பெற்றோர் பூமியிலுள்ள ஒரு சராசரி மனிதன் வாழ் நாளில் அதிகபட்சம் ஆயிரம் பேரிடம்தான் நெருங்கிப் பழகுகி றான். குழந்தைப் பருவ நண்பர்கள், கல்வி கற்பது, குடும்ப உறவு கள், தொழில் செய்யும் இடத்தில் பழகுபவர் கள், நோய் ஏற்பட்டு மரணிப்பதற்காக கடந்து வரும் சக மனிதர்கள் என நம் வாழ்க்கையில் வருகிறார்கள். இவர் களில் சிலரே நம் நண்பர்களாகவும், எதிரியாகவும் மாறு வார்கள். இவர்கள் எல்லாருடனும் தொடர்ந்து பயணிக்க முடியாது. உலகப் பிரபலமானவராக இருந்தாலும் நெருங்கிய சொந்தம், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்குள்ளே வாழ்க்கை முடிந்துவிடும். இந்த குறுகிய வாழ்க்கையில் நம்முடன் இருந்துகொண்டே நம்மைக் கெடுப்பதும், எதிரியாக நிற்பதும், துரோகம் செய்வதும் நம்முடன் இருப்பவர்கள்தான்.

Advertisment

ஒரு மனிதன் நொந்து வெறுத்து விரக்தியாவது ஒரே நாளில், ஒருவரால், ஒருவருக்காக அல்ல. பலரால் பலமுறை நம்பி ஏமாறுவதால்தான். ஏமாற்றங்கள், துரோகம் என்பது குடியிருக்கும் வீடுமுதல் நாடுவரை எல்லாருடைய வாழ்விலும் ஏற்படும். குடும்பத்தில் தாய்- தந்தைமீது பாசம்வைத்து, அவர்கள் சொல்படி படித்து, ஒழுக்கமாக இருந்து, அவர்கள் விரும்பியபடி திருமணம் செய்தவர்களின் பாசத்தை சில பெற்றோர்கள் மதிப்பதில்லை. ஆனால் தன் பேச்சைக் கேட்காத, மதிக்காத, தன்னை கவனிக்காத பிள்ளையாக இருந்தாலும், பாசத்தால் அவர்கள் செய்யும் கெட்ட செயலுக்கும் துணையாகப் பெற்றோர் வருவர். பணக்கார கெட்ட பிள்ளைக்கு உதவி செய்வர். நேர்மையாக, ஏழையாக இருக்கும் பிள்ளைமீது பாசமில்லாமல், தேவைக்கு உதவாமல் உபத்திரவமாக இருப்பர். எத்தனை பிள்ளை பெற்றாலும் பெற்றோர் தங்கள் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே பாசத்தைத் தருவார்கள் என்பது நிச்சயமில்லை. பாசம், நன்றியில்லாத சில பெற்றோர்களும் உண்டு. தாயார் ஸ்தானமான நான்கு, தந்தை ஸ்தானமான ஒன்பதாமிடம் கெட்டுப் போயிருந்தால் பெற்றோர்களால் நன்மை கிடைக்காது.

உடன்பிறந்தோர் குழந்தையாக இருந்து வளரும்போது உடன்பிறந்தவர்கள் மட்டுமே உடன் வளர்வார்கள். இயற்கையாகவே பெற்றோர் களுக்குப்பிறகு அவர்கள்மீதே அதிக அன்பு வரும். ஆனால் அவர்களுக்கு நம்மீது அன்பு இருக்கிறதா என்றால் பலருக்கும் இருப்ப தில்லை. அதைத் தெரிந்துகொள்வதற்கு உடன்பிறந்தவர்களால் பலமுறை ஏமாற்றப் பட வேண்டியிருக்கும். தன்னுடன் பிறந்தவர் கள் தன்னைவிட எந்த வளர்ச்சியும் பெற்று விடக்கூடாது என நினைக்கும் உடன்பிறப்பு களே ஏராளம்.

சிறுவயதிலிருந்து விட்டுக்கொடுத்து, உதவிசெய்து உறுதுணையாக இருந்ததை யெல்லாம் மறந்து, "நீ செய்ததாகச் சொன்னதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை;

Advertisment

அப்படியெல்லாம் நடக்கவே இல்லை; நீ பொய் சொல்கிறாய்'' என பேசுவர். காரியம் நடக்க காலைப்பிடித்துக் கெஞ்சியதை மறந்துவிட்டு, காரியம் முடிந்தபின் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். உடன்பிறந்தவர்கள் தனக்கு உதவி செய்யவில்லை என்பதைவிட, செய்ந்நன்றி மறந்து பேசுவதுதான் பலருக்கு வலியைத் தருகிறது. உடன்பிறந்த வர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப் பணித்தவர்கள் உண்டு. ஆனால் எதுவுமே செய்யாமல் சுயநலமாக இருப்பவர்கள், ஏமாற்றிய உடன்பிறந்தவரிடமே தான் தியாகியாக வாழ்ந்ததாகச் சொல்வதைதான் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இளைய சகோதரத்தைக் குறிக்கும் மூன்றாமிடமும், மூத்த சகோதர ஸ்தானமான பதினொன்றா மிடமும் கெட்டால் உடன்பிறந்தவர்களால் நன்மையில்லை.

நண்பர்கள்

இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஓரிரண்டு குழந்தைகளே பெற்றுக்கொள்வதால், வருங்காலத்தில் உடன்பிறந்தவர்களின்றி, உடன்பழகும் நண்பர்களே உறவினர் களாக மாறக்கூடும். ஆதலால் உடன்பிறந்த வர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது உடன் பழகும் நண்பர்கள். ஏனோ நல்ல நண்பர்கள் எல்லாருக்கும் அமைவதில்லை. பழகும் அனைவரும் நண்பர்கள் இல்லை. அதில் பாதிபேர் துரோகிகளாக மாறக்கூடும் என்பதை பட்டபின்பே உணரமுடியும். சிறுவயதில் நம்மோடு விளையாடுபவர்கள் என்ன குணம், பணக்கார னா, ஏழையா, எந்த ஜாதி, எந்த மதம், என்ன உறவு என எதுவும் தெரியாமல் பழகுவோம். ஓர்நாள் அவர்களால் நமக்குத் தொல்லைகள் வரும்போதே அந்த நட்பைத் துண்டிக்கவேண்டிவரும். சிலர் "நட்புக்காக நான் எதையும் செய்வேன்' என வசனம் பேசி, செஞ்சோற்றுக் கடன்தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்த நண்பர்களாய் அழிவார்கள். தான் வாழ பிறரைக் கெடுப்பது, தானே வாழவில்லை- உடனிருக்கும் யாரும் வாழக்கூடாதென நினைத்து செயல்படும் நண்பர்கள் அதிகரித்து விட்டனர். ரத்த சொந்தமுள்ள உடன்பிறந்தவர் களே ஏமாற்றுகிறார்கள். இந்தக் காலத்தில் உடன் பழகும் நண்பர்கள் மட்டும் நல்லவர் களாக இருப்பார்கள் என நம்புவது முட்டாள் தனமானது. தூரமாய் இருக்கும்வரைதான் நட்பு அழகாய்த் தெரியும். நெருக்கமானால் வெறுப்பு தன்னால் வந்துவிடும். இன்று தான் சொல்லும் பொய்யெல்லாம் கேட்டு தலையாட்டினால் நல்ல நட்பு என்றும், தவறுகளை சுட்டிக்காட்டிவிட்டால் துரோகி எனவும் சொல்லி விலகிவிடுகிறார்கள்.

செவ்வாய், மூன்று, பதினொன்றாமிடம் பலம் குறைந்தால் நண்பர்களால் பயனில்லை. பாவிகளால் பாதிக்கப்பட்டால் நண்பர் துரோகியாவர்.

Advertisment

gg

உறவினர்

இன்று உறவினர்கள் பலர் உடனிருந்து கெடுப்பவர்களாக, நம்முடைய கஷ்டத்திற்கு ஆறுதல் சொல்வதுபோல் வந்து, தூண்டிவிட்டு, குத்திக்காட்டிப் பேசி, நம்மை அழவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். அடிபட்டுக் கிடந்தால் "அடி அதிகமா, குறைவா'' என தெரிந்துகொள்ள ஆசையுடன் வந்து பார்த்துச் செல்கிறார்கள். உறவுகள் பலவும் பொறமையும், பகையும்கூடி வன்மமாக மாறிப் பழிவாங்குகிறார்கள். நம் முன்னால் அன்பும், அக்கறையும் கொண்டவராகப் பேசிவிட்டு, நமக்குப் பின்னால் நம்மை இழிவாகப் பேசி மகிழ்வார்கள். நாம் வாழப் பொறுக்காத சொந்தங்களாக அமையக் காரணம் நான்காமிடம் கெட்டுக் கிடப்பதால் தான்.

காதல்

காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்பதெல்லாம் மூட நம்பிக்கையாகவும், பல காதல் செய்வதே முற்போக்காக வும் மாறிவிட்டது. காதலுக்காக உருகினால் காதலிப்பவர்களாலே உதாசீனப்படுத்தப் படுவதுதான் காதலின் நிலை. ஜென்மம் முழுவதும் அன்பு ஒருவருக்கே கொடுக்கப்பட வேண்டுமானால் காதலால்தான் சாத்தியம். காதல் போராகி, சலிப்பு வந்துவிட்டால் காதல் அழிந்துவிடும். அன்பை கேலி செய்வதால், காதலை உயர்வாகப் பேசுவதற்கே தயக்கம் வருகிறது. முன்பு காதல் ஒழுக்கத்தையும், கற்பையும் காப்பாற்றி வந்தது. இன்று காதல் என்கிற பெயரில் ஏமாற்றுகிறவர்கள் அதிகமாகிவிட்டனர். காதலிப்பவர்கள் நினைத்தால்தான் காதல் வாழும். காதலர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையற்று இருக்கும் நிலையில் இன்றைய காதல் இறக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை. காதலுக்காக கசிந்துருகுபவர்கள், சுக்கிரன் பலமற்று நான்கு, ஏழாமிடம் கெட்டுப்போனவர்களாக இருப்பர்.

திருமணம்

திருமணம் பற்றிய புரிதலே இல்லாத தால் பலர் புரிந்துகொள்வதற்குள் பிரிந்துவிடுகிறார்கள். சண்டையே வராத தம்பதிகள் என்று யாரும் இருக்கவே முடியாது. எல்லா பழக்க வழக்கங்களும் ஒருவருக்கொருவர் பிடித்துவிடாது. பிடிவாதம், எதிர்வாதம் இருந்தால் இல்லறம் இனிக்காது. தவறை ஒப்புக் கொள்பவர்களால்தான் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும். தான் செய்வது தவறே இல்லை என பிடிவாதமாக வாதாடுபவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. விட்டுக் கொடுப்பதும் சகித்துப் போவதும்தான் வாழ வழிவகுக்கும். திருமணத்திற்கு முன்புவரை சிந்திக்க நேரமிருந்தும், திருமணம் நடந்தால் போதுமென எண்ணி முடித்துவிட்டு, ஒத்துப் போகவில்லை என வருந்துவதால் எந்தப் பயனுமில்லை. திருமணம் மறுமணத்திற்குச் சென்றுவிட்டது என்றாலே ஜென்மத்தின் நிம்மதிக்கு ஆப்பு செய்தாகிவிட்டதென்றே முடிவு செய்துவிடலாம். திருமணத்திற்குப் பின் இவருடன் ஏன் திருமணம் நடந்தது என அதிகம் சிந்தித்தால் ஆபத்தில் தான் முடியும்.

திருமணம் செய்த கொஞ்சநாளில் தாம்பத்தியத்தில் சலிப்பு வந்துவிட்டால் இல்லறம் இல்லா அறமாகிவிடும். ஆயிரம் காலத்துப் பயிர் திருமணம் என சொல்வதை கேலி செய்பவர்கள் சந்தோஷம் என்கிற அறுவடையில் தோற்றுப்போவார்கள். இரண்டு, நான்கு, ஏழு, எட்டு கெட்டுப் போனால் திருமண வாழ்க்கை கெட்டுப் போகும். ஏழாமிடத்தைவிட பதினொன் றாமிடம் வலுத்தால் இளையதாரம் உண்டா கும். பதினொன்றாமிடமும் கெட்டால் திருமண பந்தம் நன்மை தராது.

பிள்ளைகள்

பிள்ளைகள் நம் இஷ்டபடி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள், அவர் களின் பெற்றோருக்கு உண்மையாக இருந்திருக்க வேண்டும். நம் நடவடிக்கை களைப் பார்த்தே நம் பிள்ளைகள் நாளை நடந்துகொள்வார்கள் என்பதை மட்டும் பலரும் கண்டுகொள்வதேயில்லை. "என் பிள்ளைகளை நான் நன்றாக வளர்க்கிறேன்; என் பிள்ளை என்னைக் கைவிடாது' என நம்பிக்கையாய்ப் பேசுவார்கள். தன் பிள்ளைகள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வாழ்க்கையைக் கெடுப்பது, சொத்துகளை அபகரிப்பது, தொழிலில் முறையற்றவகையில் சம்பாதிப்பது என தேவைக்காக வளைந்துகொடுத்து வாழ்வார்கள். ஐந்தாமிடம் கெட்டுப் போனால் குலதெய்வத்தின் அருளின்றி புத்திர தோஷத்தை அடைகிறார்கள். பிள்ளை பிறக்காமல் இருப்பதும் , பெற்ற பிள்ளையால் கைவிடப்பட்டாலும் புத்திர தோஷம் தான்.

நோய்

நல்ல பழக்கவழக்கம் கொண்டவர்கள் கொடிய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். கெட்ட பழக்கவழக்கம் கொண்டவர்கள் நெடுநாள் வாழ்கிறார்கள். குற்றவுணர்ச்சி இல்லாதவர்கள் நிம்மதியாக உறங்கி நோயில்லாமல் அதிக வயது வாழ்கிறார்கள். யோக்கியர்களாக வாழ்ந்து கண்முன்னே நடக்கும் அயோக்கியத்தனத்தைத் தட்டிக் கேட்க முடியாத இயலாமையால், நோய் வந்து குறைந்த வயதில் சிலர் இறந்துவிடுகிறார் கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி முறையாக தினந்தோறும் செய்பவர்கள் விபத்தில் மரணித்தும் போகிறார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதன் அர்த்தத்தை நோய் வந்தவரால்தான் உணரமுடியும். மரணத்தைவிடக் கொடியது நோயுடன் வாழ்வது. அடுத்தவர் களை எதிர்பார்த்து வாழ்வது போன்ற கொடுமை, தண்டனை உலகில் எதுவுமில்லை. ஆறாமிடம் வலுத்திருந்தால் நோயுடன் வாழ்வார்கள்.

எதிரி

எதிரிதான் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறான்.

ஒருவரால் எல்லா எதிரிகளையும் வீழ்த்தி வெற்றிபெறமுடியாது. எதிரி என்பவர்கள் அடுத்த நாட்டுக்காரனாக இருந்தால், நாட்டைவிட்டு ஓடிவந்துவிடலாம், அடுத்த வீட்டுக்காரனாக அமைந்துவிட்டால் வேறு வீட்டுக்குச் சென்று தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் எதிரி வீட்டுக்குள் இருப்பவர்களாக இருப்பதால்தான்அவதிகள் ஏராளம். பெற்றோர், உடன்பிறந்தவர், துணைவர், பிள்ளைகள், உறவினராக எதிரிகள் இருந்தால் எவ்வளவு அறிவாளியாக, திறமை நிறைந்த, வீரமிக்கவராக இருந்தாலும் நன்றாக வாழவேமுடியாது. வாழவிடமாட்டார்கள். ஏமாற்றுபவன் நண்பனாக இருந்தாலும் வெளியே சொல்லக்கூடாது என விட்டால் சமாதியாக்கி விடுவார்கள். எதிரியாராக இருந்தாலும் விலக்கி வைக்கவும் அல்லது விலகி வந்துவிடவும் வேண்டும். ஆறாமிடம் வலுத் தன்மையைப் பொருத்து எதிரியை வெல்லும் திறன் கிடைக்கும்.

கடன்

"கடன்பட்டவன் நெஞ்சம்போல் கலங்கி னான் இலங்கை வேந்தன்' என்பதன் பொருளை, கடனால் அவதிப்பட்டவர் களால்தான் உணரமுடியும். கடன் வாங்கி, திரும்பக்கொடுக்க முடியாமல் படும்பாடு சொல்லமுடியா துயரம். கடன்வாங்கித் திரும்பக் கொடுக்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கே வலி அதிகம் ஏற்படுகிறது. கடனைத் திரும்பத் தரக்கூடாது என எண்ணம் கொண்டவர் அவமானத்தை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார். எத்தனை சாபமிட்டாலும் கண்டுகொள்ள மாட்டார். இவரிடம் கடன்கொடுத்துவிட்டு, வாங்கமுடியாமல் அவதிப்படுபவர்கள் பாடு திண்டாட்டம்தான். நோய், எதிரி, கடனால் அவதிப்படுபவர்களுக்கு ஆறு, எட்டாமிடம் வலுப்பெறுவதுதான் காரணம்.

சிலருக்கு இதனால் மரணம்கூட ஏற்பட்டுவிடும்.

தொழில்

கற்ற கல்விக்கேற்ப தொழில் பலருக்கு அமையால் அவதிப்படுவர். படிக்காதவர் தொழில் நடந்துபவராகவும், படித்தவர் அவரிடம் பணியாற்றுவதும் பல்லாண்டு களாக நடைபெற்றுவருகிறது. நன்றாகப் படித்தவர் வேலையின்றித் திரியும்போது, படிப்பு வராமல் ஊர்சுற்றிய உடன்படித்த வர்கள் ஏதாவது வேலை செய்துகொண்டு அறிவுரை வழங்குவதைக் கேட்கும் கொடுமை தாங்கமுடியா கொடுமை. "படிச்சதுக்கு வேலைக்குப் போகணும்ன்னு அடம் பிடிக்காத; கிடைச்ச வேலைக்குப் போ' என மட்டம் தட்டுவார்கள். முயற்சிசெய்து அலைவதைக் கண்டு சந்தோஷப்படும் நண்பர், உறவினர் கூட்டம், "அன்னைக்கே தெரியும்; அவன் உருப்பட மாட்டான்னு' என நக்கல் செய்வர். வேலையில்லாதபோது திருமணம் செய்துவிட்டால் பெருங்கொடுமை. பத்தாமிடம் கெட்டுவிட்டால் நல்ல தொழில் அமையாது. கூடுதலாக பத்தாமிடம் மாமியார் ஸ்தானம். தொழில் அமையாததால் மாமியாரிடமும் திட்டுவாங்கி கேவலப்பட நேரும். கர்ம ஸ்தானமான பத்தாமிடம் கெட்டால் பல அவதிகள் அடைய நேரும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748