ஒவ்வொரு ஆண்களும் தங்களுக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டு மென்று கற்பனையுடன் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். அதுபோல் பெண்களும் தனது கணவன், குணம், பணம், வேலை, நிறம், அழகுள்ளவராக இருக்கவேண்டுமென்ற கனவுடன் இருப்பார்கள்.
ஒரே மகனைப் பெற்ற தாய்- தந்தையர் சிலர் தங்களது மகனின் படிப்பு, பதவி, நிறம், திறமைக்கேற்ற அழகுடையவளாக- வேலை பார்க்கும் பெண்ணாக- வீடு, வாகனம், பணம், நகை என அதிக வரதட்சணை தரும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இருக்க வேண்டுமென்று, தன் மகன் அரைக் கிழவனாகும் வரை பெண்தேடி அலைந்து கொண்டிருப்பார்கள்.
பெண்ணைப் பெற்ற தாய்- தந்தையர் தங்கள் மகளுக்கு அரசுவேலை பார்க்கும் மாப்பிள்ளைதான் வேண்டும்- அவன் வீட்டிற்கு ஒரே மகனாக இருக்கவேண்டும்- அதிக மான சீர்வரிசை கேட்கக் கூடாது என்ற எண்ணத்து டன் மாப்பிள்ளை தேடு வார்கள். ஆனால் நடைமுறையில் எல்லாருக்கும் அவ்வாறு அமைவது சாத்தியமில்லை.
பொதுவாக, "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது; மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார் கள். ஆனால் ஒரு ஆண் நல்ல மனைவி யையோ அல்லது துரோகம்செய்யும் குணமு டையவளையோ அடைவதும், அதேபோன்று ஒரு பெண் நல்ல கணவனையோ அல்லது மனைவியை மதிக்காத- காப்பாற்றாத வரையோ அடைவதும் அவரவர் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ- புண்ணியத்தின் அடிப்படையில்தான் என்பதே நடைமுறை உண்மை.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசியில், லக்னத்திற்கு 3-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தால் அத்தைமகள், அத்தையின் பேத்தியை மணம் புரியக்கூடும்.
7-ஆவது ராசியில் லக்னத்திற்கு 11-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தாலும் அத்தைமகளை மணம்புரிவார்.
7-ஆவது ராசியில் 6-க்குரிய கிரகம் இருந் தால் ஜாதகர் தாய்மாமன் மகளைத் திருமணம் புரிவார். சிலருக்கு வீட்டோடு மாப்பிள்ளையாகும் சூழ்நிலையும் அமையும்.
அந்தப் பெண் ஆணவம், அகங்காரம், அடக்கியாளும் குணம் கொண்டவளாக இருப்பாள்.
7-ல் 10-க்குரிய கிரகம் இருந்தால் தாய்மாமன் மகளையோ தாய்வழி உறவுப் பெண்ணையோ மணப்பார்.
7-ல் ராகு இருந்தால் அந்நிய இனம் அல்லது மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் புரியக்கூடும்.
7-க்குரிய கிரகம் லக்னத்திற்கு 3, 11-ஆவது ராசிகளில் இருந்தால் ஜாதகரின் தாய்- தந்தையரின் குடும்ப நண்பர் மகளை மணம் புரியக்கூடும். அல்லது தனது சகோதரியின் தோழியைத் திருமணம் செய்யலாம்.
லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 2, 3, 6, 7, 10, 11-ல் தனித்திருந்து, அந்த ஏழாவது ராசி கிரகத்திற்கு, 1, 4, 5 8, 9, 12-ஆவது ராசிகளுக்குரிய கிரகங்களின் தொடர்பில்லாமல் இருந்தால் உறவுப் பெண்ணைத் திருமணம் புரிவார்.
ஏழாவது ராசியில் லக்னத்திற்கு 2, 3, 6, 7, 10, 11 ஆகிய ராசிகளுக்குடைய கிரகங்கள் சேர்ந்திருந்தால் உறவுப் பெண்ணைத் திருமணம் புரிவார்.
7-க்குரிய கிரகம் லக்னத்திற்கு 5-ல் இருந்தால், போன ஜென்மத்தில் யார் மனைவியாக இருந்தாளோ அவளே இந்த ஜென்மத்திலும் மனைவியாக வருவாள். பெண் ஜாதகத்தில் இதுபோன்று இருந்தால், போன ஜென்மத்தில் இருந்த கணவனே இந்த ஜென்மத்திலும் கணவனாக வருவார்.
ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால், அந்த ஜாதகர் போன ஜென்மத்தில் யார் மனைவியாக இருந்தாளோ அவளையே இந்தப் பிறவியிலும் மனைவியாக அடைந்து வாழ்வார்.
ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு முந்தைய ராசியில்- அதாவது 12-ஆவது ராசியில் சுக்கிரன் இருந்தால், கடந்த ஜென்ம மனைவியையே இந்தப் பிறவியிலும் திருமணம் புரிந்து வாழ்வார்.
ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால், அந்தப் பெண் கடந்த பிறவிக் கணவனையே இந்தப் பிறவியிலும் கணவனாக அடைவாள்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு முந்தைய ராசியில் செவ்வாய் இருந்தால், முற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடைவாள்.
பூர்வஜென்மத்தில் கணவன்- மனைவியாக வாழ்ந்தவர்கள் இந்தப் பிறவியிலும் கணவன்- மனைவியாகவே சேர்ந்துவாழும் அமைப்பு ஒருவித சாபத்தால் உண்டானது. பூர்வ ஜென்மத்து மனைவியை சந்திக்கும்வரை அந்த ஆணின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். அதேபோல் பூர்வஜென்மத் துக் கணவனைக் காணும்வரை பெண்ணின் திருமணமும் தடையாகிக்கொண்டேவரும்.
லக்னத்துக்கு 7, 11-ஆவது ராசிக்குடைய கிரகங்கள், லக்னத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு இருதார யோகம்.
7-ல் லக்னத்திற்கு 7, 9-ஆவது ராசிக்குரிய கிரகங்கள் சேர்ந்திருந்தால், ஜாதகர் தன் மனைவியின் தங்கையையும் திருமணம் புரிந்துகொள்வார்.
ஆண்- பெண் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன், கேது சேர்ந்திருந்தால் காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள்.
செல்: 99441 13267