விருச்சிகம்
விருச்சிகத்திற்கு குரு தனாதிபதி, பஞ்சமாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி. சந்திரன் பாக்கியாதிபதி, பாதகாதிபதி. பூர்வபுண்ணியாதி- பாக்கியாதிபதி இணைவு மாபெரும் புண்ணியம். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே இணையப் பெற்றவர்கள். தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களின் ஆசியும், ஆஸ்தியும் கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கள். தந்தையின்மூலம் பொருள் வரவு இருந்துகொண்டே இருக்கும். தீர்த்த யாத்திரை, ஆலய தரிசனம், கோவில் கைங்கர்யம், தானதர்மம் செய்யும் பாக்கியம் உண்டாகும். வம்சாவளியாக கௌரவப் பதவியில் இருப்பார்கள். இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாக்கியாதிபதியா? பாதகாதிபதியா? ஒன்பதாமதிபதி சந்திரன் என்பதால் தாய்வழியில் பாதகமா? பாக்கியமா? ஒன்பதாமதிபதி என்பதால் தந்தைவழியில் பாக்கியமா? பாதகமா என்ற சந்தேகம் எழும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமடைகிறார். கடகத்தில் செவ்வாய் நீசமடைகிறார்.அதாவது சர (கடகம்) லக்னத் தின் அதிபதியாக வரும் சந்திரன் ஸ்திர லக்னமான விருச்சிகத்தில் நீசமடைகிறார். ஸ்திர லக்னத் தின் அதிபதியான (விருச்சிகம்) செவ்வாய் சர லக்னமான கடகத்தில் நீசம்பெறுகிறார். லக்னாதிபதி செவ்வாயின் நீசவீடு கடகம் என்பதால், சந்திரன் தன் தசை புக்திக் காலங்களில் விருச்சிகத்திற்கு கடுமையான பாதகத்தை மட்டுமே தருகிறது. ஏழரைச்சனி மற்றும் அஷ்ட மச்சனிக் காலங்களில் சந்திர தசை நடக்கும் விருச்சிக லக்னத் தினர் மிகுதியான கர்மவினைப் பதிவை அனுபவிக்கிறார்கள். சந்திரன் உடல்காரகன் மற்றும் மனோகாரன் என்பதால், உடல் உபாதைகள் மற்றும் மனஉளைச்சல் ஜாதகரை மன நோயாளியாக மாற்றி விடுகிறது. வாழ்நாளில் சந்திர தசையை சந்திக்காத விருச்சிக லக்னத்தினர் பாக்கியவான்கள். சந்திர தசையை சந்திப்பவர்களின் பாக்கிய ஸ்தானம் வலிமையிழப்பதால் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குறைவுபடும். ஜாதகரின் சந்திர தசைக் காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய்- தந்தையின் ஆரோக்கியம் பாதிகப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது. பொதுவாக விருச்சிக லக்னம் காலபுருஷ எட்டாமிடம் என்பதால் எளிதில் எந்தப் பிரச்சினையையும் வெளியில் தெரிவிக்காது. பிரச்சினை நன்றாகத் தீவீரமடைந்தபின்பே வெளியில் தெரியும். பிரதோஷ காலத்தில் பச்சரிசி மாவில் நந்திக்கு தீபமேற்றி வழிபட கர்மவினை தீரும். மன சஞ்சலம் நீங்கும்.
தனுசு
தனுசு லக்னத்தினருக்கு குரு லக்னாதி பதி, கேந்திராதிபதி. சந்திரன் அஷ்ட மாதிபதி. அஷ்டமாதிபதி சேர்க்கை எந்த கிரகத்திற்கு இருந்தாலும் தீராத வம்பு, வழக்குண்டு. கேந்திராதிபதி என்பதால் தாய்வழி உறவுகளுடன் தேவையற்ற மனக் கசப்பு உண்டாகும். சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை குறையும். புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும். தனக் குக் கிடைக்கவேண்டிய அனைத்தும் தவறிப்போகும். லக்னாதிபதி என்பதால் எளிதில் கண் திருஷ்டி தோஷம், அவமானம் போன்றவை தொடர்கதையாக இருக்கும். வெகுசிலருக்கு குரு, சந்திரன் நின்ற நட்சத்திர சாரத்தைப் பொருத்து வீபரீத ராஜயோகம் உண்டாகும். அதேபோல் சந்திர தசை, புக்திக் காலங்களில் மட்டும் பாதிப்புண்டாகும். வாழ்வில் சந்திர தசை வராமலிருந்தால் திருமணத்திற்குப்பிறகு வீடு, வாகன யோகமுண்டு. களத்திரம்- அந்தஸ்து மற்றும் வசதி வாய்ப்பு நிறைந்த இடத்தில் அமையும். களத்திரம் மூலம் பொருள் வரவுண்டு. வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள், இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வுண்டு.
மகரம்
மகர லக்னத்தினருக்கு குரு சகாய ஸ்தானதிபதி, விரயாதிபதி. சந்திரன் சப்தம ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி. மூன்றாம் அதிபதியாகி குரு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும்போது உடன்பிறந்த சகோதரருடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்யும் அமைப்பிருக்கும். அடிக்கடி புதுப்புது கூட்டாளிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். "ஆன்லைனி'ல் அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். "ஆன்லைன்' வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும். திருமணத்திற்கு வரன் "மேட்ரிமோனி'மூலம் அமையும் அல்லது வரன் வீட்டிற்கு அருகில் அமையும். காதல் திருமணம், பதிவுத் திருமணம் நடக்கும். எழுதிய உயில் காணாமல் போகும் அல்லது எழுதிய உயிலில் திருத்தம் செய்வார்கள். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். விரயாதிபதியாகி குரு ஏழாம் இடத்துடன் சம்பந்தம் பெறும்போது வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகள் தொழில், உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி பிரிந்து வாழ்வார்கள். குரு தசை, புக்தி செயல்பட்டால் தம்பதிகள் நிரந்தரமாகப் பிரிந்து வாழலாம். களத்திர விரயம் உண்டாகும். தம்பதிகளின் கருத்து வேறுபாட்டைவிட சம்பந்திகளின் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். குரு தசை மகர லக்னத் திற்கு சிறப்பான பலனைத் தருவதில்லை. குரு தசையை சந்திக்கும் மகர லக்னத்தினர் வெளிநாட்டிற்குக் குடிபெயர்ந்தால் வாழ்க்கை இனிமையாகும். மகர லக்னத்தினர் வியாழக்கிழமை சித்தர்கள் வழிபாடு செய்துவர முத்தாய்பான மாற்றங்கள் தேடிவரும்.
கும்பம்
கும்பத்திற்கு குரு தன, லாபாதிபதி. சந்திரன் ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி. குரு, சந்திரன் கூட்டணி எந்த இடத்திலிருந்தாலும், வரும் வருமானமெல்லாம் கடனுக்குச் செல்லும். கடனுக்குக் கவலைப்பட்டு நோய் உருவாகும். குடும்ப உறவுகளுடன் ஒற்றுமை இருக்காது. குடும்ப சொத்து எதிரியின் பிடியிலிருக்கும். அதிகமாக உழைத்து குறைவாக வருமானம் பெறுவார்கள். ஓய்வின்றி வேலை இருந்துகொண்டே இருக்கும். சந்திர தசை நடப்பவர்கள் குடும்பத்திற்காக அதீத கடனை சுமக்கிறார்கள். கும்ப லக்னத்தினருக்கு குருச் சந்திர சம்பந்தம் குறைவான யோகத்தையும் அதிகப்படியான கடனையும் தருகிறது. கும்ப லக்னத்தினர் வியாழக்கிழமை மாலை 5.00-8.00 மணிக்குள் லக்ஷ்மி குபேரபூஜை செய்துவர கடன் தொல்லை குறைந்து பொருளாதார மேம்பாடு உண்டாகும்.
மீனம்
மீன லக்னத்திற்கு குரு லக்னாதிபதி, பத்தாமதிபதி. சந்திரன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி. 12 லக்னத்தினரில் குருச் சந்திர யோகத்தால் மீன லக்னத்தினர் மட்டுமே அற்புதமான உன்னதப் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்றால் மிகையாகாது. அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசுவகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கௌரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்கவேண்டிய அனைத்து சுபப் பலன்களும் தேடிவரும். குரு தசை, சந்திர தசை, புக்தி நடந்தால் உலகப்புகழ் பெறுவார்கள். மீன லக்னத்தினர் அடிக்கடி புண்ணிய தீர்த்தங்களில் உடலும், உள்ளமும் குளிர புனித நீராடி வரலாறு படைப்பார்கள். எத்தகைய கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம்- அவயோகமென்று பலன்சொல்ல முடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்திற்கு சுபப்பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்தியரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது. மேலும் கர்மாரீதியாக குருச் சந்திர யோகத்தை உற்றுநோக்கினால், குரு காலபுருஷ 9-ஆமதிபதி. தந்தை மற்றும் தந்தைவழி உறவுகள் பற்றிக் கூறுமிடம். சந்திரன் காலபுருஷ 4-ஆமதிபதி. தாய்பற்றிக் கூறுமிடம். ஆக, தாய் மற்றும் தந்தைவழி உறவு கள்மூலம் ஏற்படும் கர்மவினைப் பதிவின் தொடர்ச்சி இது!
செல்: 98652 20406