Advertisment

விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்? 6 -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/who-will-benefit-custom-rest-vrs-6-r-mahalakshmi

ரோகிணி, அஸ்தம், திருவோணம்

மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களும் செவ்வாய் சார நட்சத்திரங்கள்.

செவ்வாயின் தசாக்காலம் ஏழு வருடங்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் செவ்வாய் தசை ஆரம்பிக்கும். இவர்கள் செவ்வாய் தசையின் முதற்பாதத்தில் பிறந்திருந்தால், செவ்வாய் தசையின் இருப்பு ஏழு வருடங்களாக அமையும். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றரை வருடங்களாகவும்; மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்றே முக்கால் வருடங்களாகவும்; நான்காம் பாதத்தில் பிறந்திருந்தால் ஏறக்குறைய பதினோரு மாதங்களாகவும் அமையும்.

Advertisment

அடுத்து, ராகு தசை 18 வருடங்கள். அதையடுத்து, குரு தசை 16 வருடங்கள் முடியும்போது ஏறக்குறைய 41 வயதாகி இருக்கும். அதன்பின் ஆரம்பிக்கும் சனி தசைதான் இவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது சாதாரண ஓய்வுக் காலமாக அமையும். சனி தசையின் கால அளவு 19 வருடங்கள்.

மிருகசீரிடம்- ரிஷபம் மற்றும் மிதுன ராசியிலும், சித்திரை- கன்னி மற்றும் துலா ராசியிலும், அவிட்டம்- மகரம் மற்றும் கும்ப ராசியிலும் பரவி நிற்கும்.

இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஓய்வுக்கால தசாந

ரோகிணி, அஸ்தம், திருவோணம்

மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களும் செவ்வாய் சார நட்சத்திரங்கள்.

செவ்வாயின் தசாக்காலம் ஏழு வருடங்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் செவ்வாய் தசை ஆரம்பிக்கும். இவர்கள் செவ்வாய் தசையின் முதற்பாதத்தில் பிறந்திருந்தால், செவ்வாய் தசையின் இருப்பு ஏழு வருடங்களாக அமையும். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றரை வருடங்களாகவும்; மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்றே முக்கால் வருடங்களாகவும்; நான்காம் பாதத்தில் பிறந்திருந்தால் ஏறக்குறைய பதினோரு மாதங்களாகவும் அமையும்.

Advertisment

அடுத்து, ராகு தசை 18 வருடங்கள். அதையடுத்து, குரு தசை 16 வருடங்கள் முடியும்போது ஏறக்குறைய 41 வயதாகி இருக்கும். அதன்பின் ஆரம்பிக்கும் சனி தசைதான் இவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது சாதாரண ஓய்வுக் காலமாக அமையும். சனி தசையின் கால அளவு 19 வருடங்கள்.

மிருகசீரிடம்- ரிஷபம் மற்றும் மிதுன ராசியிலும், சித்திரை- கன்னி மற்றும் துலா ராசியிலும், அவிட்டம்- மகரம் மற்றும் கும்ப ராசியிலும் பரவி நிற்கும்.

இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஓய்வுக்கால தசாநாதர் சனி. இவர் உச்சமாகி இருந்தால் விருப்ப ஓய்வு பெற்றவுடன், நிறைய வேலையாட் களை வைத்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கி விடுவார்கள். மாறாக, சனி நீசம் அல்லது மறைவுத் தன்மையுடன் இருப்பின், நோய் போன்ற வைமூலம் எவ்வித செயல்பாடுமின்றி முடங்கிவிடக்கூடும்.

Advertisment

மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பன்னிரண்டு லக்னங்களிலும் அமைந்திருப்பர். எனவே, இவர்களின் பன்னிரண்டு லக்னங்களுக்கும் ஓய்வுக்காலப் பலன்களைக் காண்போம்.

மேஷம்: இவர்களின் ஓய்வுக்கால தசாநாதர் சனி இவர்களுக்கு 10, 11-ன் அதிபதி. எனவே, விருப்ப ஓய்வு பெறுமுன்னே சொந்தத் தொழில் தொடங்க ஏற்பாடுகள் செய்துவிடுவார்கள். அது நல்ல லாபத்தையும் கொடுக்கும். வெகுசிலர் தேர்தலில் பங்கெடுத்து வெற்றி பெறுவார்கள்.

ரிஷபம்: இவர்களின் விருப்ப ஓய்வுக் காலமானது, தொழில் தொடங்குதலையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும். ஓய்வுக்கால நிகழ்வுகள் அடுத்தடுத்து தொடுத்தாற்போல நன்கு கூடிவரும்.

vrs

மிதுனம்: இவர்கள் விருப்ப ஓய்வு பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில், சனி இவர்களின் 8, 9-ன் அதிபதி. அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் கலந்து நடக்கும். எதற்கு வீணாக ரிஸ்க் எடுக்க வேண்டும்? இருக்கும் வேலையிலேயே தொடரலாம். தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேலல்லவா?

கடகம்: இந்த லக்னத்தாருக்கும் விருப்ப ஓய்வு அவ்வளவு சிலாக்கியமில்லை. ஏனெனில், சனி தசையில் இவருக்கோ இவரது மனைவிக்கோ உடல்நலம் குன்ற வாய்ப்புள்ளது. விருப்ப ஓய்வு பெற்று, அந்தப் பணம் மருத்துவமனைக்குச் செல்வதைவிட, மாதாமாதம் சம்பளம் வாங் குவது எவ்வளவோ மேல்.

சிம்மம்: இவர்களின் தசாநாதர் சனி நல்ல சாரம் வாங்கியிருந்தால் வேலைக்குச் செல்வார்கள் அல்லது வியாபாரம் ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் திருமணம் சம்பந்தமான சேவை மையம் தொடங்குவார்கள். சனி சரியில்லை என்றால் உடல்நலம் கெட வாய்ப்புள்ளது. ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கவும்.

கன்னி: இவர்கள் ஓய்வுக்காலப் பணப்பலனைத் தங்கள் வாரிசுகளின் வேலைக்காகக் கொடுக்க வேண்டி இருக்கும். சிலர் தங்கள் பூர்வீக இடம் நோக்கி நகர்ந்துவிடுவர். ஒருசிலர் தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டியிருக்கும். சிலர் தங்கள் ஓய்வுக்காலத்தை யோகா, தியானம், நல்ல பொழுதுபோக்கு என அருமையாக செலவழிப்பர்.

துலாம்: இந்த லக்னத்தாரை அவர்களது பிள்ளைகளே விருப்ப ஓய்வு பெற வலியுறுத்துவர். பணம் வந்தவுடன் தங்களுக்கு வீடு, வாகனம் என வாங்கிக்கொள்வர். பிள்ளைகளுக்குச் செலவழித்தாலும் இவர்களும் அவற்றை அனுபவித்து மகிழலாம். குறையொன்றுமில்லை.

விருச்சிகம்: இவர்கள் விருப்ப ஓய்வு பெற யோசிக்க வேண்டும். ஏனெனில், சனி தசை இருப்பிட மாற்றத்தை அல்லது வீடு விற்பனையை சுட்டிக்காட்டும். எனவே விருப்ப ஓய்வு பெற்றால், அதன் லாப நஷ்டங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவும். ஒருசிலரால் மட்டுமே வீட்டில் முதலீடு செய்யமுடியும். கவனம் தேவை.

தனுசு: விருப்ப ஓய்வுப்பணம் வந்தவுடன் அதனை வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் முதலீடு செய்துவிடுவார்கள். அதில் வரும் வட்டிப் பணத்தை வைத்து செலவழித்துக் கொள்ள திட்டம் போட்டு நடைமுறைப் படுத்துவார்கள்.

மகரம்: தங்கள் ஓய்வுப் பணப்பலனை நன்கு முதலீடு செய்துவிடுவார்கள். அது வட்டியோடு குட்டியும் போடுமளவுக்குப் பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள். ஒருசிலர் தங்கள் பேச்சாற்றல்மூலம் ஓய்வு நேரத்தைப் பணமாக்கிவிடுவர். இரண்டாம் அதிபதி சனியாக அமைந்தால் அங்கு கஞ்சத்தனம் தன்னிச்சையாக வந்துவிடும். எனவே, மகர லக்னத்தார் ஓய்வுக்காலத்தை சிரமமின்றி ஓட்டுவர்.

கும்பம்: ஓய்வுக் காலத்தை- ஓய்வுப் பணப்பலனை நன்றாக அனுபவித்து செலவழிப்பர். இவர்களே அதற்கு திட்டமும் போடுவர். வெளிநாட்டுக்குப் போவ தென்ன- நினைத்ததெல்லாம் வாங்குவதென்ன என்று சுத்தமாக செலவழித்து முடித்துவிட்டுதான் ஓய்வார்கள். எனவே, இவர்களுக்கு விருப்ப ஓய்வு அவசிய மில்லை. மாத சம்பளம் வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பது நல்லது.

மீனம்: தங்கள் ஓய்வுப்பணம், காலம் ஆகியவற்றை திட்டமிட்டு, எண்ணியது ஈடேற செலவழிப்பார்கள். நன்கு யோசித்து முதலீடு செய்வார்கள். இவர்களது செலவு இவர்களுக்கு லாபமாக மாறும். தங்கள் திட்டமிடல் இவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சிலர் தேர்தலில் நின்று செலவழித்து வெற்றி பெறுவர்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் ஓய்வுக் கால தசாநாதர் சனி. அவருக்குப் பிரீதியாக சனி வழிபாடு, ஆஞ்சனேயர் தரிசனம் நன்று. குளங்களில் பழைய பொருட்களால் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி, தண்ணீர் தேங்கும் வண்ணமும் நீரோட்டம் ஏற்படுமாறு செய்வதும் நல்ல பரிகாரம். சனி பழமை யைக் குறிப்பவர். அதனால் பழமையான கோவில்களில் விளக்கேற்றவும்.

(தொடரும்)

செல்: 94449 61845

bala100720
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe