திறமையுள்ள பலர், தங்களின் திறமையை முறை யானவழிகளில் பயன்படுத்தாமல், தாறுமாறான வழிகளில் சென்று வாழ்க்கையையே வீணாக்கி விடுகிறார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியாக சந்திரன் இருந்து, அந்த சந்திரன் 12-ஆவது பாவத்தில் இருந்து, அதே ஜாதகத்தில் 2-க்கு அதிபதி 6-ல் இருந்து, 4-க்கு அதிபதியான சுக்கிரன் பாவகிரகத்துடன் இருந்து, 7-ல் உச்ச செவ்வாய் இருந்தால், அவர் தன் திறமையை வீண்பேச்சில் செலவிட்டுக்கொண்டிருப் பார். எந்த வேலையையும் சரியான நேரத்திற்குச் செய்யமாட்டார். ஒரு தொழிலைச் செய்தால், அதை முழுமையாக முடிக்காமலேயே வேறு தொழிலைச் செய்வதற்குப் போய்விடுவார்.

அதன்காரணமாக பெரிய இழப்பு உண்டாகும்.v ஒருவர் ஜாதகத்தில் 6-ல் சனி, 7-ல் செவ்வாய், 8-ல் ராகு, 12-ல் சந்திரன் இருந்தால், அவருக்கு பல திறமைகள் இருக்கும். ஆனால், அவர் வீட்டில் எல்லாருடனும் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவசியமற்றதைப் பேசிக் கொண்டிருப்பார். தொழிலை ஒழுங்காகச் செய்யமாட்டார்.v லக்னத்தில் செவ்வாய், 3-ல் நீசச்சந்திரன் இருந்தால், அவர் எப்போதும் வீணான விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பார். எந்தச் செயலைச் செய்தாலும், அதில் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் 7-ல் சனி, 8-ல் ராகு, 12-ல் செவ்வாய் இருந்தால், அவருக்கு பல திறமைகள் இருக்கும். ஆனால், அவர் எல்லாரிடமும் சண்டை போடுவார். அவசிய மில்லாததைப் பேசுவார். அவருடைய ராசி விருச்சிகமாக இருந்தால், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார். அதன்மூலம் பல பிரச்சினைகள் உண்டாகும். தன் திறமையை முழுமையாக வீணாக்கிக் கொண்டிருப்பார்.

Advertisment

லக்னத்தில் செவ்வாய், கேது, 7-ல் ராகு, 8-ல் சனி, 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் இருந்தால், அவர் வீட்டில் வாக்குவாதம் செய்வார். தந்தை, மனைவி ஆகியோருடன் சண்டை போடுவார். விவாதத்திலேயே வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருப் பார்.

vv

ஒருவரின் ஜாதகத்தில் நீசச் சந்திரன், 7-ல் சனி, 8-ல் ராகு, 11-ல் குரு இருந்தால், தன் தந்தையின் காலம்வரை அவர் நன்கு இருப்பார். தந்தை இறந்தபிறகு, சகோத ரரின் உதவியால் வாழ்வார். அதற்குப்பிறகு, எல்லாருடனும் சண்டை போடுவார். எதை யும் ஒழுங்காகச் செய்யாததால், சாதாரண வாழ்க்கை வாழ்வார்.

Advertisment

லக்னத்தில் நீசச் செவ் வாய், 2-ல் சனி, 3-ல் சுக்கிரன், ராகு இருந்தால், அவருக்கு பல திறமைகள் இருக்கும். ஆனால், அவர் எப்போதும் வீணான விஷயங்களைப் பேசிக்கொண்டிருப் பார். கோபம் அதிகமாக வரும். பயனற்ற ஆட்களுடன் பழகுவார். மோசமான பெண்களுடன் பழகுவார். எந்தவித இலக்கும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருப்பார்.

லக்னத்தில் சந்திரன், கேது, 5-ல் நீசச் செவ்வாய், 8-ல் நீச சூரியன் இருந்தால், அவர் அதிகமாக சிந்திப்பார். ஆனால், எந்தச் செயலையும் முழுமை யாக முடிக்கமாட்டார். தைரியமாக எல்லா இடங்களிலும் கடன் வாங்குவார். நண்பர்களை எப்போதும் குறைகூறிக்கொண்டே இருப் பார். வேலையைச் செய்வதை விட்டுவிட்டு வேறெங்கோ போய்விடுவார். அதன்காரணமாக பல பிரச்சினைகள் உண்டாகும்.

லக்னத்தில் நீசச்சனி, 7-ல் நீசச் செவ்வாய், 8-ல் ராகு, 12-ல் சந்திரன் இருந்தால், அவர் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்யமாட்டார். பயனில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டு, எப்போதும் சோம்பேறியாக வீட்டில் இருப்பார்.

லக்னத்தில் ராகு, 5-ல் சந்திரன், 6-ல் சனி, குரு, 12-ல் செவ்வாய் இருந்தால், அவர் தன் தாய், மனைவி, நண்பர்கள் அனைவரிடமும் வீணாகப்பேசி, சண்டை போடுவார். பேராசை காரணமாக பல விஷயங்களில் அவர் ஏமாந்துவிடுவார். எதையும் ஒழுங்காகச் செய்யாமல், பணத்தை இழந்துவிடுவார்.

ஒரு ஜாதகத்தில் 12-ல் செவ்வாய், சனி, 5-ல் ராகு, 11-ல் சந்திரன், கேது இருந்தால், அவர் பேராசை கொண்டவராக இருப்பார். தொழிலிலில் பிறரை ஏமாற்றலாம் என்று நினைப்பார். ஆனால், இறுதியில் ஏமாறுவது அவராகத்தான் இருக்கும்.

ஒரு வீட்டின் பிரதான வாசல் தென்கிழக்கு திசையில் இருந்து, படுக்கையறை வடமேற்கில் இருந்து, அந்த படுக்கையறைக்கு வாசல் தென்கிழக்கில் இருந்தால், அவருக்கு பல திறமைகள் இருந்தாலும், பெண்ணாசை, வீண்பேச்சு ஆகியவற்றால் அனைத்துமே பயனற்று, சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்.

பரிகாரங்கள்

தெற்கில் தலைவைத்துப் படுக்க வேண்டும். வீட்டில் பச்சை வண்ணம் இருக்கக்கூடாது. வீட்டின் நிறம் வெண்மையாக இருக்கவேண்டும்.

வீட்டின் வடகிழக்கில் பழைய பொருட் களை வைக்கக்கூடாது. வீட்டின் வடகிழக்கில் கழிவறை, குளியலறை இருக்கக்கூடாது. வீட்டின் சுவரில் நீர்க்கசிவு இருக்கக்கூடாது.

தினமும் காலையில் குளித்துமுடித்து, சூரியனை வணங்கவேண்டும். அரச மரத்திற்கு நீர் விடவேண்டும்.

அடர்த்தியான நீலம், கறுப்பு, பிரவுன் நிறங்களில் ஆடை அணியக்கூடாது. ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவர வேண்டும்.

அனுமன் சாலீசா படிப்பது நன்று. தன் லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

செல்: 98401 11534