சொந்த வீடு என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கக்கூடிய லட்சியமாகும். எலிலி வளையானாலும் தனிவளை வேண்டுமென விரும்புபவர்களே அதிகம்.
எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு சொந்த வீடு கட்டியோ, வாங்கியோ விடவேண்டு மென்பது அனைவரின் கனவாகும். இந்த யோகம் எல்லாருக்கும் அமையுமா என்றால் அதற்கு விடைகூற முடியாது. கற்பனைகள் கனவா கவே முடிந்து விடுவதும் உண்டு.
சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக்கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். சிலர் சிறுகச் சேமித்து சொந்த வீட்டிற்கு அதிபதியாகிவிடுகிறார்கள்.
இப்படி சொந்த வீடு அமைய ஜாதகரீதியாக 4-ஆம் பாவம் பலமாக அமைந் திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் என்றும் குறிப் பிடுகிறோம். ஜென்ம லக்னத் திற்கு 4-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலமான வீடு யோகமும், அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். 4-ஆம் அதிபதி கேந்திர ஸ்தானமான 1, 4, 7, 10-ஆம் அதிபதிகளுடன் இணைந்து அமையப்பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5, 9-ஆம் அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும், சுப ஸ்தானமான 2, 11-க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.
4-ஆம் அதிபதியும், 4-ஆம் வீட்டையும் குரு போன்ற சுபகிரகம் பார்வை செய்வது நல்லது. 4-ஆம் வீட்டதிபதி பலம்பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தா
சொந்த வீடு என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கக்கூடிய லட்சியமாகும். எலிலி வளையானாலும் தனிவளை வேண்டுமென விரும்புபவர்களே அதிகம்.
எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு சொந்த வீடு கட்டியோ, வாங்கியோ விடவேண்டு மென்பது அனைவரின் கனவாகும். இந்த யோகம் எல்லாருக்கும் அமையுமா என்றால் அதற்கு விடைகூற முடியாது. கற்பனைகள் கனவா கவே முடிந்து விடுவதும் உண்டு.
சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக்கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். சிலர் சிறுகச் சேமித்து சொந்த வீட்டிற்கு அதிபதியாகிவிடுகிறார்கள்.
இப்படி சொந்த வீடு அமைய ஜாதகரீதியாக 4-ஆம் பாவம் பலமாக அமைந் திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் என்றும் குறிப் பிடுகிறோம். ஜென்ம லக்னத் திற்கு 4-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலமான வீடு யோகமும், அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். 4-ஆம் அதிபதி கேந்திர ஸ்தானமான 1, 4, 7, 10-ஆம் அதிபதிகளுடன் இணைந்து அமையப்பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5, 9-ஆம் அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும், சுப ஸ்தானமான 2, 11-க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.
4-ஆம் அதிபதியும், 4-ஆம் வீட்டையும் குரு போன்ற சுபகிரகம் பார்வை செய்வது நல்லது. 4-ஆம் வீட்டதிபதி பலம்பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன்மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அதுபோல பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று பலமாக 4-ல் அல்லது 4-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி, பூமியுடன்கூடிய வீட்டை வாங்கும் யோகமும் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
4-ஆம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகிறதோ, 4-ஆம் அதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கைப் பெறுகிறதோ, 4-ஆம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கிறதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.
வீட்டின் அமைப்பு
ஒருவருக்கு சொந்த வீடு அமையக்கூடிய யோகம் உண்டானாலும், அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனையும் 4-ஆம் பாவத்தின்மூலம் அறியலாம். சிலருக்கு மாட மாளிகையும், உயரமான கட்டடங்களில் வசிக்கும் யோகமும், சிலருக்கு ஓட்டுவீடு, குடிசைவீடு என அவரவர் 4-ஆம் பாவத்தில் உள்ள கிரகங்களுக்கேற்றவாறு வீடுகள் அமையும்.
சூரியன், கேது 4-ஆம் வீட்டிலிருந்தால் அமையக்கூடிய வீடானது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உறுதித் தன்மையற்றதாக இருக்கும். சந்திரனிருந்தால் அழகான புதிய வீடு அமையும், சுக்கிரன் இருந்தால் மிகவும் அம்சமான வீடு அமையும். குரு இருந்தால் மிகவும் உறுதியான, தரம்மிக்க வீடு அமையும்.
புதிய வீடும் கட்டக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் இருந்தால் வீட்டில் விரிசல்கள் உண்டாகக்கூடிய நிலை, சில நேரங்களில் வீட்டிற்குத் தீயால் பாதிப்புகள் உண்டாகும். சனி, ராகு அமையப் பெற்றாலோ, 4-ஆம் வீட்டையோ, 4-ஆம் அதிபதியையோ, சனி, ராகு பார்த்தாலோ பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
யார் மூலம் சொத்து?
ஜாதகத்தில் 5-ஆம் பாவமானது பூர்வீகத்தைப் பற்றிக் குறிப்பிடுவதாகும். என்றா லும் பூர்வீக வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாக 4, 5-க்கு அதிபதிகள் பரிவர்த்த னைப் பெற்றிருந்தாலோ, 4, 5-க்கு அதிபதி கள் இணைந்திருந்தாலோ, 4, 5-க்கு அதிபதி களிடையே பலமான தொடர்பு ஏற்பட்டிருந் தாலோ பூர்வீக வழியில் வீடு யோகம் உண்டாகும்.
தந்தை
நவகிரகங்களில் சூரியன் தந்தை காரகனா வார். 9-ஆம் இடம் தந்தை ஸ்தானம். 4, 9-க்கு அதிபதிகள் பலமாக அமைந்து, சூரியனும் பலமாக இருந்தால் தந்தைவழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். 4, 9-க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதும், 4-ஆம் அதிபதி 9-ல் அமைந்து 9-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருப்பது போன்றவற்றாலும் தந்தைவழியில் அசையாச் சொத்து யோகம் ஏற்படும்.
தாய்
நவகிரகங்களில் தாய்க்காரகன் சந்திரனா வார். ஒருவர் ஜாதகத்தில் 4-ஆம் அதிபதி பலமாக அமைந்து தாய்க்காரகன் சந்திரனும் பலமாக இருந்தால் தாய்மூலம் அசையாச் சொத்து யோகம் அமையும்.
உடன்பிறந்தோர்
நவகிரகங்களில் சகோதரகாரகன் செவ்வாய் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் 3, 11-க்கு அதிபதிகள் பலமாக அமையப்பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ அமைந்து, செவ்வாயும் பலமாக இருந்தால் உடன்பிறந்த சகோதரர்கள்மூலம் பலமான வீடு யோகம் உண்டாகும். அதுவே பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் பலமாக இருந்தால், உடன்பிறந்த சகோதரிகள்மூலம் வீடு யோகம் கிட்டும்.
திருமணத்தின்மூலம் சொத்து யோகம்
ஒருவருடைய ஜாதகத்தில் 7-ஆம் பாவம் திருமண வாழ்வுபற்றிக் குறிப்பிடுவதாகும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 4, 7-க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றிருந்து, இருவருக்குமிடையே பலமான தொடர்பு ஏற்பட்டிருந்தால்- அதாவது பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலோ, சேர்க்கைப் பெற்றிருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ திருமண பந்தத்தின்மூலம் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி இருவரும் சேர்ந்து கூட்டாக சொத்துகள் வாங்கி மேன்மேலும் அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்.
மற்றவர்கள் பெயரில் சொத்து (பினாமி)
ஒருவரின் ஜனன ஜாதகத்திலுள்ள பலமான கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில்தான் வீடு, மனை, அசையாச் சொத்து யோகம் உண்டாகும். சிலருக்கு 4-ஆம் அதிபதி பலவீனமாக இருந்தாலோ, நடைபெறக் கூடிய தசாபுக்தி சாதகமற்று இருந்தாலோ, அவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தைச் சொத்தாக மாற்றக்கூடிய யோகம் இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் பலமாக அமையப் பெற்றிருக்கிறதோ, அந்த கிரகத்திற்குரிய நபர்களின்மீது சொத்துகள் வாங்கும்போது, அதன்மூலம் அபிவிருத்தி, முன்னேற்றம் உண்டாகும்.
சூரியன், குரு போன்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் தந்தை, குடும்பத்தில் மூத்தவர்களின் பிள்ளைகள் பெயரில் சொத்து வாங்குவது சிறப் பைத் தரும். செவ்வாய் பலமாக இருந்தால் உடன்பிறந்தவர்கள் பெயரிலும், சுக்கிரன், சந்திரன் பலமாக இருந்தால் பெண்கள் பெயரிலும் சொத்துகள் வாங்குவது நல்லது. புதனிருந்தாலும் உறவினர்கள் பெயரிலோ, தொழில் செய்யக்கூடிய நிறுவனத்தின் பெயரிலோ முதலீடு செய்வது நல்லது. சனி பலமாக இருந்தால் வேலையாட்களால் பலவிதத்தில் ஆதாயம் அடைவார்கள்.
எப்பொழுது சொத்து அமையும்?
ஒருவருக்கு 4-ஆம் அதிபதி பலம் பெற்றிருந்து அதனுடைய தசை அல்லது புக்தி நடைபெற்றாலும், 4-ல் பலமாக அமையப் பெற்ற கிரகத்தின் தசை அல்லது புக்தி நடை பெற்றாலும், சுக்கிரனின் தசை அல்லது புக்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அசையாச் சொத்து யோகம் உண்டாகும்.
சொத்துகளால் பிரச்சினை
ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத் திற்கு 6-ஆம் பாவமானது கடன், வம்பு, வழக்கு களைக் குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். 6-ஆம் அதிபதி 4-ல் அமைந்திருந்தாலும், 4, 6-க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 6-ஆம் அதிபதியின் சாரம் பெற்று 4-ஆம் அதிபதி இருந்தாலும் சொத்துகளால் பிரச்சினை, வம்பு, வழக்கு, கடன் தொல்லைகள் உண்டாகும்.
வீடு, மனை யோகம் இல்லாத அமைப்பு
ஒருவர் ஜாதகத்தில் 4-ஆம் அதிபதி 6, 8, 12-ல் மறைவு பெற்றிருந்தாலும், பாதக ஸ்தானத் தில் அமையப் பெற்றிருந்தாலும், சனி போன்ற பாவகிரகங்கள் பார்வை செய்தாலும் சொந்த வீடு அமையத் தடை உண்டாகும். 4-ஆம் அதிபதி நீசம், அஸ்தங்கம், பாவிகளின் சேர்க்கைப் பெற்றி ருந்தால் வீடு, அசையா சொத்துகள் அமையாது.
செல்: 72001 63001