எப்பாடு பட்டாவது பணம் சேர்க்கும் காலம்போய், எப்படியேனும் சேர்க்கவேண்டுமென்னும் மனிதர்கள் பெருகிவிட்டனர். சென்ற தலைமுறையில் ஊரில் பெரிய மனிதர் என்று அறியப்பட்ட நபர் பொருளாதாரத்தில் பெரியளவில் இல்லையென்றாலும், அவரது உண்மை, நேர்மை, நியாயமான பேச்சு, நீதி தவறாத வாக்கு என உயர்ந்த குணத்தாலேயே போற்றப்பட்டார். இன்று பலர், "இவரால் நமக்கு என்ன லாபம்', "நம் தேவைக்குப் பயன்படுவாரா?' என சக மனிதனைப் பணமாய்ப் பார்த்தே பழக ஆரம்பிக் கிறார்கள். எந்த வழியிலாவது பணம் அதிகம் சேர்த்தவரே ஊரின் தலைவராக்கப்படுகிறார். இது இன்றைய தலைமுறை காலத்தின் கட்டாயம்.
திறமையால் உழைத்து முன்னேறும் காலம்போய், பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் வழிமுறைகளையே அதிகம் விரும்புகின்றனர். சிலர், "எனக்கெல்லாம் பிறரை ஏமாற்ற வராது' என நல்லவர்போல பேசுகின்றனர். சிலர், "நான் உண்மையே சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள்; திருட்டு ஆசாமிகளை நம்பி ஏமாறுகிறார்கள்' என புலம்புவதையும் காண்கிறோம். ஏமாற்றத் தெரிந்தவர்களைத் திறமையானவர்கள் எனப் புகழும் காலம் என்பதால், இன்று பலரும் பிறரை ஏமாற்றிப் பணம் செய்யும் யோகம் இருக்கிறதா என்பதை அறிய ஆவல்கொள்கின்றனர். உண்மையில் பிறரை நம்பவைத்து ஏமாற்றும் திறமை சிலருக்கே உண்டு. அதற்கு பல்வேறு கிரக அமைப்புகள் காரணமாக இருக்கின்றன.
பொய் பேசும் யோகம்
2-ஆம் இடம் என்பது வாக்கு ஸ்தானம். வாக்கை நிறைவேற்ற முடியாததே "பொய்'

2-ஆம் இடம் என்பது வாக்கு ஸ்தானம். வாக்கை நிறைவேற்ற முடியாததே "பொய்' என சொல்லப்படுகிறது. சொல்வது ஒன்று- செய்வது ஒன்று என்பதும் பொய்யாகிறது. 2-ஆம் இடத்தில் பாவகிரகங்களான சனி, ராகு, சூரியன் இருப்பது; 2-ஆம் இடத்ததிபதியுடன் இணைவது- மேலும் இந்த அமைப்பு 12-ஆம் இடத்தில் மறைவது; 2-ஆம் அதிபதி நீசம் பெறுவது அதிகம் பொய் பேச வைக்கும். வாக்கு ஸ்தானத் தில் சுக்கிரன் அமைந்தால் இனிமையாகப் பேசுவர். இதோடு 2-ஆம் அதிபதி மறைவு, பாவகிரகச் சேர்க்கை (சுக்கிரன், ராகு, சனி) பெற்றால் இனிமையாகப் பேசி ஏமாற்றுவர். சுக்கிரன், கேது, புதன் இணைந்து 2-ஆம் வீட்டில் அமைந்தாலும் பிறரை ஏமாற்றிவாழப் பொய் பேசுவர். 2-ல் செவ்வாய் இருந்து சனி பார்வை பெற்றால் பொய் பேசத்தூண்டும். குரு பார்வை 2-ஆம் வீட்டிற்கு இருப்பதும், குரு 2-ஆம் அதிபதியுடன் இணைவதும் பொய் பேசுவதைத் தடுக்கும். 2-ஆம் அதிபதி 12-ல் மறைவது, சுபகிரகப் பார்வை பெறாமல் பாவகிரகப் பார்வை பெறுவது உண்மை பேசவிடாது.
எல்லாராலும் பொய்பேச முடியாது. 2-ஆம் இடத்தில் செவ்வாய், சூரியன் இருந்தால் பேசும்போதே பிறரை எரிச்சலடைய வைக்கும். 2-ஆம் இடத்திற்கு செவ்வாய், சூரியன் பார்வை இருந்தால் பேசிக்கொண்டிருக் கும்போதே எழுந்து போய் விடச்செய்யும். 2-ஆம் இடம் வாக்கு என்பதால் சொல் வதைச் செய்ய எண்ணம் தரும். 2-ஆம் இடம் பாவகிரகத்தால் கெட்டுப்போனால் உண்மை பேசுவதே பிடிக்காது. எல்லாராலும் பொய்யை இனிமையாகப் பேச முடி யாது. சுக்கிரன், புதன் இணைவு 2-ஆம் வீட்டிற்கு, 2-ஆம் அதிபதியுடன் சனி பார்வையோடு இருந்தால் மட்டுமே ஏமாற்றுமளவு பொய்பேச முடியும்.
பெற்றோர்களை ஏமாற்றும் யோகம்
2-ஆம் அதிபதி 6-ல் மறைந்து, சூரியன், சந்திரன் பாவகிர கங்களுடன் இருந்தால் பொய் பேசி சொத்துகளைப் பெற்றுக்கொண்டு பெற்றோரை எதிரிபோல் நடத்துவர். 2-ஆம் அதிபதி 8-ல் மறைவது; 2-ஆம் அதிபதி நின்ற அதிபதி 8-ல் மறைவது; சூரியன், சனி, ராகு இணைவு பெறுவது- பெற்றோ ரிடமே பொய்க்கணக்கு காட்டி சொத்தை அனுபவிப்பர். 9-ல் சுக்கிரன், கேதுவுடன் இணைவு பெற்று, 2-ஆம் அதிபதி நீசம் பெறுவது- தந்தையிடம் பொய் வாக்குறுதியளித்து சொத்து களை அபகரிப்பர். 4-ஆம் இடத்ததிபதியுடன் 2-ஆம் அதிபதி இணைந்து 12-ல் மறைவது- தாயாரை ஏமாற்ற பொய் பேசுவர்.
உடன்பிறந்தவர்களை ஏமாற்றும் யோகம்
3, 11-ஆம் அதிபதிகளும் பாவகிரகச் சேர்க்கை பெறுவது- அதனுடன் 2-ஆம் அதிபதி இணைவு, பார்வை; சூரியன், செவ்வாய், சனி, ராகு பார்வை, இணைவு- பொய் பேசி உடன்பிறந்தவர் களை ஏமாற்றுவர். இத்துடன் சுக்கிரன் வலுத்திருந்தால் பொய் வாக்குறுதிகளை தாராளமாகக்கூறி உடன்பிறந்தவர்களை ஏமாற்றுவர். கடமை செய்ய நினைப்பவர்கள் வாக்குறுதிகள் தருவதைவிட நிறைவேற்றுவார்கள். ஏமாற்றுபவர்களைவிட ஏமாறுபவர்களே தவறானவர்கள். நியாயமானதை விரும்புவர்கள் பொய் வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள்.
நண்பர்களை ஏமாற்றும் யோகம்
2-ஆம் அதிபதி 3-ஆம் இடத்து அதிபதியுடன் இணைந்து 12-ல் மறைவது, பாவகிரகப் பார்வை பெறுவது- நண்பர்களை ஏமாற்ற வைக்கும். சுக்கிரன் தயவால் இனிமையாகப் பேசி கடன் பெற்று, சனி, ராகு, சூரியன் பார்வையால் திரும்பத்தராமல் நண்பரை ஏமாற்றுவர். 8-ஆம் அதிபதி தசையில், 8-ஆம் அதிபதி 3-ல் இருந்தால் நண்பரால் ஏமாற்றப்படுவர். சனி பார்வை 3-ஆம் இடத்திற்கு இருந்தால் இருளில் நண்பர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.
உறவினர்களை ஏமாற்றும் யோகம்
4-ஆம் வீட்டில் நீச கிரகம் இருந்து, 2-ஆம் இடத்திற்கு சூரியன், சனி, ராகு பார்வை படுதல்; 4-ஆம் இடத்ததிபதி 8-ல் பாவகிரகத்துடன் சேர்க்கை, பார்வை பெற்றால் உறவினர் களிடம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பர். தான் மட்டும் வாழவேண்டும் என்பதற்காக உறவினர்களுக்குள் கோள் சொல்லி உறவுகளைப் பிரித்து லாபம் அடைவர். 2-ஆம் அதிபதி 6, 8, 12-ல் மறைவதும், பாவகிரகப் பார்வை 4-ஆம் இடத்தின்மீது படுவதும் குடும்ப உறவுகளை பாதிக்கும் அளவு பொய் பேச வைக்கும்.
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் யோகம்
10-ஆம் இடத்திற்கு 2-ஆம் அதிபதி தெடர்பு, 2-ஆம் அதிபதி 10-ல் இருப்பது- பேசும் வார்த்தையால் தொழில்செய்ய வைக்கும். சுக்கிரன், புதன் தொடர்பு, சேர்க்கை, பார்வை- வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பேச்சுத் திறமையைத் தரும். அத்துடன் 12-ஆம் அதிபதி தொடர்பு ஏற்பட்டால் எளிதாக வாடிக் கையாளர்களை ஏமாற்றி, பொய்யைக் கண்டறிய முடியாதபடி பேச்சுத்திறன் அமைந்துவிடும்.
மக்களை ஏமாற்றும் யோகம்
பொதுமக்களைக் குறிக்கும் கேது 2-ல் இருப் பது- மக்களுக்கு அறிவுரை கூறுவதுபோல மக்கள் மனதில் எளிதாக இடம்பெறச் செய்யும்.
2-ல் கேது அல்லது 2-ஆம் அதிபதி 12-ல் மறைவது;
சுக்கிரன் பலம்பெறுதல்; தொழில் அதிபதி 2-ல் இருந்து, 10-ஆம் அதிபதி வலுப்பெற்றால் பொதுமக்களைப் பொய் வாக்குறுதிகளால் எளிதாக ஏமாற்றிப் பிழைப்பு நடத்தலாம்.
கிரகங்கள் ஆட்சி, உச்சம், அதிபதிகள் வலுப்பெறுதலைப் பொருத்து கவுன்சிலர்முதல் கவர்னர்வரை பதவியில் அமரும் வாய்ப்பை மக்கள் வழங்குவர்.
திருடன் என்பவன் நேரடியாக மிரட்டிம் பணம் பிடுங்கிச் செல்வான். ஆனால் பிறரை ஏமாற்ற நினைப்பவர் இனிக்க இனிக்கப் பேசுவர்.
ஆசைப்படாத மனிதன் இல்லை என்பதைவிட, பேராசைகொண்ட மனிதர்கள் பெருகிவிட் டனர். உழைக்காமல் பணத்தைப் பெருக்க யாராவது வழிசொல்லிவிட்டால், ஏமாற போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஏமாற்றும் திறன் படைத்தவர்கள் குறைவு. அவர் களைப் பெரிய திருடர்களாக மாற்றுவது பேராசை கொண்ட ஏமாறுபவர்களே.
ஒருவருக்கொருவர் ஏமாற்றிப் பிழைக்கும் குணத்தை உற்சாகப்படுத்தி, இப்படி வாழ்ந் தால்தான் வாழவே முடியும் என்கிற எண்ணத்தை ஆழமாகப் பதியவைத்து, பிறரை ஏமாற்றும் பாவத்தை யோகம் என எண்ணும் நிலைக்கு மனி தரின் மனம் மாறிவிட்டது. உலகை ஏமாற்றி, குடும் பத்தை ஏமாற்றி, முடிவில் தன்னையே ஏமாற்றி, தன் பிள்ளைகளும் தானும் மட்டுமே உயர்வாக வாழவேண்டுமென எண்ணுபவர் கடைசியாக தனிமையில் அனாதையாகவே இறப்பார்கள். இதை அனுபவத்தில் நம்மால் காணமுடியும்.
செல்: 96003 53748