திருவாதிரை, சுவாதி, சதயம் மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப தசை ராகு தசையாக இருக்கும். இந்த நட்சத்திரங்களின் சாரநாதன் ராகு. எனவே, ராகு தசையில் இவர்களது தசா இருப்பு அமைந்திருக்கும்.

ராகு தசையின் காலம் 18 வருடங்கள். இவர்கள் மேற்படி நட்சத்திரங்களின் முதல் பாதத்தில் பிறந்திருந்தால் தசா இருப்பு ஏறக்குறைய 18 வருடங்கள் இருக்கும். இரண்டாவது பாதத்தில் பிறந்திருந்தால் ஏறக்குறைய ஒன்பது வருடங்களும், மூன்றாம் பாதத்தில் பிறந்திருந்தால் ஆறு வருடங்களும், நான்காம் பாதத்தில் பிறந்திருந்தால் ஏறக்குறைய நான்கரை வருடங்களும் அமையும். பிறந்த நேர நட்சத்திரக் கணக்குப்படி ராகு தசை இருப்பு அமையும்.

அடுத்து, குரு தசை 16 வருடங்களும், சனி தசை 19 வருடங்களும் சென்றபின் 17 வருட புதன் தசை ஆரம்பிக்கும்.

எனவே, இவர்களின் ஓய்வுக்கால தசாநாதன் புதன்.

Advertisment

திருவாதிரை மிதுன ராசியையும், சுவாதி துலா ராசியையும், சதயம் கும்ப ராசியையும் கொண்டவை.

இவர்களின் ஓய்வுக்கால தசாநாதன் புதன் ஜாதகத்தில் உச்சமாக அமைந்திருந்தால் ஓய்வுக்காலம் மிகச்சிறப்பாக அமையும். அன்றி, புதன் நீசமாகவோ மறைவாகவோ இருப்பின், ஓய்வுக்காலம் விரும்பத்தகாத வகையில் அமைந்துவிடும்.

திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே லக்னமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு லக்னவாரியாக ஓய்வுக்காலப் பலனைக் காணலாம்.

Advertisment

மேஷம்: இவர்களுள் சிலர் ஓய்வுக்காலத்தில் தொலைத்தொடர்பு சம்பந்தமான பணியில் சேர்ந்துவிடுவர். சிலர் எழுத ஆரம்பித்துவிடுவர். சிலர் கடனை அடைப்பார்கள். அநேகமாக எழுத்து, பேச்சு, கணிதம்மூலம் பணவரவில் ஈடுபடுவர் அல்லது அவைசார்ந்த சேவைகளில் ஆர்வம் காட்டுவர். வெகுசிலருக்கு ஞாபகசக்தி, நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்பட இடமுண்டு.

vrs

ரிஷபம்: இவர்களுக்கு விருப்ப ஓய்வுக்காலம் பயனுள்ளதாக அமையும். ஓய்வுக்காலப் பணப்பலனை நல்ல நிறுவனங்களில் பங்குப் பத்திரம் வாங்கி வைத்துக் கொள்வார்கள். நல்ல இடங்களில் முதலீடு செய்து விடுவார்கள். பூர்வீகம் சம்பந்தப்பட்ட முதலீடுகள் இருக்கும். ஓய்வுக்காலப் பொழுதுகளைப் பணமாக மாற்றும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பம், பிள்ளை களின் தேவையறிந்து வழங்குவார்கள். ஒருசிலர் நாடகம், இசையார்வம் கொண்டு, அவற்றைப் பயில ஆரம்பிப்பார்கள்.

மிதுனம்: இவர்களுள் சிலர் தங்கள் சீரிய முயற்சியால் பள்ளி அல்லது பயிற்சிக்கூடம் அல்லது மழலையர் பள்ளி என ஏதோ ஒன்றை ஆரம்பித்து, ஓய்வுக்காலத்தை ஓய்வின்றிக் கழிப்பார்கள். சிலர் வீடு, மனை, வாகனம் வாங்குவார்கள். சிலர் வீட்டுக்கு சுற்றுச்சுவர் கட்டு வார்கள். ஏதோவொன்று- ஓய்வுக்காலத்தை மிகப் பயனுள்ளதாக அமைத்துக்கொள்வார்கள்.

கடகம்: இவர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில், பத்திரிகை ஆரம்பிக்கிறேன் என முதலீடு செய்து, அனைத்தையும் தொலைத்துவிடுவார்கள். இவர்களுக்கு புதன் விரயாதிபதியாவும் வருகிறார். எனவே, எதைத் தொட்டாலும் விரயமே ஏற்படும். எதற்கு ரிஸ்க்? பார்க்கும் வேலையையே தொடர் வது நல்லது. விருப்ப ஓய்வு என்ற பேச்சே வேண்டாம். அவர்களாகப் பார்த்து ஓய்வு கொடுக்கும்போது வெளியே வந்தால் போதும்.

சிம்மம்: இவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது சாதாரண ஓய்வென எதுவென்றாலும் சரிதான்.

ஏனெனில், புதன் இவர்களுக்கு 2, 11-ன் அதிபதி.

எனவே, இதுவரை நினைத்த அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்வார்கள். கூடவே நண்பர் களையும் சேர்த்துக்கொண்டு கும்மாளம் போடு வார்கள். அதுசரி; பணம் பலமாகக் கொட்டும் போது உல்லாசத்திற்குப் பஞ்சமா என்ன? "வயசான காலத்துல இதுக்கு வந்த வாழ்வைப் பாரு' என எல்லாரும் பொருமித் தீர்ப் பார்கள். வெகுசிலர் தேர்தலில் பங்கெடுக் கக்கூடும்.

கன்னி: தங்கள் ஓய்வு உறுதியானவுடன், முதல் வேலையாக வியாபாரம், தொழில் ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டு விடுவார்கள். இவர்கள் கணக்கு சம்பந்தமான வேலையில் இருந்தால், அதுசம்பந்தமான தணிக்கையாளர் அல்லது ஏஜென்ட் என ஒரு போர்டை மாட்டிவிடுவார்கள் அல்லது ஒப்பந்தங்களைப் பேசிமுடிக்கும் வேலையில் இறங்கிவிடுவார்கள். எந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்களோ, அதனடிப்படையில் ஓய்வுக்காலப் பணியைத் தொடங்கிவிடுவார்கள். ஒருசிலருக்கு மட்டும் உடல்நிலை சற்று படுத்தும்.

துலாம்: இந்த லக்னத்தார் ஓய்வுபெற்றவுடன் நிறைய புண்ணிய யாத்திரை மேற்கொள்வர். சிலர் பேரன், பேத்தி விஷயமாக வெளிநாடு செல்வர். சிலர் விருப்பமான உயர்கல்வி கற்க அலைவர். சிலர் ஜோதிடம் படிக்க ஆரம்பித்துவிடுவர். சிலர் நன்கு முதலீடும் செய்வர். சிலர் மருத்துவம் சம்பந்தமாக ஆர்வம் கொள்வர். எது எப்படி இருப்பினும் துலா லக்னத் தாரின் ஓய்வுக்காலம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம்: ஓய்வுக்காலப் பணப்பலன் கிடைக்கப்போகிறதெனத் தெரிந்தவுடன், இதுவரை ரகசியமாக வைத்திருந்த குடும்பம் இவர்களை கும்மியெடுத்துவிடும். சிலர் மிக அவமானப்பட்டுவிடுவார்கள். என்ன யோசித்து எதைச் செய்தாலும் பயனின்றிப் போய்விடும். இந்த நிலையில் எதற்கு விருப்ப ஓய்வு கேட்கவேண்டும்? அதிக வயதா கிவிட்டது; ஓய்வுபெற்றே தீரவேண்டும் எனக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் ஒழிய ஓய்வேவேண்டாம். இந்த அவமானம் ஏற்படாவிட்டால் நரம்புத்தளர்ச்சி நோயால் சிரமப்படநேரிடும்.

தனுசு: விருப்ப ஓய்வு குறித்து மனு எழுதும்போதே, அதே அலுவலகம் அல்லது அதே நிறுவனக்கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஏற்கெனவே செய்துகொண்டிருந்த வேலை சம்பந்தமான தொழில் தொடங்க ஆயத்தமாகி விடுவார்கள். எனவே, ஓய்வுக்காலம் பரபரப்பாகவே செல்லும். வெகுசிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.

மகரம்: இவர்கள் ஓய்வுக்காலத்தை கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் செலவிடுவார்கள். இவர்கள் பணிபுரிந்த காலத்தைவிட ஓய்வுக் காலம் மனநிறைவு தருவதாக அமையும். சிலர் கடனை அடைத்து நிம்மதி பெறுவர். வெகுசிலர் கோவில் நற்பணிகளில் ஈடுபட்டு மகிழ்வர். ஓய்வுக்காலத்திலும் ஏதோவொரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள். அது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். சிலருக்கு காது கொஞ்சம் கேட்காது.

கும்பம்: இவர்களின் விருப்ப ஓய்வுக் காலத்தில் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ரத்த நாள பாதிப்பு, உணர்வுகள் குறைதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும் அல்லது வாரிசுகள்மூலம் அவமானம், அவர்களின் கடன் சம்பந்தமான வேதனை போன்றவை ஏற்பட்டு, ஓய்வுப் பணப்பலன் கடலில் கரைத்த பெருங்காயமாகிவிடும். எனவே, இவர்கள் விருப்ப ஓய்வு பெறுவது விரும்பத் தக்கதல்ல.

மீனம்: இவர்கள் விருப்ப ஓய்வு பெற்றவுடன் தங்கள் வீட்டைப் பெரிதாக- அழகாக மாற்றிவிடுவார்கள். இதற்கு இவர்களது இல்லாளின் யோசனை இருக்கும். வெகுசிலரே வியாபாரம், முதலீடு செய்வர். மற்றபடி வீட்டில் சொகுசாக உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். சிலர் புதுமையான வாகனம் வாங்கு வார்கள். அதிகமாக லட்டிக் கொள்ளமாட்டார்கள். சிலரின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும்.

திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரத்தாரின் வாழ்வு சிறக்க, அவர்கள் அக்காலகட்ட தசாநாதன் புதனை புத்தி யோடு வணங்கவேண்டும்.

விஷ்ணுவை வணங்குதல் சிறப்பு. புதனுக்கு ப்ரீதி செய்ய பச்சைச் செடிகளை வளர்ப்பது மிக எளிய- நன்மையான பரிகாரமாகும். அதுபோல, குழந்தைகளின் மேன்மைக் குரிய செயல்களைச் செய்யலாம். உங்கள் பகுதியில் செடி, மரம், காய்கறிகள் வளர்ப் பதற்குரிய விதை, சிறுசெடிகள் போன்றவற்றை இயன்றவரை விநியோகம் செய்யுங்கள். தசாநாதன் ஜாதகக்குறிப்பு: ஐந்தாம் பாவாதிபதி எட்டில் மறைந்தாலும், பன்னி ரண்டாம் வீட்டோன் ஐந்தாம் பாவத்தில் அமர்ந்தாலும் முன்வினைப் பயனால் புத்திர தோஷம் உண்டாகும்.

புன்னகையோடு உங்களை ஆசிர்வதிப்பார்.

(தொடரும்)

செல்: 94449 61845