கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரிய சார நட்சத்திரங்களில் பிறந்தவர்களில், மேஷம்முதல் கன்னி லக்னம்வரை யிலான பலன்களைக் கடந்த இதழில் கண்டோம். மற்ற லக்னப் பலன்களை இங்கு காணலாம்.
துலா லக்னம்
நட்சத்திரப்படி, இவர்களின் ஓய்வுக்கால தசாநா தரான சனி 4, 5-ன் அதிபதி. யோகாதிபதி தசை. எனவே ஓய்வுக்காலப் பணம் வந்தவுடன் வீடு, மனை, தோட்டம், வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்துவிடுவார்கள். வாரிகளுக்கும் தாராளமாகவே செலவளிப்பார்கள். சிலர் பெட்ரோல் பங்க் போன்ற ஏஜென்சி எடுப்பார்கள். சிலர் சிறு குழந்தைகளுக்கு பள்ளி, நர்சரி என ஆரம்பித்துவிடுவார்கள். வெகுசிலர் பூர்வீக இடம் சென்று விவசாயம் ஆரம் பித்துவிடுவார்கள். எனவே, இவர்களின் ஓய்வுக்காலமும் மிக மகிழ்ச்சியாகவும், நான்குபேருக்கு உதவும் விதமாகவும் செல்லும். ஆகவே, ஓய்வுக் காலத்தைப் பற்றி கவலைவேண்டாம். உடற்பயிற்சி, யோகா என பொழுதை உபயோகமாகப் பயன் படுத்துவார்கள். சனி பகவானுக்கு எள் மிட்டாய் போன்ற இனிப்பைப் படைத்து, குழந்தைகளுக்குக் கொடுக்கவும். குலதெய்வக் கோவில் கட்டுமானப் பணிக்கு உதவவும்.
விருச்சிக லக்னம்
இவர்கள் நட்சத்திரப்படி ஓய்வுக்கால தசாநாதர் சனி 3, 4-ன் அதிபதி. இவர்கள் ஜாதகத்தில் சனி உச்சமாகி இருந்தால், உடனடியாக முதலீடு செய்துவிடுவார்கள். சிலர் வங்கிகளிலும், சிலவற்றை வீட்டிலும் முதலீடு செய்வர். சிலர் வீடு வாங்குவர். லக்னாதிபதி செவ்வாய் உச்சமாகி இருந் தால், அலைபேசி கடையோ, வீடு கட்டுமான நிறுவனமோ ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் இளைய சகோதரத்துக்கு அமோக மாகக் கொடுப்பார்கள். சிலர் கல்வி சார்ந்து முதலீடு செய்வர். சிலர் வயல், தோட்டம் வாங்குவர். நல்ல பணப்பயன் கிடைக்கப்பெற்றவர்கள் பழைய பத்திரிகைப் பதிப்புகளைப் புனரமைப்பு செய்து வெளியிடுவர். இவர்கள் வேலைக்கெல்லாம் போகமாட்டார்கள். ஓய்வுக்காலத்தை சுகமாகக் கழிக்க எண்ணுவார்கள். சனி பகவான் நைவேத் தியத்திற்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்கவும்.
தனுசு லக்னம்
இவர்கள் நட்சத்திரப்படி ஓய்வுக்கால தசாநாதர் சனி 2, 3-ன் அதிபதி. சனி மிக நல்ல நிலையில் இருந்தால், பணத்தை வட்டிக்குவிட்டு குட்டிப் போட வைத்துவிடுவார்கள். இவ்விதமாக பணத்தை வெகுவாக வளரவைத்து லாபம் காண்பார்கள். மற்ற சிலர் நிரந்தர வைப்புத்தொகை, பங்குப் பத்திரம் போன்றவற்றை வட்டி வரும்விதமாக முதலீடு செய்வீர்கள். குடும்பத்தை சீர்செய்யும் விஷயங்களுக்கும் கணக்குப் பார்த்துக் கொடுப் பார்கள். குத்தகை, ஒப்பந்தம் போன்ற இனங் களில் பணத்தை இணைத்துவிடுவார்கள். சனி எப்போதுமே கருமித்தனம் உடையவர். அவரே இவர்களின் தசாநாதராகவும், 2-ஆம் அதிபதியாகவும் வருவதால், பணத்தை நுணுக்கி ஆராய்ந்து பத்திரப்படுத்துவார்கள். அநாவசியமாக ஒரு ரூபாய் செலவழிக்க மாட்டார்கள். ஆக, இவர்கள் ஓய்வுப் பணப்பயன் உட்காரவைத்து சோறுபோடும். அந்த அளவுக்கு பண விவகாரத்தை அழகாக திட்டமிடுவார்கள். ஓய்வுக்காலத்தைக் காலாட்டிக்கொண்டே கழிக்கும் ஆட்கள் இவர்கள். கொஞ்சம் சில்லரையாவது சனி பகவான் கண்களில் காட்டுங்கள்.
மகர லக்னம்
இவர்கள் நட்சத்திரப்படி ஓய்வுக்கால தசாநாதர் சனி, லக்னம் மற்றும் 2-ஆமிட அதிபதி. சிலர் தங்கள் ஓய்வுக்காலப் பணத்தை குடும்பத்திற்குக் கொடுக்கவே சரியாக இருக்கும். இவர்கள் ஜாதகத்தில் சனி உச்சமாகி இருந்தால், உடனடியாகத் தொழில் ஆரம்பித்துவிடு வார்கள். அது செய்தித்துறை வட்டிக்குவிடும் நிறுவனம், மருந்துக்கடை ஆன்மிக சம்பந்தம், கல்வி நிறுவனம் என ஏதோ ஒருவகையில் ஆரம் பித்துவிடுவார்கள். பங்குதாரரின்றி, முழுமை யாக இவர்களே நடத்துவார்கள். அல்லது சனி சுமாராக- கெட்டுப்போகாமல் இருப்பினும், வருமானம் வரும் நிதி ஆதாரங்களில் முதலீடு செய்துவிடுவார்கள். சிலர் அசையும் சொத்து வாங்குவார்கள். அதுவும் வருமானம் தரத்தக்க அளவில்தான் முதலீடு செய்வார்கள். ஆக, வரும் பணப்பயனை, காசு சம்பாதித்துத் தரும் வழிகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிலர் பணத்தைக்கொண்டு பணம் சம்பாதிப்பது எப்படியென வகுப்பெடுக்கஆரம்பிப்பார்கள். சிலர் உணவு சம்பந்தமாகஈடுபடுவர். சனி பகவான் சந்நிதியின் தேவையறிந்து, பகவானுக்கும், அவரை அர்ச்சனை செய்பவருக்கும் உதவுங்கள்.
கும்ப லக்னம்
இவர்கள் நட்சத்திரப்படி சனி பகவான் விரய ஸ்தானாதிபதி மற்றும் லக்னாதிபதி. இவர்கள் ஓய்வுக்காலப் பணப்பலன் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. இவர்களே வகைதொகை யின்றி செலவழித்துவிடுவார்கள். சிலர் "இப்போதான் நேரம் கிடைச்சிருக்கு; அத்தனை வெளிநாடுகளையும் பார்த்துவிட்டு வரலாம்' என்று கண்டபடி சுற்றிவிட்டு, கடைசியில் ஒன்றுமில்லாமல் நிற்பார்கள். சனி நல்ல சாரம் வாங்கியிருக்கும் ஜாதகர்கள் மட்டுமே அருமையாக, அனைத்தையும் முதலீடு செய்வர். மற்றவர்கள் வரும் பணத்தை செலவளித்துவிட்டு நிற்பர். எனவே, இவர்கள் விருப்ப ஓய்வு அவசியமாவென்று ஒருமுறைக்கு நான்குமுறை யோசித்து முடிவெடுக்கவேண்டும். இல்லை யெனில் தினப்படி செலவுக்கே அல்லாட வேண்டியிருக்கும்; கவனம் தேவை. மோசமான சாரத்தில் சனி பகவான் நின்றிருந்தால், உடல்நிலையில் மிக கவனம் தேவைப்படும். சனி பகவானை சுற்றிவந்து வணங்கவும்.
மீன லக்னம்
இவர்கள் நட்சத்திரப்படி ஓய்வுக்கால தசாநாதர் சனி 11, 12-ன் அதிபதி. ஆக, முதலீடு செய்வார்கள்; லாபமும் அடைவார்கள்; செலவும் செய்வார்கள். கண்டிப்பாக நன்மைத் தரத்தக்க வெளிநாட்டுப் பயணம் உண்டு. மூத்த சகோதரருடன் சேர்ந்து, வருமானத்திற்கு முதலீடு செய்வார்கள். வெகுசிலர் ஓட்டல் ஆரம்பித்துவிடுவர். இவர்களின் செலவுகள் அனைத்தும் லாபத்தைக் கூட்டிக்கொண்டு வரும். ஒருசிலர் ஏற்கெனவே பார்த்த வேலையில் பதவிநீட்டிப்பு பெறுவர். சிலர் ஓய்வுக்காலத்தில், அவர்கள் பகுதி தேர்தலில் நின்று இருக்கிற பணத்தை செலவழிப்பார்கள். வெகுசிலர் இடம் மாறக்கூடும். சிலர் தங்களின் வெகுநாள் ஆசைகளை அது அநேகமாக ரகசிய செயலா கவே இருக்கும்- அதனை நிறைவேற்றிக் கொள்வர். சிலர், நண்பர்களுடன் கூடித்திரிவர். ஆக, பணத்தைப் பார்த்தவுடன் கண்டபடி செலவழிக்காமல், சற்று யோசித்து நிதான மாகச் செயல்பட்டால், ஓய்வுக்காலத்தை நல்ல லாப வரவுடன் உற்சாகமாகக்கொண்டாட லாம். சனி பகவான் சந்நிதிக்கு முடிந்த அளவு காணிக்கை கொடுக்கவும்.
(தொடரும்)
செல்: 94449 61845