இன்றைய நாளில் ஆண்கள்- பெண்கள், படித்தவர்கள்- படிக்காதவர்கள் என நிறைய பேருக்கு வெளிநாடு சென்று, வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே உள்ளது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள் என்று பெருமையாகக்கூற எண்ணுகிறார்கள். ஆனால் எல்லாருக்கும் இந்த ஆசை நிறைவேறுகிறதா?
வெளிநாடு செல்லும் யோக அமைப்பு டன் பிறந்தவர்கள், அவர்கள் வேலை செய்யும் நிர்வாகம்மூலம், தனது சொந்தப் பணத்தை செலவுசெய்யாமல் வெளிநாடு சென்று சம்பாதித்து வருகிறார்கள். இன்னும் பலர், தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்தும், வெளிநாடு செல்லமுடியாமல் பணத்தை இழந்து ஏமாந்துவிடுகிறார்கள்.
ஜீவநாடியில் பலன்கேட்க வருபவர்களில் பலர், "நான் வெளிநாடு செல்வேனா?' என கேட்பார்கள். "வெளிநாடு செல்லமுடியாது' என்று சிலருக்கு நாடியில் பதில் வரும் போது, அவர்கள் "ஐயா, வெளிநாடு செல்ல நான் என்ன பரிகாரம், யாகம் செய்ய வேண்டும்? எந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்?' என்று கேட்பார்கள். "பூஜை, பரிகாரம் என பணம் செலவழித்து வெளிநாடு செல்லும் யோகத்தை அடையமுடியாது. ஜாத கருக்கோ, ஜாதகரின் தந்தை, சகோதரன், சகோதரி, மகன், மகள், மனைவி என உறவுகளுக்கோ நீங்கள் வெளிநாடு செல்லும் யோக அமைப்புடன் இருந்தால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும்' என கூறி அனுப்பி வைப்பேன்.
வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு என்பதை அறிய, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பலரது ஜாதகங்களை, சி

வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு என்பதை அறிய, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பலரது ஜாதகங்களை, சித்தர்கள் கூறியுளள தமிழ் ஜோதிட முறையில் ஆய்வுசெய்து பார்த்தபோது, பல ஜாதக ஒற்றுமைகளை அறிய முடிந்தது.
வெளிநாடு செல்பவர்களில் சிலருக்கு அவர்களது யோகம் மூலமும், சிலருக்கு குடும்ப உறவுகளின் யோகம் மூலமும் அந்த வாய்ப்பு அமைந்தது என அறிய முடிந்தது. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், ஜாதக ரைக் குறிப்பிடும் உதாரண கிரகமான குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரனும் ராகுவும் அல்லது சந்திரனும் கேதுவும் இருந்தால் அந்த ஜாதகர் வெளிநாடு, வெளிமாநிலம் சென்று தொழில் செய்து வருவார். இவர் கொஞ்ச காலம் வேலை பார்த்துவிட்டு, பின் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பி விடுவார். வெளிநாட்டிலேயே தங்கி வசிக்கமுடியாது!
தொழிலைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது இருந்தால் ஜாதகர் அயல் தேசம், மாநிலம், அன்னிய மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் சென்று தொழில்செய்து சம்பாதிப்பார். அந்த நாட்டிலேயே தங்கிவிடுவார்.
சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் ராகு அல்லது கேது இருந்து, சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 3, 7, 11; 2, 12-ஆவது ராசிகளில் ஏதாவது ஒன்றில் சந்திரன் இருந்தால் ஜாதகர் வெளிநாடு செல்வார்.
குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில், ராகு அல்லது கேது இருந்து, குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 3, 7, 11; 2, 12-ஆவது ராசிகளில் சந்திரன் இருந்தால் மட்டும் ஜாதகர் வெளிநாடு செல்வார்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகு- கேதுவுக்கிடையே ஒருபுறமும், ஏதாவது ஒரு கிரகம் மட்டும். தனித்து மறுபுறமும் இருந்து, அந்த கிரகம் குருவுடனோ, சனியுடனோ பரிவர்த்தனை பெற்றிருந்தால் அந்த ஜாதகர் வெளிநாடு செல்வார்.
சூரியனுக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரனும் ராகுவும் அல்லது சந்திரனும் கேதுவும் இருந்தால், இந்த ஜாதகரின் தந்தையோ அல்லது மகனோ வெளிநாடு சென்று சம்பாதித்து வருவார். இந்த ஜாதகருக்கு வெளிநாடு செல்லும் யோகமிருக்காது. ஆனால் தந்தையின் ஜாதக யோகத்தால் வெளிநாடு செல்லக்கூடும்.
செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரனும் ராகுவும் அல்லது சந்திரனும் கேதுவும் இருந்தால் ஜாதகருடைய அண்ணன் வெளிநாடு சென்று நிறைய பணம் சம்பாதித்து வருவார். ஆனால் இந்த ஜாதகர் வெளிநாடு செல்லமுடியாது. இவர் யோகத்தால் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் அண்ணன் இவருக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார். பகை பாராட்டுவார்.
ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரனும் ராகுவும் அல்லது சந்திரனும் கேதுவும் இருந்தால் திருமணத்திற்குப் பின்பு இவள் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதிப்பான்.
சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரனும் ராகுவும் அல்லது சந்திரனும் கேதுவும் இருந்தால், இந்த ஜாதகியுடன் பிறந்த ஒரு சகோதரி வெளிநாடு செல்வாள். இவளது யோகத்தால் வெளிநாடு செல்லும் அந்த சகோதரி இவளுக்கு எந்த உதவியும் செய்யமாட்டாள்.
சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில், சந்திரனும் ராகுவும் அல்லது சந்திரனும் கேதுவும் இருந்தால், ஜாதகரின் மனைவி அல்லது மகள் வெளிநாடு சென்று வேலைசெய் வாள்.
ஒருவரின் பிறப்பு
ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரனும் ராகுவும் அல்லது சந்திரனும் கேதுவும் இருந்தால், ஜாதகரின் தம்பி அல்லது ஜாதகியின் தம்பி வெளிநாடு செல்வார். இவரது யோகத்தால் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் அவர்கள், இவருக்கு எந்த உதவியும் செய்யமாட்டார்கள்.
சித்தர்கள் கூறிய தென்புலத்தாரின் தமிழ் ஜோதிடமுறையில் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகமுள்ள ஜாதக அமைப்பினை அறிந்தோம். இனி வடபுலத் தார் உருவாக்கிய வேத ஜோதிடமுறையில் வெளிமாநிலம், வெளிநாடு சென்று சம்பாதிக்கும் அமைப்புள்ள ஜாதகர்களைத் தெரிந்துகொள்வோம்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலோ அல்லது லக்னத்திற்கு 5, 9-ஆவது ராசிகளிலோ சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது இருந்தால், அந்த ஜாதகர் வெளிநாடு செல்ல முயற்சிசெய்தால் அவருக்கு வாய்ப்புகள் தேடிவரும்.
ஜென்ம லக்னாதிபதியுடனோ அல்லது லக்னாதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளிலோ சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது இருந்தால், ஜாதகர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கூடிவரும்.
ஜென்ம லக்னத்திற்கு தொழில் ஸ்தானமான 10-ஆவது ராசியில் அல்லது லக்னத்திற்கு 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது இருந்தால் ஜாதகர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடிவரும்.
லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது இருந்தால் ஜாதகர் வெளிநாடு செல்வார்.
லக்னத்திற்கு 3, 7, 11-ஆவது ராசிகளில் சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது இருந்தால் ஜாதகரின் தம்பி வெளி நாடு செல்வார். பணம் சம்பாதித்து செல்வந்தர் ஆவார். ஆனால் இவர் யோகத்தால் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் தம்பி, இவருக்கு எந்த உதவியும் செய்யமாட்டார்.
ஜென்ம லக்னத்திற்கு 3-க்குடைய கிரகத் துடனோ அல்லது மூன்றமாதிபதி கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளிலோ சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது இருந்தால், ஜாதகரின் அண்ணன் வெளிநாடு செல்வார். ஆனால் இந்த ஜாதகருக்கு உதவ மாட்டார்.
லக்னத்திற்கு 5-ஆவது ராசியிலோ, ஐந்தாமாதிபதி நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளிலோ சந்திரன், ராகு அல்லது சந்திரன், கேது இருந்தால், ஜாதகருடைய மகன்களில் ஒருவர் வெளிநாடு செல்வார்.
இதுபோல இன்னும் சில அமைப்புகள் உள்ளன. இத்தகைய ஜாதகர்களுக்கே வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமுண்டு.
செல்: 99441 13267