சிலர் எந்த விஷயத்திலும் உடனடியாக முடிவெடுப் பார்கள். அதன்காரணமாக பல நன்மைகள் நடக்கும். பலருக்கு சந்தோஷம் உண்டாகும். அந்த முடிவால் பெரிய அளவில் மாறுதல்கள் உண்டாகும். அவ்வாறு அவர்கள் முடிவெடுப்பதற்கு லக்னாதிபதியின் வலிமையே காரணம்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி சுய வீட்டிலோ, உச்சமாகவோ இருந்தால், அந்த ஜாதகர் சரியான நேரத்தில் உரிய முடிவெடுப்பார். அதுவும் விசேஷமாக பஞ்சமகா புருஷ யோகத்தில் பிறந்த வர்கள் பல முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்பார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு உச்சமாக லக்னத்தில் இருந்தால், ஹம்ஸயோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல முடிவை, எடுக்கவேண்டிய நேரத்தில் எடுப்பார்கள்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்தில் இருந்தால் அல்லது லக்னாதிபதியாக இருந்து உச்சமாக இருந்தால், ருசக யோகம் உண்டாகும். அவர்கள் எந்த முடிவையும் துரிதமா கவும் தைரியமாகவும் எடுப்பார்கள்.

Advertisment

புதன் லக்னத்தில் உச்சமாக இருந் தால், அவர் எந்த முடிவையும் சீக்கிர மாக எடுப்பார். மின்னல் வேகத்தில் முடிவெடுப்பதன் காரணமாக பல வெற்றிகளை அவர் பார்ப்பார்.

லக்னாதிபதியான சனி உச்சத்தில் இருந்தால் சச யோகம் உண்டாகும். அதனால் எல்லா விஷயங்களிலும் அவர் வேகமாக முடிவெடுப்பார்.

சுக்கிரன் லக்னாதிபதியாக இருந்து உச்சத்தில் இருந்தால், மாளவ்ய யோகம் உண்டாகும். அதன்காரண மாக அவர் எந்த முடிவையும் வெகுசீக் கிரமே எடுத்துவிடுவார்.

Advertisment

kk

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் லக்னத்தில் இருந்து, அந்த செவ்வாய்க்கு கேந்திரத்தில் சனி இருந்தால், அவர் தன் வாழ்வின் முற்பகுதியில் பல கஷ்டங்களை அனுப விப்பார். எனினும், எந்த விஷயத்திலும் வேகமாக முடிவெடுப்பார். அதன் காரணமாக அவரின் வாழ்க்கையின் இரண்டாவது பகுதி மிகவும் நன்றாக இருக்கும்.

லக்னத்தில் புதன், சூரியன் இருந் தால் புதாதித்திய யோகம் உண்டாகும். அதனால் அந்த ஜாதகர் எந்த முடிவையும் வேகமாகவும், நன்றாக வும் எடுப்பார். அந்த புதன், சூரியனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தால் கேசரி யோகம் உண்டாகும். அவர் சாதாரண குடும் பத்தில் பிறந்திருந்தாலும், எந்த முடிவையும் உரிய நேரத்தில் சரியாக எடுப் பார். அதன்மூலம் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக பாவகிரகத்துடன் இருந்தால், அவர் உரிய நேரத்தில் முடிவெடுக்கமாட்டார்.

லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்தால் அல்லது பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால், அவர் எந்த விஷயத்திலும் உரிய நேரத்தில் முடிவெடுக்கமாட்டார். யோசித்துக் கொண்டேயிருப்பார். அதனால் அவருக்குக் கிடைக்கவேண்டிய வெற்றி கைநழுவிப் போய்விடும்.

ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் பாவம் கெட்டுப்போய், 6-ல் சனி இருந்து, தேய் பிறைச் சந்திரனாக இருந்தால், அவர் எந்த முடிவெடுப்பதற்கும் தன் நண்பர்களிடம் ஆலோசனை பெறுவதை விரும்புவார்.

உடனடியாக எந்த முடிவையும் எடுக்க மாட்டார்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் 12-லிருந்து, 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால் அவர் உரிய நேரத்தில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்.

ஜாதகத்தில் நீச சூரியன் 4-ல் இருந்து, 9-ல் சனி, ராகு இருந் தால், ஏதாவது முடிவெடுக்கும் வேளையில், அவருக்கு திடீரென்று பிரச்சினைகள் வந்துசேரும். அதனால் ஒரு திடமான முடிவுக்கு வரமுடியாத நிலை அவருக்கு உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், புதன், சூரியன் லக்னத்தில் இருந்து, சனி 4 அல்லது 7-ஆம் பாவத்தில் இருந்தால், முடிவெடுக் கக்கூடிய நேரத்தில் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினைகள் வந்துசேரும். காரணமே இல்லாமல் கோபப்படுவார். சரியான முடி வெடுக்காத காரணத்தால் பெரிய அளவில் பாதிப்பு உண்டாகும்.

பரிகாரங்கள்

தினமும் பூந்தி, லட்டு, வாழைப்பழம் ஆகியவற்றை ஆஞ்சனேயருக்குப் படைத்து, அதை பிறருக்கு தானமளிக்கவேண்டும்.

ஆலமரத்திற்கு நீர் வார்க்கவேண்டும்.

அந்த நீர் விழுந்த இடத்திலிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும்.

தெற்கில் தலைவைத்துப் படுப்பது நன்று.

லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு இருக்கக்கூடாது.

வீட்டின் வண்ணம் வெள்ளை அல்லது வெளிர்நிறத்தில் இருப்பது நல்லது.

இரவில் துணி துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் வடகிழக்கில் துணி துவைக்கக்கூடாது. வீட்டின் வடகிழக்கில் கழிவறை, குளியலறை இருப்பது நல்லதல்ல.

செல்: 98401 11534