27 நட்சத்திரப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
பரணி, பூரம், பூராடம்
மேற்கண்ட நட்சத்திரங்களின் சாரநாதர் சுக்கிரன் ஆவார். எனவே, இவர்களுக்குப் பிறந்த வுடன் சுக்கிர தசை ஆரம்ப தசையாக இருக்கும்.
இவர்கள் நட்சத்திர ஆரம்பத்தில் பிறந் திருந்தால் சுக்கிர தசைக்காலம் 20 வருடங்களும், 2-ஆம் பாதத்தில் பிறந்தால் 15 வருடங்களும், 3-ஆம் பாதத்தில் பிறந்திருந்தால் ஏறக்குறைய பத்து வருடங
27 நட்சத்திரப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
பரணி, பூரம், பூராடம்
மேற்கண்ட நட்சத்திரங்களின் சாரநாதர் சுக்கிரன் ஆவார். எனவே, இவர்களுக்குப் பிறந்த வுடன் சுக்கிர தசை ஆரம்ப தசையாக இருக்கும்.
இவர்கள் நட்சத்திர ஆரம்பத்தில் பிறந் திருந்தால் சுக்கிர தசைக்காலம் 20 வருடங்களும், 2-ஆம் பாதத்தில் பிறந்தால் 15 வருடங்களும், 3-ஆம் பாதத்தில் பிறந்திருந்தால் ஏறக்குறைய பத்து வருடங்களும், 4-ஆம் பாதத்தில் பிறந்தால் ஏறக்குறைய ஐந்து வருடங்களும் தசைக்கால இருப்பு அமையும்.
சுக்கிர தசைக்குப்பிறகு சூரிய தசை ஆறு வருடம்; சந்திரன்- 10; செவ்வாய்- 7 என ஏறக் குறைய 43 வயதாகிவிடும்.
விருப்ப ஓய்வு வயது 50 என்பதால், அநேகமாக ராகு தசையே இவர்களின் விருப்ப ஓய்வு, வழக்கமான ஓய்வுக்காலமாக அமையும்.
ராகு தசை எப்போதும் நல்ல பலனைக் கொடுக்காது. ராகு ஒரு இருட்டு கிரகம். எனவே, அதன் தசையில் மனிதனை யாருக்கும் தெரியாமல் இருட்டுக்குள் வைத்து விடும்.
ராகு கிரகத்தை போகக்காரகர் என்பர். எல்லா விஷயங்களையும் அனுபவிக்க வேண்டுமென பேரவா ஏற்படும். ராகு இருள் கிரகம் ஆதலின், ஜாதகரின் புத்தி, மனதை மறைக்கிறது. இதனால் இந்நிலை ஜாதகர்களுக்கு நல்லது- கெட்டதைப் பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை. நல்ல வர்களை உதாசீனப்படுத்துவதும், கெட்டவர்களைக் கொண்டாடுவதும் நடக்கும். சிலசமயம் ராகு தசையால் ஆளப்பட்ட ஜாதகர்களுக்கு, வாழ்வில் என்னதான் நடக்கிறது என்ற பெருங் குழப்பம் ஏற்படும். வாழ்வின் நிகழ்வுகள் பெரும் மாற்றமடையும். ராகு வாக்ங்கிய சாரநாதர்மூலம், ஜாதகரை அவர் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். ராகு தசையில் சட்டப்புறம்பான வெற்றிகள் மட்டுமே கிடைக்கும்.
இவ்வித குணம் கொண்ட ராகு தசை நடக்கும்போது, தயவுசெய்து விருப்ப ஓய்வு வாங்கவேண்டாம். தெரிந்த வேலையைத் தொடரவும். லக்னத்திற்கு எந்த இடத்தில் இருந்தாலும் குளறுபடி நிச்சயம்.
ராகு தசையில் துர்க்கையை செம்பருத் திப் பூக்கொண்டு வணங்கவும். உங்கள் நட்சத்திர சாரநாதர் சுக்கிரன். எனவே, ருத்ரகாளிகளைவிட, சாந்தமான துர்க் கையை இனிப்புடன் வணங்கவும். பிறர் செய்யமுடியாத உதவிகளை, இந்த சமூகத்திற்குச் செய்யுங்கள். ராகு சற்றே மகிழ்வார்.
(தொடரும்)
செல்: 94449 61845