27 நட்சத்திரப் பலன்கள்!

னிதர்கள் பணியில் இருந்தால், அவர்களுக் குரிய வயதானவுடன் ஓய்வுகொடுத்து அனுப்பி விடுவர். தற்காலத்தில், நிறைய துறைகளில் விருப்ப ஓய்வு எனும் திட்டம் கொண்டுவந் திருக்கிறார்கள். ஓய்வுபெறும் வயதிற்கு முன்பே, இவர்களே விரும்பி, விண்ணப்பித்து ஓய்வு பெற்றுவிடுகிறார்கள்.

Advertisment

இவ்வாறு பெற்ற தொகையைப் பிற்காலத் திற்கு அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் உதவும் விதமாக முதலீடு செய்ய நினைக்கின்றனர். சிலர் வியாபாரம் செய்ய விழைகின்றனர். சிலர் சொந்தத் தொழில் ஆரம்பிக்க திட்டமிடு கின்றனர்.

இவர்கள் நினைப்பதெல்லாம் நிறைவேற ஜாதக தசாபுக்திகள் உதவ வேண்டும். மேலும் நல்ல, சுப பாவாதிபதியாக அமைதல் அவசியம். பணிக்காலத்திற்குப்பிறகு- அது விருப்ப ஓய்வு அல்லது நடைமுறை ஓய்வு என எதுவாக இருந்தாலும் அதில் வரும் பணத்தை பத்திரமாக வைப்பது அவசியம். எனவே, ஓய்வுபெற்றவர்கள் தங்கள் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பின் முடிவெடுக்கவும்.

ஒருவருக்கு தசாபுத்திக் காலமென்பது அவர் பிறந்த நட்சத்திரக் கணக்கை வைத்துக் கணிக்கப் படுவது. பாவங்களின் சுப, அசுபத் தன்மை யென்பது, ஒருவர் பிறந்த லக்னத்தை வைத்துக் கணக்கிடுவது.

Advertisment

எனவே, ஒருவரின் தசாநாதர் சுபத்தன்மை யுடன் இருந்தால் தொழில் தொடங்கலாம். அன்றி, தசாநாதர் 6, 8, 12-ல் அமர்ந்தாலோ, நீசம், அஸ்தமனம், அசுபர் பார்வை பெற் றாலோ தொழில் அல்லது வியாபாரம் தொடங்க யோசித்தல் அவசியம். முதலில், அப்போது நடக்கும் தசாநாதர் அசுபமாகி அமைந்திருந்தால், பணம் கைக்குக் கிடைக்குமா என்பதே சந்தேகம். தடை, தாமதமாகும்.

நம்மவர்களுக்கு கொஞ்சம் பெரிய தொகையைப் பார்த்தால் கையும் ஓடாது; காலும் ஓடாது. வங்கியில் போடலாமா, வியாபாரம் ஆரம்பிக்கலாமா, நமது பிள்ளைகளுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டால், பின்னால் அவர்கள் நம்மைப் பார்த்துக்கொள்ள மாட்டார்களா என்றெல்லாம் ஆயிரம் யோசனை வரும். நாம் யோசனை செய்வோம். முடிவுசெய்வது நமது தசாநாதர்கள்தான்.

நீங்கள் எவ்வித ஓய்வுபெற்றாலும், தயவு செய்து அவ்வளவு பணத்தையும் வாரிசுகளுக்குக் கொடுத்துவிடாதீர்கள். உங்களுக்கென்று பத்திரப்படுத்திவிட்டு, மிச்சத்தைக் கொடுத் தால் போதும். நமது கையில் ஒரு பிடிமானம் இருத்தல் அவசியம். நமது காலத்திற்குப் பின்தான் வாரிசுகளுக்கென்று உயில் எழுதி வைக்கவேண்டும்.

Advertisment

aa

27 நட்சத்திரங்களும், அவர்கள் வாங்கிய சாரநாதர் கணக்குப்படி அமையும் தசாபுக்தி களையும், அவர்கள் லக்னத்துக்கு அந்த தசாநாதர்கள் கொடுக்கப்போகும் ஓய்வுக்காலப் பலனைகளையும் கொடுத்துள்ளேன். உங்கள் ஓய்வுக்கால தசாநாதர் நீசமாக, மறைவாக இருந் தால் தயவுசெய்து விருப்ப ஓய்வு வாங்கா தீர்கள். சராசரி வயது ரிட்டையர்மென்ட் வாங்கிக்கொள்ளுங்கள். தசாநாதர் உங்கள் லக்னத்துக்கு எந்த பாவாதிபதியாக வருகிறாரோ அதனைப் பொருத்துப் பலன் கூறப்பட்டுள்ளது. தசாநாதரின் சாரநாதர் இருப்பைப் பொருத்து பலன் கூடும் அல்லது குறையும்.

பொதுவாக, வயதானவுடன், "ஈஸிசேர் படைச்சதே நமக்குதான்' என்று உட்கார்ந்து விடக்கூடாது. யோசிக்கவேண்டும். கடவுள் இவ்வளவு ஆயுளைக் கொடுத்திருக்கிறாரே- அதனைத் தூங்கிக் கழித்தால் கடவுள் விசனப்பட மாட்டாரா?

நாம் வேலைபார்த்த அனுபவத்தைக் கொண்டு, இந்த சமூகத்துக்கு உதவவேண்டும். பள்ளிக்குழந்தைகள், போக்குவரத்து, நீர் மேலாண்மை, விளையாட்டு, பொழுதுபோக்கு, மருத்துவம், திருமண விஷயம், அவமானத்தில் இருப்போருக்கு ஆறுதல், கோவில் குளங்களை சுத்தப்படுத்துதல், வேலை தேடுவோருக்கு கைகாட்டிவிடல், பொதுநல மேம்பாடு, பயண வழிகாட்டி என எத்தனையோ சேவைகள் ஓய்வு பெற்றவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக் கின்றன உடல்நிலை ஒத்துழைக்கும் அளவிற்கு உதவி செய்யலாமே.

இவ்வுதவிகள், நீண்ட ஆயுள் கொடுத்த கடவுளுக்கு ஒரு நன்றி சொல்வதாக இருக்கு மல்லவா?

இனி, நட்சத்திரரீதியான பலன்களைக் காணலாம்.

அஸ்வினி, மகம், மூலம் மேற்கண்ட மூன்றும் கேது சார நட்சத் திரங்கள். எனவே இவர்கள் பிறந்தவுடன் கேது தசை ஆரம்பமாகும். கேதுவின் தசாக்காலம் ஏழு வருடங்கள்.

நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந் திருந்தால் ஏழு வருட தசாக்காலமும், இரண்டாம் பாதத்தில் பிறந்தால் ஐந்தேகால் வருட இருப்பு தசையும், மூன்றாம் பாதத்தில் பிறந்தால் மூன்றரை வருட இருப்பும், நான்காம் பாதத்தில் பிறந்தால் ஒன்றே முக்கால் வருட தசா இருப்பும் கணக்கு வரும்.

கேது தசை ஏழு வருடம்; அடுத்து சுக்கிர தசை 20 வருடம்; சூரியன்- 6; சந்திரன்- 10; செவ்வாய்- 7 என தசாநாதர்கள் வரிசையாகச் சென்று, 50 வயதில் ராகு தசை ஆரம்பமாகும். இது ஏறக்குறைய வருடங்களின் கணக்காகும்.

எது எப்படியிருப்பினும் ராகுவுக்கு தசாக் காலம் 18 வருடங்கள். எனவே விருப்ப ஓய்வு அல்லது சாதாரண ஓய்வு என இவர்களின் ஓய்வுக்காலத்தை ராகுவே ஆட்கொள்வார்.

அஸ்வினி- மேஷ ராசி.

மகம்- சிம்ம ராசி.

மூலம்- தனுசு ராசி.

இந்நட்சத்திரங்கள் மூன்று ராசிகளில் இருந்தாலும், இதில் பிறந்தவர்கள் அனை வருக்கும் ஒரே லக்னமாக இருக்க வாய்ப் பில்லை.

இவர்களின் ஓய்வுக்கால தசாநாதர் ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. அவர் எந்த ராசியில் அமர்ந்துள்ளாரோ, அதனைத் தன் வீடாக மாற்றிக்கொள்வார்.

மேலும் ராகு, லக்னத்துக்கு எந்த வீட்டில் இருந்தாலும் சுபப்பலனை எதிர்பார்க்க இயலாது. அவர் வாங்கிய சாரநாதரைப் பொருத்துப் பலன்கள் அமையும்.

ராகு லக்னத்துக்கு 7, 8-ல் இருப்பின் பலன்கள் சற்று கடினமாக அமையும். நிறைய அவமானங்களைக் கொடுத்துவிடுவார். ராகு லக்னத்துக்கு 12-ல் அமர்ந்தால் ஊரைவிட்டு ஓடச்செய்வார். 6-ல் அமரும் ராகு நீதிமன்றத்துக்கும் மருத்துவமனைக்கும் அலையவைத்துவிடுவார். 2-ல் அமரும் ராகு குடும்பத்தில் பிரச்சினையை உருவாக்குவார். 10-ல் ராகு கௌரவம், தொழிலைக் கெடுப்பார். ஆக, ராகு எந்த இடத்தில் அமர்ந்தாலும் நற்பலன் களைக் கொடுக்கமாட்டார்.

சிலர் 11-ல் ராகு எனில் லாப ராகு என்பர். சட்டப்புறம்பான லாபம் வந்தால் என்றைக்கும் பிரச்சினைதான். எனவே, மேற்கண்ட நட்சத்திரத்தார் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கவே கூடாது. சிலசமயம் ராகுவே ஏதாவது தில்லுமுல்லு செய்து, அலுவலகத்திலிருந்து விரட்டும்படி செய்துவிடுவார். இவர்களின் ஓய்வுக்காலம் சற்று நிம்மதி யின்றி அமைந்துவிடும். எனவே, எவ்வளவு காலம் வேலையில் தொடர முடியுமோ, அவ்வளவு காலம் அங்கேயே தொடர்ந்து பணியாற்றவேண்டும்.

அவர்களாகக் கட்டாயப்படுத்தி அனுப் பினாலொழிய வெளியே வரவேண்டாம்.

ராகு தசை நடக்கும்போது கண்டிப் பாக நவகிரகங்களில் ராகுவையும் துர்க்கையையும் வணங்கவும்.

ஒருவேளை ராகு நல்ல சாரம் வாங்கி, சாரநாதரும் நன்றாக இருந்தால், பிறர் செய்யத் தயங்கும், வெறுக்கும், பயப்படும் செயல்களை, பிறரின் நன்மையின் பொருட்டு எடுத்துச் செய்யுங்கள். உங்கள் தெரு, பகுதி, ஊரின் நன்மை பொருட்டு எத்தகைய வேலையையும் முன்னின்று நடத்துங்கள். ஏசுவார் ஏசட்டும்; பேசுவார் பேசட்டும்.உங்கள் சேவையில் முனைப்பாக இருங்கள்.

மாறாக, ராகுவின் சாரநாதர் கெட்டுப் போயிருப்பின், வெளியே தலைகாட்ட முடியாத நிலை உருவாகும். வீட்டில் முடங்கிவிட நேரும். ஓய்வுக் காலத்தை ஓரளவு நிம்மதியுடன் கொண்டுசெல்ல, சிறுவயதிலிருந்தே ஓய்வுக் கால முதலீட்டில் பணம்செலுத்திவிட வேண்டும்.

(தொடரும்)

செல்: 94449 61845