சித்தர்கள் கூறியுள்ள தமிழ் முறை ஜோதிடக் கட்டுரைகளை அவ்வப்போது "பாலஜோதிடம்' இதழில் எழுதி வருகிறேன்.

அவற்றைப் படித்துவிட்டு பலர் நிறைய சந்தேகங்களைக் கேட்டுள்ளனர்.

Advertisment

"வேதஜோதிட முறையில் கிரகங்களைக்கொண்டு ஒருவரின் இப்பிறவி வாழ்க்கையில் நன்மை- தீமைப் பலன்களைக் கூறுகிறார்கள்.

ஆனால், மனித வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைகளுக்கு கிரகங்கள் காரணமல்ல என்றும், அவரவர் முற்பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைப் பதிவுகளே காரணம் என்றும் கூறுகிறீர்களே, இது ஜோதிடமுறைக்கு முரண் பட்டுள்ளதே' என கேட் கிறார்கள். இதற்குப் புராணக் கதைமூலம் சரியான விளக் கத்தை அறிவோம்.

krஇந்த பூமியில் உயிரினங் களைப் படைக்கும் தொழிலை பிரம்மதேவர்தான் செய்கிறார் என்று வேத, புராண, இதிகாசக் கதைகளில் கூறப்பட்டுள்ளன. பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக தன் மனதிலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நான்கு குமாரர்களைப் படைத்தார். இதனை "கௌமாரப் படைப்பு' என்பர். இவர்களை பிரம்மனின் மானசீக புத்திரர்கள் என்றும், சனகாதி முனிவர்கள் என்றும் கூறுவர்.

Advertisment

இந்த நால்வரும் பிரம்மனை நேக்கி, ""தந்தையே, எங்களைப் படைத்த காரணம் என்ன?'' என்று கேட்டார்கள்.

""குமாரர்களே, இந்த பூமியில் அனைத்து உயிர்களையும் நான் ஒருவனே படைப்பதில் சிரமப்படுகிறேன். படைப்புத் தொழிலில் நீங்கள் எனக்கு உதவியாக இருக்கவேண்டும்'' என்றார் பிரம்மதேவர்.

பிரம்மதேவர் கூறியதைக் கேட்ட நால்வரும், ""தந்தையே, நாங்கள் சர்வசங்கப் பிரித்யாகிகளாக யோக நிஷ்டைபெற்று, காமக்ரோத மதமாத்சர்யங்கள் இல்லாத வர்களாய், கிருதார்த்தர்களாக இருக்கவே விரும்புகிறோம். மோட்ச நிராதர்களாக ஞானம்பெற விரும்புகிறோம்'' என்றுகூறி, நால்வரும் மோட்ச ஞானம்பெற தட்சிணாமூர்த்தியை குருவாக ஏற்று தவம்செய்யச் சென்று விட்டார்கள். ஆலயங்களிலுள்ள தென்முகக்கடவுள் தட்சிணாமூர்த்தியின் பீடத்தில் அவரின் காலடியில் இந்த சனகாதி முனிவர்கள் நால்வரும் சிலையாக அமர்ந்துள்ளதைக் காணலாம்.

Advertisment

இந்த நால்வரும் பிரம்மனை விட்டுச்சென்ற பின்பு, பிரம்மன் மறுபடியும் தனக்கு உதவியாக பிருகு, புலத்தியர், கிரது, அங்கீரசு, மரீசி, அத்திரி, கஷர், வசிஷ்டர், நாரதர் என ஒன்பது குமாரர்களை தன் உடலிருந்து படைத்தார். இவர்கள் பிரம்மனுக்கு இணையான சக்தியைப் பெற்றிருந்ததால் இவர்களை "நவபிரம்மாக்கள்' என்று அழைத்தனர்.

பிரம்மா அவர்களிடம், ""நீங்கள் ஒன்பதுபேரும் எனது பூரண சக்தியைப் பெற்றவர்கள். எனவே எனக்குத் துணையாக இருந்து பூமியில் உயிரினங்களைப் படைப்பியுங்கள்'' என்றார். பிரம்ம புத்திரர்களில் மூத்தவரான பிருகு ரிஷியைத் தவிர மற்ற எட்டுபேரும், ""படைப்புத் தொழிலைச் செய்யமாட்டோம்'' என்றுகூறி தவநிலைக்குச் சென்றுவிட்டார்கள்.

பிருகு ரிஷி பூமியில் உயிர்களைப் படைக்கும்போது, அனைத்து மனிதர்களையும் நேர்மை, வாய்மை, சத்தியம் என மேன்மையான குணம் கொண்டவர்களாகப் படைத்தார். இதனால் பூமியில் பாவம், துரோகம் செய்யும் சிந்தனை இல்லாமல் ஆன்மநேயம் கொண்டவர்களாக வாழ்ந்தார்கள்.

பிருகுவின் படைப்பு முறையைக்கண்ட பிரம்மா, ""மகனே, நீ படைக்கும் அனைவரும் உத்தம குணத்துடன், நல்லறிவு பெற்று, பாவசிந்தனை இல்லாதவர்களாக, எந்தவித சிரமமுமின்றி வாழ்கிறார்கள். இதுபோன்று படைப்பிக்கக்கூடாது. ஒரு ஆன்மா தன் முற்பிறவியில் செய்த பாவ- சாப- புண்ணிய அடிப்படையில், அவரவர் செய்த நல்வினை, தீவினைக்கானதை அனுப வித்துத் தீர்க்கத்தகுந்த நிலையில், அடுத் தடுத்த பிறவிகளில் படைப்பிக்க வேண்டும். இதுவே உயிர்களின் படைப்பின் சூட்சுமம்; பிறப்பின் ரகசியம்'' என்றார். பிரம்மனின் வார்த்தையைக் கேட்டு, ""தந்தையே, நான் படைக்கும் மனிதன், தன் வாழ்வில் சிரமம் அடையக்கூடாது. தாங்கள் கூறுவதுபோல் என்னால் உயிர்களைப் படைக்க முடியாது'' என்றுகூறி தவவாழ்விற்குச் சென்றுவிட்டார்.

இந்த பூமியில் ஒரு மனிதன், தன் முற்பிறவி கர்மவினைகளை அனுபவித்துத் தீர்க்கவே அடுத்தடுத்து பிறவிகளை அடைகிறான். மேற்சொன்ன நிகழ்வுகளைக் கூறும் வேத, புராணங்கள் இந்த தெளிவான உண்மையை நமக்குக் கூறுகின்றன. தமிழ்முறை ஜோதிடத் திலும் சித்தர்கள் அவரவர் முற்பிறவிப் பலனே மனித வாழ்வில் உண்டாகும் தனி மனித நன்மை- தீமைகளுக்குக் காரணம், வானில் சஞ்சரிக்கும் கிரகங்கள் அல்ல என்று கூறுகிறார்கள். அந்த முற்பிறவிப் பதிவுகளே நாம் பிறக்கும் நேரத்தையும், நமது ஜாதகத்தையும் தீர்மானிக்கின்றன.

இனி, ஒரு பெண்ணின் பிறப்பு ஜாத கம்மூலம், அவளின் முற்பிறவிக் கணவனை இப்பிறவியில் மணம்புரிந்து வாழும் யோகம் யாருக்கென்று சித்த ஜோதிடமுறைமூலம் அறிவோம்.

ஒரு பெண்ணின் ஜாத கத்தில் செவ்வாயானது அவளின் இப்பிறவிக் கணவ னைக் குறிக்கும் உதாரண கிரகமாகும். சுக்கிரன் அந்த ஜாதகியைக் குறிக்கும் உதாரண கிரகமாகும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் செவ்வாய், ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுடன் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆம் ராசிகளில் ஒரே நட்சத்திர மண்டலத்தில் சுக்கிரன் இருந்தாலும், இந்தப் பெண் இப்பிறவியில் தன் முற்பிறவிக் கணவனை மணந்து வாழப்பிறந்தவள். மேஷம்முதல் மீனம்வரையுள்ள 12 ராசிகளுக்கு இந்த அமைப்பு பொருந்தும்.

இந்த ஜாதகிக்கு முற்பிறவியில் இவளது குடும்பத்தாரின் விருப்பப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்குப்பின் கணவன்- மனைவி இருவரும் ஒருவர்மீது ஒருவர் பாசம் கொண்டு மிக அன்யோன்யமாக வாழ்ந்தார்கள். ஆனால், இவள் கணவனின் தாயாருக்கும், சகோதரிகளுக்கும் இவர்கள் பாசம் பிடிக்காத நிலையில், இவள்மீது பல குற்றங் களைக்கூறி இவளைக் கணவனிடமிருந்து பிரித்துவிட்டார்கள். இவள் கணவனும் தன் பெற்றோர் பேச்சை மீறமுடியாமல் இவளைப் பிரிந்தான். ஆனால், மனதில் நினைத்தே வாழ்ந் தான். முற்பிறவியில் முழுமையாக வாழ்ந்து முடிக்காத இரண்டு ஆன்மாக்களும், இப்பிறவி யில் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து முடிக்கவே இவளுக்கு இப்பிறவி அமைந்தது என்பது ஜீவநாடி வாக்காகும்.

இவளின் முற்பிறவிக் கணவன் இவள் ஊரிலோ அல்லது பக்கத்திலோ பிறந்திருப்பான்.

இவளின் பெற்றோர்கள் இவள் திருமண காலசமயத்தில் இதனைப் புரிந்து, இவளின் முற்பிறவிக் கணவனை அறிந்து திருமணம் செய்து வைக்கவேண்டும். பெற்றோர் பிடிவாதத்திற்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தால் திருமணம் தடை, தாமதமாகும். பரிகாரங்கள் பலன் தராது. பெற்றோர்கள் நிர்பந்தப்படுத்தி திருமணம் செய்துவைத்தால் இவளின் திருமணத் திற்குப் பிந்தைய வாழ்க்கை சுகமாக இராது.

இன்னுமொரு உதாரணத்தை அடுத்த இதழில் காண்போம்.

செல்: 99441 13267