மாறிவரும் இன்றைய சமூகச்சூழலிலில் திருமணங்கள் பெரும்பாலும் சிக்கலில் முடிந்துவருகின்றன. இதனால் கணவன்- மனைவி உறவும் விரிசலுக்காளாகி, நாளடை வில் நீதிமன்றப் படியேறி விவாகரத்து பெறுவதும் அதிகரித்துவருகிறது. சிலருக்கு விவாகரத்தும் அவ்வளவு சுலபத்தில் கிடைத்து விடுவதில்லை. வருடக்கணக்கில் "வாய்தா' வாங்கி கணவன்- மனைவி மற்றவரை அலைக் கழிப்பதும் நடப்பதைப் பார்க்கமுடிகிறது.
சிலருக்கு இன்னும் விநோதமாக, விவாக ரத்து பெற்ற இருவரில் ஒருவர் மறுமணம் செய்ய முற்படும் நிலையில், மற்றவர் தன்னைக் கட்டாயப்படுத்தி "விவாகரத்து' பெற சம்மதிக்க வைத்ததாகவும், தற்போது தான் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதையும், இதனால் மற்றவர் மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிப்பதையும் பார்க்கமுடிகிறது. இத்தகைய நிலைக்கு ஆளானவர்கள் பொறியில் சிக்கிய எலிலிபோல, சேர்ந்து வாழவும் பிடிக்காமல், பிரிவதற்கும் வழியில்லாமல் வாழ்வை நடத்துகின்றனர்.
விவாகரத்து பெறமுடியாமல் தவிப்பவர்கள் தங்கள் ஜாதகங்களில் காணப்படும் தோஷங்கள், சாபங்களை சரிவர ஆராயாமலும், அவற்றுக்கான சரியான மந்திர, சாஸ்திரரீதியான பரிகாரங்களைச் செய்யாமலும் திருமணத்தை நடத்தியிருக்க லாம்.
பொதுவாக, இத்தகைய நிலை ஏற்படு வதற்கு களத்திர சாபம், ஸ்த்ரீ சாபம், பித்ரு சாபம் போன்ற முற்பிறவி சார்ந்த பிரச் சினைகளே காரணமாக இருக்கின்றன. இவற்றைக் கண்டறிந்து தக்க சாப நிவர்த்தி ஹோமங்களைச் செய்வது, எந்திரப் பிரதிஷ்டை செய்வது, ரட்சாதாரணம் பெற்று, உரிய மந்திரோபதேசம் பெற்று ஜெபித்து வருவது போன்றவற்றால் பாதிப்புகளைத் தடுக்க வழியுண்டு. மறுமணம் செய்யமுடி யாமல் இருப்பவர்கள் அல்லது அதில் ஏதாவது தடைகளை சந்திப்பவர்கள் மனம் தளரத் தேவையில்லை. மேற்கூறியபடி பரிகாரங்களை சரியாகச் செய்துவிட்டால் வாழ்க்கை நல்லமுறையில் அமையும்.
திருமண வாழ்க்கை பற்றியறிய களத்திர ஸ்தானம் என்னும் ஏழாமிடமும், குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாமிடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றுடன் சுக்கிரன், குரு, சனி, ராகு- கேது இவர்களின் நிலையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பொதுவாக, பாவகிரகங்கள் ஏழாம் பாவத்துடன் எவ்வகையிலாவது சம்பந்தப் படும்போது இல்லறத்துணையால் இன்பம் பெறமுடியாமல் இல்வாழ்க்கை கசப்பாகி, வாழ்க்கையே இல்லாமல் போகிறது. அதாவது ஏழாம் பாவத்தில் பாவிகள் இருப்பது, ஏழாம் பாவத்தின் அதிபதி பாவர் சேர்க்கை மற்றும் பாவகிரகங்களின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது, ஏழாம் பாவத்தை பாவகிர கங்கள் பார்ப்பது போன்ற அமைப்புகள் ஒருவரது ஜாதகத்தில்- அதாவது ஆணோ, பெண்ணோ யாருடைய ஜாதகத்தில் காணப் பட்டாலும், அவர்கள் தங்கள் கணவர் அல்லது மனைவியால் நிம்மதியிழந்து தொல்லைகளை அனுபவிக்கநேரும். பொருத்தமில்லாத வாழ்க்கைத்துணையால் இவர்களின் வாழ்க்கையே நரகமாகும்.
இவ்வாறே இரண்டாமிடமும் அதன் அதிபதியும் பாதிக்கப்பட்டிருந்தாலும் குடும் பத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். இரண்டாம் பாவத்தில் சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு அல்லது கேது இருந்தாலும் அல்லது எவ்வகையிலாவது தொடர்புபெற்றிருந் தாலும் குடும்பத்தில் பிரிவு ஏற்படும். சுபர் பார்வை இருந்தால் எலிலியும் தவளையும் காலைக்கட்டிக் கொண்டதுபோல் சேர்ந்து வாழவும் பிடிக்காமல், பிரியவும் முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படும்.
மேலே கூறியபடி ஏழாமிடமும் இரண்டா மிடமும் பாதிக்கப்பட்டிருந்தால் திருமணத் தில் பாதிப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும் காரணியாக அமையும்.
இரண்டாவது திருமணம் பற்றி அறிய ஒருவரது ஜாதகத்தில், பதினோறாம் பாவம் என்று அழைக்கப்படும் லாபஸ்தானம் என்னுமிடத்தை அலசவேண்டும். இதற்கு "உபகளத்திர ஸ்தானம்' என்னும் பெயரும் உண்டு. பெயரிலேயே புரிந்திருக்கும். "உபகளத் திரம்' என்ற சொல்லுக்கு, "உபரியான' அதாவது முறையான முதல் திருமணத்தால் ஏற்படும் கணவர் அல்லது மனைவியைத் தவிர இரண்டாவதாக ஏற்படும் "வாழ்க்கைத்துணை' என்று பொருள். இந்த இடத்தின் அமைப்பு, இதன் அதிபதி மற்றும் இந்த இடத்தில் அமர்ந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள் போன்றவற்றை பரிசீலிலித்தபின்பே இரண்டா வது திருமணம் உண்டா என்ற கேள்விக்கு விடைகூற இயலும்.
சிலருக்கு முதல் திருமணம் ஏதாவது ஒரு காரணத்தினால்- அதாவது கணவருக்கு அல்லது மனைவிக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுமளவு உடல் ஒத்துழைக்காத நிலை; இருவரில் ஒருவர் இறந்துபோய் அதனால் மறுமணம் செய்யும் சூழ்நிலை; கணவர்- மனைவி மற்றவரிடம் பெறும் தாம்பத்திய சுகத்தில் அதிருப்தி; பிள்ளைபெறும் பாக்கியம் அடைய இருவரில் ஒருவருக்கு உடல்ரீதியா கத் தகுதியில்லாமல் போவது; சிலருக்கு குடும்பத்திலுள்ள மற்றவர்களின் தொல்லை யால்- அதாவது மாமியார், நாத்தனார், மைத்துனர், மற்ற உறவினர்களின் அதிகப்படி யான தலையீடு காரணமாக பரஸ்பரம் வெறுப்பு ஏற்படுவது; கணவரோ அல்லது மனைவியோ கூடா நட்பு ஏற்பட்டு திருமணத்தை முறித்துக்கொள்வது போன்ற பல காரணங்களில் ஏதாவது ஒன்றால் முதல் திருமணம் முறியும் நிலை ஏற்பட்டு இரண்டாவது திருமணம் அமையும் சூழ்நிலை உருவாகிறது.
பொதுவாக, இன்றைய மாறிவரும் சமூகச் சூழ்நிலையில் பெரும்பாலும் உடலுறவு சார்ந்த பின்னணியே முதல் திருமணம் முறிவதற்குக் காரணமாக அமைவதைக் காணமுடிகிறது. இதற்கு ஜோதிடரீதியாக பல கிரக அமைப் புகள் காரணமாக இருக்கின்றன. உடலுறவில் அதீத வேட்கையுள்ள ஆணோ, பெண்ணோ தங்கள் வாழ்க்கைத்துணையிடம் திருப்தி யில்லாமல்தான் வெளியே தேடுகின்றனர்.
ஜோதிடத்தில் சந்திரன் உடலுக்குக் காரகனா கிறார். சந்திரன் நல்ல நிலையில் காணப் படும் ஜாதகர்- ஜாதகி பிறரைக் கவரும் கட்டுக் குலையாத வனப்போடுகூடிய உடலழகைப் பெற்றிருப்பதைக் காணமுடியும். இதேபோல் சுக்கிரன் உலக இன்பங்களை- குறிப்பாக உடலுறவு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படுவதற்கும், ஆண்களுக்கு விந்துவையும், பெண்களுக்கு சுரோணிதம்- அதாவது கருமுட்டை உருவாவதற்கும் காரகராக விளங்குகிறார்.
இவ்வாறே அங்காரகன் என்னும் செவ்வாய் ரத்தத்துக்குப் பொறுப்பேற்பதோடு, ஒருவரது குணநலன்களைத் திசைதிருப்புவதிலும் காரண மாக விளங்குகிறார். செவ்வாய் கெடாமல், நல்ல பலத்துடன் வீரியத்தோடு ஜாதகத்தில் காணப்பட்டால், அந்த ஜாதகர் அல்லது ஜாதகி எதிலும் துணிவோடு இறங்குவார்கள். விரும்பிய ஒன்றை அடைவதற்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். "முடிவே வழியை நியாயப்படுத்துகிறது' என்பது இவர்களின் வேதம்.
ஒருவரது ஜாதகத்தில் மேற்கூறிய சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் என்னும் மூவரின் தொடர்புகள்- அதாவது சேர்க்கை, பார்வை போன்றவை உடலுறவு சார்ந்த விஷயங்களில் அதிகப்படியான ஈடுபாட்டை ஏற்படுத்தி அவர்களை நடத்தை தவறும் நிலைக்குத் தள்ளுகிறது என்பது ஜோதிடம் கூறும் உண்மை. இத்துடன் அயன போக சயன சுக ஸ்தானம், காம ஸ்தானம் என்னும் ஏழாமிடம், உபகளத்திர ஸ்தானம் என்னும் பதினோறாமிடம், தைரியஸ்தானம் (நடத்தை கெடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். அதைத் தருவது இந்த இடமே) மற்றும் வாக்கு ஸ்தானம் என்னும் இரண்டா மிடம் (பேச்சினால் வசீகரித்து தன் வலையில் விழச்செய்வதும் ஆண்- பெண் நடத்தை கெடக் காரணமாவதால்) ஆகிய பாவங்களின் சம்பந்தமும் உடலுறவு சார்ந்த காரணங்களால் பிரிவினை ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
இனி, இரண்டாம் திருமணம் ஏற்படுவ தற்கான கிரக அமைப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், முதல் திருமணம் முறிந்து இரண்டாவது திருமணம் அமைவதற்கும் பெரும்பாடாக இருக்கிறது. சிலருக்கு இரண்டாம் திருமணம் அமைவதற் கான சூழ்நிலைகள் சாதகமாகக் கூடிவந்தும் ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிப்போய்விடும். சிலருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தும் திடீரென்று கணவர்- மனைவி மற்றவரை இரண்டாவது திருமணம் செய்ய விடாமல் ஏதாவது சிக்கலை ஏற்படுத்துவதும் உண்டு. சிலருக்கு முதல் திருமணம் முறிவதற் கான சட்டப் போராட்டமே இரண்டாம் திருமணம் அமைவதற்குத் தடையாக இருப்பதையும் காணமுடிகிறது. இன்னும் சிலருக்கு இரண்டாம் திருமணம் அமைந்தும் திருப்தியில்லாமல் வாழ்க்கையே போராட்ட மாக, விரக்தியாக மாறுவதும் உண்டு. இரண்டாவது திருமணம் அமைவதில் தாமதம் ஏற்பட்டாலும் அல்லது திருமணத்தால் சிக்கல் களை சந்தித்தாலும் மனம் தளரவேண்டாம். மந்திர, சாஸ்திரரீதியாக சரியான பரிகாரங் களை முறையாகச் செய்து, பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சியாக வாழலாம்.
பொதுவாக, இரண்டாமதிபதியாக வரும் கிரகம் எட்டாமிடத்தில் இருந்தாலும், பாவகிரகங்கள் களத்திரபாவம் என்னும் ஏழாமிடத்தில் இருக்க, செவ்வாய் பன்னி ரண்டாமிடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இரண்டு திருமணம் என்று கூறலாம். ஆணோ பெண்ணோ- இவர்களது ஜாதகத்தில் பன்னிரண்டுக்குரிய கிரகம் ஏழிலிலிருந்து, செவ் வாயும் சேர்ந்திருக்க, இவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதி ஆறாமிடத்திலோ எட்டா மிடத்திலோ காணப்பட்டாலும் ஜாதகர்- ஜாதிக்கு மறுமணம் உண்டு என்று கூறலாம்.
இவ்வாறே, ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் குடும்பாதிபதியுடன் அனலி என்னும் சூரியன் இணைந்து களத்திர பாவத்தில் வீற்றிருக்க அல்லது ஏழுக்குடையவன் சூரியனோடு சேர்ந்து இரண்டாமிடத்தில் இருக்க, விரயாதிபதியுடன் அங்காரகனும் இணைந்தால் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் உண்டு என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இதேபோல சந்திரனும், கர்மகாரகனாகிய சனி பகவானும் இணைந்து ஏழாமிடத்தில் இருந்தாலும், இரண்டு திருமணம் உண்டென்று கூறலாம். மேலும், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனி இணைந்து லக்னத்துக்கு ஏழாம் பாவத்தில் காணப்பட்டாலும், லக்னத் தின் அதிபதி எட்டாமிடம் ஏறியிருந்தாலும் மறுமணம் உண்டென்று கூற இடமுண்டு.
சிலருக்கு முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம்செய்யும் நிலையும் ஏற்படு வதுண்டு. இதற்கு பாவகிரகங்கள் அவர்களது ஜாதகத்தில் ஏழாமிடம் மற்றும் எட்டா மிடங்களில் அமர்ந்திருக்க, செவ்வாயும் பாங்கான அயன போக சயன சுகமென்னும் பன்னிரண்டில் இருப்பதும் காரணமாக அமைகிறது.
சிலருக்கு ஜாதகப்படி ஒரே தாரம் என்று கூறியிருப்பார்கள். தசாபுக்தி சரியில்லாத சமயத்தில்- அதாவது மோசமான தசாபுக்தி நடைபெறும் காலத்தில்- உதாரணமாக ஏழாம் பாவத்தில் கேது இருக்க, அவரது தசை நடக்கும் சமயம் திருமணம் நடைபெற் றாலும் கணவர்- மனைவிக்குள் பிரிவு அல்லது மனைவி எதிர்பாராது மரணமடைதல் போன்றவற்றால் இரண்டாவது திருமணம் ஏற்படும். இதேபோல் முதல் திருமணம் நடக்கும் நாள் மோசமானதாக இருந்தாலும் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் ஏற்படுமென்று பெரியோர்கள் கூறுவர்.
திருமணத்திற்கு ஜாதகங்களைப் பொருத்துவதற்குமுன்பே அவரவர் ஜாதகங் களில் காணப்படும் களத்திர சாபம், பித்ரு சாபம், ஸ்த்ரீ சாபம் போன்று ஏதாவது பிரச்சினை இருக்குமானால், அவற்றைக் கண்டறிந்து நிவர்த்திக்கான உரிய மந்திர, சாஸ்திரரீதியான பரிகாரங்களைச் செய்து விட்டால் நல்லமுறையில் திருமண வாழ்க்கை அமையும்.
செல்: 95660 27065