27 நட்சத்திரப் பலன்கள்!

ஆர். மகாலட்சுமி

3

சென்ற இதழ் தொடர்ச்சி...

Advertisment

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் மேற்கண்ட சூரிய சார நட்சத் திரங்களில் பிறந்தவர்களுக்கு, பிறந்த நேரக் கணக்குப்படி, சூரிய தசையின் ஆறு வருடங்கள் முன்னே, பின்னே இருக்கும்.

அடுத்து சந்திர தசை 10 வருடம்; செவ்வாய்- 7; ராகு- 18; குரு- 16 என ஏறக்குறைய 57 வருடங்கள் பூர்த்தியாகி, சனி தசை ஆரம்பித் திருக்கும். சனி தசையின் வருடங் கள் 19. எனவே கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரத்தார் தங்களது ஓய்வுக்காலத்தை- அது விருப்ப ஓய்வானாலும், எப்போதும்போல் ஓய்வுபெறு வதானாலும் சனி தசையில்தான் கடக்கவேண்டி யிருக்கும்.

தங்கள் ஜாதகத்தில் சனி நீசம், மறைவு பெற்றிருந்தால் ஓய்வுக்காலம் சற்றே நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும்.

Advertisment

அல்லாது ஜாதகத்தில் சனி சுபத்தன்மையுடன் இருந்தால், 12 லக்னத்தாருக்கும் அவர்களது ஓய்வுக்காலத்தை சனி எவ்விதம் வழிநடத்திச் செல்வார்?

மேஷ லக்னம்

vv

சனி இவர்களுக்கு 10, 11-ன் அதிபதி. இவர்கள் ஜாத கத்தில் சுபத்தன்மை பெற்ற சனி, கண்டிப்பாக இவர் களைத் தொழில் தொடங்கச் செய்வார். சிலர் மூத்த சகோ தரனுடன் சேர்ந்து தொடங்குவர். சிலர் ஏற்கெனவே வேலை செய்துகொண்டிருந்த நிறுவன நண்பர்களுடன் சேர்ந்து தொழில் ஆரம்பிப்பார்கள். சிலர் சமையல் சம்பந்தமான நிறுவனம் நிறுவுவர். சனி இவர்களுக்கு லாபாதிபதி. எனவே தொழிலில் லாபமும் வரும். கூடவே சனி பாதகாதிபதியும். எனவே அவ்வப்போது உடல்நிலை சுணக்கம் காட்டும். தோல் பொருட்கள் சம்பந்தமான வேலை செய்பவருக்கு உதவுங்கள். சனீஸ்வரருக்கு அபிஷேகத்திற்கான எண்ணெய் வாங்கிக்கொடுக்கவும்.

ரிஷப லக்னம்

இவர்களுக்கு சனி 9, 10-ஆம் வீடுகளுக்கு அதிபதி. தர்மகர் மாதிபதி யோகம் பெற்றவர். சுபச்சனி இருப்பின், இவர் களும் தொழில்தொடங்க வாய்ப்புள்ளது. சிலர் தங்கள் தந்தையின் தொழிலை விரிவுபடுத்துவர். சிலர் புனித சுற்றுலா அலுவலகம் ஆரம்பித்துவிடுவர். சிலர் பள்ளி, கல்லூரி அல்லது பள்ளிப்பாடம் சம்பந்தமான தொழில் என அதனைச் சார்ந்து ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் பரம்பரைத் தொழிலை முன்னெடுத்துச் செய்வார்கள். சிலர் கோவில் சம்பந்தமான கடை ஆரம்பித்துவிடுவார்கள். வெகுசிலர் புனிதப்பயணம் சென்றுவருவார்கள். சனியின் சாரநாதர் சற்று கெட்டிருந்தால் உடல்நிலையில் கவனம்தேவை. ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வரருக்குரிய பூஜைப் பொருட்கள் வாங்கிக்கொடுக்கவும்.

மிதுன லக்னம்

சனி தசாநாதராக வரும்போது, அவர் மிதுன லக்னத்துக்கு 8, 9-ன் அதிபர். எனவே, இவர்களின் ஓய்வுக்காலம் என்பது சனியின் சாரநாதரின் சுபத்தன்மையைப் பொருத்தது. சனியோ, அவரின் சாரநாதரோ சுபமாக அமைந்திருந்தால், தொழில் தொடங்கக்கூடாது. ஏனெனில், சனி இவர்களின் எட்டாம் அதிபதி. எனவே, ஓய்வுக்காலப் பணத்தை வீணாகத் தொழில் தொடங்க செலவழிக்க வேண்டாம். ஒரு நல்ல வங்கியாகத் தேர்ந் தெடுத்து முதலீடு செய்துவிடவேண்டும். ஏனெனில் சனி இவர்களுக்கு நோய் அல்லது அவமானம் கொடுக்கும் நிலையில் இருப்பார். எனினும் சனி ஒன்பதாம் அதிபதியும் ஆவதால், ஏதோ வட்டிப் பணம் ஒழுங்காக வந்து, சாப்பாடு, வைத்தியச் செலவை சரியாக சமாளிக்க உதவும். யாருடைய பேச்சையும் கேட்டுத் தொழில் தொடங்கவோ, கடை ஆரம்பிக்கவோ வேண்டாம்; கவனம் தேவை. சனி அல்லது புதன்கிழமைகளில் சனி பகவானுக்கு தீபமேற்றி வழிபடவும். ஓய்வுக்காலப் பணத்தை, நல்ல இடமாகப் பார்த்து டிபாசிட் செய்யவும். ஓய்வுத் தொகை ஒழுங்காகக் கையில் கிடைக்க வேண்டும். அதுவே கொஞ்சம் இழுபறியாகி விடும்.

கடக லக்னம் கடக லக்னத்தாருக்கு சனி 7, 8-ன் அதிபதி. சனி மிகுந்த சுபத்தன்மையோடு இருந்தால் ஓய்வுக்காலப் பணப்பலன் உடனடியாகக் கைக்கு வந்துவிடும். சனி நீசம், மறைவு பெறாமல் இருப்பினும், சுமார் நிலையில் இருந்தாலும் பணப்பலன் கிடைக்கத் தாமதமாகும். எனவே, இவர்கள் விருப்ப ஓய்வென்ற முடிவெடுக் கும்போது, கிடைக்கும் பணத்தின் நிலைபற்றி நன்கு விசாரித்துக்கொள்ளவும். மேலும் இவர்கள் உடல்நிலையும் அவ்வளவு சீராக இராது. ஆரோக்கியத்தில் மிக கவனம் எடுத்துக் கொள்ளும்படி இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத் துணையின் உடல்நலம் விஷயமாக மனம் விசனப்படும் சூழ்நிலை உண்டாகும். எது எப்படி இருப்பினும், வரும் பணத்தை யாரிடமும் ஏமாறாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.

சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை தோறும் சனி பகவான் அபிஷேகத்திற்கு பால் அல்லது எண்ணெய் வாங்கிக்கொடுத்து வணங் கவும். யாருக்காவது திருமணம் சம்பந்தமான உதவி தேவைப்பட்டால், முடிந்தால் நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து உதவிசெய்யவும்.

சிம்ம லக்னம்

இவர்களுக்கு சனி 6, 7-ன் அதிபதி. சிலர் ஓய்வுபெற்ற அடுத்த நாளிலிருந்து வேறு வேலைக்கு டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவர். சிலர் "பொதுமக்களுக்கு சேவை செய்யப்போகிறேன்' என்று சென்றுவிடுவர். சிலர் தங்கள் தாய்மாமனுடன் சேர்ந்து வியாபாரம் ஆரம்பித்துவிடுவர். சிலர் ஓய்வுக்காலத்தை, பொழுதுபோக்கத் தெரியாமல் மனைவியுடன் சண்டை, யுத்தம் போட ஆரம்பித்துவிடுவர். இது பல்கிப்பெருகி, பார்க்கும் ஆட்களுடனெல்லாம் சண்டையிட ஆரம்பித்துவிடுவர்.

சிலர் பணப்பலன் கைக்குக் கிடைக்கவே சண்டையிட வேண்டியிருக்கும். இன்னும் சிலர், நோய்வாய்ப்பட்டு, சுற்றியிருப்பவர்களைப் பாடாய்ப்படுத்திவிடுவர். சிம்ம லக்னாதி பதி சூரியன். அவருக்கும் சனிக்கும் ஆகாது. எனவே, சிம்மத்தாருக்கு சனி தசைக்காலம் நடக்கும்போதும், ஏதோ ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று என இம்சை ஏற்படும். எனவே, இந்த லக்னத் தார் ஓய்வுபெற்றவுடன், உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்துவிடவேண்டும். சனி பகவான் கோவிலில் முடிந்தபோதெல்லாம் உழவாரப்பணி செய்யவும்.

கன்னி லக்னம்

இவர்களின் ஓய்வுக்கால தசாநாதர் சனி பகவான் 5, 6-ன் அதிபதி. எனவே, இவர்களின் ஓய்வுக்காலப் பணம் வந்தவுடன், அதன் பெரும்பகுதி இவர்களின் வாரிசுகளுக்கு வேலைகிடைக்க செலவழியும். சிலர் பூர்வீக இடத்தின் மேன்மைக்கு செலவழிப்பர். இவர்களுக்கு அல்லது இவர்களின் வாரிசுகளின் ஆரோக்கியம் சம்பந்தமான செலவுசெய்ய நேரும். சிலர் ஏற்கெனவே செய்துவந்த நிறுவனத்தில், வேறு வேலைக்குச் சேர்ந்துவிடுவர். சிலர் நாடகம், கச்சேரி, விளையாட்டு என அவர்களின் நெடுநாளைய விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிப்பர். சனி கெட்டிருந்தால், போதைப் பழக்கத்துக்கும், காதல் விஷயங்களுக்கும் செலவளித்து, அடியும் வாங்கிக்கொண்டு நிற்பர். இவர்கள் ஓய்வுப் பணப்பலனை முதலீடு செய்வதோ, தொழில் ஆரம்பிப்பதோ முடியாத காரியமாகவே தோன்றுகிறது. எனவே, விருப்ப ஓய்வு தேவையா என நன்கு யோசித்துச் செயல்படவேண்டும். இவர்கள் நட்சத்திரப்படி தசாநாதர் சனி அதிக அனுகூலமாக இல்லை. குலதெய்வத்தை நன்கு மனதார வழிபடவும்.

(தொடரும்)

செல்: 94449 61845