யாருடைய ஜோதிட வாக்கு பலிக்கும்?

/idhalgal/balajothidam/whose-astrology-vote

ஜோதிடம் என்றால் ஜோதி இருக்கின்ற இடம் அல்லது வெளிச்சம் உள்ள இடம் என்று பொருள். இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டிக்கொடுக்கும் ஒரு தெய்வீகமான, உன்னதமான கலையாகும். வேதத்தின் ஓர் அங்கம். இது விஞ்ஞானம் மற்றும் கலை சேர்ந்த ஓர் அற்புத சாஸ்திரமாகும். ஒரு ஜீவாத்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது மார்க்கத்தை உணரச்செய்து, தமது இலக்கை அடைய பேருதவி புரியும் உயரிய சாஸ்திரம் ஜோதிடம். மனிதர்களை நம்பிக்கையுடன் வாழவைக்கவும், நன்னடத்தை, நற்பண்பு கொண்டு வாழ்க்கை நடத்தவும், அவரவர் தங்களின் ப்ராப்தம் என்னவென்று உணர்ந்து வாழ்வதற்கும், வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கு வழிகாட்டியாகவும் ஜோதிட சாஸ்திரம் உதவுகிறது.

"பாலஜோதிடம்' புத்தகம் படித்துவிட்டு எனக்கு போன்செய்யும் வாசகர்களில் பெரும்பான்மையினர் "நான் ஜோதிடராக முடியுமா?' என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். ஒருசிலர் ‘"பாலஜோதிடம்' படித்தே ஜோதிடராகி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஒருவர் ஜோதிட ஞானத்தை ஏற்படுத்திக்கொள்ள, கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். ஜோதிடராக அவருடைய ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். 1, 2, 5, 9, 10-ஆம் இடங்கள் வலுப்பெற வேண்டும். இந்த ஐந்து பாவகங்களும் ஒன்ற

ஜோதிடம் என்றால் ஜோதி இருக்கின்ற இடம் அல்லது வெளிச்சம் உள்ள இடம் என்று பொருள். இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டிக்கொடுக்கும் ஒரு தெய்வீகமான, உன்னதமான கலையாகும். வேதத்தின் ஓர் அங்கம். இது விஞ்ஞானம் மற்றும் கலை சேர்ந்த ஓர் அற்புத சாஸ்திரமாகும். ஒரு ஜீவாத்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது மார்க்கத்தை உணரச்செய்து, தமது இலக்கை அடைய பேருதவி புரியும் உயரிய சாஸ்திரம் ஜோதிடம். மனிதர்களை நம்பிக்கையுடன் வாழவைக்கவும், நன்னடத்தை, நற்பண்பு கொண்டு வாழ்க்கை நடத்தவும், அவரவர் தங்களின் ப்ராப்தம் என்னவென்று உணர்ந்து வாழ்வதற்கும், வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கு வழிகாட்டியாகவும் ஜோதிட சாஸ்திரம் உதவுகிறது.

"பாலஜோதிடம்' புத்தகம் படித்துவிட்டு எனக்கு போன்செய்யும் வாசகர்களில் பெரும்பான்மையினர் "நான் ஜோதிடராக முடியுமா?' என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். ஒருசிலர் ‘"பாலஜோதிடம்' படித்தே ஜோதிடராகி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஒருவர் ஜோதிட ஞானத்தை ஏற்படுத்திக்கொள்ள, கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். ஜோதிடராக அவருடைய ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். 1, 2, 5, 9, 10-ஆம் இடங்கள் வலுப்பெற வேண்டும். இந்த ஐந்து பாவகங்களும் ஒன்றோடொன்று சம்பந்தம் பெறும்போது மட்டுமே ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்ய முடியும்.

ஒன்று என்ற லக்னம் வலுப்பெறும்போது ஒருவருடைய தனித்தன்மை வெளிப்படும். இதை மெருகேற்றும்போது தனித்திறமை மிளிரும். லக்னத்துக்கு இரண்டாமிட அதிபதி ஆட்சி, உச்சமாக இருந்தால் ஜோதிடம் வரும். எந்த லக்னமாக இருந்தாலும், லக்னத்துக்கு இரண்டாமிடத்திற்கு குரு, புதன் சம்பந்தம் இருந்தாலும், இரண்டாமிடத்து அதிபதியின் தசை வந்தாலும், குரு அல்லது புதன் வந்தாலும் அவர் ஜோதிடம் கற்பார். லக்னாதிபதி மற்றும் புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜோதிடம் படிக்கமுடியும்.

kalai

புதன் நீசம், பகை அடையமால் 2, 5, 10, 11-ஆம் இடங்களில் இருந்தால், ஜோதிடம் பார்த்தும் பணம் சம்பாதிக்கமுடியும்.

புதன் 10, 11-ஆம் அதிபதிகள் சம்பந்தம் ஏற்பட்டால் ஜோதிடத்தைத் தொழிலாகச்செய்து பெரிய லாபத்தைப் பெறுவார்.

புதனுடன் கேது அல்லது செவ்வாய் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டால் அவர் ஜோதிடம் கலந்த மாந்திரீகக் கலையைக் கற்பதில் ஆர்வம் காட்டுவார். ராகு, புதன் சம்பந்தம் இருந்தால் ஜோதிடம் தானாக வரும்.

ஜோதிடம் என்றாலே புதனைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவருக்குமே புதன் வலுவாக இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் அல்லது மீனத்தில் நீசபங்க ராஜயோகமாக அமைந்திருக்கும். புதன், சுக்கிரனோடு இணைந்து நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்க வேண்டும். அந்த புதன் தன்னுடைய ரேவதி நட்சத்திரத்தில் அமைந்திருந்தால்தான் முழுமையான நீசபங்க ராஜயோகம் ஆகும். புகழ்பெற்ற ஜோதிடர்களுக்கு புதன், சந்திர கேந்திரத்திலோ அல்லது லக்ன கேந்திரங்களிலோ அமையப்பெற்றிருக்கும்.

புதனின் லக்ன, ராசி, நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மிகுந்த கணிப்புத் திறமை வல்லுநர்கள்.

புதன்- ஜோதிட அறிவுக்கும், குரு- வேத சாஸ்திர அறிவுக்கும், கேது- வேதாந்த ஞானத்திற்கும் காரக கிரகமாக நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். 2-ஆம் இடமான வாக்கு சாதுர்யத்தின்மூலம் தன் கணிப்புக்களை மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கக்கூடிய வல்லமை பெற்றவராக இருக்க வேண்டும். 5-ஆம் இடம் ஜோதிடக்கலையைப் பற்றிக் கூறும் இடம் என்பதால் 8, 12-ஆம் இடத்தோடு சம்பந்தம் பெறக்கூடாது. மேலும் 5-ஆம் இடம் ஒருவரின் கற்பனைத்திறனைப் பற்றிக்கூறும் இடம் என்பதால், தன் வாக்கு சாதுர்யத்தால் கலைநயத்தோடு தன்னுடைய ஜாதகக் கணிப்பை ஜாதகருக்கு எடுத்துரைக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும். 7-ஆம் பாவகம் வலுப்பெற்றவர்களுக்கே பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளரே நண்பராவார். ஒரு வாடிக்கையாளர்மூலம் நூறு வாடிக்கையாளர் கிடைப்பர்.

9-ஆம் பாவகம் உள்ளுணர்வு, ஆன்மிகம், சாஸ்திர ஞானம் போன்றவற்றைக் குறிக்கும்.

ஒரு ஜோதிடர் ஆன்மிக நாட்டம் மிகுந்தவராக இருக்க வேண்டும். அத்துடன் உள்ளுணர்வு மிக்கவராக இருப்பது மிக அவசியம்.

தெய்வீகக் கலையான இந்த ஜோதிடக்கலையை ஒருவர் அறிந்துகொள்ளவோ அல்லது அதைத் தொழிலாகக்கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை. தெய்வ பலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்படும்.

பாக்கிய ஸ்தானம் பலம்பெற்றவர்களுக்கே நவகிரகங்கள் தன் செயல்களையும் இயக்கத்தையும் உணர்த்துவார்கள். பாக்கிய ஸ்தானம் பலம்பெறாத ஒருவர் எத்தனை நூல்கள், கிரந்தங்கள் படித்தாலும், கணிதங்கள் ஆராய்ச்சிகள் செய்தாலும் இக்கலையைப் பற்றியும், அருமை பெருமைகளையும் தெரிந்து கொள்ளமுடியாது. இவர்கள் சொல்லும் பலாபலன்கள் சரிவர நடக்காது.

இக்கலையைக் கையாள்பவர்கள் கண்டிப்பாக ஆச்சார அனுஷ்டானத்தை அனுசரிப்பவர்களாக இருக்கவேண்டும். சாத்வீக உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் ஜபதபங்களைச் செய்பவராக இருத்தல் அவசியம். வாசியோக பயிற்சி பெற்றவர்களுக்கு இக்கலை நன்கு வசப்படும். நவகிரகங்களின் செயல்பாடு இயக்கத்தை வாசிநிலையில் இருந்து உள்ளுணர்வுமூலம் உணர்ந்து ஜாதகப் பலனை நன்கு கூறமுடியும். எவ்வகையிலும் தெய்வீகத் தொடர்பில்லாதவர் ஜோதிடத்தைக் கையாண்டால் அவர்களைப் படுகுழியில் தள்ளிவிடும். தரித்திர நிலையைத் தந்து பலர் இழிவாகப் பேசும் நிலை உருவாகும்.

தனது உபாசனா பலத்தாலோ அல்லது பிறர் தந்த பலத்தின்மூலமோ தேவதைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஜோதிடக்கலையை முன்வைத்து செயல்படுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கெடுத்துவிடும். தன்னிடமுள்ள தேவதைகள்மூலம் வருபவர்களின் குற்றங்குறைகளைக் கண்டு, அவர்களைத் தன் இஷ்டம்போல் செயல்படுத்த விரும்புபவர்களின் குடும்பம் ஒரு நிலையில் செயல்படாது. குடும்பத்தில் அமைதி இராது. தான் வைத்து விளையாடும் தேவதையே தனக்கு சத்துருவாகச் செயல்பட்டு பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். உடலைக் கெடுத்துவிடும். மனதை ஒருநிலையில் வைத்து, இறையுணர்வோடு, பயபக்தியுடன் இக்கலையைக் கையாண்டு வந்தால் அவர்களை நவகிரகங்களே பாதுகாத்து பல நன்மைகளைச் செய்கின்றன. நவகிரகங்களுக்கு மரியாதை அளித்து, ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டும் இக்கலைமூலம் பிறருக்குப் பலன்களைச் சொல்லிவந்தால், அவர்களை சிறப்பானமுறையில் நவகிரகங்கள் வைத்துள்ளன. இக்கலையை ஒருவர் அதற்கொரு வரையறை வகுத்து, கட்டுப்பாடுடன் பிறருக்குச் சொல்லிவந்தால், நவகிரகங்கள் அவர் நாவிற்குக் கட்டுப்படும் என்ற சித்தர்கள் வாக்குப் பொய்க்காது.

bala210918
இதையும் படியுங்கள்
Subscribe