பலன்கள் எல்லாருக்கும் பலிக்காதது ஏன்? -க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/why-are-benefits-not-everyone-ka-gandhi-murugeshwar

ஷ்டத்தில் உழன்றுகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வருகிற குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேதுப் பெயர்ச்சி அல்லது ஏதாவது ஒரு பெயர்ச்சி நம் வாழ்க்கையை மாற்றியமைத்துவிடாதா என ஏங்கி, நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து நம்பிக்கை யுடன் காத்திருக்கிறார்கள். அதேபோல, எந்தக் கடவுளாவது நம் பிரச்சினை அத்தனையையும் தீர்த்துவைக்காதா என வேண்டி, ஜோதிடர்கள் சொல்கிற கோவில்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளோர், ""அந்தக் கோவிலுக்குப் போனேன், கஷ்டம் போச்சு. இந்தக் கோவிலுக்குக் போனேன், பிரச்சினை எதுவும் எனக்கு வரலை'' எனச் சொல்கிற வார்த்தைகளைக் கேட்டு, நம்பிக்கையுடன் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

சிலர் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், தொடர்தோல்விகளால் காரணம் புரியாமல், எதிரிகள், துரோகிகள் வைத்த செய்வினை, பில்லிசூனியத்தால்தான் நமக்குக் கஷ்டமோ என்று, ஏதாவதுசெய்து கஷ்டம் தீர்ந்தால்போது மென, கேள்விப்படுகிற அத்தனையும் முயற்சி செய்து, அதில் சிலர் வெற்றிபெற்றதாகவும், பலர் தோல்வியடைந்ததாகவும் சொல்கிறார்கள்.

bb

கிரகப் பெயர்ச்சி ஏற்பட்டதும் ஒரே ராசிக்காரர்களில் சிலருக்கு ஜோதிடர்கள் சொன்னதில் நல்ல பலனும், சிலருக்கு அதிகக் கஷ்டத்தையும் தந்துவிடுகிறது. இதனால், வெறுத்துப்போய் ஜோதிடம் பொய், கடவுள் பொய், பரிகாரங்கள் பொய் என விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிடு கின்றனர்.

பொதுவாக, ஜோதிடர்கள் ஜாதகத்தில் இருக்கும் கெட்ட பலன்களைச் சொன்னால், சராசரி மக்கள் அதிக மனவுளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். ஆதலால், உண்மையில் கெட்ட பலன்கள் இருந்தாலும் அதைப் பற்றிக்கூறி பயமுறுத்தாமல், ஜோதிடர்கள் நம்பிக்கை கொடுக்கவேண்டும். வாக்கு ஸ்தானம் ஜோதிடர்களுக்கு அதிகமிருப்பதால் கெடுபலன்கள் சொல்வதைத் தவிர்த்து, ""நல்ல காலம் சீக்கிரம் வந்துவிடும்'' எனச் சொல்லி ஊக்கம் தரவேண்டும். எதிர்மறை எண்ணங்களால் பலர் விரக்தி அடையக்கூடும். ஆத

ஷ்டத்தில் உழன்றுகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வருகிற குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேதுப் பெயர்ச்சி அல்லது ஏதாவது ஒரு பெயர்ச்சி நம் வாழ்க்கையை மாற்றியமைத்துவிடாதா என ஏங்கி, நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து நம்பிக்கை யுடன் காத்திருக்கிறார்கள். அதேபோல, எந்தக் கடவுளாவது நம் பிரச்சினை அத்தனையையும் தீர்த்துவைக்காதா என வேண்டி, ஜோதிடர்கள் சொல்கிற கோவில்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளோர், ""அந்தக் கோவிலுக்குப் போனேன், கஷ்டம் போச்சு. இந்தக் கோவிலுக்குக் போனேன், பிரச்சினை எதுவும் எனக்கு வரலை'' எனச் சொல்கிற வார்த்தைகளைக் கேட்டு, நம்பிக்கையுடன் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

சிலர் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், தொடர்தோல்விகளால் காரணம் புரியாமல், எதிரிகள், துரோகிகள் வைத்த செய்வினை, பில்லிசூனியத்தால்தான் நமக்குக் கஷ்டமோ என்று, ஏதாவதுசெய்து கஷ்டம் தீர்ந்தால்போது மென, கேள்விப்படுகிற அத்தனையும் முயற்சி செய்து, அதில் சிலர் வெற்றிபெற்றதாகவும், பலர் தோல்வியடைந்ததாகவும் சொல்கிறார்கள்.

bb

கிரகப் பெயர்ச்சி ஏற்பட்டதும் ஒரே ராசிக்காரர்களில் சிலருக்கு ஜோதிடர்கள் சொன்னதில் நல்ல பலனும், சிலருக்கு அதிகக் கஷ்டத்தையும் தந்துவிடுகிறது. இதனால், வெறுத்துப்போய் ஜோதிடம் பொய், கடவுள் பொய், பரிகாரங்கள் பொய் என விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிடு கின்றனர்.

பொதுவாக, ஜோதிடர்கள் ஜாதகத்தில் இருக்கும் கெட்ட பலன்களைச் சொன்னால், சராசரி மக்கள் அதிக மனவுளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். ஆதலால், உண்மையில் கெட்ட பலன்கள் இருந்தாலும் அதைப் பற்றிக்கூறி பயமுறுத்தாமல், ஜோதிடர்கள் நம்பிக்கை கொடுக்கவேண்டும். வாக்கு ஸ்தானம் ஜோதிடர்களுக்கு அதிகமிருப்பதால் கெடுபலன்கள் சொல்வதைத் தவிர்த்து, ""நல்ல காலம் சீக்கிரம் வந்துவிடும்'' எனச் சொல்லி ஊக்கம் தரவேண்டும். எதிர்மறை எண்ணங்களால் பலர் விரக்தி அடையக்கூடும். ஆதலால், நேர்மறை எண்ணங்களை மக்களுக்கு ஜோதிடர்கள் விதைக்கவேண்டும்.

ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்தது. விதியை மாற்றும் வல்லமை கடவுளுக்கு உண்டு, முயன்றால் முடியாதது எதுவுமில்லை, விதியை மதியால் வெல்லலாம்... இப்படியெல்லாம் சொல்லி, வாழ வழிகாட்டி, நோகடிக் காமல் பலன் சொல்லவேண்டும் என உண்மையைச் சொல்லவிடாமல் தடுத்துவிட்டு, யார் எப்படி சொன்னா லென்ன? ஜோதிடர்கள் உண்மையை வெளிப்படையாகச் சொன்னால் எச்சரிக்கையாக இருந்திருப்போமே என ஆதங்கப்படுபவர்களும் உண்டு.

ஜோதிடர்கள், மனம் புண்படக்கூடா தென பலனைப் பதமாகச் சொல் வார்கள் என்பதை மக்களும் அறிவர்.

ஆனால், ஜோதிடத்தை மதம் சார்ந்ததாக எண்ணும் சிலர், ஏதாவது குறை கிடைத்தால் அதைச் சொல்லி சந்தோஷப்படும் மன நோயாளிக் கூட்டம் இருக்கிறது. தற்சமயம் கொரோனோ வந்துவிட்டது. எந்த ஜோதிடரும் சொல்லவில்லை என பைத்தியம்போல் பேசத்தொடங்கிய கூட்டத்திற்கு, பஞ்சாங்கத்தில் முன்பே கணித்த பக்கங்களைக் காட்டினாலும் கண்டுகொள்ளாமல் பேசுவர். வெளி நாடுகளில் இப்படி ஏதாவது சிறியகுறிப்பு இருந்திருந்தால், அதைப் பெரிதாகப் பேசி வியாபாரமாக்கி அலைந்திருப்பர்.

ஜோதிடத்தால் எதிர்காலத்தைச் சொல்லமுடியாது, ஜோதிடம் அறிவியல் அல்ல எனச்சொல்லி ஜோதிடத் தையும், ஜோதிடரையும் பகுத்தறிவு என்கிற பெயரில் ஏளனப்படுத்த கூட்ட மொன்று தயாராக இருக்கிறது.

இதற்கு முதல் காரணம், பொதுவாக பன்னிரண்டு ராசிகளுக்கும் சொல்லப் படும் கோட்சாரப் பலன்களே. ஒவ்வொரு மனிதனுக்கும் துல்லிய மான பலன்களை அறிந்துகொள்ள சுய ஜாதகம் அவசியம் என்னும் புரிதல் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு- கேதுப் பெயர்ச்சிப் பலன்களைவிட, தனிநபருக்கு சுய ஜாதகத்தில் நடக்கும் தசையின் பலன்களே ஜாதகரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி வருடம் ஒருமுறை நடைபெறும்.. 12 ராசிகளான மேஷம்முதல் மீனம்வரை ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் தங்குவார். அதனால், குருவுக்கு 12 வருடம் ஒரு சுற்று. அதாவது, வான் மண்டலத்தில் சூரியனை வியாழக் கோள் ஒருமுறை சுற்ற 12 வருடங்களாகும். அதுதான் ஜோதிடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக, கோட்சாரத்தில் குரு ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்களில் இருந்தால் நற்பலனையும், 1, 3, 4, 10-ஆமிடங் களில் இருந்தால் சுமாரான பலன்களையும், 6, 8, 12-ஆமிடங்களில் இருந்தால் தீய பலனையும்தரும். இதுவும் ராசிக்கு ராசி பலன்கள் மாறுபடும்.

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். 12 ராசிக்கும் ஒரு சுற்று 30 வருடம். சூரியனை சனி ஒருமுறை சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. சனி 3, 6, 11-ல் வரும்போது யோகத்தையும், 5, 9, 10-ல் வரும்போது சுமாரான பலன்களையும், ராசிக்கு 4-ல் வரும்போது அர்த்தாஷ்டமச் சனியாகி முடக்கத்தையும், 7-ல் வரும்போது கண்டச்சனியாகி பல பாதிப்பு களையும் தருவார். 8-ல் அஷ்டமச் சனியாகி வாட்டுவார். 12, 1, 2 ஆகிய இடங்களில் ஏழரைச்சனியாக அமர்ந்து சொல்லமுடியாத வேதனைகளைக் கொடுத்து வாழ்க்கையைப் புரியவைப்பார். சனி சிலருக்கு அதிக பாதிப்புகளையும், சிலருக்கு அதிக நன்மைகளையும் அள்ளி வழங்குவார்.

ராகு- கேது பெயர்ச்சி

பூமியின் நிழல் எனச் சொல்லப்படும் ராகு- கேது ஒன்றரை வருடங்கள் ஒரு ராசியில் இருப்பர். எதிர்திசையில் நகரும். ஒரு சுற்று 18 ஆண்டுகள்.

வக்ரம், அதிசாரம் கிடையாது. 3, 6, 9, 11-ல் இருந்தால் நன்மை தருவார். ராகு சனியைப்போல பலனும், கேது செவ்வாயைப்போல பலனும் தருவர். ராகு- கேது நிற்கும் நட்சத்திரம், பார்க்கும் கிரகத்தித்கேற்பப் பலன் தருவர். ""ராகுபோல் கொடுப்பாரில்லை, கேதுபோல் கெடுப்பாரில்லை""என்பது பொதுப் பலன்.

வாழ்க்கையில் உடனடி மாற்றங்களைத் தரும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி வாழ்க்கையில் உடனடி மாற்றங்களைத் தரும் குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு- கேதுப் பெயர்ச்சி தவிர, ஏனைய 5 கிரகங்களுக்கும் பெயர்ச்சி உண்டு.

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சந்திரன் 2 நாள் 6 மணி, சூரியன் ஒரு மாதம், செவ்வாய் ஒன்றரை மாதம், புதன் ஒரு மாதம், சுக்கிரன் ஒரு மாதத்தில் பெயர்ச்சியடையும். இதில் கிரக வக்ரம், அதிசாரம், அஸ்தமனம் உண்டு. ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் பலன்கள் ஒவ்வொரு ஜாதகருக்கும் மாறும்.

தசைப் பலன்

""வருஷா வருஷம் எத்தனையோ கிரகப்பெயர்ச்சிப் பலன் இதுவரை கேட்கி றேன். ஆனால், என் வாழ்க்கை அப்படியே தான் இருக்கு'' எனப் புலம்புபவர் களையும், ""நான் உழைப்ப நம்பி வாழுறேன். ஜோதிடத்தை நம்பி வாழ்ந்தா பொளைக்க முடியுமா பொளப்பப் பாருங்க'' எனப் பேசுபவர்களும் உண்டு. கோட்சார கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் எதிர்பார்த்தபடி சிலருக்கு பலிக்காமல் போவதற்கு அவரவர் சுய ஜாதகமே காரணம்.

அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசையைப் பொருத்தே வாழ்க்கையில் நல்லது, கெட்டது நடைபெறும். ""திருடப்போனாலும் தசையறிந்து செல்'' என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், ஜாதகத்தில் தசை யோகமாக அமைந்தால், தீமைசெய்பவர்கள் கெட்டவர்கள் என உலகமே அறிந் திருந்தாலும் தண்டனை பெறாமல் சொகுசாக வாழ்வார்கள்.

உலகில் நல்லவன்- கெட்டவன், உயர்ந் தவன்- தாழ்ந்தவன் இப்படி எத்தனையோ ஏற்றத்தாழ்வு இருந்தாலும், ஒருவருக்கு அமையும் தசையே ஜாதகரை அரசனாகவோ, அடிமையாகவோ மாற்றும்.

யோக தசை

பொதுவாக லக்னாதிபதி, ராசியதிபதி, தனாதிபதியான இரண்டாம் அதிபதி, சுகாதிபதியான வீடு, வாகன யோகம் தரும் நான்காம் அதிபதி, பஞ்சமாதிபதியான பூர்வபுண்ணிய ஐந்தாம் அதிபதி, பாக்கியாதிபதியான ஒன்பதாம் அதிபதி, தொழிலதிபதியான பத்தாம் அதிபதி, லாபாதிபதியான பதினொன்றாம் அதிபதி தசை ஆகிய அனைத்தும் ஜாதகர் வாழ்க்கையில் நல்ல மாற்றம் மற்றும் ஏற்றத்தைத் தரும்.

கிரகம் வலுப்பெற்றால் சாதாரண நிலையில் இருப்பவரையும் கோடீஷ்வரராக மாற்றி புகழ், அந்தஸ்தைத் தந்துவிடும். கெட்ட தசை என எதிர்பார்க்கும் தசையும் சிலருக்கு யோகத்தைத் தரும். ஜாதகத்தில் கிரக வலிமை, கிரக இணைவு, சுபகிரகப் பார்வை, குறிப்பாக நடக்கும் தசைநாதன் நின்ற நட்சத்திர சாரம் ஆகியவை வாழ்க்கையில் அதிஷ்டத்தையே தரும். தசைக்கு எந்த இடத்தில் புக்திநாதன் இருப்பதைப் பொருத்தும், தசையில் சில புக்திகள் நன்மையான பலனைத் தரும்.கெடுதல் தரும். கிரகம் கெட்டிருந்தாலும் விபரீத ராஜயோகத்தால் நற்பலனை வாரிவழங்கும்.

சுமாரான தசை

கலப்பு அதிபதிகள் தசை அதாவது- 3, 9-க்குடைய தசை, 6, 9-க்குடைய தசை என மறைவிட அதிபதிகள் மற்றும் யோகாதி பதிகள் தசை இணைந்து செயல்படும் போது தசையில் நன்மை, தீமை கலந்து நடக்கும்.

கெட்ட தசை

3, 6, 8, 12-க்குடையவர்கள் தசை அதிஷ்டம் தருவதுபோல் ஆரம்பித்து திடீர் பாதகத்தைச் செய்துவிடும். 3-ஆவது தசை நீச தசை, 4-ஆவது சனி தசை, 5-ஆவது செவ்வாய் தசை, 6-ஆவது குரு தசை தீமை தரும்..

நெருங்கியவர் இழப்பு, சிறைவாசம், தீரா நோய், கண்டம், அவமானம், எதிரியால் தொல்லை, கடனால் பாதிப்பு, தற்கொலை, கொலைப் பழி என பலவிதப் கொடுமைகள் நடக்கும். ஏழரைச்சனியுடன் கூடிய சந்திர தசையும் பல சங்கடங்களைத் தரும். கோட்சாரப் பலன் நன்றாக இருந்தாலும், தீமை தவிர்க்க முடியாததாகிவிடும்.

இதுதான் கஷ்டம் என சொல்லமுடியால் கஷ்டத்தை அனுபவிக்கநேரும். நல்ல தசை என எதிர்பார்த்த தசை சிலநேரம் பாதக நட்சத்திரத்தில் அமர்வது, தீய கிரகப் பார்வை, சேர்க்கையும் நற்பலûத் தடுத்துவிடும்

பரிகாரம்

கோட்சாரப் பலனைவிட நடக்கும் தசை, புக்தி அறிந்து நடந்துகொண்டால் நிச்சயம் நன்மைகள் நடைபெறும். கிரக தோஷங்களை கிரக சாந்தி செய்துகொள் வதும், பேராசையின்றி தகுதிக்கேற்ப வாழ்க்கையையும், மனதையும் மாற்றிக் கொள்வதும் நிம்மதியும் தரும். சந்தோஷமும் வாழ்வில் நிறைந்திருக்கும்.

செல்: 96003 53748

bala310720
இதையும் படியுங்கள்
Subscribe