Advertisment

யாருடைய ஜோதிட வாக்கு பலிக்கும்?

/idhalgal/balajothidam/whose-astrology-vote-0

ரு ஜோதிடர் காலையில் தன் கடன்களை முடித்துக் கொண்டு தனது இஷ்ட, உபாசனா தெய்வத்தை வணங்கி, ஜபதபங்கள்செய்து பின் ஜோதிடம் சொல்லத் தொடங்க வேண்டும். ஜோதிடம் கேட்க வருபவரின் மனம் பீதியடையும், புண்படும்படியான பலன்களை- வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.

Advertisment

2, 5-ஆம் அதிபதி, 2, 9-ஆம் அதிபதி சம்பந்தம் தெய்வ வாக்கு. 9, 2-ஆம் அதிபதி சம்பந்தம் போலி வாக்கு. 2, 10-ஆமிட சம்பந்தம் பெற்றவருக்கே வாக்கால் பிழைக்கக்கூடிய தொழில் அமையும். பத்தாம் அதிபதி (தொழில்), மூன்றாம் அதிபதி (புகழ்), ஜோதிடத்திற்குக் காரகனான புதன் இணைவு, மூவரும் சம்பந்தம் பெறும்போது உலகளவில் புகழ்பெறும் ஜோதிடராகலாம்.

சந்திரனுக்கு கேந்திர, திரிகோணத்தில் புதன், குரு இருந்து, ஆட்சி, உச்சம் பெற்று, அந்த புதனுக்கு பதினொன்றில் சுக்கிரன் இருக்க மிகச்சிறந்த ஜோதிடர். குரு, புதன் சம்பந்தத்துடன் சந்திரன், ராகு சம்பந்தம் பெறும்போது பிரபலமான ஜோதிடராவார். டிவி, பத்திரிகைகள் மூலம் புகழ்பெறுவார்.

vaku

Advertisment

சந்திரனுக்கு 2, 12-ல் ராகு, கேது அமர்ந்து சுபத்தன்மை பெறுவது, குரு, சுக்கிரன் உச்சம் பெற்று இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்வது, லக்ன, ராசிக்கு பத்தாம் அதிபதி அம்சத்தில் புதன் அல்லது குரு வீட்டில

ரு ஜோதிடர் காலையில் தன் கடன்களை முடித்துக் கொண்டு தனது இஷ்ட, உபாசனா தெய்வத்தை வணங்கி, ஜபதபங்கள்செய்து பின் ஜோதிடம் சொல்லத் தொடங்க வேண்டும். ஜோதிடம் கேட்க வருபவரின் மனம் பீதியடையும், புண்படும்படியான பலன்களை- வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.

Advertisment

2, 5-ஆம் அதிபதி, 2, 9-ஆம் அதிபதி சம்பந்தம் தெய்வ வாக்கு. 9, 2-ஆம் அதிபதி சம்பந்தம் போலி வாக்கு. 2, 10-ஆமிட சம்பந்தம் பெற்றவருக்கே வாக்கால் பிழைக்கக்கூடிய தொழில் அமையும். பத்தாம் அதிபதி (தொழில்), மூன்றாம் அதிபதி (புகழ்), ஜோதிடத்திற்குக் காரகனான புதன் இணைவு, மூவரும் சம்பந்தம் பெறும்போது உலகளவில் புகழ்பெறும் ஜோதிடராகலாம்.

சந்திரனுக்கு கேந்திர, திரிகோணத்தில் புதன், குரு இருந்து, ஆட்சி, உச்சம் பெற்று, அந்த புதனுக்கு பதினொன்றில் சுக்கிரன் இருக்க மிகச்சிறந்த ஜோதிடர். குரு, புதன் சம்பந்தத்துடன் சந்திரன், ராகு சம்பந்தம் பெறும்போது பிரபலமான ஜோதிடராவார். டிவி, பத்திரிகைகள் மூலம் புகழ்பெறுவார்.

vaku

Advertisment

சந்திரனுக்கு 2, 12-ல் ராகு, கேது அமர்ந்து சுபத்தன்மை பெறுவது, குரு, சுக்கிரன் உச்சம் பெற்று இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்வது, லக்ன, ராசிக்கு பத்தாம் அதிபதி அம்சத்தில் புதன் அல்லது குரு வீட்டில் இருப்பது, புதன், சந்திரன் சமசப்தமப் பார்வை, புதன், செவ்வாய் சம்பந்தம் ஆய்வு செய்வதில் ஆர்வம் ஏற்படும். சந்திர, கேந்திரத்தில் மட்டும் அல்ல; லக்ன கேந்திரத்திலும் புதன் இருக்கலாம். மிகச்சுருக்கமாக, உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி, பத்தாம் வீட்டு அதிபதி 2, 4, 5, 7, 9, 11-ஆம் வீட்டோடு ஆட்சி, உச்சம், நட்பு என்று ஏதாவது ஒருவிதத்தில் சம்பந்தம் பெற்று குரு அல்லது புதன் சம்பந்தம் இருக்க வேண்டும்.

பத்தில் உள்ள கிரகத்திற்கும் புதனுக்கும் ஏதோ ஒருவகையிலாவது சம்பந்தம் இருக்க வேண்டும். 6, 8, 12-ஆம் அதிபதிகள் பத்தில் இருந்து, புதனும் குருவும் சம்பந்தமில்லை எனில் ஜோதிடத்தொழிலை இலவசமாகச் செய்ய நேரும். அஷ்டவர்க்கத்தில் லக்னாதிபதியைவிட 10, 11-ஆம் அதிபதி பெறும் பரல்கள் அதிகமாக இருந்தால், தொழில்முறை ஜோதிடர்- இல்லையென்றால் பல ஜோதிட ஆசிரியர்களிடம் ஜோதிடத் தொழில் கற்றுக்கொண்டே இருக்கும் ஜோதிட மாணவர்.

மேற்குறிப்பிட்ட விதிகளில் பெரும்பாலான விதிகள் உங்களுக்கு ஒத்துப்போனால் பேரையும் புகழையும் அடைய முடியும்.

வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஜோதிட ஆலோசனை தேவை. அதற்கு மட்டும் ஜோதிடக் கலையை ஈசன் படைக்கவில்லை; ஜோதிடக்கலையின் துணையோடு ஆன்மிக முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காகவும், மறுபிறவி இல்லாத முக்தியை அடைவதற்காகவும், அதைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஜோதிடராக வாழ்ந்தபின்னரே இதற்கான சூட்சுமங்கள் ஜோதிடர்களைத் தேடிவரும்.

எல்லாம் காலத்தின் கையில் என்றாலும், ஜோதிடம் என்பது ஒரு கலங்கரை விளக்கம். அது கடலில் வழிதவறித் தத்தளிப்பவனுக்கு வழிகாட்டும். ஜோதிடம் வாழ்க்கையில் தத்தளிப்பவனுக்கு தகுந்த வழிகாட்டிடும் உன்னதக்கலை.

ஒரு கப்பல் உடைந்தாலும், உடைந்த கப்பலின் ஒரு சிறு மரத்துண்டு ஒருவனின் உயிரைக் காத்திடுவதைப்போல், ஒருவன் வாழ்வின் சிரமத் தசா காலத்தில், தகுந்த ஒரு கிரகத்திற்கு, தகுந்த நேரம், காலத்தில் செய்கின்ற வழிபாட்டு பரிகாரப் பூஜைகள் அந்த ஜாதகரை நிச்சயமாக பேராபத்திலிருந்து காப்பாற்றும். இதுதான் ஒரு ஜாதகருக்கு ஜோதிடர்கள் சொல்லும் ஜீவ தர்மப் பரிகாரம்.

சொல்வது ஜோதிடர் கடமை. அதனைச் செய்வதும், செய்யாததும், செய்ய முடியாததும் ஜாதகரின் கர்மவினை.

நம்பிச் செய்பவர் நிச்சயம் நன்மை அடைவார்.

பரிகாரம் செய்யும்போது அவநம்பிக்கை கொண்டவர் அவமானம் அடைவார். பரிகாரம் செய்திட வாய்ப்பிருந்தும் செய்யாதவர் நிச்சயமாக வருந்துவார்.

ஜோதிடர்களுக்கு கஷ்டகாலம் வரக்காரணம் விஞ்ஞான வளர்ச்சியே!

முந்தைய காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிறைய பிள்ளைகள் இருப்பார்கள். அவர்களுக்கு ஜாதகம் எழுத வேண்டுமானால் ஜோதிடரிடம் செல்வார்கள். ஆனால், இப்பொழுது எல்லா வீடுகளிலும் ஒரு பிள்ளைதான் இருக்கிறார்கள்.

அல்லது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் தேவையான ஜாதகத்தை உருவாக்க இலவசமாக இணைய தளங்கள் இருக்கின்றன. அதனால் அவர்களும் ஜாதகம் எழுத ஜோதிடரை நாடுவதில்லை.

வீடுகளில் நடைபெறும் சுபநிகழ்வுகளுக்கு நல்ல நேரம் பார்க்க ஜோதிடரை நாடிய காலம் போய் இப்பொழுது எல்லாமே காலண்டரிலும், இணைய தளங்களிலும் இலவசமாகவே கிடைப்பதாலும் ஜோதிடர்களை மக்கள் சந்திப்பதில்லை.

முற்காலத்தில் திருமணப் பொருத்தம் பார்க்க ஜோதிடர்களிடம் செல்வதுண்டு. இப்பொழுது அதுவும் இணையதளங்களில் இலவசமாகக் கிடைக்கிறது. இதனாலும் ஜோதிடர்களின் உதவி மக்களுக்குத் தேவையில்லாமல் போய்விட்டது.

வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஜோதிடம் தொடர்பான விஷயங்களுக்கு இணைய தளத்தை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். ஜோதிடர்கள் குரு, புதன் பலம் நிறைந்தவர்கள். அவர்களுடைய பார்வை உங்களுடைய குழந்தையின் ஜாதகத்தில் படும்போது ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்கி ஆரோக்கியம், ஐஸ்வர்யம், காரிய சித்தி ஏற்படும்.

அதேபோல் "ஆன்லைனில்' பொருத்தம் பார்த்தால், இரண்டு பிறந்த தேதி, நேரத்திற்கு நட்சத்திரப் பொருத்தம் பார்க்கும். இரண்டு பெண்களின் பிறந்த தேதியைக் கொடுத்தாலும் பொருத்தம் பார்க்கும். இரண்டு ஆண்களின் பிறந்த தேதிக்கும் பொருத்தம் பார்க்கும். சில சூட்சுமக் குறைகளை சரிசெய்யும்விதமான பொருத்தம் அமையாமல் மணவாழ்வு சிரமமாகும். மேலும் அது நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்க்கும். அது ஸ்தூல- சூட்சுமப் கட்டப் பொருத்தம் பார்க்காது.

உங்கள் பிள்ளைகளுக்கு "ஆன்லைனில்' பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயம் செய்வதைவிட, கோவிலில் பூ வாக்கு கேட்டு திருமணம் செய்வது உத்தமம். இணையதளத்தால் ஒருவரின் திருமணம், தொழில், ஆரோக்கியம், மாரகம் தொடர்பான விஷயத்திற்குத் தீர்வு தரமுடியாது. என்றும் அது மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய சக்தியற்ற மெஷின் என்பதை உணர்ந்தவர்கள் இணைய தளத்தைப் பயன்படுத்துவதில்லை. நாகரிகத்தின் உச்சியில் இருப்பவர்களே இணைய தளத்தின்மீது ஆர்வம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அதுவும் அந்த ஜாதகரின் கர்மாக்களில் ஒன்றாக இருக்கும்போது நடப்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே வாசகர்களே ஜோதிடத்தை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

ஜோதிடம் மானுடம் வெல்லும்.

செல்: 98652 20406

bala280918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe