ஊரில் கல்யாணமாம்; மார்பில் சந்தனமாம்'' இந்த பழமொழி கிராமத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும். அதாவது ஒருவருடைய சந்தோஷமான வாழ்க்கையை அவரது மார்பு ஸ்தானம் விளக்கும். இதுவே ஜோதிடத்தில் நான்காம் இடமாக போற்றப்படுகிறது. நான்காமிடம் ஒருவரது சொத்து, சுகம், வாகனம் என்று பொதுவாக அவருடைய செல்வச் செழிப்பான- சுகபோகமான செல்வங்கள் பதினாறும் பெற்று சிறப்பாக வாழும் தன்மையை எடுத்துரைக்கும். நான்காம் பாவம்தான் பெற்ற அம்மாவையும், அம்மாவின் அரவணைப்பையும் கூறும் இடமாகவும் உள்ளது. காலச் சக்கரத்தில் 4-ஆம் இடமான ராசியானது சந்திரனுக்குரியதாக விளங்குவதால்- சந்திரன் அம்மா காரகத்தையும் பெற்றிருப்பதால் இந்த இடம் ஒருவரது அன்பையும், பாசத்தையும் பொழியும் இடமாகவும் இருக்கிறது.
மன்னர்களின் மார்புப்பகுதியை அவர்களுடைய பெருந்தன்மையான, பராக்கிரமமான வளம்மிகுந்த, வீரம் செறிந்த வாழ்க்கையை பிரதிபலிலிக்கும் இடமாகக் குறிப்பிடுவார்கள். உதாரணமாக, என்னுடைய சிறிய வயதில் "வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் சிவாஜிகணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்திருப்பார். அவரது நடிப்பில் அவருடைய வீரம் செறிந்த மார்புப் பகுதியே இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது. அவரது மார்புப் பகுதி, பலரின் நினைவுகளில் பசுமையாகப் பதிந்திருக்கும்.
ஆக, ஒருவரது மார்புப் பகுதியில் திம்ப சக்கர ஜாதகத்தில் சந்திரன் கிரகம் அமைந்திருக்குமானால் அவரது வாழ்க்கை செழிப்பாகவும், சீரும் சிறப்புமாகவும் அமையும்.
சந்திரன் கிரகம் 4-ஆம் பாவத்திற்கு மட்டும் தொடர்பு பெற்று அமைந்திருக்குமானால் நாம் நினைத்தபடி வாழ்க்கை சீரும், சிறப்புமாக, சொத்து சுகங்களுடன் அமையும். இதே சந்திரன் 8, 12-ஆம் பாவங்களையும் தொடர்பு பெற்றிருப்பின் வாழ்க்கையில் மன சஞ்சலங்கள், பேதலிலிப்பு, சொத்தின்மீது உண்டாகக்கூடிய பேராசையால் அலைச்சல் உண்டாக
ஊரில் கல்யாணமாம்; மார்பில் சந்தனமாம்'' இந்த பழமொழி கிராமத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும். அதாவது ஒருவருடைய சந்தோஷமான வாழ்க்கையை அவரது மார்பு ஸ்தானம் விளக்கும். இதுவே ஜோதிடத்தில் நான்காம் இடமாக போற்றப்படுகிறது. நான்காமிடம் ஒருவரது சொத்து, சுகம், வாகனம் என்று பொதுவாக அவருடைய செல்வச் செழிப்பான- சுகபோகமான செல்வங்கள் பதினாறும் பெற்று சிறப்பாக வாழும் தன்மையை எடுத்துரைக்கும். நான்காம் பாவம்தான் பெற்ற அம்மாவையும், அம்மாவின் அரவணைப்பையும் கூறும் இடமாகவும் உள்ளது. காலச் சக்கரத்தில் 4-ஆம் இடமான ராசியானது சந்திரனுக்குரியதாக விளங்குவதால்- சந்திரன் அம்மா காரகத்தையும் பெற்றிருப்பதால் இந்த இடம் ஒருவரது அன்பையும், பாசத்தையும் பொழியும் இடமாகவும் இருக்கிறது.
மன்னர்களின் மார்புப்பகுதியை அவர்களுடைய பெருந்தன்மையான, பராக்கிரமமான வளம்மிகுந்த, வீரம் செறிந்த வாழ்க்கையை பிரதிபலிலிக்கும் இடமாகக் குறிப்பிடுவார்கள். உதாரணமாக, என்னுடைய சிறிய வயதில் "வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் சிவாஜிகணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்திருப்பார். அவரது நடிப்பில் அவருடைய வீரம் செறிந்த மார்புப் பகுதியே இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது. அவரது மார்புப் பகுதி, பலரின் நினைவுகளில் பசுமையாகப் பதிந்திருக்கும்.
ஆக, ஒருவரது மார்புப் பகுதியில் திம்ப சக்கர ஜாதகத்தில் சந்திரன் கிரகம் அமைந்திருக்குமானால் அவரது வாழ்க்கை செழிப்பாகவும், சீரும் சிறப்புமாகவும் அமையும்.
சந்திரன் கிரகம் 4-ஆம் பாவத்திற்கு மட்டும் தொடர்பு பெற்று அமைந்திருக்குமானால் நாம் நினைத்தபடி வாழ்க்கை சீரும், சிறப்புமாக, சொத்து சுகங்களுடன் அமையும். இதே சந்திரன் 8, 12-ஆம் பாவங்களையும் தொடர்பு பெற்றிருப்பின் வாழ்க்கையில் மன சஞ்சலங்கள், பேதலிலிப்பு, சொத்தின்மீது உண்டாகக்கூடிய பேராசையால் அலைச்சல் உண்டாகி தொல்லைகளையும் கொடுக்கவல்லது. ஆகவேதான், சந்திரன் மார்பில் அமையப் பெற்றவர்கள் சந்திரன் கிரகத்தின் தன்மையைப் பொருத்து, வளரும் பாவங்களாகிய 1, 2, 3, 5, 7, 9, 11 பாவங்கள் தொடர்பு பெற்றிருப்பின் அவர்களின் வாழ்க்கையில் வளங்கள், செல்வங்கள் வளர்ந்து கொண்டு, செல்வத்துடன் அவர்கள் அன்புக்கு அடிமையாகியும் விடுவார்கள். கணவன், மனைவிமீது மிகவும் பாசத்துடன் இருப்பார்கள். ஒருவர்மீது பற்று ஏற்பட்டு விட்டால், பிறகு அவர்களை மறக்கவே மாட்டார்கள். இதுவே வளரா பாவங்களாகிய 4, 8, 10, 12-ஆம் பாவங்களைத் தொடர்பு கொண்டு இருப்பின், அவர்களுக்கு உயிர்ப்பற்று இல்லாமல் பொருட்பற்று அதிகம் உண்டாகி வீடு, வாகனம் போன்றவைகளில் மோகம் ஏற்பட்டு, அவற்றை அதிகமாகச் சேர்ப்பதில் ஈடுபட்டு தங்களை அலைக்கழித்துக் கொள்வார்கள். இதுவே சந்திரன் 6-ஆம் பாவத்தைத் தொடர்பு கொண்டிருந்தால் மற்றவர்கள் உதவியுடன் அவர்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும் நிலையும் ஏற்படும்.
மார்பில் குரு கிரகம் இருக்கப்பெற்றவர்கள் இறைவன்மீது அன்பைச் செலுத்துவார்கள். இவர்களே குருமார்களாக உருவாகும் தன்மையுடையவர்கள். இவர்கள் மற்றவர்களால் போற்றுதலுக்கு உரியவர்களாக விளங்குவார்கள். இவர்களுடைய இதயம் கருணையே உருவாக மாறும் தன்மையுடையதாகும்.
நெற்றியில் குரு இருப்பவர்கள் தெய்வீக அருள்பெற்று கடவுளின் உணர்வுகளை மற்றும் செய்திகளை மக்களுக்கு பரப்பக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் பொருள் பற்றாக்குறைமூலம் சில சிறுமைகள் ஏற்பட்டாலும், அவற்றால் இவர்கள் பெரிதாக பாதிப்படையமாட்டார்கள். அவர்களுக்கு வரும் துன்பங்கள் அதிக பாதிப்புகளை உண்டாக்காமல், வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும். முகத்தில் குரு இருப்பவர்கள் தங்களுடைய முகத்தில் ஒரு தேஜஸுடன் உலாவருவார்கள்.
அவர்கள் மற்றவர்களுக்கு அருள்வாக்கு, ஆன்மிக அறிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் நிழ்த்துபவர்களாக விளங்குவார்கள்.
அவர்களுடைய முகத்தில் விழித்தால் அன்றைக்கு எல்லாம் அனைத்தும் வெற்றியுடன் நடக்கும். தோளில் குரு இருப்பவர்கள் கோவில் எழுப்பி, கும்பாபிஷேகம் செய்யும் கொடுப்பினையுடையவர்கள். இவர்கள் கல்லூரிகளின் உரிமையாளர்களாகவும், பள்ளிக்கூடங்களை உருவாக்கும் மேன்மை பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறு குரு கிரகத்தின் மகிமைகளை சொல்லிலிக்கொண்டே போகலாம்.
மார்பில் சுக்கிரன் இருக்கப்பெற்றவர்கள் காதலிலில் ஈடுபட்டு வாழ்க்கையை வளமாக- சந்தோஷத்துடன் சுகமாகவும் அனுபவிக்கப் பிறந்தவர்கள். மார்பில் புதன் கிரகம் அமையப்பெற்றவர்கள் வணிகம்மூலம் வாழ்க்கையை மேம்படுத்தும் நிலை உடையவர்கள். இவர்கள் வியாபாரத்தில் ஜொலிப்பார்கள் இவர்கள் எப்பொழுதும் கணக்கு, தொலைபேசி, மெயில் என்று தங்களுடைய தொழில் ஊடகங்களின் துணையோடு பொழுதை வியாபார நோக்கத்திலேயே கழிப்பார்கள். தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள், அவ்வப்பொழுது நடக்கும் நிகழ்வுகளையும், செய்திகளையும் சேகரித்துக் கொண்டு அதற்குத் தகுந்தவாறு தங்களையும் தங்களது தொழிலாளர்களையும் தயார்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் என்று அதில் அதிக நேரம் செலவிடுவார்கள்.
அடுத்து செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற அசுப கிரகங்கள் மார்புப் பகுதியில் அமைந்தால்தான் சிக்கல் உண்டாகிறது. சுக்கிரன்+செவ்வாய் அமைந்தால் ஆண்களானால் பெண் பித்தர்களாகி விடுவார்கள். பெண்களாக இருந்தால் ஆண்கள்மீது மோகத்துடன் அலைவார்கள். சுக்கிரன்+செவ்வாய்+ராகு அமைந்தால் காமவெறியர்களாக மாறுவார்கள். சனி கிரகம் தனியாகவோ அல்லது மற்ற அசுப கிரகங்களுடன் கூட்டுச் சேர்ந்தோ அமைந்துவிடின் வாழ்க்கையில் படாத கஷ்டங்களையும் பட்டு வாழ்க்கையை ஓட்டும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். சனி+செவ்வாய்+ராகு சேர்ந்துவிடின் மற்றவர்களைக் கொலை செய்யவும் தயங்காதவர்களாகி விடுவார்கள்.
மார்பில் சந்திரன்+ராகு அமையுமானால் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் உண்டாவதற்கு வாய்ப்பு ஏற்படும். சந்திரன்+சுக்கிரன் அமையப்பெறின் அவர்களது மார்பு எடுப்பாகவும், மற்றவர்களுக்கு தாய்மைப் பருவத்தில் பால் சுரந்து உணவாகக் கொடுக்கவும் ஆயத்தமாவார்கள். இவ்வாறு மார்புப் பகுதியில் அமையும் கிரகங்கள் ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
இங்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். இந்த ஜாதகம் திம்பசக்கர ஜாதகம் ஆகும். இந்த ஜாதகத்தில், குரு கிரகம் 4-ஆம் இடமான மார்புப் பகுதியில் அமைந்திருப்பதைக் காணலாம்.
நான்காம் இடமாகிய மார்பு ஸ்தானத்தில் குரு இருப்பதால் மேற்கு வங்கத்தில் பிறந்த அவர் காளி தேவியையே தன்னுடைய அம்மாவாகவும், அம்மாவையே தெய்வமாகவும் வழிபட்டவர். காளிதேவியை உபாசனை செய்ததோடு காளிதேவியின் சந்நிதியிலேயே அர்ச்சகராகப் பணிபுரியும் வாய்ப்பை தனது அண்ணனுக்குப் பிறகு பெற்றவர். இவர் தன் கண்களில் பட்ட இயற்கை வளங்களை தெய்வங்களாக நேசித்தவர். "இயற்கையே அன்னை; அன்னையே தெய்வம்' என்று வாழ்ந்தவர். ஆங்கிலப் புலவர் வில்லிலியம் வோர்டுஸ்வொர்த் எழுதிய ஆங்கிலக் கவிதையில் "பழ்ஹய்ஸ்ரீங்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று விடைகாணுவதற்கு டாக்டர் வில்லியம் ஹஸ்டீ என்ற ஆங்கிலப் பாதிரியார் தங்களுடைய மாணவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரிடம் தக்ஷிணேஸ்வரத்தில் வசித்துவரும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திப்பாயாக என்று கூறினார். அதற்கிணங்க சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தபொழுது பழ்ஹய்ஸ்ரீங் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமான சமாதிநிலை அல்லது தனது நினைவிழந்து காளியே தெய்வமாக எண்ணி திளைத்ததைக் குறிக்கிறது. இதுவே ஒரு சுபகிரகம் 4-ஆம் இடத்தில் அமைந்திருப்பதன் மாபெரும் யோகமாகும்.
மேலும் 4-ஆம் இடம் மார்பு ஸ்தானம் தாயாரின் அன்பைப் பொழிவதால், சுவாமி அவர்கள் தன்னை ஒரு பெண் தெய்வமாக அடிக்கடி மாற்றிக்கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்ததாகவும், அவருடைய சீடர்களில் முதன்மையானவரான சுவாமி சாரதானந்தாவினுடைய சுய சரிதையிலிலிருந்து அறியலாம்.
இவர் தனக்கு மனைவியாகத் திருமணம் செய்து வைத்த அன்னை சாரதாதேவியை மனைவியாக ஒருபோதும் நினைக்கவில்லை. தன்னுடைய தெய்வமாகவே போற்றி வாழ்ந்தவர். அதன்காரணமாகவே அன்னை அவர்கள் ராமகிருஷ்ணருக்குப் பிறகு 34 வருடங்கள் அவருடைய புகழை உலகம் முழுவதும் பரப்பினார்கள்.
குரு கிரகம் என்பது இருக்கின்ற ஒன்பது கிரகங்களுக்குள் மிகப்பெரியது. அத்தகைய பிரம்மாண்டமாய்ப் போற்றப்படுகிற குருவானது 12-ஆம் இடமாகிய, சாதனை படைக்கக்கூடிய இடமாகிய பாதத்தில் செவ்வாய் கிரகம் உச்சம் பெற்ற நிலையில் தனது 9-ஆம் பார்வை செய்ததால், அவருக்கு இத்தகைய உயர்ந்த ஸ்தானமான மகான் என்ற அந்தஸ்துடன், அவரது சீடர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தர்மூலம் அவரது புகழ் உலகெங்கும் பரவியது என்றால் அது மிகையாகாது.
மார்பில் அசுப கிரகங்களான சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் அமையப் பெற்றவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் செழிப்பில்லாமல்- பொருள் இருந்தால் சந்தோஷம் இருக்காது, சந்தோஷம் இருந்தால் பொருள் இல்லாமல் வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்து மனநிம்மதி இல்லாமல் கஷ்டப்படுபவர்கள். இவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் உருவப்படத்தை மனதார வணங்கிவர அவர்களுக்கு மார்பில் உள்ள அசுபகிரகங்களால் உண்டாகும் தொல்லைகள் அனைத்தும் தொலைந்து சுகத்தைக் காண்பார்கள்.
மார்பில் கேது, ராகு தனித்தோ அல்லது சனி, செவ்வாயுடன் கூட்டு சேர்ந்தோ இருக்கப் பெற்றவர்கள் மார்பில் புற்றுநோய் உண்டாகும் நிலையும் உருவாகும். அவர்களும் சுவாமி ஸ்ரீராமகிருஷ்ணரின் உருவப்படத்தை வணங்குவதுடன், ரத்ததானம் செய்து வந்தாலும் வருங்காலத்தில் இதயநோயோ அல்லது ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களோ அணுகாமல் காப்பாற்றப்படுவார்கள்.
செல்: 91767 71533