பெரும்பாலான மக்கள் ஏமாறுவதற்குக் காரணம் பேராசையே. இதற்கு அவர்களின் ஜாதகத்திலிருக்கும் சந்திரன், செவ்வாய், 2-க்கு அதிபதி ஆகியவை காரணமெனக் கூறலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியில்லாமல் இருந்து, பாவகிரகத்துடன் சேர்ந்து 6, 8, 12-ல் இருந்தால், அந்த ஜாதகர் சோம்பேறியாக இருப்பர்.

saa

Advertisment

தன் வேலையைப் பிறர் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பார். அவர் நம்பும் நபர்கள் அவரை ஏமாற்றுவார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் 6-ல் இருந்தால், அவர் சோம்பேறியாக இருப்பார். பெண் மோகம் பிடித்து அலைவார். வீட்டிற்குத் தெரியாமல் வெட்டி மனிதர்களுடன் பழகுவார். அவரின் அந்த பலவீனத்தைப் பயன்படுத்தி அவரை ஏமாற்றுவார்கள். சில நேரங்களில் தன் சொத்துகளைக்கூட அவர் இழந்துவிடுவார்.

ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லை யென்றால், அவர் உருப்படியில்லாத ஆட்களுடன் பழகி, வீண் செயல்களில் ஈடுபடுவார். அதன்மூலம் மிகவும் எளிதாக அவரை ஏமாற்றுவார்கள்.

Advertisment

ஜாதகத்தில் சுக்கிரன், கேது 4-ல் இருந்து, அதே ஜாதகத்தில் சந்திரன் 12-ல் இருந்தால், தேவையற்ற விஷயங்களை நினைத்துக் கொண்டு, தன் செயல்களை மற்றவர்கள் செய்துதர வேண்டுமென எப்போதும் எதிர்பார்ப்பார். அதை சாதகமாக வைத்து மற்றவர்கள் அவரை ஏமாற்றுவார்கள்.

ஜாதகத்தில் 9-ல் சனி, 10-ல் ராகு, 12-ல் சந்திரன் இருந்தால், ஏமாற்றுப் பேர்வழிகளிடம் அதிகமாகப் பழகி, தன் சொத்துகளை அவர்களிடம் ஏமாந்து இழந்துவிடுவார்.

ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 3-க்கு அதிபதியான கிரகம் 2-ல் இருந்தால், அந்த ஜாதகர் தன் நண்பர்களால் ஏமாற்றப்படுவார். அவரிடம் நண்பர்கள் கடனாகப் பணம் வாங்கியிருந்தால், அதைத் திரும்பத் தராமல் ஏமாற்றிவிடுவார்கள். அவரின் சகோதரர்களேகூட அவரை ஏமாற்றுவார்கள். பாசத்தை முகமூடியாக வைத்துக்கொண்டு, அவரின் குடும்பத்தில் உள்ளவர்களே அவரை ஏமாற்றுவார்கள்.

ஒருவருக்கு கோட்சாரத்தில் 3-ல் குரு வரும்போது, அவருக்கு அஷ்டமச் சனியோ, ஏழரை நாட்டுச் சனியோ நடந்தால், அவர் அந்தச் சமயத்தில் பலருக்கு விரோதியாவார். அவரைப் பண விஷயத்தில் பலரும் ஏமாற்றுவார்கள்.

ஜாதகத்தில் லக்னத்தில் நீசச் செவ்வாய், 3-ல் நீசச் சுக்கிரன் ராகுவுடன் இருந்தால், மோசமான நடத்தைகொண்ட பெண்களுடன் பழகி, தன் சொத்துகளை அவர்களிடம் இழந்துவிடுவார்.

ஜாதகத்தில் 12-ல் சந்திரன், 5-ல் சுக்கிரன், கேது, 7-ல் செவ்வாய், 9-ல் சனி இருந்தால், அவர் கேவலமான நடத்தை உள்ள பெண்களுடன் பழகி, தன் சொத்துகளை இழந்துவிடுவார். ஜாதகத்தில் 3-ல் கேது, 6-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்து, அந்த சந்திரனும் தேய்பிறைச் சந்திரனாக இருந்தால், தன்னுடைய இரக்க குணத்தின் காரணமாக அவர் பலரிடமும் ஏமாறுவார்.

ஜாதகத்தில் 12 -ல் சுக்கிரன், 2-ல் சனி, 4-ல் நீசச் சந்திரன் இருந்தால், படவுலகில் பெரிதாக ஏதாவது செய்யவேண்டுமென்ற ஆசையில் ஈடுபட்டு, நம்பியவர்களிடம் முழுமையாக ஏமாந்துவிடுவார். அவர்களிடம் தன் சொத்துகளை இழப்பார்.

ஜாதகத்தில் 6-ல் சந்திரன், சுக்கிரன், 8-ல் செவ்வாய், சனி இருந்தால், அவர் எதையும் பெரிதாகச் செய்யவேண்டுமென நினைப்பார்.

அந்தச் சமயத்தில் பெண் மோகத்தை அவருக்கு உண்டாக்கி, அவரை நண்பர்கள் ஏமாற்றுவார்கள்.

ஜாதகத்தில் 7-ல் புதன், சனி, 8-ல் ராகு, செவ்வாய், சுக்கிரன் இருந்து, அவருடைய ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தாலும், தேய்பிறைச் சந்திரனாக இருந்தாலும், சந்திரன் நீசமடைந்திருந்தாலும், அவர் பல பெண்களிடம் ஏமாறுவார். தொழிலில் நண்பர்கள் அவரை ஏமாற்றிவிடுவார்கள். பாசம், மோகம் காரணமாக அவரைப் பலரும் நன்கு ஏமாற்றுவார்கள்.

ஜாதகத்தில் 4-ல் ராகு, செவ்வாய், 6-ல் புதன், 10-ல் சனி, கேது, 12-ல் சந்திரன் இருந்து, அவருக்கு செவ்வாய் தசை நடந்தால், அதிகமான லாபத்தைச் சம்பாதிக்க வேண்மென தொழிலில் ஈடுபட்டாலும், யாருக்காவது பணம் கடனாகத் தந்தாலும், அவர் கட்டாயம் ஏமாறுவார். அவரிடம் பழகுபவர்கள் ஏமாற்றி விடுவார்கள்.

ஒரு வீட்டின் பிரதான வாசல் தென்மேற்கு திசையில் இருந்து, சமையலறை வடகிழக்கில் இருந்தால், தேவையற்ற பழக்கங்களில் ஈடுபட்டு, பணத்தை மற்றவர்களிடம் இழந்துவிடுவார்.

பிறரிடம் ஏமாறாமல் இருப்பதற்குச் செய்யவேண்டிய பரிகாரங்கள்...

தினமும் காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கையைப் பார்க்கவேண்டும்.

பூமாதேவியை வணங்கவேண்டும்.

காலையில் குளித்துவிட்டு, சூரியனுக்கு நீர் விடவேண்டும்.

தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கவேண்டும்.

குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும்.

மேற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

இரவில் சாப்பிட்ட பிறகு, பாத்திரங்களைக் கழுவிவைக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறைந்தபிறகு, பைரவரை வழிபடவேண்டும்.

செல்: 98401 11534