மனிதனை சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கச்செய்வது தொழில். ஆண்கள், பெண்கள் அனைவருக்குமே சவால்விடும்வகையில் நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகிவருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று அரசு, தனியார் வங்கிகள் தொழில் கடன் கொடுப்பதால், பலர் சொந்தத் தொழில்செய்ய முன்வருகின்றனர்.
சிறிய பெட்டிக்கடைமுதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள்வரை, அனைவரும் தொழிலில் சாதனை செய்யவேண்டுமென்ற ஆர்வத் துடனே தொழில் தொடங்குகிறார்கள்.
ஒருவருக்கு சொந்தத் தொழில் கைகொடுக் குமா என்பதை ஜனனகால ஜாதகத்தின்மூலம் எளிதில் கண்டறியமுடியும். அதன்படி, காலபுருஷ 10-ஆமிடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்வார். சனிக்கு கர்மக்காரகன் என்று பெயர். அவரவர் கர்மவினைப்படி, பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப ஒருவருக்கு நன்மை- தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவர், சனியால் யோகப் பலன்கள் அனுபவிக்கவேண்டுமென்று ஜாதகத்தில் இருந்தால், அவரை எந்த உயரத்திற்கும் கொண்டுசெல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்குண்டு. ஒருவருக்கு கெட்டநேரம் வந்துவிட்டால், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி- என்ன நடக்கிறதென்று அவர் யூகிக்கும்முன்பே எல்லாம் நடந்துமுடிந்திருக்கும். அதாவது, தொழில் மற்றும் உத்தியோகத்திற்குக் காரகன் சனி என்பதால், சனியோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவத் தொழிலே ஜாத கருக்கு அமையும்.
சனியோடு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங் கள் சம்பந்தம் பெற்றால், எந்த கிரகத்தின் தொழிலை ஜாதகர் செய்தால் மேன்மை யடையமுடியும் என்னும் சந்தேகம் தோன் றும். ஷட்பல நிர்ணயத்தில் எந்த கிரகம் வலிமை பெறுகிறது என்பதை நிர்ணயம் செய்யவேண்டும். வலுவான கிரகத்தின் காரகத்துவத் தொழில் ஜாதகரை இயக்கும். வலுவற்ற கிரகங்களின்
மனிதனை சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கச்செய்வது தொழில். ஆண்கள், பெண்கள் அனைவருக்குமே சவால்விடும்வகையில் நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகிவருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று அரசு, தனியார் வங்கிகள் தொழில் கடன் கொடுப்பதால், பலர் சொந்தத் தொழில்செய்ய முன்வருகின்றனர்.
சிறிய பெட்டிக்கடைமுதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள்வரை, அனைவரும் தொழிலில் சாதனை செய்யவேண்டுமென்ற ஆர்வத் துடனே தொழில் தொடங்குகிறார்கள்.
ஒருவருக்கு சொந்தத் தொழில் கைகொடுக் குமா என்பதை ஜனனகால ஜாதகத்தின்மூலம் எளிதில் கண்டறியமுடியும். அதன்படி, காலபுருஷ 10-ஆமிடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்வார். சனிக்கு கர்மக்காரகன் என்று பெயர். அவரவர் கர்மவினைப்படி, பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப ஒருவருக்கு நன்மை- தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவர், சனியால் யோகப் பலன்கள் அனுபவிக்கவேண்டுமென்று ஜாதகத்தில் இருந்தால், அவரை எந்த உயரத்திற்கும் கொண்டுசெல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்குண்டு. ஒருவருக்கு கெட்டநேரம் வந்துவிட்டால், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி- என்ன நடக்கிறதென்று அவர் யூகிக்கும்முன்பே எல்லாம் நடந்துமுடிந்திருக்கும். அதாவது, தொழில் மற்றும் உத்தியோகத்திற்குக் காரகன் சனி என்பதால், சனியோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவத் தொழிலே ஜாத கருக்கு அமையும்.
சனியோடு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங் கள் சம்பந்தம் பெற்றால், எந்த கிரகத்தின் தொழிலை ஜாதகர் செய்தால் மேன்மை யடையமுடியும் என்னும் சந்தேகம் தோன் றும். ஷட்பல நிர்ணயத்தில் எந்த கிரகம் வலிமை பெறுகிறது என்பதை நிர்ணயம் செய்யவேண்டும். வலுவான கிரகத்தின் காரகத்துவத் தொழில் ஜாதகரை இயக்கும். வலுவற்ற கிரகங்களின் காரகத்துவத் தொழில் உபதொழிலாக அமையலாம். சனியோடு எந்த கிரகமும் சம்பந்தம் பெறாதவர்கள் அடிமைத்தொழில் செய்யநேரும்.
அதாவது 10-ஆமிடம், 10-ஆம் அதிபதி, 10-ஆம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10-க்குடையவன் நின்ற ராசி, சனிக்கு 10-ஆமிடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலைத் தீர்மானிக்கின்றன.
சொந்தத் தொழில் யார் செய்யலாம்?
லக்னம், லக்னாதிபதி வலிமை பெறவேண்டும். லக்னம் வலிமை பெற்றவர்களின் செயல்பாடே சிறப்பாக இருக்கும். பத்தாம் அதிபதியும், பத்தாமிடமும் பலம்பெற்று கேந்திர- திரிகோண சம்பந்தமிருந்தால் சொந்தத் தொழில் செய்யலாம்.
பத்தாம் இடத்தை குரு போன்ற சுபகிரகம் பார்க்கவேண்டும் அல்லது பத்தாம் அதிபதியை குரு பார்க்கவேண்டும்.
பத்தாம் அதிபதி உச்சம்பெற்று சுபகிரகத் தால் பார்க்கப்பட்டாலும், பத்தாம் இடத்தில் உச்சம்பெற்ற சுபகிரகங்கள் இருந்தாலும் தொழிலால் செல்வாக்கு, புகழ்பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். 2, 11-ஆம் அதிபதிகள் பலம்பெற்றால் சொந்தத் தொழில் செய் யலாம், பெரும் லாபம் கிடைக்கும்.
சொந்தத் தொழில் யாருக்கு அமையாது?
சனியோடு சம்பந்தம்பெறும் கிரகத்திற்கு ராகு- கேது சம்பந்தம் இருந்தால், ஏற்ற- இறக்கம் மிகுதியாகும்.
பத்தாம் அதிபதி பகை, நீசம்பெற்று, பாவிகள் சேர்க்கை பெற்று பலங்குன்றி இருந் தால், நல்ல தொழில் அமையாது.
பத்தாம் வீட்டில் 6, 8, 12-ஆம் அதிபதிகள் இருந்தாலும், பத்தாம் அதிபதி 6, 8, 12-ல் இருந்தாலும் சொந்தத் தொழில் செய்யக்கூடாது.
பத்தாம் இடத்திற்கு வக்ர கிரகங்கள் சம்பந்தமிருந்தால், தொழிலில் ஏற்ற இறக்கங்கள் மிகுதியாக இருக்கும்.
ஜனனகால ஜாதகத்தில் சனி வக்ரம் பெற்ற வர்களுக்கு அடிமைத்தொழிலே சிறப்பு.
ஜனனகால ஜாதகத்தில் சனியுடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவ ரீதியான தொழில் மட்டுமே அமையும்.
அதன்படி- சூரியனின் தொழில்கள் அரசு உத்தியோகம், அரசியல், அரசுமூலம் அனுகூலம்பெறும் தொழில்கள், அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி., போன்ற அரசியல்துறை, மேனேஜர் போன்ற நிர்வகிக்கும் தொழில்கள், உள்ளாட்சித்துறை, தாலுகா, முனிசிபாலிட்டி போன்றவற்றை அதிகாரம் செய்யக்கூடிய எல்லா தொழில்களும், நீதிபதி, பொன்னா பரணங்கள், மாணிக்கக் கற்கள் விற்பனை செய்தல், மின்னணுவியல் சம்பந்தமான தொழில், அறுவை சிகிச்சை செய்யும் மருத்து வர், டாக்டர் தொழில், தந்தை செய்யும் தொழில்.
சந்திரனின் தொழில்கள்
விவசாயம், அன்றாடம் அழியக்கூடிய பொருட்களைக்கொண்ட தொழில், மளிகைக் கடை, நீர்மப் பொருட்களைக்கொண்ட தொழில், காய்கறிக்கடைகள் மற்றும் கனிகள் வியாபாரம், உணவு சம்பந்தமான தொழில்கள், நீர் சம்பந்தமான தொழில்கள், மதுபான விற்பனை, சலவை வேலை, விளம்பரத் தொழில், முத்து வியாபாரம், பால், தயிர், வெண் ணெய், கடல்கடந்த வியாபாரம், உப்பு, உரம், மீன், கருவாடு, நெல், அரிசி வியாபாரம்.
செவ்வாயின் தொழில்கள்
போலீஸ், மிலிட்டரி, பாதுகாப்புத்துறை தொடர்பான மேலாளர், சீருடையணிந்த பணியாளர்களின் அனைத்து வேலைகளும், தற்காப்புக்கலைகள் கற்றுத்தருதல், உடற் பயிற்சி ஆசிரியர், போர்வீரர், மருந்து, கெமிக்கல், உர வியாபாரம், பல் மருத்துவம், இரும்பு, நெருப்பு, கூரான ஆயுதம் உபயோகித்து செய்யப்படும் தொழில்கள், இன்ஜினீயர், எந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், பூமி சம்பந்தப்பட்ட தொழில், விவசாயம், கசாப்புக் கடை, தோல் பதனிடுதல், வீரசாகசங்கள், மின்துறை, உலைக்கூடத்தில் பணி செய்தல், தீயணைப்புத்துறை, செங்கற்சூளை, மண்பானை செய்தல், கத்தி, ரத்தம், ஆயுதம், ஆபரேஷன்.
புதனின் தொழில்கள்
கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கிகள் தொடர்பான பணிகள், கணக்கு வகைகளின் உட்பிரிவுகள், கணக்காளர், ஜோதிடர், அறிவுசார்ந்த ஆய்வாளர், விற்பனை யாளர்கள், ஆசிரியர்கள், நகைச்சுவை யாளர்கள், நடிகர்கள், பேச்சாளர்கள், பாட கர்கள், கல்வியாளர்கள், புத்தக ஆசிரியர்கள், புத்தக விற்பனையாளர்கள், ரசிகர்களைக் கவரும் தொழில்கள், பாடல் புத்தக விற்பனை, ஆசிரியர் வேலை, குமாஸ்தா, நூலாசிரியர், புத்தக வியாபாரி, எடிட்டர், ஆடிட்டர், காரியதரிசி, மொழிபெயர்ப்புத் தொழில், சாஸ்திர சம்பந்தமான தொழில், செய்தி, பத்திரிகை, தகவல்தொடர்பு, அச்சுத்துறை, வக்கீல் தொழில், பிரின்டிங், ஸ்டாம்ப் விற்பனை, பத்திரம் எழுதுதல், கல்விச் சாலைகள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட தொழில்கள், டிரைவிங் தொழில், தரகுத் தொழில், சட்ட ஆலோசகர், தூதரகத்தில் பணி செய்தல், ஒற்றர் வேலை, புலனாய்வுத்துறை.
குருவின் தொழில்கள்
மஞ்சள் வியாபாரம், நீதிபதி, நீதித்துறை, நிதித்துறை, புரோகிதர், அர்ச்சகர், கோவில் குருக்கள், வட்டித்தொழில், பலசரக்குக் கடை, வேதாந்தம் சித்தாந்தம், மதப்பிரசங்கம், ஆடை வியாபாரம், குருவாக அமர்ந்து போதிக்கும் தொழில்கள், ஆசிரியர், ஆன்மிகத் துறை, அறநிலையத்துறை, மதபோதகர், யோகாசனப் பயிற்சியாளர், வேதவிற்பன்னர், தர்ம ஸ்தாபன பணி, பொருளாதாரத்துறை, வங்கி மேலாளர், கௌரவமான தொழில் கள், சீட்டுக் கம்பெனி போன்ற பணப்புழக்க முள்ள இடங்களில் வேலை, தெய்வீகம் சம்பந்தப்பட்ட தொழில்கள், சாஸ்திரத் தொழில்கள், தங்க வியாபாரம்.
சுக்கிரனின் தொழில்கள்
அழகு, ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, சொகுசுப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், கலைப் பொருட்கள் விற்பனை, சுவையான இனிப்பு உணவுப் பொருட்கள் விற்பனை, இனிப்பு பானங்கள் மற்றும் பழரசம் விற்பனை செய்தல், பொன், வெள்ளி மற்றும் வைர வியாபாரம், கால்நடைகள் வளர்த்தல், இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைத்தொழில்கள், கவிதை எழுதுதல், பாட்டு பாடுதல், நடிப்புத் தொழில்கள், ஜவுளி வியாபாரம், கட்டில், மெத்தை வியாபாரம், சங்கீதக் கருவிகள் வியாபாரம், அழகுநிலையம் வைத்தல், சுற்று லாத்துறை, கேளிக்கை விடுதிகள், வாகனங் களைக்கொண்டு தொழில்செய்தல், மது வியா பாரம், தங்கும் விடுதி நடத்துதல், ஓவியம் வரைதல், சிற்பங்கள் செய்தல், ஒப்பனை செய்தல், அழகுப் போட்டியில் ஈடுபடுதல், நிதி நிறுவனங்கள் நடத்துதல், நிதி திரட்டுதல், நிதியமைச்சர்.
சனியின் தொழில்கள்
இரும்பு, எண்ணெய், நிலக்கரி வியாபாரம், சுரங்கத் தொழில், கடினமான வேலைகள், உழைப்பு அதிகம்- ஊதியம் குறைவான தொழில்கள், பிச்சை எடுத்தல், கழிவுப் பொருட்கள் விற்பனை, ஆடு,மாடு, பன்றி வளர்த்தல், தோல், கல், மண் வியாபாரம், மயானத்தில் வேலை செய்தல், செருப்பு தைத்தல், துப்புரவுப் பணி, முடிவெட்டும் பணி, கட்டடத் தொழிலாளர்கள், தொழிற் சாலையில் எடுபிடி வேலை செய்தல்.
ராகுவின் தொழில்கள்
ரசாயனப் பொருட்கள், மின்னணுவியல் துறை, ஒற்றர் பணி, வெளிநாட்டு வர்த்தகம், போதைப் பொருட்கள், விஷ மருந்து விற்பனை, வெடிகுண்டு செய்தல், சிறைச் சாலையில் பணி செய்தல், மாந்த்ரீகம், கள்ளக் கடத்தல், புலனாய்வுத்துறை, உளவுத்துறை, திருட்டுத் தொழில், சினிமாத் தொழில், அடிமைத் தொழில், ஏமாற்றிப் பிழைத்தல், வட்டித் தொழில், அடகு பிடித்தல், பழைய பொருட்கள் விற்பனை, சட்டத்திற்குப் புறம் பான தொழில்கள், ஏவல், பில்லி, சூன்யம்.
கேதுவின் தொழில்கள்
நெசவு நெய்தல், பஞ்சாயத்து செய்தல், வைண்டிங் செய்தல், பைண்டிங் செய்தல், வயரிங் செய்தல், தையல் கடை, கயிறு வியா பாரம், மின் கம்பிகள் சம்பந்தமான தொழில், நூற்பாலைப் பணி, மதபோதனை, துறவறம்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 20406