமாக இருக்கிறார் என அர்த்தம். சந்திரனிலிருந்து 4-ஆவது பாவத்தில் பாவகிரகம் இருக்கும். அதனால் அடிக் கடி அவர் வீட்டை மாற்றிக் கொண்டேயிருப்பார்.
ஜாதகத்தில் லக்னாதிபதி 4-ல் சூரியனுடன் இருந்து, அந்த சூரியனை சனி பார்த்தால், அந்த ஜாதகருக்கு புதிய வீடு அமையாது. பழைய அல்லது சிதில மடைந்த வீட்டில்தான் அவர் வாழவேண்டிய திருக்கும்.
அங்கு அவருக்கு நிறைய தொல்லைகள் ஏற்படும்.
ஜாதகத்தில் 3-ல் சுக்கிரன், ராகு, 4-ல் சூரியன், 5-ல் நீச குரு, 7-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் தான் வசிக்கும் வீட்டை அடிக்கடி மாற்றுவார். அவர் எங்கு வாழ்ந்தாலும் பிரச்சினைகள் வந்துசேரும். மன நிம்மதி இல்லாமலே எப்போதும் இருப்பார்.
ஒரு வீட்டின் பிரதான வாசல் தென்கிழக்கில் இருந்து, அந்த வீட்டின் வடகிழக்கில் கழிவறை அல்லது குளியலறை இருந்தால், அங்கு வாழ்பவர் இதயநோய் அல்லது சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருப்பார். அனைவரிடமும் சண்டை போடுவார். மன அமைதியே அவருக்கு இருக்காது.
பரிகாரங்கள்...
பழைய எலக்ட்ரானிக் பொருட்கள், கிழிந்த துணிகள், பழைய செருப்பு, நனைந்த துணிகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. வீட்டின் வடகிழக்கு சுத்தமாக இருக்கவேண்டும். வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. வீட்டில் பச்சை, நீலம், பிரவுன் ஆகிய நிறங்களைத் தவிர்க்கவும். நான்காவது பாவத்தின் அதிபதியை வணங்க வேண்டும். தினமும் காலையில் பூமியைத் தொட்டு வணங்கவேண்டும். செவ்வாய்க்கிழமை வெல்லம் அல்லது பூந்தியை ஆஞ்சனேயருக்குப் படைத்து, அதை எல்லாருக்கும் பிரசாதமாக அளிக்கலாம். குலதெய்வ வழிபாடு நன்று. லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
செல்: 98401 11534