சென்ற இதழ் தொடர்ச்சி...
பணவரவு அமைப்புகளுடன் ராகு சம்பந்தம் ஏற்படும்போது லஞ்சப் பணம் கிடைக்கிறது. இவ்வகை அமைப்புள்ள ராகு சம்பந்தம் ஏற்படும் கிரகம்- அதாவது உடனிருக்கும் கிரகம், ராகு இருந்த ராசிநாதர், சாரம் வாங்கிய சாரநாதர் இவர்களின் வழியே லஞ்சப்பண இயல்புகள் அமையும்.
ராகு- புதன் வீட்டில் அல்லது புதன் சாரத்தில்
எப்போதும் ராகு, புதன் சம்பந்தம் குறுக்கு புத்தியைக் கொடுக்கும். மிகவும் யோசித்து, யாரும் எதிர்பாராத லஞ்சத்தைக் கேட்பார்கள். எதிரிலுள்ளவர் மயங்கிச் சாய்ந்துவிடுவார். பொதுவாக இவர்கள் தங்கள் பொருட்டு லஞ்சம் கேட்காமல், வேறு யாருடைய பெயரிலாவது லஞ்சம் கேட்பர். அல்லது லஞ்சம் வாங்கும் தகுதியிருப்பினும், வேறு யார் மூலமாவது லஞ்சம் வாங்க முற்படுவர். புதன் கணக்குக்கு காரகர். எனவே, வியாபாரத்தில் நிறைய வரி வரும். அதைக் குறைத்துக்காட்ட லஞ்சம் கேட்பர். வருமானவரிக் கணக்கை அட்ஜஸ்ட் செய்ய லஞ்சம் கேட்பர். மிகச்சில பத்திரிகை செய்தித்துறை அன்பர்கள், பிரபலங்களைப் பற்றிய செய்தியைப் பளிச்சிடச் செய்யவும் அல்லது எதிர்மறை செய்திகளைப் பரப்பவும் லஞ்சம் வாங்குவர். சிலர் தரகுத் தொழில் செய்து அதில் லஞ்சம் பெறுவர். ஆசிரியப் பணியில் உள்ள சிலரும் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சிக்காக லஞ்சம் பெறுவர். சில ஜோதிடர்களும் பலனை மாற்றிக் கூற லஞ்சம் பெறுவர். லஞ்சப் பணம் முன்னே பின்னே இருப்பினும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
லஞ்சம் வாங்க இடையூறு செய்யும் நபர்களை, அவர்களின் இமேஜை, வாழ்வியலை எப்படியாவது நாசம் செய்துவிடுவர்.
ராகு- குரு வீட்டில் அல்லது குரு சாரத்தில்
பொதுவாக குரு பாதுகாக்கும் கிரகம். இதில் வேடிக்கை என்னவெனில் ராகுவைப் பார்க்கும் குரு சற்றே தரம் தாழ்ந்துவிடுவார். குருவின் பார்வையைப் பெறும் ராகு சற்றே தரம் உயர்வார். தசா புக்திக்காலங்களில் இந்த வேறுபாட்டை உணரலாம். லஞ்சம் வாங்கும் அமைப்பில் இவர்களின் சம்பந்தம் ஏற்படும்போது தெய்வப்பணியில் இருப்போர், வழக்கறிஞர்கள், வங்கியில் பணிபுரிவோர், நிதித்துறையில் இருப்போர், சில சந்நியாசிகள், உயிர் பாதுகாப்புப்பணியில் உள்ளவர்கள்
சென்ற இதழ் தொடர்ச்சி...
பணவரவு அமைப்புகளுடன் ராகு சம்பந்தம் ஏற்படும்போது லஞ்சப் பணம் கிடைக்கிறது. இவ்வகை அமைப்புள்ள ராகு சம்பந்தம் ஏற்படும் கிரகம்- அதாவது உடனிருக்கும் கிரகம், ராகு இருந்த ராசிநாதர், சாரம் வாங்கிய சாரநாதர் இவர்களின் வழியே லஞ்சப்பண இயல்புகள் அமையும்.
ராகு- புதன் வீட்டில் அல்லது புதன் சாரத்தில்
எப்போதும் ராகு, புதன் சம்பந்தம் குறுக்கு புத்தியைக் கொடுக்கும். மிகவும் யோசித்து, யாரும் எதிர்பாராத லஞ்சத்தைக் கேட்பார்கள். எதிரிலுள்ளவர் மயங்கிச் சாய்ந்துவிடுவார். பொதுவாக இவர்கள் தங்கள் பொருட்டு லஞ்சம் கேட்காமல், வேறு யாருடைய பெயரிலாவது லஞ்சம் கேட்பர். அல்லது லஞ்சம் வாங்கும் தகுதியிருப்பினும், வேறு யார் மூலமாவது லஞ்சம் வாங்க முற்படுவர். புதன் கணக்குக்கு காரகர். எனவே, வியாபாரத்தில் நிறைய வரி வரும். அதைக் குறைத்துக்காட்ட லஞ்சம் கேட்பர். வருமானவரிக் கணக்கை அட்ஜஸ்ட் செய்ய லஞ்சம் கேட்பர். மிகச்சில பத்திரிகை செய்தித்துறை அன்பர்கள், பிரபலங்களைப் பற்றிய செய்தியைப் பளிச்சிடச் செய்யவும் அல்லது எதிர்மறை செய்திகளைப் பரப்பவும் லஞ்சம் வாங்குவர். சிலர் தரகுத் தொழில் செய்து அதில் லஞ்சம் பெறுவர். ஆசிரியப் பணியில் உள்ள சிலரும் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சிக்காக லஞ்சம் பெறுவர். சில ஜோதிடர்களும் பலனை மாற்றிக் கூற லஞ்சம் பெறுவர். லஞ்சப் பணம் முன்னே பின்னே இருப்பினும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
லஞ்சம் வாங்க இடையூறு செய்யும் நபர்களை, அவர்களின் இமேஜை, வாழ்வியலை எப்படியாவது நாசம் செய்துவிடுவர்.
ராகு- குரு வீட்டில் அல்லது குரு சாரத்தில்
பொதுவாக குரு பாதுகாக்கும் கிரகம். இதில் வேடிக்கை என்னவெனில் ராகுவைப் பார்க்கும் குரு சற்றே தரம் தாழ்ந்துவிடுவார். குருவின் பார்வையைப் பெறும் ராகு சற்றே தரம் உயர்வார். தசா புக்திக்காலங்களில் இந்த வேறுபாட்டை உணரலாம். லஞ்சம் வாங்கும் அமைப்பில் இவர்களின் சம்பந்தம் ஏற்படும்போது தெய்வப்பணியில் இருப்போர், வழக்கறிஞர்கள், வங்கியில் பணிபுரிவோர், நிதித்துறையில் இருப்போர், சில சந்நியாசிகள், உயிர் பாதுகாப்புப்பணியில் உள்ளவர்கள், புண்ணிய ஸ்தலங்களில் பணிபுரிவோர், ஜோதிடம் கற்றுக்கொடுப்பவர்கள், உயர்கல்வி சம்பந்தப்பட்டவர்கள், பெரிய மரங்கள் சம்பந்தமான வேலை பார்ப்பவர்கள் போன்றவர்கள் லஞ்சம் வாங்குவர். குரு குழந்தையைக் குறிப்பார். இவ்வமைப்புள்ளோர் என்ன குழந்தை பிறந்திருக்கிறதென்று சொல்லவும் லஞ்சம் கேட்பர். அவ்வளவு ஏன்? கோவில் அர்ச்சகர்களில் சிலர் காசு கொடுத்தால்தான் பிரசாதம்; இல்லையென்றால் விபூதி, குங்குமம் தரமாட்டார்கள். இதுவும் ஒரு லஞ்சம்தானே?
இவர்கள் குரு சம்பந்தம் இருப்பதால், லஞ்சம் வராவிட்டாலும் சண்டையெல்லாம் போடமாட்டார்கள். ஆனால் சாபமிடுவார்கள்.
ராகு- சுக்கிரன் வீட்டில் அல்லது சுக்கிரன் சாரத்தில்
சுக்கிரன் என்றாலே அனைத்து வசதிகளும் நிறைந்த பெருவாழ்வுதான் நினைவுக்கு வரும். நன்றாக வாழ்பவர்களைப் பார்த்து, "அவனுக்கென்ன... சுக்கிர தசைதான்' என்பர்.
இதனால் சுக்கிரனும் ராகுவும் சம்பந்தம் பெறும்போது, குறுக்குவழியில் செல்வநிலை ஏற்படும். சுக்கிரன் கலையுலகைக் குறிப்பதால், அதன்மூலம் வரும் பணத்தை லஞ்சப்பணம் என்று கூறாமல் கறுப்புப்பணம் என்று அழைப்பர். கலையுலகில் கறுப்புப்பண நடமாட்டம் அதிகம்தானே. இவ்விணைவில் ராகு சற்று அதிகமாக உழைத்து, அந்த கறுப்புப் பணத்தையும் நேர்மையற்ற வழிகளில் வரச்செய்வார். அவசியப் பொருட்களைவிட ஆடம்பரப் பொருட்கள்மூலம் கறுப்புப் பண நடமாட்டம் அதிகரிக்கும். சுக்கிரன் வைரத்தைக் குறிப்பவர். எனவே வைரக்கடத்தல் அல்லது அதற்கு உதவி செய்தல் மூலமாக லஞ்சம் அதிகரிக்கும். சுக்கிரன், மதுவைக் குறிப்பார். மது விற்பனை சம்பந்தமான லஞ்சம், கறுப்புப்பண விவகாரம் பற்றி சொல்லவே வேண்டாம். நிதி நிறுவனத்துறையில் லஞ்சம் மற்றும் கறுப்புப் பண நடமாட்டத்துக்குக் குறைவிருக்காது. சுக்கிரன் சம்பந்தமான லஞ்சம், அழகு, கவர்ச்சி என்ற போர்வையிலும் நடக்கும். சிலசமயம் இவையே லஞ்சமாகப் பெறப்படும் அல்லது கொடுக்கப்படும். சுக்கிரன் வியாபார கிரகம் என்பதால், வியாபாரம் சம்பந்தமான லஞ்சம் எங்கும் எதிலும் பரவியிருக்கும். சுக்கிரன், ராகு சம்பந்த வகையில் வைரம், ஓட்டல், மது, நிதி ஆதாரங்கள், வாசனைத் திரவியம், அழகுப் பொருட்கள், ஆடைகள், திருமண மண்டபங்கள், வாகனம், வீடு மற்றும் இனிப்புகள் லஞ்சமாகப் பெறப்படும். சுக்கிரனும் ராகுவும் சம்பந்தம் பெற்று லஞ்சம் வாங்கும் நிலையில், அதில் அழகும் ஒழுக்கமின்மையும் நிறைந்திருக்கும்.
லஞ்சம் வாங்கும்போது, இடையூறு ஏற்பட்டால், அவர்களாக அதை எதிர்க்கமாட்டார்கள். வேறு சந்தர்ப்பத்தில், வேறு ஆட்களை வைத்து மானபங்கப்படுத்திப் பழிவாங்குவர்.
ராகு, சனி வீட்டில் அல்லது சனி சாரத்தில்
சனி என்றாலே தடை, தாமதம், அடிமை வேலை என இவ்வாறுதான் தோன்றும். இதில் ராகு, சனியின் வழியே லஞ்சம் வாங்கும் அமைப்பில் இருந்தால், அவர்களுக்கு லஞ்சம்கூட கேட்டவுடன் கிடைக்காது. "இதோ தர்றேன்' என இழுத்தடித்துக் கொடுப்பர். அதுவும் பேசிய தொகையைக் கொடுக்கமாட்டார்கள். மிகவும் குறைத்துத்தான் கொடுப்பார்கள். இவ்வமைப்பில் உள்ளோர் வாங்கும் லஞ்சம் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் போன்ற அடிமட்ட மக்களிடமிருந்தே கிடைக்கும். எனவேதான் லஞ்சத்தின் அளவும் குறைவாக அமையும். இதே சனி உச்சமாக இருந்து, அதனுடன் ராகு லஞ்ச அமைப்பு பெற்றால் அந்த ரேஞ்சே தனி. இவர்கள் சாதாரண ஆட்களிடம் லஞ்சம் வாங்கமாட்டார்கள். பெரிய நிலக்கரிச் சரங்கம், கனிம வளம், கிரானைட் தொழில், எண்ணெய் நிறுவனங்கள், இரும்புத் தொழிற்சாலைகள், மர விற்பனை நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய தொழிற்சாலைகள், அதன் சார்புடைய மாசு சம்பந்தப்பட்டவை என லஞ்சத்தொகை, வகை தொகையில்லாமல் பெருமளவில் கிடைக்கும். சனி லஞ்சத்தை ஒன்று கூலியாட்களிடமிருந்து பெற்றுத் தருவார் அல்லது முதலாளிகளிடமிருந்து பெற்றுத் தருவார்.
இவர்கள் லஞ்சம் பெறுவதற்கு இடையூறு செய்பவர்களை வம்பு செய்து, அண்டர்கிரவுண்ட் வேலை ஏதாவது செய்து, அவர்களை தங்கள் பாதையிலிருந்து விலக்கிவிடுவர். பின் இஷ்டம்போல லஞ்சம்வாங்குவர்.
லஞ்ச கிரகங்கள் தரும் பின்விளைவுகள் லஞ்ச ராகு- சூரிய சம்பந்தம்
இதன் பின்விளைவு அரச தண்டனையாக இருக்கும். சூரியன் ராஜ கிரகம். ராகு ஒரு வலிய கிரகம். எனவே தண்டனையும் பெரிதாகத்தான் இருக்கும். சம்பந்தப்பட்ட ஜாதகர்களை தமிழ்நாட்டின் பெரிய சிறைச்சாலையான புழல் சிறை அல்லது இந்தியாவின் பெரிய சிறைச்சாலையான திஹார் சிறையில் கொண்டுபோய்ச் சேர்ப்பர். மேலும் இவர்களுக்கு கடைசி காலத்தில் இதயக் கோளாறு, ரத்தம் கெட்டுப்போதல், முதுகுத்தண்டு பிரச்சினை, மயக்கம் மற்றும் உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து பாடாய்ப்படுத்தும்.
லஞ்ச ராகு- சந்திர சம்பந்தம்
சந்திரன், ராகு சம்பந்த லஞ்சம் அதன் பின்விளைவாக, மனப்பதட்டம், மனபேதலிப்பு, மஞ்சள் காமாலை, சிறுநீரகக்கல், புற்றுநோய், வயிற்றுக்கோளாறுகள், தொண்டை மூச்சுக்குழல் நோய்களைத் தரும். இவ்விணைவு முக்கியமாக அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ மனம், புத்தி மாறாட்டம் போன்றவற்றையே தரும்.
லஞ்ச ராகு- செவ்வாய் சம்பந்தம்
இதுபோன்ற ஜாதக அமைப்பில் லஞ்சம் வாங்கிய குடும்பத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும். அதிலும் இளம்வயதினர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். தலையில் காயம், மூளையில் அழுத்தம், நாய் கடிப்பது, செய்வினை பற்றிய பயம், தீவிபத்து, தீக்காயம், ஆசனவாய் நோய்கள், எலும்பு முறிவு போன்றவற்றில் சிலவற்றை அவரும் அவர் குடும்பத்தினரும் எதிர்கொள்ள நேரிடும். மேலும் அவர் வீட்டுப் பெண்களின் மாங்கல்யத்துக்கு பங்கம் நேரும் வாய்ப்பும் உண்டு. லஞ்ச ராகு- புதன் தரும் சம்பந்தம்
இவ்விளைவு ஒருவிதத்தில் புத்தி தடுமாற்றத்தைத் தரும். அல்லது அவர் குடும்பத்தில் புத்தி வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க நேரிடலாம். மேலும் நரம்புத்தளர்ச்சி, வாயுத்தொல்லை, தோல் நோய்கள், ஈஸ்னோபீலியா, தொண்டையில் சீழ்பிடித்தல், காது கேளாமை, அசட்டுத்தனமான குழந்தைகள் பிறத்தல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும். இந்த குடும்பக் குழந்தைகளுக்கு படிப்பே வராது.
லஞ்ச ராகு- குரு சம்பந்தம்
மகா குண்டு உடம்பைக் கொடுத்துவிடும். அதிக கொழுப்பால் பெரும் தொந்தரவு ஏற்படும். குரு ஒரு பாதுகாக்கும் கிரகம் என்பதால் அவர் சம்பந்தமான ஒரு அநியாயம் நடக்கும்போது அதன் பின்விளைவாக, குரு அந்த ஜாதகரைத் தனியாக, ஒரு பாதுகாப்புமின்றி ஒதுக்கிவைத்துவிடுவார். யாருமே இவரை கவனிக்காத நிலைமை உண்டாகிவிடும். தனிமைக் கொடுமையை தண்டனையாகத் தருவார். மேலும் மனக்குழப்பமும், பாதவலியும், அடிவயிற்று வலியும், எலும்புருக்கி நோய், வாதநோய் போன்றவையும் பாடாய்ப்படுத்தும். இந்த வகை ஜாதகர்கள் சிறை, மருத்துவமனை, வீட்டிலேயே தனிமை என ஏதோ ஒருவிதத்தில் எல்லாரும் வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருக்கும்.
லஞ்ச ராகு- சுக்கிரன் சம்பந்தம்
ராகு லஞ்சத்தை சுக்கிரன் வழியே கொடுக்கும்போது, அந்த குடும்பத்து இளம்பெண்களின் வாழ்வு நெறிபிறழ்ந்துவிடும். மணவாழ்க்கையைக் கெடுப்பார். பெண்களால் தீராத அவமானமும் துன்பமும் வந்துசேரும். சிறுநீர் சம்பந்தமான கோளாறுகள், குடல்வால் நோய், பாலியல் நோய் முதலியவை தாக்கும். இவர்களின் தோற்றம் மிக மோசமானதாக மாறிவிடும். வெகுசிலசமயம், பிறர் அருவருக்கத்தக்க தோற்றத்தை- உடல் அமைப்பை உண்டாக்கிவிடுவார்.
லஞ்ச ராகு- சனி சம்பந்தம்
ராகு தனது லஞ்சத்தை சனிமூலம் தரும்போது, நிச்சயம் தீவிர நோய்களைத் தந்துவிடுவார். அல்லது மரணத்துக்கொப்பான கண்டங்களைக் கொடுத்துவிடுவார். வாதநோய் நிச்சயம். வயதைவிட அதிக முதுமைத் தோற்றத்தை உண்டாக்கிவிடுவார். சிலருக்கு கை, கால் விளங்காமல் போய்விடும்.
எலும்பு முறிவு, கால் வலி, நரம்புத்தளர்ச்சி, கணுக்கால் வீக்கம், சிரங்கில் நீர் வடிதல் போன்றவற்றைக் கொடுப்பார். சிலரின் கால்கள் பிறர் பார்க்க அஞ்சும் அளவிற்கு அருவருப்பாக மாறிவிடும். சிலர் குறுகிச் சிறுத்துவிடுவர். சிலருக்கு நடக்கவே முடியாத நிலைமையும் வரும்.
எந்த ஜோதிடக் கட்டுரை எழுதினாலும், அதற்கொரு பரிகாரம் அவசியம் இணைந்துவிடும். பாதகம் என்ற ஒன்று இருப்பின், பரிகாரம் என்ற ஒன்று இருந்துதானே ஆகவேண்டும்?
ஆனால் இந்த கட்டுரைக்குப் பரிகாரம்
அவசியமில்லை. கிரகக்கோளாறுகள் மற்றும் தெரியாமல் செய்த பாவத்திற்குப் பரிகாரம் உள்ளது. ஆனால் தான்தோன்றித்தனமாக, இஷ்டம் போல, அதிகாரத்தனமாக, அடுத்தவரை சமயத்தில் பிழிந்து மிரட்டிக் கொடுமைப்படுத்தி, பிளாக்மெயில் செய்து லஞ்சம் வாங்குவதற்குப் பரிகாரம் ஏது?
இது தெரிந்தே செய்யும் குற்றம். சில இடங்களில் பெண்களை மானபங்கப்படுத்தி லஞ்சப்பணத்தில் வாழ்கிறார்களே! அவர்களுக்கு எந்தப் பிறவியிலும் பரிகாரம் கிடையாது. ஏழேழ் பிறவிக்கும் ரத்தக்கண்ணீர் வடிப்பர்.
செல்: 94449 61845