சென்ற இதழ் தொடர்ச்சி...
தொழிலை நான்குப் பிரிவாகப் பிரிக்கலாம்.
1. தொழில் அல்லது உத்தியோகத்தில் நிலைத்து நிற்பது
ஒருசிலருக்கு எந்தத் தொழில் செய்தாலும் பன்மடங்காகப் பெருகிக்கொண்டே இருக்கும். பரம்பரை பரம்பரையாகத் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப் பார்கள். உலக நடப்பிற்கேற்ப புதிய தொழில் களாக உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தொழிலைக் கண்டுபிடித்தார்களா அல்லது தொழில் இவர்களைக் கண்டுபிடித்ததா என்று வியக்குமளவிற்கு தொழில்துறையில் வெற்றிவாகை சூடுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனியே வராதோ என்றெண்ணுமளவிற்கு ஏற்றம் மிகுதி யாக இருக்கும். உத்தியோகமாக இருந்தால்- அரசு அல்லது தனியார்துறை என எந்த வேலை யாக இருந்தாலும், வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் ரிட்டயர்மென்ட்வரை ஒரே வேலை யிலிருந்து பெரும் பாராட்டு, புகழ்பெறுவார்கள்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய பூர்வஜென்ம புண்ணிய, பாக்கிய ஸ்தான வலிமைக்கேற்ப அமைகிறது. மனிதன் இப்பிறவி யில் அனுபவிப்பதெல்லாம் அவனுடைய கர்மப் பலன்களேயாகும். இந்த கர்மப் பலன்களைக் கொடுக்கும் கிரகம் கர்மகாரகன் சனி. இந்த பலன்களை அனுபவிப்பது ஜீவாத்மா. ஜீவாத் மாவைக் குறிக்கும் கிரகம் தர்மகாரகன் குரு. ஆக, தர்மாதிபதி குருவும், கர்மாதிபதி சனியும் சம்பந்தம் பெற்று, ஜனனகால ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமையப்பெற்றவர்களின் விருப்பமும், அவர்கள் அனுபவிக்கப்போகும் கர்மப் பலன்களும் ஒன்றாக இருக்கும். அவர்கள் நினைப் பதுபோலதான் நடக்கும். செவ் வாய் சம்பந்தம் இருக்கக்கூடாது. உலகப் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் களுக்கு இந்த அமைப்பு நிச்சயம் இருக்கும்.
2. நிலையான வருமானமற்ற தொழில்
இத்தகைய பிரிவினருக்கும் தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும். இந்த அமைப்பிற்கு செவ்வாய் சம்பந்தமிருக்கும் அல்லது குருவோ சனியோ பலவீனமாக இருக்கும். சொல்லாலும் செயலாலும் ஒன்றாக இருக்கமுடியாது. ஆறு மாதம் தொழில், ஆறு மாதம் உத்தியோகம் என எந்த வேலையையும் முறைப்படுத்தமுடியாமல் இருப்பார்கள். இவர்களிடம் போதிய திறமை யிருந்தும் அதை செயல்படுத்தமுடியாத மனநிலையில் வாழ்வார்கள். வருமானம் ஏற்ற- இறக்கமாகவே இருக்கும்.
3. அதிர்ஷ்டத்தை நம்பிப் பிழைப்பவர்கள்
தொழில் அல்லது உத்தியோகம் குறித்த எந்த ஞானமும் இருக்காது. தொழிலின் ஆழம் தெரியாமல் காலைவிட்டு அடுத்தவர்மீது குற்றங் குறைகூறிப் பிழைப்பவர்கள். இவர்களுக்கு குருவும் சனியும் 6, 8, 12-ஆக இருக்கும். இந்தப் பிரிவினருக்கு எந்த வேலை செய்தாலும், தொடர்ந்து தடைகள் உண்டாகும். பணவரவு தடைப்படும். தொழிலில் ஸ்திரத் தன்மை இருக்காது. நண்பர்கள் பகைவர்களாவார்கள். கொடுத்த பணம் வராது. கிடைக்கவேண்டிய நியாயமான விஷயங் கள்கூட தடைப்படும். தாயத்து, மந்திர தந்திரம், எந்திரம் என எந்த குட்டிக்கரணம் போட்டாலும் துரும்பைக்கூட அசைக்கமுடியாது. குரு, சந்திரன் சம்பந்தமிருந் தால் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.
4. குறுகியகால தொழில் வளர்ச்சி
மேலும் ஒரு பிரிவினருக்கு தொழில் ஒரு குறுகியகால வளர்ச்சியைக் கொடுக்கும். மிகப் பெரிய தொகையைக் குறுகியகாலத்தில் சம்பா திப்பார்கள். சம்பாதித்த பணத்தை முழுமை யாக அனுபவிக்கும்முன்பு சம்பாதித்ததைவிட அதிகமான இழப்பு ஏற்பட்டு கடனாளியாகிவிடு வார்கள். இவர்களின் தொழில் குறுகியகாலத் திற்கு மட்டுமே இருக்கும். மறுபடியும் தொழிலை நினைத்துக்கூட பார்க்கமுடியாதவகையில் இழப்பு நரகவேதனையைக் கொடுக்கும். மேலேகூறிய இந்த நான்குப் பிரச்சினைகளுக்கும் சனி பகவான்தான் காரணம். ஆனால், இங்கே பிரதானப்படுத்த விரும்புவது ஏழரைச் சனி, அஷ்டமச்சனியின் தாக்கம் பற்றிய கருத்துகள்தான்.
ஏழரைச்சனி
ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன் நின்ற ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் ஏழரைச்சனியாகும். இந்த மூன்று வீடுகளிலும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரையாண்டுகள், அழைக்காத விருந்தாளியாக வந்து தங்கிவிட்டுப்போகும் காலகட்டமே ஏழரைச்சனியாகும். ஏழரைச் சனியின் முதல்பகுதியை விரயச்சனி என்பார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ownbusiness.jpg)
பணநஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகள் என நஷ்டமாகவே அக்காலம் இருக்கும். அடுத்த பகுதியை ஜென்மச்சனி என்பார்கள். அதாவது, ராசியை சனி பகவான் கடந்துசெல்லும் காலம். இந்த காலகட்டங்களில் மனப்போராட்டமாக இருக்கும். மன உளைச்சலாக இருக்கும். அடுத்த பகுதியை கழிவுச்சனி என்பார்கள். இந்த கால கட்டம், கடந்துபோன ஐந்தாண்டுகளைவிட சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.
அஷ்டமச்சனி
ஒருவரது ராசிக்கு எட்டாமிடத்தில் கோட்சார சனி வருவதுதான் அஷ்டமச்சனி. அஷ்டமச்சனியில் தொட்டது துலங்காது. அஷ்டமச்சனிக் காலத்தில் பூர்வீகத்தைவிட்டு இடம்பெயர நேரும். பிரச்சினைகளில் சிக்கி பழியேற்க நேரும். புத்தி தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். புத்தி வேலை செய்யாது. ஆனால் உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். ஏழரைச்சனி ஏழரை ஆண்டுகளில் செய்யும் வேலையை அஷ்டமச்சனி இரண்டரை வருடத்தில் செய்து முடித்துவிடும். அஷ்டமச்சனியைக் கடந் தவர்கள் ஞானிபோன்று நிதானமாகவும், யதார்த்தமாகவும் பேசுவார்கள்.
ஏழரைச்சனியும் அஷ்டமச்சனியும் எல்லாரையும் பாதிக்குமா?
மூன்று சுற்று ஏழரைச்சனி, அஷ்டமச் சனியைக் கடந்தவர்கள் பலர், எந்த பதட்டமும் இல்லாமல், நிதானமாக, சனி பகவான் என்றால் யாரென்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். மூன்று சுற்றிலும் அடிவாங்கி ரணவேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞானமார்க்கத்திற்கு, முக்திக்கு வழிதேடிச் சென்றவர்களும் இருக் கிறார்கள்.
லக்னம் வலிமை பெற்றவர்களையும், சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களையும், தர்மகர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. இந்த வாக்கியத்தைப் படித்தவுடன் பல வாச கர்கள் தங்களது ஏழரைச்சனி, அஷ்டமச் சனிக்கால தாக்கத்தைப் பற்றிக் கூறுவார்கள். மேலே கூறிய அமைப்புகள் இருந்தும், ஜாத கத்தில் சாதகமான தசாபுக்தி இல்லாமல் போனாலும், குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும்.
இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுக்தி இருந்தால், சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை, தாமதம், பணவிரயம், பண இழப்பு, தவறான தொழில் முதலீடுசெய்து பாதிப்படைகிறார்கள். அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்கள்கூட மிகச்சா தாரணமாக கண்ணிமைக்கும்முன் தொழிலில் சரிசெய்யமுடியாத இழப்பை சந்திக்கிறார்கள்.
இதனால் தொழிலைவிட்டு விலகவும் முடியாமல், தொழிலைத் தொடரவும் முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளா கிறார்கள். தொழிலாளர்களுக்கும் முதலீட் டாளர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக, தொழிலாளிகள் வேலைக்குச் செல்லாமல் முதலீட்டாளர்கள்மீது வழக்குத் தொடர்ந்து, முதலீட்டாளர்களுக்கு தொழில் முடக்கமும், தொழிலாளர்களுக்கு வேலை யிழப்பு வழக்கும் மிகுதியாகுகிறது.
மேலும் ராசிக்கு 3, 6, 11-ல் சனி வரும்போது பல புதிய எண்ணங்கள் உதயமாகும். பல புதிய தொழில் முனைவோர் உருவாவார்கள். மிகக் குறுகிய காலத்தில் வாழ்வில் பார்க்கமுடியாத பெரிய பணத்தை சம்பாதிக்கிறார்கள். ஏழரைச் சனி, அஷ்டமச்சனி ஆரம்பித்தவுடன், வாழ்நாளில் மீளமுடியாத இழப்பை சந்திக்கநேருகிறது. புதிய தொழில்முனைவோர், பெரிய தொழில் முதலீடு செய்பவர்கள் சுயஜாதக ஆலோசனைக்குப் பிறகே தொழில் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
சனி பகவானால்தான் நம் அறிவுக்கும் சக் திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக் கின்றன என்பதை உணர்வோம். "நம்ம கையில எதுவும் இல்ல'’என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். எல்லாருக்கும், எல்லாப் பணிகளிலும் பிறருக்கு உதவியாக இருந்தால் சனி பகவான் உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். மனசாட்சியைமீறி எதைச் செய்தாலும் சனியின் பாதிப்பிற்காளாக நேரும். நமது மனசாட்சிதான் சனி பகவான்; சனி பகவான்தான் நமது மனசாட்சி.
பரிகாரங்கள்
பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்கு வோர், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றவர்களுக்குச் செய்யும் உதவிகள் நல்ல பலன் தரும்.
சனிக்கிழமை விரதமிருந்து, பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவரை வணங்கிவரலாம்.
தினமும் ராமநாமம் ஜெபித்துவந்தால் சனி பகவானின் தாக்கம் குறையும்.
திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு அன்னதானம் செய்யவேண்டும்.
சனிப் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடலாம்.
தொழிலாளிகள், வேலையாட்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள் சனியின் நட்சத் திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாட்களில் சிவ வழிபாடு, அன்னதானம் செய்வது சிறப்பு.
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/ownbusiness-t.jpg)