Advertisment

திகட்டாத மணவாழ்வு யாருக்கு?

/idhalgal/balajothidam/whom-did-unmarried-marriages

றையருளாலும், பல பிறவிகளில் செய்த பூர்வபுண்ணி யத்தாலும் மட்டுமே வேத ஜோதிடக் கலை ஒருவருக்கு சித்திக்கிறது.

Advertisment

ஜோதிடம் தந்த ஒளியினால் வாழ்வை நேர்வழிப்படுத்தி, நிறைவாழ்வு பெற்றவர்கள் ஏராளம். மனித வாழ்வின் இன்ப- துன்பங் களுக்கு கிரக நகர்வுகளே காரண மென்ற அடிப்படையில், மானிடர் களுக்கு நல்ல துணை, அன்பான- அழகான மனைவி, ஆண்மைமிக்க கணவர் அமைவதெல்லாம், சில கிரக அமைவுகளைப் பொருத்தே அனுபவத்திற்கு வருகிறது. இதிலும் marriageஇளமைப் பருவத்தில் மணமாலை சூடும் அதிர்ஷ்டமும், கட்டில் கனவு காலங்கடந்து கிட்டுவதும் ஏன்? ஜோதிடப்படி இதற்கு என்ன கிரக நிலைகள் என்பதனை விளக்கவே இந்தக் கட்டுரை.

வசந்த வாசலில் வாலிபத்தை ஏந்திநிற்கும் இளைய பருவத்தினருக்கு, பரம்பொருளின் கருணை யால் நிச்சயமாகத் திருமணம் நடக்கவேண்டுமானால் லக்னா திபதியும், 7-ஆம் பாவாதிபதியும் இணைந்து எந

றையருளாலும், பல பிறவிகளில் செய்த பூர்வபுண்ணி யத்தாலும் மட்டுமே வேத ஜோதிடக் கலை ஒருவருக்கு சித்திக்கிறது.

Advertisment

ஜோதிடம் தந்த ஒளியினால் வாழ்வை நேர்வழிப்படுத்தி, நிறைவாழ்வு பெற்றவர்கள் ஏராளம். மனித வாழ்வின் இன்ப- துன்பங் களுக்கு கிரக நகர்வுகளே காரண மென்ற அடிப்படையில், மானிடர் களுக்கு நல்ல துணை, அன்பான- அழகான மனைவி, ஆண்மைமிக்க கணவர் அமைவதெல்லாம், சில கிரக அமைவுகளைப் பொருத்தே அனுபவத்திற்கு வருகிறது. இதிலும் marriageஇளமைப் பருவத்தில் மணமாலை சூடும் அதிர்ஷ்டமும், கட்டில் கனவு காலங்கடந்து கிட்டுவதும் ஏன்? ஜோதிடப்படி இதற்கு என்ன கிரக நிலைகள் என்பதனை விளக்கவே இந்தக் கட்டுரை.

வசந்த வாசலில் வாலிபத்தை ஏந்திநிற்கும் இளைய பருவத்தினருக்கு, பரம்பொருளின் கருணை யால் நிச்சயமாகத் திருமணம் நடக்கவேண்டுமானால் லக்னா திபதியும், 7-ஆம் பாவாதிபதியும் இணைந்து எந்தவொரு ராசியிலும் இருக்கலாம். அல்லது லக்னா திபதியும், 7-ஆம் அதிபதியும் சமசப்தமமாகப் பார்க்கலாம்.

லக்னாதிபதி கிரகமும், 7-ஆம் அதிபதி கிரகமும் தமக்குள் பரிவர்த் தனையாக நின்றாலும் நிச்சயமாக இளம்பருவத்தில் மணமாலை இறைவன் தந்த கொடை. கூலித் தொழிலாளியானாலும், பெரும் முதலாளியானாலும் (தொழிலதிபர்கள்) ஆண்களின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி 1, 2, 5, 7, 9-ல் நின்று, இந்த 7-ஆம் அதிபதியின் திரிகோணங்களில் கேது பகவான் நிற்கா மலிருந்தால் பருவத்தில் திருமணம் நடக்கும். நாடி கிரந்தங்கள் சுட்டிக்காட்டியபடி ஆண்களின் குருவுக்கு 1, 2, 5, 7, 9-ஆம் ராசிகளில் சுக்கிரன் நின்று, இந்த சுக்கிரனுக்கு திரிகோணங்களில் கேது நிற்காமலிருந்தால் உரிய வயதில் இளமையில் இல்லறம் ஏற்பர். வேதியர் வைத்து உறவும் நட்பும் ஆசிகூறி திருமணம் உடனே நடக்கும்.

Advertisment

லக்னாதிபதியும், 7-ஆம் அதிபதியும் ஒருவருக்கொருவர் அடுத்தடுத்த ராசிகளில் நின்றாலும் அல்லது தமக்குள் திரிகோணங்களில் (1, 5, 9-ல்) அமைந்த ஆடவருக்கும், பருவ வயதினில் நிச்சயம் கல்யாணம் நடக்கும். குரு 7-ஆம் அதிபதியாகி உங்களின் 1, 4, 7, 10 மற்றும் 5, 9-ஆம் ராசி வீடுகளில் நின்றவர்களுக்கும் ஆசைப்பட்ட மாதிரி இளமையில் இல்லறம் ஏற்கமுடிகிறது. 7-ஆம் அதிபதியாக செவ்வாய் அமைந்து, இந்த செவ்வாய் 6, 10-ஆம் வீட்டில் நின்றவர்களுக்கும் இளமையில் மணமாலை உண்டு. ஜாதகப்படி சனியேகூட 7-ஆம் அதிபதியாகி (கடக, சிம்ம லக்னம்) லக்னத் திற்கு 11, 4-ஆம் வீடுகளில் நின்றவர்களுக்கும் வாலிபத்தில் திருமணம் நடக்கும்; நடக்கிறது.

பணம் படைத்தவரானாலும் ஏழையா னாலும் பெண்களின் லக்னாதிபதிக்கு 1, 2, 5, 7, 9-ல் 7-ஆம் அதிபதி கிரகம் நின்று, இதன் திரிகோண ராசிகளில் கேது நிற்காமலிருந்தால் நிச்சயம் நல்ல திருமணம் உரிய வயதினில் அரங்கேறும். எழிலரசி பலரின் ஜாதகங்களில் 9, 7, 5, 2, 1-ல் சுக்கிரன் நின்று, இந்த சுக்கிரனின் 5, 9-ல் செவ்வாயும் நின்று, அந்த செவ்வாய்க்குத் திரிகோண வீடுகளில் கேது நிற்காவிடில் பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் திருமணம் ஏற்கிறார்கள். பார்த்த முதல் வரனே மணமகனாவார். அதிர்ஷ்ட ராணிகள் இவர்கள்.

விதிவசத்தால் சிலருக்கு மணவாழ்வு திகட்டலாக அமைந்து எளிதில் திருமணம் கூடிவராது. ஏன் எனக் கேட்டால், ஆண்- பெண் இருவருக்குமே 7-ஆம் அதிபதி நின்ற வீட்டிற்கு 6, 8-ல் லக்னேசன் நின்றால், எளிதில் திருமணம் கூடிவராது; தட்டிப்போகும். மணமானாலும் இல்லறம் திகட்டும். கருத்து வேற்றுமை மிகும். உயர்ந்த வேலையில் அதிக சம்பளத்தில் இருந்தவர்களுக்குக்கூட, 7-ஆம் அதிபதி நின்ற ராசிக்கு 4, 10-ஆம் வீட்டில் அவர்களின் லக்னாதிபதி நிற்க, திருமண முயற் சிகள் தட்டிப்போய்க்கொண்டே இருக்கும். இவர்கள் போடும் கண்டிஷனுக்கு வது- வரன் வீட்டார்கள் உடன்படமாட்டார்கள். பொருத்தமிருந்தும் இணையமுடியாது போகும். 7-ஆம் அதிபதி 3, 6, 12-ல் நின்றவர்களுக்குதான் எல்லாம் இருந்தும், இல்லறம் ஏற்கமுடியாத திகட்டலான மணவாழ்வு அனுப வமாகும். அனுபவத்தில் பலவிதத் தடை, தாம தங்களுக்குப்பின் 11, 8, 2, 5-ஆம் வீடுகளில் 7-ஆம் அதிபதி நின்ற வது- வரன்களுக்கு திருமணம் 30 முதல் 33 வயதுகளில் நடந்தேறுகிறது.

எவருக்கு மணவாழ்வு திகட்டாது எனக் கேட்டால், சர்ப்ப கிரகங்களான ராகு- கேது கேந்திரங்களில் நின்று, 11, 8, 6, 3-க்குடைய பாவிகளுடன் கூடி அல்லது சம்பந்தமாகி, இவர்களுடன் பாக்கியாதிபதியோ (9) பஞ்ச மாதிபதியோ (5) சேர்ந்திருந்தால் மணவாழ்வு சிறப்பாக மகிழ்ச்சியோடு அமையும். 2019-ல் வாசக நெஞ்சங்களுக்கு நல்ல மணமாலை கிடைக்க குரு பாதம் பணிகிறேன்.

செல்: 94431 33565

bala180119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe