Advertisment

கடவுள் யாரைக் காப்பாற்றுவார்? - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/who-will-god-save-siddhardasan-sunderji-jeevanadi-corruption-study-astrologer

ல்லியான உடல் வாகு, நெற்றியில் இடைவெளி இல்லாமல், அடர்த்தியாகப் பூசிய விபூதிப்பட்டை, கழுத்தில் ஒரே, ஒரு ருத்திராட்சம். கட்டி இருந்தார், முகத்தில் சிறிய அளவு தாடியுடன் ஒருவர் என்னைத் தேடிவந்து, "ஐயா, எனக்கு நாடி படிக்கவேண்டும்'' என்றார்.

Advertisment

"ஐயா, நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் அகத்தியரிடம் தெளிவான பதிலைக் கேட்டுச் சொல்லுங்கள். அகத்தியர் கூறும் பதியில்தான், என் வழிகாட்டுதல் உள்ளது'' என்று கூறிவிட்டு கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

Advertisment

gg

"கடவுள் எங்கே உள்ளார்? கடவுள் யாரைக் காப்பாற்றுவார்? கடவுள் அருள் பெற என்ன வழி? கடவுள் என்னைக் காப்பாற்றுவாரா? இந்த நான்கு கேள்வி களுக்கு மட்டும் சரியான விடையைக் கேட்டுக் கூறுங்கள் எனக்கு அதுபோதும்.'' அவரின் கேள்விகளை கேட்ட நான் கொஞ்சம், வெலவெலத்துப் போய் விட்டேன். அவரின் தோற்றம் மிகமிகச் சாதாரணமாக இருக்கின்றது. ஆனால் கேள்விகள் தெய்வ ரகசியமாக உள்ளதே என்று நினைத்து, அவரை நோக்கி, "ஐயா, என்னிடம் இதுவரை, கல்வி தொழில், குடும்பப் பிரச்சினை, சொத்துப் பிரச்சினை, திருமணம், புத்திரர், அரசியல் பதவி, தேர்தலில் வெற்றி, என இது போன்று, இன்னும் தங்கள் சுயகாரியங்களுக்கு மட்டும், நாடியில் பலன் கேட்டுதான் வந்துள்ளார்கள். தெய்வம் சம்பந்தமாக இதுபோன்று கேள்விகளைக் கேட்டு யாரும் வந்ததும் இல்லை, நானும் பலன் கூறியதும் இல்லை'' என்றேன்.

"நீங்கள் கேட்ட கேள்விகளை, பெரிய ஞானிகள், மகான்கள், மடாதிபதிகள் வேத விற்பன்னர்கள், கடவுளைப் பற்றி பிரசங்கம் செய்பவர்களிடம் கேட்டால் உங்கள் கேள்வி களுக்கு விடை கிடைக்கும்'' என்றேன்.

"அகத்தியரைவிட பெரிய ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், மகான்கள், மடாதி பதிகள் என யாரும் இந்த பூமியில் இல்லை. நான் உங்களைப் பதில் கூறச் சொல்லவில்லை. நாடியில் அகதியரிடம்தான் பதில் கேட்டுக் கூறச் சொன்னேன்.''

அகத்தியர், இன்று நம்மை, சிக்கலில் மாட்டிவிட்டு, ஏதோ வேடிக்கை செய்து, விளையாடுகின்றார். இன்று நாடியில் இவருக்கு பலன் சொல்ல தீர்மானித்து, அழைத்துவந்து, உட்கார வைத்துவிட்டார். இனி பிரச்சினை கேள்வி கேட்டவருக்கும், பதில் சொல்லப்போகும் அகத்தியருக்கும் "தான் என்று நினைத்துக்கொண்டு, அகத்தியரை வணங்கிவிட்டு, நாடியைப் படிக்கத் தொடங்கினேன்.

அகத்தியர், எழுத்து வடிவாகத் தோன்றி, கேள்விகளுக்கு பதில் கூறத் தொடங்கினார்.

"நாடி படிக்கவந்து என்முன்னே அமர்ந்து இருப்பவன், பாரம்பரியமான பெரிய குட

"நாடி படிக்கவந்து என்முன்னே அமர்ந்து இருப்பவன், பாரம்பரியமான பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவள் வம்ச முன்னோர்கள் பெரும் பூமி, நிலம், சொத்திற்கு உரிமையாளராக, வசதியாக பெருமையுடன் வாழ்ந்தவர்கள்.

இவர்கள் முன்னோர்கள் கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், தெய்வ உற்சவங்கள் போன்ற இறைபணிக்கு நிறைய உதவிகள் செய்தார்கள். கடவுளின் பெயரைச் சொல்லி யார்- எதைக் கேட்டாலும் இல்லையென்று கூறாமல் கொடுத்து உதவி னார்கள். சாமியார்கள், சந்நியாசிகள் என ஒரு கூட்டம் இவர்களை சுற்றியே இருக்கும்.

இவன் முன்னோர்கள், எதிர்கால சிந்தனை இல்லாமல், வம்ச வாரிசுகளின் வாழ்க்கையை எண்ணிப் பார்க்காமல், வாழ்ந்தார்கள், பருவ காலமாற்றம், அரசியல் சட்ட மாற்றம், சொத்துகளை சரியாக கவனியாமல் முன்னோர்கள் வாழ்ந்ததால், இவனின் ஐந்து தலைமுறைக்கு முன்னால் இருந்த சொத்துகள், படிப்படியாகக் குறைந்து, இவன் காலத்தில் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இன்று அனாதைபோல், ஆதரவற்று வாழ்கின்றான்.

இவன் வாழ்க்கையில் உண்டான, கஷ்டம் தீர, கடவுள் காப்பாற்றி கரை சேர்ப்பார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை, என்ற நம்பிக்கையில், இவன் பூஜை, விரதம், இறை வழிபாடு, என யார் எதைச் சொல்கின்றார்களோ அதையெல்லாம் நம்பி செய்துகொண்டு வாழ்ந்துவருகின்றான்.

பிழைப்பும் இல்லை. வருமானத்திற்கு முயற்சியும் இல்லை. வருமானமும் இல்லை. இதுவரை கடவுளை நம்பிக்கொண்டு வாழ்ந்தவன். இப்போதுதான் தன்னைப் பற்றியும், தன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டான். அதனால்தான் அவனுக்கு நாடி பலன் கூற எண்ணி வரச் செய்தேன். இவன் கேட்ட கேள்விகளுக்கு வரிசையாகப் பதிலைக் கூறுகின்றேன்.

கடவுள் எங்கே இருக்கின்றார்? இதற்கு பதிலை முதலில் கூறுகின்றேன்.

இந்த அண்டத்தில், கடவுள் சக்தி, எல்லா இடங்களிலும், பூமியில் உள்ள எல்லாப் பொருட்களிலும் உண்டு. சுவாசிக்கும் காற்றில், பசி தீர்க்கும் தானியத்தில் தாகம் தீர்க்கும் தண்ணீரில், நோய் தீர்க்கும் மூலிகை களில், பூமி தன்னுள் உருவாக்கி, மறைந்து வைத்து இருக்கும் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற அனைத்திலும், கடவுள் இருக்கின்றார்.

இந்த பூமியிலுள்ள அனைத்துப் பொருட்களும், ஒவ்வொரு நிலையிலும் உயிரினங்களின் தேவைகளை நின்றவேற்றி உயிரைக் காப்பாற்றுகின்றன. காப்பாற்றும் இந்த பொருட்களின் உள்ளே கடவுள் இருந்து, காப்பாற்றுகின்றான் என்பதே உண்மை.

ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் இருந்து கடவுள் அவனைக் காப்பாற்றுகின் றான். மனிதனின் அறிவில், முயற்சியில், உழைப்பின்மூலம் அவனுக்குத் தேவையான அனைத்தையும், அடைய அவன் செயல் படும்போது, அந்தச் செயலின் உள்ளே இருந்து, கடவுள் செயல்பட்டு, அதனை அடையச் செய்துவிடுகின்றான். தேவை களை, ஆசைப்பட்டதை நிறைவேற்றி வைக்கின் றான்.

இறைவன் ஆலயங்களில் சென்று, பணம், பொருள், பூமி, நிலம், வீடு, ஆபரணம் போன்று இன்னும் பல பொருட்கள் வேண்டும் என்றும், மனைவி, திருமணம், குழந்தை, தொழில், பதவி என இதுபோன்று, பலவற்றை அனைவரும், பூஜை, யாகம், அர்ச்சனை, அபிஷேகம், பிரார்த்தனை செய்து, பூமியில் உள்ளவற்றையே கேட்கின்றார்கள். பூமியில் இல்லாததை யாரும் கேட்பது இல்லை. இவை அனைத் திலும் இறைவன் இருப்பதுபோல், இவை அனைத்தின் உள்ளும் இறைவன் இருக்கின் றான்.

கடவுள் கோவில்களில் மட்டும் இல்லை. மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துப் பொருட்களிலும், பூமியிலும், எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்து மறைந்து இருக்கின்றார். அறிவுள்ளவனுக்கு இது தெரியும்.

இனி அவனது அடுத்த கேள்விக்கு பதில் கூறுகின்றேன். அறிந்து கொள்ளச் சொல்.

கடவுள் யாரைக் காப்பாற்றுவார்? கடவுள் அருள்பெற என்ன வழி? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலைக் கூறுகின்றேன். இந்த பூமியில் கடவுளை பற்றி சரியாக அறிந்து, புரிந்துகொண்டு அந்த கடவுள் சக்தி இருக்கும் இடம் தெரிந்து, அந்த சக்தியை தன் ஜீவனத்திற்கும், வாழ்க்கை உயர்வுக்கும் எவன் ஒருவன் மூலதனமாகக்கொண்டு பயன்படுத்தி வாழ்கின்றானோ, அவனை மட்டுமே கடவுள் காப்பாற்றுவார். அவர்களையும் அறிவோம்.

கடவுளைப் பற்றிய கதைகள், பிரசங்கம், கோவில், மடங்கள் அமைத்து அங்குவரும் மக்களிடம் பணம், பொருட்களைப் பெற்று, வாழ்பவர்கள், கடவுள் பெயரால் பூஜை, ஹோமம், யாகம் போன்ற செயல்களைச் செய்து வாழ்பவர்கள், கடவுள் பூஜைக்கு தேவையான ஆன்மிகப் பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் என இதுபோன்று கடவுளை மூலதனமாக வைத்து தொழில் செய்து, உழைத்து பிழைப்பவர்களை கடவுள் காப்பாற்றுவார் ஏன்னென்றால், இதில் அவர் களின் உடல் உழைப்பு உள்ளது. இதுவும் ஒரு தொழில்தான். இதுபோன்று கடவுள் பெயரைச் சொல்லி எந்த வழியிலாவது உழைத்து வாழ்பவர்களை கடவுள் ஒரு நாளும் கைவிடமாட்டார்; காப்பாற்றுவார்.

இதேபோன்று, பூமியில் உருவான பொருட்களைக் கொண்டு, மனிதர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்பவர்களையும், வாணிபம் செய்பவர்களையும், உண்ண உணவு உற்பத்தி செய்யும், உழைத்து வாழும் விவசாயிகளையும், நோய் தீர்க்கும் மருத்துவர்களையும், இன்னும் மக்களைக் காப்பாற்றும் அனைத்து தொழில்களையும் செய்து உழைத்து வாழ்பவர்களை அவர்களின் உழைப்பின் உள்ளிருந்து கடவுள் காப்பாற்றுவார்.

ஆயகலைகள் 64-ம் தொழில்தான். இந்த 64 கலைகள் ஒவ்வொன்றிலும் 64 பிரிவுகள் என 4096 தொழில்கள் உண்டு. இதில் எந்த ஒரு தொழிலையாவது தன் உழைப்பினால் செய்பவனை, அவன் உழைப்பின் உள் இருந்து, கடவுள் செயல்பட்டு, காப்பாற்றுவார். உடனிருந்து வாழ்வில் உயர்த்திவைப்பார்.

உழைப்பின்மூலம் கடவுள் அருளைப் பெற்று, உழைத்து பணம், பொருள்தேடி, அவற்றைக்கொண்டு, தன் குடும்பத்தினருக்காகவும், வம்ச வாரிசுகளின் நல் வாழ்விற்காகவும், பூமி, நிலம், மனை, வீடு, தங்கம், வெள்ளி, வைரம் போன்ற எந்த யுகத்திலும் அழியாத, சொத்துகளை சேமித்து வைப்பவன், குடும்பத்தையும், அவள் வம்சத்தையும், கடவுள் எக்காலமும் காப்பாற்றுவார். செய்யும் தொழிலிலும், உழைக்கும் உழைப்பிலும், அதில் வரும் செல்லத்திலும் கடவுள் மறைந்து, நிறைந்து இருப்பார்.

கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பிக் கொண்டு, ஊர், ஊராக அலைந்து, கொண்டு இருப்பவர்களையும், உழைக்காமலே, கடவுளுக்கு ஒரு பொன் கொடுத்தால் நமக்கு ஒரு கோடி பொன் தருவார் என்ற கற்பனை யில், கனவுகளில் வாழ்ந்து செயல்பட்டுக் கொண்டு, கையில் இருக்கும் சொத்து, பணம், பொருட்களை செலவுசெய்து, விரையம் செய்பவனையும், விரதம், பூஜை, யாகம் செய்தால் நாம் கோரியதை கடவுள் தருவார் என்று பொருள். பணத்தை அழிப்பவர்களையும் கடவுள் காப்பாற்றமாட்டார். ஒருவனிடமுள்ள பணம், பொருள்கள், சொத்துகள் குறையும் போதும், அழியும்போதும், கடவுள் அவனைவிட்டு விலகுகின்றார். கடவுள் அருள் இல்லாமல் போகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். இந்த பூமியில் உழைத்து, பொருள் தேடி, சம்பாதித்து வாழ்பவன் வெளிச்சத்தில் வாழ்கின்றான். உழைக்காமல், பொருள் தேயாமல் கடவுளை நம்பி கற்பனையில் வாழ்பவன் இருட்டுலகில் வாழ்கின்றான்.

இவன் என்னைக் கடவுள் காப்பாற்றுவாரா? என்று கேட்டான்.

இவனையும் கடவுள் காப்பாற்றுவார். கைவிடமாட்டார். உழைத்து வாழாமல், பிறர் உழைப்பில் உணவு உண்டு உயிர் வாழ்பவனை கடவுள் காப்பாற்றுமாட்டார் என்பதை இவனைப் புரிந்து கொள்ளச்சொல். இதுவரை, கடவுள் காப்பாற்றுவார், என்ற நம்பிக்கையில் கனவு, கற்பனையில் வாழ்ந்த இவனை உழைக்க தயாராகச் சொல்.

இதுவரை கவனிப்பாரற்று, அனாதை போல் வாழ்ந்த இவனை ஒரு கடவுளை உருவாக்கச் சொல், கடவுள் மனிதனால் உருவகப்படுத்தப்பட்டு, உருவாக்கப்பட்டவர் தானே தவிர உருவானவர் அல்ல. இனிவரும் இவன் வாழ்க்கையில் உழைத்து, வாழ்வில் உயர்வுபெற வழி கூறுகின்றேன். இவனுக்கு ஒரு ஆலயத்தை அமைத்து தருகின்றேன். அதில் இவனை உழைத்து பிழைக்கச் சொல்.

இவன் வசிக்கும் ஊர்வழியாக, ஒரு நகரத்திற்கு வாகனப் போக்குவரத்து, நிறைந்த ஒரு நெடுஞ்சாலை உள்ளது. அந்த நெடுஞ்சாலையின் ஓரமாக, ஒரு பெரியு புற்று உள்ளது. அதன் அருகில் ஒரு நீரோடையும் உண்டு. இப்போது அந்த இடத்தில் புல், முட்கள் வளர்ந்து புதராக உள்ளது.

நான் கூறிய அடையாளத்தைக்கொண்டு அந்த இடத்தை தேடி தெரிந்துகொள்ளச் சொல்.

புற்று இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்கு ஒரு சிறிய அரசமரம் இப்போது வளர்ந்து வருகின்றது. அந்த அரசுவை மட்டும் வெட்டாமல் மற்ற மரம், செடி, முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யச் சொல், சுத்தம் செய்த இடத்திலும், புற்றின் மேலும் மஞ்சள், குங்குமம் நீர் தெளித்து, ஒரு ஆலயமாக்கச் சொல், அந்த இடத்திற்கு நாகாத்தமன் ஆலயம் என்று பெயர் சூட்டச் சொல்.

அந்த புற்றின்முன்பு ஒரு திரிசூலத்தை நட்டுவைத்து, அதனருகில் ஒரு செப்புக்குடத்தை மஞ்சள் துணி சுற்றி உண்டியல்போல் வைத்துவிடச் சொல். அந்த சாலை வழியாக, வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள், அந்த இடத்தில் வணங்கி, உண்டியலில் பணம் போட்டு செல்வார்கள். அந்த இடத்திற்கு வருபவர்களுக்கு விபூதி, மஞ்சள், குங்குமம் கொடுக்கச் சொல். இவனைக் காப்பாற்ற இவனையே ஒரு கடவுளை உருவாக்கி கொள்ளச் சொல். இவன் உருவாக்கிய கடவுள் இவனைக் காப்பாற்றும்.

இவனை இப்போதும், இவன் ஊர்மக்கள், சிவபக்தன், சிவனடியார், சாமியார் என்றுதான் கூறுகின்றார்கள். அதனால் இவனின் இந்த செயலை எவரும் தவறாக எண்ணமாட்டார்கள். காலம் செல்லச் செல்ல இவன் உருவாக்கிய அந்த ஆலயம் புகழ் பெறும். இவன் வம்ச முன்னோர்களில் ஒருவன், ஆன்மிகம், மருத்துவம். இவற்றில் ஈடுபட்டு, பலருக்கு நன்மை செய்து ஒரு ஞானியாக வாழ்ந்து மறைந்தான். அவன் ஆத்மா, இப்பிறவியில் இவனுள் இருக்கின்றது. இவனுடன் உள்ள ஆன்மாவை நான் தூண்டி எழும்பிவிடச் செய்கின்றேன். இதுநாள் வரை இவன் வாழ்ந்த வாழ்க்கைமுறையை மாற்றி நான் கூறியபடி செயல்பட்டு வாழச் சொல். கடவுள் இவனைக் காப்பாற்றுவதை அனுபவத்தில் அறிவான்.

கடவுளுக்கு சாதி, மதம், பேதம் கிடையாது. உழைத்து வாழ்பவர்களையும், உழைத்து சம்பாதித்து பொருளை அழிந்துவிடாமல் காப்பாற்றி சேமித்து, வாழ்பவர்கள் அனைவரையும் காப்பாற்றி வாழ்வில் உயர்த்தி வைப்பார். அவனின் கேள்விகளுக்கு இதுதான் பதில், அகத்தியன் அருள் அவனுக்கு எந்நாளும் உண்டு.'' என்று ஆசீர்வதித்துவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

செல்: 99441 13267

bala120523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe