Advertisment

வாழ்க்கையின் முழு வட்டம்! -க. காந்தி முருகேஷ்வரர் சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/whole-circle-life-ka-gandhi-murugeshwars-magazine-continuation

பரிகாரங்கள்

ஒரு மனிதன் பிறக்கும்போதே இப்படிபட்ட பெற்றோருக்கு குழந்தையாகப் பிறந்து, கல்வி, தொழில், சொத்துச் சேர்க்கை, திருமணம், புத்திர பாக்கியம், புகழ், நோய், ஆயுள்வரை இப்படிதான் இருக்கவேண்டுமென ஏற்கெனவே விதியாகத் தீர்மானிக்கப்பட்டு பூமியில் படைக்கப்படுகிறான். விதியை யாராலும் மாற்றவும் வெல்லவும் முடியாது. போன ஜென்மத்தில் ஆத்மா செய்த நன்மை- தீமை களின் அடிப்படையிலேயே இந்தப் பிறவி கொடுக்கப் பட்டிருக்கிறது. விதியை முழுதாக அனுபவித்தே தீரவேண்டும்.

Advertisment

விதி தேவ ரகசியம். ஜோதிடர்களின் மதிநுட்பத் தால் அதிகபட்சம் 75 சதவிகிதம் மட்டுமே பலன் சொல்ல முடியும். விதியை மாற்றியமைக்கும் சக்தி எந்த மனிதருக்கும் வழங்கப்படவில்லை. ஜோதிடர் அவர் கற்றறிந்த திறன்படி பலன் சொல்வார். ஜோதிடர் சொல்லும் பலனே இறுதியானது; அதுவே நடக்குமென முடிவுசெய்யக் கூடாது. அதற்காக மொத்தமாக ஜோதிடத்தை அலட்சியம் செய்யவும் கூடாது. எந்தவொரு புதிய செயல் செய்யத் தொடங்கும்முன்பு ஜாதகப்படி நல்லநேரம் தெரிந்துகொண்டால் நஷ்ட மடையாமலும் மன நிம்மதியோடும் செயல்படலாம். ஜோதிடம் ஒரு வழிகாட்டி. ஒவ்வொருவருக்கும் ஜோதிடர் உடனிருந்து வாழ்நாள் முழுவதும் வழி சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நல்ல ஜோதிடரைக் கண்டறிந்து நாம் பயன்படுத்திக்கொள்வதில்தான் வெற்றி ஏற்படும்.

Advertisment

ff

நம் விதியைத் தீர்மானித்தது ஏதோ ஒரு மகா சக்தி. சக மனிதர்கள

பரிகாரங்கள்

ஒரு மனிதன் பிறக்கும்போதே இப்படிபட்ட பெற்றோருக்கு குழந்தையாகப் பிறந்து, கல்வி, தொழில், சொத்துச் சேர்க்கை, திருமணம், புத்திர பாக்கியம், புகழ், நோய், ஆயுள்வரை இப்படிதான் இருக்கவேண்டுமென ஏற்கெனவே விதியாகத் தீர்மானிக்கப்பட்டு பூமியில் படைக்கப்படுகிறான். விதியை யாராலும் மாற்றவும் வெல்லவும் முடியாது. போன ஜென்மத்தில் ஆத்மா செய்த நன்மை- தீமை களின் அடிப்படையிலேயே இந்தப் பிறவி கொடுக்கப் பட்டிருக்கிறது. விதியை முழுதாக அனுபவித்தே தீரவேண்டும்.

Advertisment

விதி தேவ ரகசியம். ஜோதிடர்களின் மதிநுட்பத் தால் அதிகபட்சம் 75 சதவிகிதம் மட்டுமே பலன் சொல்ல முடியும். விதியை மாற்றியமைக்கும் சக்தி எந்த மனிதருக்கும் வழங்கப்படவில்லை. ஜோதிடர் அவர் கற்றறிந்த திறன்படி பலன் சொல்வார். ஜோதிடர் சொல்லும் பலனே இறுதியானது; அதுவே நடக்குமென முடிவுசெய்யக் கூடாது. அதற்காக மொத்தமாக ஜோதிடத்தை அலட்சியம் செய்யவும் கூடாது. எந்தவொரு புதிய செயல் செய்யத் தொடங்கும்முன்பு ஜாதகப்படி நல்லநேரம் தெரிந்துகொண்டால் நஷ்ட மடையாமலும் மன நிம்மதியோடும் செயல்படலாம். ஜோதிடம் ஒரு வழிகாட்டி. ஒவ்வொருவருக்கும் ஜோதிடர் உடனிருந்து வாழ்நாள் முழுவதும் வழி சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நல்ல ஜோதிடரைக் கண்டறிந்து நாம் பயன்படுத்திக்கொள்வதில்தான் வெற்றி ஏற்படும்.

Advertisment

ff

நம் விதியைத் தீர்மானித்தது ஏதோ ஒரு மகா சக்தி. சக மனிதர்களிடம் மாற்றத்தைத் தேடுவதைவிட தெய்வத்திடம் முழுதாக நம் வாழ்க்கையை ஒப்படைத்து சரணாகதி அடைவதாலேயே பூரண நிம்மதியான வாழ்க்கையைப் பெறமுடியும். கொடுக்கப்பட்ட வாழ்க்கையை முடிந்தளவு அனுபவித்து வாழ்ந்து விட வேண்டும். எதிர்பார்ப்புகளை அதிகப் படுத்தி வாழ்தல் சுகம் தராது. இறப் பில்லா மனிதனில்லை. மனிதன் தினம் இறப்பை நோக்கியே வாழ்கிறான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாததால்தான், கிடைத்த வாழ்க்கையை,வாய்ப்புகளை கிடைக்கும் நேரத்தில் வாழாமலே ஏக்கத்துடன் மறுபிறவிக்குத் தயாராகிவிடுகிறான். பற்றற்ற நிலை, நடப்பதை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையை ஆத்மாவுக்குக் கொடுத் தால்தான் வாழ்க்கையை ஆனந்தமாக வாழமுடியும்.

எண்ணிய காரியத்தை அடையவேண்டுமென்ற நோக்கம்அனைவருக்கும் உண்டு. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்றை இலக்காகக் கொண்டு மனிதன் வாழ்கிறான். ஒழுக்கம், ஆன்மிகம், மனிதகுல ஒற்றுமை, உழைப்பு என மனிதனுக்கு மனிதன் எண்ணங் களால் மாறுபட்ட இலக்கைத் தேர்ந்தெடுக்கிறான்.

இன்றைய மனிதர்களின் இலக்கு பணம். எந்த வகையிலா வது பணம் சேர்த்தால் போதும்; பணக்காரன்தான் உலகின் சாதனையாளர் என்ற மனநிலையில் ஓடுகிறார்கள். இருப்பதைத் தொலைத்துவிட்டு பல நூற்றாண்டுகள் மனித இனம் பல்வேறு நிலை கண்டுவிட்டதை, கடந்துவந்த நம் முன்னோர்கள் கண்டறிந்து, ஜோதிடம்மூலம் நாம் சுகமாகவாழ வாழ்வியல் பரிகாரங்களைச் சொல்லியிருக்கிறார் கள். பரிகாரம் என்பதை மனிதனின் உடல் நலத்தைப் பாதுகாக்கவும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் வழியாகக் கூறியுள்ளனர்.

முதலில் ஒவ்வொருவரும் தீர்க்காயுளுடன் வாழ உடலில் நோய்வராமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும். ஏமாற்றங்கள் கொண்ட மனநிலை இருந்தால் உடல் பலவீனப்படும். இதனைப் புரிந்துகொண்ட முன்னோர் கள் பலகட்ட ஆய்விற்குப்பின் பூமியில் அந்தந்த பருவ நிலைக்கேற்ப உயிரைப் பாதுகாக்க வழிவகை களைப் பரிகாரமாகச் சொல்லியிருக்கின்றனர். பொதுவாக மனிதர்களுக்கு அருகிலிருக்கும் சக மனிதனை ஒப்பிட்டே வாழ்ந்து பழகிவிட்டனர். நன்மையோ, தீமையோ பிறர் செய்வதை நாமும் செய்யவேண்டும் என்ற ஆவல் தோன்றிவிடுகிறது. செய்யமுடியாதபட்சத்தில் செய்பவர்களை ஏதாவதொரு வகையில் மட்டப்படுத்தி, பலவீனப்படுத்தித் தடுத்து விடுவார்கள். இந்த மனநிலைதான் வாழ்க்கையை வாழவிடாமல் செய்துவிடுகிறது. இதனையறிந்த முன்னோர்கள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக, அன்றாடப் பழக்க வழக்கங் களில் கலாச்சாரமாக, ஆன்மிகமாக மாற்றி மனிதனை மனிதனாக வாழச்செய்ய முயற்சித்திருக்கின்றனர். பரிகாரங்களாகச் சொல்லப்பட்ட வற்றை விவாதிக்காமல் நேரடியாகப் பின்பற்றினா லும் அல்லது அதிலிருக்கும் மருத்துவத்தைத் தெரிந்து பின்பற்றினாலும், மனிதர்களுக்கு ஆரோக்கியமான- நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

உதாரணமாக, ஏழரைச்சனி நடக்கும் போது- அதாவது சனி ராசிக்கு பன்னிரண்டு, ஒன்று, இரண்டுக்கு வரும்போது மூன்று ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி நடக்கும்.

அவர்களை ஒரே கோவிலுக்கு வரவழைக்கும்போது, பாதச்சனி நடப்பவர்கள், விரயச்சனி நடப்பவர் களுக்கு தனக்கு ஐந்து வருடமாக நடந்த பலன் களைச் சொல்வர். அவர்களுக்குள் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பலன்களை விவாதித்து, நடக்கப் போகும் பலன்களுக்குத் தீர்வுபெறுவார்கள். அல்லது அவர்கள் கூறும் ஆலோசனையால் எச்சரிக்கையாக இருப்பார்கள். பொதுவாக ஒரே ஊரில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்வது பல பிரச்சினைகளைத் தந்துவிடும் என்பதால், தொலைவிலிருக்கும் கோவிலுக்குச் சென்று புதிய மனிதர்களிடம் மனம்விட்டுப் பேசி ஆறுதலடைந்து, தீமையான பலன்களைத் தவிர்க்கமுடியும். பல மனிதர்களை சந்தித்துப் பேசும் ஜோதிடர்கள் மனவளக்கலை அறிந்தவர்கள் என்பதால், ஜாதகர் மனநிலை அறிந்து பரிகாரம் சொல்வார். ஜோதிடர் கூறும் வழிகாட்டுதல்படி நம்பிக்கையுடன் பரிகாரம் செய்துகொள்ளுதல் நிச்சயம் நற்பலனையே தரும்.

பொதுவாக ஒரு ஜாதகருக்குப் பரிகாரம் சொல்லவேண்டுமானால் முதலில் ஜாதகரின் கோட்சார நிலைக்கும்,தசாபுக்திகளுக்கும் ஏற்ப பரிகாரம் செய்தல் வேண்டும். சுய ஜாதகப்படி கிரகங்களின் வலிமையைக் கண்டறிந்து, பலப்படுத்த வேண்டிய கிரகத்திற்கு ஏற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியைத் தேர்வுசெய்து பின்பற்றவேண்டும். நாம் குடியிருக்கும் வீட்டில் சில இடங்களில் தூங்கினால் நிம்மதியாக உறங்குவதும், சில இடங்களில் தூக்கம் வராமல் தவிப்பதுமாக இருப்போம். எந்த இடம் நிம்மதியான உறக்கம் தருகிறது என்பதைத் தேர்ந்தெடுத்து தூங்கவேண்டியது நம் கையில் இருப்பதுபோல, எல்லா கோவில்களும் எல்லாருக்கும் நல்ல மாற்றத்தைத் தருவதில்லை. ஆதலால் பல கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மனதை சந்தோஷப்படுத்தி, காரியசித்தி தரும் கோவில்களைத் தேர்ந்தெடுத்து வருடம்தோறும் சென்று பின்பற்றுதல் நிலையான வெற்றியையும், சந்தோஷமான வாழ்க்கையையும் தரும்.

அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி போன்ற கிரக வலிமைபெற்ற காலமறிந்து விரதமிருந்து, நடக்கும் தசையின் மந்திரம் உச்சரித்து, உடலை சமநிலைப்படுத்தி, சிறிய யோகப்பயிற்சி செய்து, நம்பிக்கையுடன் செயல்பட்டால் நினைத்தது பலித்து திருப்திகரமான வாழ்க்கை கிடைக்கும். நம் முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வ வழிபாடு, நம் வம்சாவளியினர் பின்பற்றிய உணவுப் பழக்கம், கலாச்சாரம் தெரிந்துகொண்டு நடப்பது வெற்றி தரும். மரபுரீதியான உடல்நிலை,வாழ்க்கை முறை அறிய உறவினர்கள் இணைந்து வழிபடும் குலதெய்வ வழிபாட்டுமுறையைப் பின்பற்றுவது சாலச்சிறந்தது. சுயஜாதகத்தை ஆய்வுசெய்து ஜோதிடர் ஆலோசனைப் படி சரியான பரிகாரங்களைத் தேர்ந்தெடுத்து தெய்வ வழிபாடு, நவரத்தினங்களைப் பயன்படுத்தினால் பூரண ஆயுளைப் பெற்று, எண்ணிய லட்சியத்தில் சாதிக்கும் ஆற்றல் கிடைத்து, வெற்றிபெற்று மகிழ்ச்சியுடன் வாழ வழிபிறக்கும். வாழ்க வளமுடன்.

செல்: 96003 53748

bala040322
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe