பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தளம் ஆகிய ஊடகங்களில் ஒருவர் பிரகாசிப் பதற்கு, அவரது ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்போது அவருடைய சிந்தனை கள் ஆழமானதாக இருக்கும். ஜாதகத்தில் புதன் கேந்திரத்திலோ உச்சத்திலோ இருந்தால், அவர் எல்லா விஷயங்களையும்பற்றி கேள்வி கேட்டுக்கொண்டேயிருப்பார்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 2 அல்லது 5 அல்லது 9-ல் இருந் தால், பளபளப்பான உலகில் மறை முகமாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்களைப் புலனாய்வு செய்து எழுதக்கூடிய வராக இருப்பார்.
4-ஆம் பாவத்தில் சூரியன், புதன், 5-ல் சுக்கிரன், 11-ல் சந்திரன் இருந்தால், அவர் பத்திரிகைத் துறையிலும், திரைப்பட உலகிலும் முழுமையாக ஈடுபட்டு, பல சாதனைகளைச் செய்வார்.
லக்னத்தில் சூரியன், புதன், 2-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய் இருந்தால், அவர் கடுமையாக உழைத்து, தான் கற்றவற்றைப் பிறருக்கும் கற்றுத்தருவார். அதே ஜாதகத்தில் சந்திரன் 5 அல்லது 9-ல் இருந்தால், அவர் புலனாய்வு செய்து பல விஷயங்களைக் கண்டுபிடித்து எழுதுவார்.
11-ல் சந்திரன், லக்னத்தில் செவ்வாய், 3-ல் சூரியன், புதன், 9-ல் குரு இருந்தால், அந்த ஜாதகர் பத்திரிகை ஆசிரியராகவோ, தொலைக்காட்சி யில் செய்தி ஆசிரியராகவோ இருப்பார்.
லக்னத்தில் சந்திரன், 2-ல் சனி, ராகு, 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன், புதன், 7-ல் சுக்கிரன் இருந்தால், அவர் ஊடகத்துறையில் புகழுடன் இருப்பார். பத்திரிகை ஆசிரியராக விளங்க வாய்ப்பிருக்கிறது.
லக்னத்தில் புதன், சந்திரன், 2-ல் செவ்வாய், சுக்கிரன், 3-ல் கேது இருந்தால், அந்த ஜாதகர் ஊடகத்துறையில் புலனாய்வு செய்து, பல விஷயங்களைக் கண்டுபிடிப்பதில் நிபுணராக இருப்பார்.
லக்னத்தில் உச்ச புதன், 2-ல் சூரியன், 3-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்தால், அவர் பல ரகசியங் களைக் கண்டுபிடித்து ஊடகங்களின்மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துவார். பல அரசியல் வாதிகளின் உண்மைத்தன்மையை மக்களுக்குத் தோலுரித்துக் காட்டுவார். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் அளவுக்கு ஊடகத் துறையில் திறமைகளை வெளிப்படுத்துவார்.
லக்னத்தில் சூரியன், புதன், 2-ல் செவ்வாய், 3-ல் ராகு இருந்தால், அந்த மனிதர் கடுமையாக உழைத்து பல உண்மைகளைக் கண்டுபிடிப் பார். அவற்றை பத்திரிகைகளில் எழுதி, சிறந்த பெயர் பெறுவார்.
லக்னத்தில் சூரியன், 2-ல் செவ்வாய், 6-ல் சனி, 10-ல் சந்திரன் இருந்தால், அவர் பல இடங் களுக்குச் சென்று, தனக்குத் தெரிந்த விஷயங் களை நூலாக எழுதுவார். அவருக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். 6-ல் சனி இருப்பதால், எதையும் உறுதியாக வெளிப்படுத்துவார்.
லக்னத்தில் சூரியன், சந்திரன், 2-ல் செவ் வாய், 3-ல் ராகு, 6-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஆழமான சிந்தனை கொண்டவர்.
அதன்மூலம் யாருக்கும் தெரியாத பல உண்மை களைக் கண்டுபிடித்து, மக்களுக்குத் தெரியப் படுத்தி நல்ல பெயர் பெறுவார்.
லக்னத்தில் செவ்வாய், 2-ல் கேது, 7-ல் சனி, 8-ல் ராகு, 9-ல் சூரியன், புதன், 10-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் யாருடனும் நெருங் கிப் பழகமாட்டார். யாரையும் சந்தே கத்துடனே பார்ப்பார். மறைமுகமான பல விஷயங்களைக் கண்டுபிடித்து ஊடகத்தில் வெளிப்படுத்துவார்.
லக்னத்தில் சந்திரன், 5-ல் புதன், 9-ல் குரு, ராகு இருந்தால், அந்த ஜாதகர் ஊடகத் துறையில் உயர்ந்த பதவியில் இருப்பார். பல உண்மைகளையும் கண்டுபிடித்து மக்களிடம் வெளிப்படுத்தக்கூடியவராக இருப்பார். லக்னத்தில் சுக்கிரன், குரு, 2-ல் செவ்வாய், 6-ல் சனி, 9-ல் ராகு இருந்தால், அவர் பத்திரிகை ஆசிரியராகவோ, உரிமையாளராகவோ இருப்பார்.
லக்னத்தில் சந்திரன், சூரியன், 2-ல் புதன், 5-ல் குரு, 9-ல் சனி இருந்தால், அவர் பத்திரிகை ஆசிரியராவோ, செய்தி ஆசிரியராகவோ முத்திரை பதித்து புகழுடன் இருப்பார்.
பரிகாரங்கள்
தினமும் ஆஞ்சனேயரை வழிபட வேண்டும். அரச மரத்திற்கு நீர் வார்க்க வேண்டும். விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அவரை நான்குமுறை சுற்றிவந்து வணங்க வேண்டும். வீட்டின் வடக்கு, வடமேற்குப் பகுதி தூய்மையாக இருப்பது அவசியம். தெற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும். அலுவல கத்தில் கிழக்குநோக்கி அமர்வது நன்று. ஞாயிற்றுக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி வழிபடுவது சிறந்தது.
அமாவாசையன்று துர்க்கைக்குப் பூஜை செய்தால் காரிய வெற்றி உண்டாகும்.
செல்: 98401 11534