Advertisment

உடன்பிறந்தவர்களால் ஒத்துழைப் கிடைக்கும் யோகம் யாருக்கு?

/idhalgal/balajothidam/whom-yoga-supported-by-siblings

ஜோதிடம் பார்க்க வருபவர் களில் பலர் சகோதர- சகோதரிகள் கருத்து ஒற்றுமையுடன் இருப்பார் களா? என்று உடன்பிறப்பைப் பற்றிய ஒரு கேள்வியை கேட்காமல் எழுந்து போவதே கிடையாது. பல பெற்றோர் கள் தங்கள் பிள்ளைகள் இராமர், லட்சுமணனராகவும், பாசமலர் அண்ணன்- தங்கையாகவும் வாழ் வதையே விரும்புகிறார்கள். உடன் பிறந்தவர்களால் யாருக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்? யாருக்கு உபத்திரம் உண்டாகும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Advertisment

ஜோதிடரீதியாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 3-ஆம் இடத்தின்மூலம் இளைய சகோதர- சகோதரி பற்றியும் 11-ஆமிடத் தின்மூலம் மூத்த சகோதர- சகோதரி பற்றியும் அறியமுடியும்.

Advertisment

சகோதர பலம் ஒற்றுமையை தீர்மானம் செய்வதில் 3, 11-ஆம் பாவகத்துடன் செவ்வாய் கிரகமே பெரும் பங்குவகிக்கிறது.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையே இந்த பிறவியில் உடன்பிறந்தவர்களின் நிலை, கருத்து ஒற்றுமை, இந்த பிறப்பில் உடன்பிறந்த வர்கள்மூலம் அனுபவிக்க இருக்கும் இன்ப- துன்பங் களைத் தெளிவுபடுத்தும். செவ்வாயே ரத்தக் காரகன், பூமிக்காரகன். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட மண் ஆசை, பொன் ஆசை, பணம் இந்த மூன்றுமே பிரதானமான காரணம்.

சகோதர ஒற்றுமை

இந்த க-யுகத்தில் உடன்பிறப்புகள் பெற்றோரின் அன்புக்காகவும், சகோதர பாசத்திற்காகவும் ஏங்குவது குறைவு. வயதான பெற்றோரை பராமரிப்பதற்காகவும் அவர்களின் உடமைகளுக்கு உரிமை கொண்டாடுவதற்கும் சண்டையிடும் உடன்பிறப்புகளே அதிகம். உப ஜெய ஸ்தானங் களான 3, 11-ஆம் பாவகங்கள் வலிமைபெற்ற சகோதரர்கள் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி தங்களுக்கென்று தனி முத்திரை படைத்துவருகிறார

ஜோதிடம் பார்க்க வருபவர் களில் பலர் சகோதர- சகோதரிகள் கருத்து ஒற்றுமையுடன் இருப்பார் களா? என்று உடன்பிறப்பைப் பற்றிய ஒரு கேள்வியை கேட்காமல் எழுந்து போவதே கிடையாது. பல பெற்றோர் கள் தங்கள் பிள்ளைகள் இராமர், லட்சுமணனராகவும், பாசமலர் அண்ணன்- தங்கையாகவும் வாழ் வதையே விரும்புகிறார்கள். உடன் பிறந்தவர்களால் யாருக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்? யாருக்கு உபத்திரம் உண்டாகும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Advertisment

ஜோதிடரீதியாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 3-ஆம் இடத்தின்மூலம் இளைய சகோதர- சகோதரி பற்றியும் 11-ஆமிடத் தின்மூலம் மூத்த சகோதர- சகோதரி பற்றியும் அறியமுடியும்.

Advertisment

சகோதர பலம் ஒற்றுமையை தீர்மானம் செய்வதில் 3, 11-ஆம் பாவகத்துடன் செவ்வாய் கிரகமே பெரும் பங்குவகிக்கிறது.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையே இந்த பிறவியில் உடன்பிறந்தவர்களின் நிலை, கருத்து ஒற்றுமை, இந்த பிறப்பில் உடன்பிறந்த வர்கள்மூலம் அனுபவிக்க இருக்கும் இன்ப- துன்பங் களைத் தெளிவுபடுத்தும். செவ்வாயே ரத்தக் காரகன், பூமிக்காரகன். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட மண் ஆசை, பொன் ஆசை, பணம் இந்த மூன்றுமே பிரதானமான காரணம்.

சகோதர ஒற்றுமை

இந்த க-யுகத்தில் உடன்பிறப்புகள் பெற்றோரின் அன்புக்காகவும், சகோதர பாசத்திற்காகவும் ஏங்குவது குறைவு. வயதான பெற்றோரை பராமரிப்பதற்காகவும் அவர்களின் உடமைகளுக்கு உரிமை கொண்டாடுவதற்கும் சண்டையிடும் உடன்பிறப்புகளே அதிகம். உப ஜெய ஸ்தானங் களான 3, 11-ஆம் பாவகங்கள் வலிமைபெற்ற சகோதரர்கள் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி தங்களுக்கென்று தனி முத்திரை படைத்துவருகிறார்கள். அத்துடன் 3, 11-ஆமிடத்தில் நிற்கும் கிரகம், செவ்வாய் சுபப் பலம் பெற்றிருந்தால் சகோதரர்கள் தம் வாழ்வில் நடக்கும் எத்தகைய சம்பவங் களையும் மிகவும் சர்வசாதாரனமாக எதிர் கொள்வார்கள். திறமையான அணுகுமுறையுடைய பெருமைக்குரிய சாமர்த்தியசாலியாக திகழ்கிறார்கள். அதேபோல் 3, 11-ல் லக்னரீதியான சுபகிரகங்கள் ஆட்சி, உச்சம்பெற்றா லும் ஜாதகருக்கு இளைய சகோதரரின் ஆதரவும், உதவியும், அன்பும், பாசமும் ஜாத கருக்கு கிடைக்கும். சகோதரர்களும் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். ஜாதகத்தில் லக்னாதி பதி 2, 3-ஆம் அதிபதி ஒருவருக்கொருவர் தொடர்புபெற்று குரு அல்லது லக்ன சுபர் பார்வையைபெற இளைய சகோதரர்களால் உதவி கிடைக்கும்.

ஜனன ஜாதகத்தில் லக்னம் இரண்டு, பதினொன்றாம் அதிபதி குரு பலம் பெற்றால் மூத்த சகோதர உதவி கிடைக்கும்.

சகோதர தோஷம்

3, 11-ஆமிடத்தில் நீசம், பகைபெற்ற கிரகம் இருக்க, 3, 11-ஆமிடத்து அதிபதி 6, 8, 12-ல் மறைய 3, 11-ஆம் அதிபதியுடன் லக்னரீதியான அசுப கிரகங்கள் இணைய சகோதர இழப்பு, சகோதரர்கள் ஒற்றுமை குறைவு, சகோதர பகை போன்றவை ஏற்படும்.

அதே நேரத்தில் செவ்வாய், மூன்று, பதினொன் றாம் பாவகத்தில் இந்த அமைப்போடு இருந் தால், வேண்டாவெறுப்பாக உதவி செய்யும் நிலையில் இருப்பார்கள்.

3, 11-ஆம் அதிபதி 6, 8-ல் மறைந்து லக்ன அவயோக நட்சத்திரம் பெற்று, சனி, ராகுவின் தொடர்பில் இருந்து, செவ்வாயும் வலு குறைந்தால் சகோதர- சகோதரிகளின் உதவிகள் கிடைக்காது.

முன்வினைக் கர்மாவின் தொடர்ச்சியே இப்பிறவி. லக்னத்திற்கு 6, 8, 12-ல் மறையும் செவ்வாய் முன்ஜென்ம தொடர்ச்சியே. மிகத்தெளிவாக கூறவேண்டும் என்றால் சென்ற பிறவியில் பூமி தொடர்பாக உடன் பிறந்தவர்களின் பங்கை ஏமாற்றியவர்கள், இந்த பிறவியில் அந்த சொத்து தொடர்பான கணக்கை நேர் செய்ய எடுத்த பிறப்பாகும்.

ஜனன ஜாதகத்தில் 3, 5, 9, 11-ஆம் பாவகத் தோடு செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தால் பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் பங்காளிகள், உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது.

cc

சொத்துப் பங்கீட்டில் ஏற்படும் மனக் கசப்பு பல குடும்பங்களில் உறவுகளை பாராமுகமாக மாற்றுகிறது. சில குடும்பங் களில் அடிதடி, சண்டைகூட நடக்கிறது. சிலர் கோபத்தில் பூர்வீகத்தை உதறி வேறு ஊரில், வேறு மாநிலத்தில் குடியேறுகிறார்கள்.

சிலர் உள்ளூரில் இருந்தாலும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். சிலர் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தால் யாரும் பயன்படுத்த முடியாதவகையில் அசுப சக்திகளான மாந்தரீகம், செய்வினை போன்றவற்றை நாடு கிறார்கள். சொத்து பிரச்சினை சிறிது சிறிதாக அதிகரித்து குலதெய்வ வழிபாட் டில், முன்னோர்கள் வழிபாட்டில் முறையின் மையை ஏற்படச் செய்கின்றது. குடும்ப உறுப் பினர்கள் இணைந்து முறையாக குல வழக்க பூஜைசெய்வது தடைப்படுகிறது. இது போன்ற செயல்கள் முன்னோர்கள் மற்றும் குலதெய்வத்தின் நல்லாசிகளை குறைக்கிறது.

செவ்வாயும் காரகோ, பாவக நாஸ்தியும் 3, 11-ல் செவ்வாய் நிற்பது காரகோ பாவக நாஸ்தி. 3-ல் செவ்வாய் இளைய சகோதரத் தாலும் 11-ல் செவ்வாய் மூத்த சகோதரத்தாலும் ஏற்படும் கருத்து வேற்றுமையை கூறும். 3, 11 செவ்வாய் இருக்கும் சகோதரர்களே பெற்றோரின் உடைமைகளை பங்கிட கோர்ட் வாசல் ஏறவும், ஒருவருக்கு ஒருவர் மாந்தீரகம் செய்தல், இடு மருந்து கொடுத்தல் போன்றவற்றில் காலம் கடத்தி தாமும் அனுபவிக்காமல், உடன் பிறந்தவர்களையும் அனுபவிக்கவிடாமல் மூன்று தலைமுறை சொத்தை வைத்து வேடிக்கை பார்பவர்கள் கோடான கோடிகள். செவ்வாய்க்கு ராகு, கேது, சனி சம்பந்தம் இருந்தால் உடன் பிறப்புகள் ஜென்ம பகையாளியாகவும் மாறுகிறார்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் இரத்த சம்பந்தமுள்ள உறவுகள் முரன்பாட்டால் பிரிந்து நின்றாலும், ஒருவருக்கு ஏதேனும் துன்பம் என்றால் அந்த உறவுமுறையால் அவர் உள்ளமும் உடலும் தானறியாமலே கலங்கும். இதைத்தான் நமது முன்னோர்கள் "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்'' என்று கூறிவைத்தார்கள்.

ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலம்பெறுவதுடன் லக்னாதிபதி 3, 11-ஆம் அதிபதியுடன் செவ்வாயும் சுபப் பலம்பெற்று இயற்கை பாவிகள் தொடர்பு இல்லாமல் இருக்கும்.

ஜாதகருக்கு சகோதரரின் ஆதரவு உண்டு. 3, 11-ஆமிடத்தில் ஒரு கிரகம் ஆட்சி, உச்சமாக இருந்து, அந்த வீட்டதிபதியும் கேந்திர திரிகோணங்களில் அமைந்து செவ்வாயும் பலம்பெற்று சுபத்தன்மை பெற்றவர்களுக்கு காரிய வெற்றியும், சகாயங்களும், தைரியமும், நல்ல வேலையாட்களும் கிடைக்கப் பெற்று சகோதர ஒற்றுமையோடு, நல்ல ஆயுள் பலத்தோடு, நல்ல வாழ்க்கையை ஜாதகர் வாழ்வார்.

இந்த கிரக அமைப்பு இருக்கும் சகோதரர்கள் தங்களுக்குள் பகைமை இருந்தாலும் குடும்ப பிரச்சினை வெளியே தெரியாதவாறு கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். நல்ல, கெட்ட நிகழ்வுகளை குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து நடத்துகிறார்கள். ஜாதகனுக்கு சகாய ஸ்தானாதிபதி பலம்பெற்று தசையை நடத்தும்போதும் சகோதர்களுக்கு நன்மையும், ஜாதகருக்கு சகோதரர்களால் நன்மையும் தைரியத்தோடு, ஆற்றலும், மன வ-மையும் பெறுவார்கள்.

3, 11-ஆமிடத்தில் ராகு- கேதுக்கள் நிற்கும் சகோதரர்கள் மன வருத்தத்தில் பிரிந்தால் தங்கள் இல்லங்களில் நடைபெறும் சுப- துக்க நிகழ்வுகளுக்கு உடன்பிறப்புகளை அழைப்பதில்லை. அழைத்தாலும் பங்கேற்பதில்லை. இது போன்ற பல்வேறு நடைமுறை உடன்பிறப்புகளின் பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக்கி மாந்தரீகம், தாந்தரீகம் என்ற பெயரில் உறவுகளை ஒட்டவைக்க முடியும் என்ற ஏமாற்று வேலையில் இறங்கி பணத்தை இழக்கிறார் கள்.

தான் ஆடவில்லை என்றாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியிலுள்ள உண்மை சகோதரர்களின் இல்லங்களில் நடக்கும் சுக- துக்கங்களில் பங்குபெற முடியாதபோதே உணரமுடியும். உடன்பிறப்பு இருந்தும் பயனில்லாமல் தனித்து விடப்படும்போது ஏற்படும் வ-யானது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். பெற்ற பிள்ளைகளுக்காக, மனைவிக்காக, சொத்திற்காக உடன்பிறந்த வர்களை பகைத்தவர்கள் கடைசி காலத்தில் மனம் வெதும்புகிறார்கள். காலம் கடந்த ஞானம் பயனற்றது.

திருமணத்தடையும் குழந்தைப் பேரின்மையும் மிகுதியாகிவிட்டமையால் மனிதகுலம் தனது தலைமுறை வாரிசுகளை உருவாக்குவது கேள்விக்குறியாகி வருகிறது.

அதனால் இனிவரும் தலைமுறையினருக்கு உறவுகளுடன் கருத்து வேறுபாடு வரும் வாய்ப்பும் இல்லை. இரத்த பந்த உறவுகள் இது அடுத்த தலைமுறைக்கு கிடைக்காத பாக்கியம். தற்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே பிரபஞ்சம் வழங்கிக்கொண்டிருக்கும் அற்புத கொடை.. பிறப்பும் இறப்பும் நிச்சயமற்ற உலகில் வாழும் நாட்களில் விட்டுக்கொடுத்து வாழப் பழகினால் உறவுகளால் இன்பம் மட்டுமே நீடிக்கும். உடன்பிறந்தவர்களிடம் வேற்றுமையுணர்வுடன் வாழ்ந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை இரத்த பந்த உணர்வை பிரதிப-க்கும். உடல் அசையா விட்டாலும் உணர்வு அசைந்தே தீரும்.

செல்: 98652 20406

bala120124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe