ஜாதகருக்கு ஒன்பதாமிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்வில் கிடைக்கக் கூடிய தந்தை, தந்தைவழி உறவு, சொத்துகள் மற்றும் அனைத்து பாக்கியங்களையும் கண்டறிந்து பலன் பெறக்கூடிய இடம். ஒன்பதில் நின்ற கிரகத்தைவிட ஒன்பதாமதிபதி நின்ற இடத்தின் வலுவைப் பொருத்துதான் பாக்கியம் அமையும். ஒன்பதாமதிபதி சுப கிரகமாகி ஆறு, எட்டு, பன்னிரண்டில் மறையாமலிருந்தால் சுபப் பலன் நடைபெறுகிறது. குடும்பம் நல்ல முன்னேற்றத்தை அடையும். ஒன்பதாமதிபதி அசுபராகி கெட்ட இடத்தில் நின்றால் கெடுபலனைத் தந்துவிடும்.
ஒன்பதாமதிபதி நின்ற இடத்தால் தந்தையின் வாழ்க்கையும்,தன்னுடைய வாழ்க்கையும் எவ்வாறு அமையும் என்பதை இங்கு காணலாம்.
லக்னம்
ஒன்பதாமதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் தந்தையைப் போல இருப்பார் அல்லது தந்தையின் குணநலன்கள் ஜாதகருக்கு இருக்கும். தந்தைவழி சொத்துகள் கிடைக்கும் அல்லது தந்தை, தந்தைவழி உறவுகள் ஆதரவு மிக்கவராக இருப்பார்.பெரியவர்களிடம் மதிப்பு, மரியாதை கொண்டு நல்லுறவு வைத்திருப்பார். அன்பு நிறைந்த மனிதராய் இருப்பார். சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பவராகவும், எதையும் சிந்தித்து செயல்படுபவராகவும் இருப்பார். யாரையும் நம்பியிருக்க மாட்டார். சுயமாக சம்பாதித்து சாதித்துக் காட்டுவார். இவருடைய தேவை பிறருக்கு இருந்துகொண்டே இருப்பது போல் உயர்வாழ்க்கை பெறுவார். குருவை வணங்க கூசிநிற்பது பாவச்செயல் என்பதை உணர்ந்து, குருவை மதிப்பவ ராக இருப்பார். ஆன்மிக ஈடுபாடு, மத நம்பிக்கை கொண்டவர். தெய்வ வழிபாடுகளில் மனதை முழுதாய் அர்ப் பணிப்பார். யாரையும் எடுத்தெறிந்து பேச மாட்டார். பிறர் குறிப்பறிந்து செயல்படக் கூடியவராகவும், உதவி செய்யும் மனப் பான்மை கொண்டவராகவும் இருப்பார். பெரிய பதவிவகித்து பேரும் புகழும் அடையக்கூடியவர். வீடு, வாகனம், நல்ல குடும்பம் என சகல பாக்கியமும் பெற்றவராக இருப்பார். லக்னாதிபதி, ஒன்பதாமதிபதி பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டிருந் தால் சொல்லப்பட்ட நற்பலன்கள் முழு தாய்க் கிடைக்காது.
இரண்டு
ஒன்பதாமதிபதி இரண்டில் நின்றால் ஜாதகர் ஊர் போற்றும் மதிப்பு, மரியாதை, செல்வம்மிக்க குடும்பத்தில் பிறப்பார் அல்லது ஜாதகர் பிறந்தபின்பு குடும்பம் முன்னேற்றமடைந்து வசதி யான, சொகுசான, லாபகரமான வாழ்க்கை யைப் பெறுவார். வாக்குத் தவறாத நாணய மிக்கவராக நடந்துகொள்வார்.தந்தையின் அன்பு, ஆதரவு பெற்றவராகவும், பிறருக்கு உதவிகள் செய்யும் வள்ளலாகவும் வாழ்வார். தந்தைவழி சொத்துகள் கிடைக் கும். ஜாதகர் பிறந்தபின் தந்தை வசதி மிக்க ஆளுமையாக மாறுவார்.இரண் டாமிடமான குடும்ப ஸ்தானத்தில் பாக்கியாதிபதி இருந்தால், குடும்பத்தில் பற்றாகுறை இல்லாமல் பணம் இருந்து கொண்டே இருக்கும்.அனைத்து பாக்கியங் களையும் குடும்பத்திற்குக் கொடுப்பவராக வும், குடும்பம் அனைத்து பாக்கியங்களையும் ஜாதகருக்குத் தருவதாகவும் அமையும். சிலருக்கு குடும்பம் அமைந்தபிறகு வாழ்க்கையே மாறும். சாதாரணநிலையில் பிறந்தவருக்குதுணைவரால் அதிர்ஷ் டம் ஏற்பட்டு முன்னேற்றகரமான வாழ்வைத் தரும். ஒன்பதாமதிபதி கெட்டு இரண்டில் அமைவது, ஒன்பது, இரண்டாம் வீடுகளில் பாவ கிரகங்கள் வலுப்பெற்றோ அல்லது பாவகிரகங்களால் பார்க்கப்பட்டோ ஒன்பதாமி டம் பலவீனப்பட்டால் தான் தோன்றித்தனமான வாழ்க்கை அமையும். சிந்தனை, செயல் கெட்டு எண்ணம்போல் வாழ்வார். அன்பு குறைந்த- பாக்கியமற்றவராக இருப்பார்.
மூன்று
ஒன்பதாமதிபதி மறைவிட மான மூன்றிலிருக்கப் பிறந் தால், தந்தைக்கு முன்னேற்றமில்லை அல்லது தந்தையின் புகழ் குறைவாகவே இருக்கும். பரம்பரை சொத்துகள் இவருக் குக் கிடைக்காது அல்லது பயன் படாமல் போய்விடும். குடும்பத் தில் குழப்பம், பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். ஏதாவது பாக்கியக்குறை அல்லதுஇருந்தும் அனு பவிக்க முடியாதவராக மாற்றி விடும். மூன்றாமிடம் இளைய சகோதரத்தைக் குறிப்பிடுவதால், சுபத்தன்மை பெற்றால் உடன் பிறந்தவர்களால் லாபமும், பாவத்தன்மை பெற்றால் நஷ்டத்தை, கஷ்டத்தை பிரிவையும் தந்துவிடும். தம்பிக்குத் திருமணமான பின்பு திருமணம் நடைபெறும். தம்பியால் வீடு, வாகன வசதி பெறுவார். உடன்பிறந்தவரால் யோகம் பெறுவதும், அவர்களால் தொல்லை அனுபவிப்பதும், அவரவர் ஜாதக வலுவைப் பொருத்தே அமையும். பல கலைகளில் ஈடுபாடு உண்டாக்கும். உயர்கல்வி,பட்டம், பாராட்டுப் பெறுவர்.இசைத்துறையில் நாட்டம்கொண்ட பலருக்கு மூன்றில் ஒன்பதாமதிபதி இருக்கும். பொதுவாக விதவிதமான கஷ்டங்களை அனுபவித்தவரால்தான் ஆலோசனை, அறிவுரை சொல்லமுடியும். ஞானமிக்க ஆலோசகர். பல கஷ்டமான சூழ்நிலைகளை அனுபவித்து, கடந்து, ஏமாந்து வந்தவர்கள்தான் நல்ல எழுத்தாளராக மாறுவார்கள். வாழ்வியல் எதார்த்தத்தை சொல்லும் எழுத்தாளர்களுக்கே இவ்வித அமைப்பிருக் கும். மிகச்சிறந்த எழுத்தாளராகப் புகழ்பெறு வர். பாவகிரகச்சேர்க்கை, தொடர்பு சுயநலவாதி களாகவும், அருவருக்கத்தக்க செயல்களைச் செய்ப0வராகவும் மாற்றும். நியாயமற்ற எழுத்தாளராக இருப்பார்.
நான்கு
ஒன்பதாமதிபதி நான்கிலிருந்தால், நான்காமிடத்திற்குரிய அனைத்து சுகங்களும் ஜாதகருக்குக் கிடைக்கும். சொகுசான வீடு, உயர்ரக வாகனம், சொந்தங்களின் ஆதரவு, பாசமான பந்தங்கள், உறவினர் புடைசூழ சுகவாசி யாக வாழும் யோகம் கிடைக்கும். நன்றா கப் படித்து உயர்கல்விப் பட்டம் பெறுவார். தாயார், மாமன் ஆதரவு, பாசம் ஜாதகருக்கு உண்டு. அதேபோல் தாயார்மீது பற்று, பாசம் வைப்பார். தாயார் வசதிமிக்க அறிவாளியாக இருப்பார். தந்தை, தாயார்வழி சொத்துகள் முறையாக வந்துசேரும். ஊர்போற்றும் குடும்பம், உள்ளம் படைத்தவராக இருப்பார். ஒன்பதாமதிபதி நான்கிலிருந்து கெட்டால், பாவகிரகத் தொடர்பு அதிகம் ஏற்பட்டால் தாயாருக்கு பாதிப்பு, அவமானம் உண்டாகும். பிடிக்காத வீடு அமையும். எங்கு தங்கினாலும் அடைச லான, காற்றோட்டமற்ற, அசுத்தமான வீட்டில் இருக்கநேரும். சுகமற்று, வேறுவழியின்றி சகித்துவாழ நேரும். சிறிய சந்தோஷம் பெற, பெரிய உழைப்பை, தியாகத்தைச் செய்யநேரும். தியாகம் செய்தா லும் அதற்குண்டான மரியாதை இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் குறைவாகவே இருக் கும். உறவினர் ஆதரவு இருக்காது. பொறுமையை சோதிக்கும் சம்பவங்கள் நிறைய நடக்கும்.
ஐந்து
ஒன்பதாமதிபதி ஐந்திலிருந்தால் தந்தை வசதிமிக்கவராக- நன்மதிப்பு, மரியாதை பெற்றவராக இருப்பார். மக்களுக்குத் தீர்ப்பு கொடுக்குமிடத்தில் இருக்கும் அந்தஸ்து கொண்டவர். தந்தைவழி பாரம்பரியப் பெருமை கொண்டவர். தந்தைவழி சொத்து களைப் பெறுவார். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். நல்ல உள்ளம் கொண்ட சீமான். சுபபலம் பெறுவதைப் பொருத்து அரசிய லில் புகழ் பெற்றவராகவோ, அரசாங்க உயர் பதவியிலோ ஜாதகரை அமர்த்தும். நம்பிக்கை நாயகராக வலம்வருவார். பெரிய பங்களா வீடு, அதிக வேலையாட்கள் கொண்ட ஆளுமை யான இடத்தில் இருப்பார். வாகன வசதியுடன் அனைத்து சுகங்களைப் பெற்று சுகவாழ்வு வாழ்வார். பெற்ற பிள்ளைகளால் லாபமுண்டு. ஆன்மிக நாட்டம் கொண்டவர். சுபகிரக வலுப்பெற்றால் அழியாப் புகழ்பெறுவார். பாவகிரக இணைவு, சேர்க்கை பலம்பெற்றால் தந்தையால் எந்தப் பயனும் இருக்காது. இருந்ததை, இருப்பதைத் தொலைப்பவராகவும், பரம்பரைப் பெருமைகளை அழித்து, தானும் கெட்டு, தன் சந்ததிகளையும் கெடுப்பவராகவும் தந்தை இருப்பார். ஜாதகர் எவ்வளவு போராடி னாலும் நினைத்ததை அடையமுடியாமல் தவிப்பார். நல்ல தசாபுக்திகளில் ஓரளவு நன்மை கிட்டும். கெட்ட தசாபுக்திகள் இருந்தால் ஆசை கள் நிறைவேறாமல் இன்னல் பல பெற்று, விரக்தியாய் பழமையான பரம்பரைப் பெருமை பேசித் திரிவார். பழைய வெற்றிகள் எவ்வளவு இருந்தாலும், நடப்பு நிலையில் கிடைக்கும் வெற்றி, இனி கிடைக்கும் வெற்றி யைப் பொருத்துதான் உலகம் ஒருவரைக் கொண்டாடும்.
ஆறு
ஒன்பதாமதிபதி ஆறில் நின்றால் தந்தையால் தொல்லை அல்லது தந்தையுடன் அடிக்கடி மனஸ்தாபப்பட்டு எதிரியாக்கிக் கொள்வார். தந்தையை எதிரிபோல் பாவித்து எப்போதும் மல்லுக்கு நிற்பார். தந்தை இல்லாமலிருப்பது, தந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு அல்லது தந்தையின் மருத்துவத்திற்கு வருமானம் செல்வது என தந்தையால் நஷ்டமும் கஷ்டமும் ஏற்படும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்காது. முன்னோர் சொத்துகள் பலவிதங்களில் சேதமாகிவிடும். குடும்பம் கடனால் அவதிப்படும். புத்திர தோஷம் அல்லது சோகத்தைத் தரும். கல்விஞானம் குறையும். திறமையற்ற கோழையாக- தவறான காரியங்களைச் செய்து அகப்பட்டுக்கொள்வார். ஆறாமிடத்தில் நின்ற ஒன்பதாமதிபதி சுபகிரகப் பார்வை பலம்பெற்றால் ஓரளவு சாமாளித்து, நல்ல தசைகளில் நல்லபடி வாழ்ந்துவிடுவார்கள். ஒன்பதாமதிபதி ஆறில் கெட்டு, விபரீத ராஜயோக பலம்பெற்றால், கொடுஞ்செயல்கள் செய்தாலும் ஊர் போற்றும் உத்தமராக மதிக்கப்படுவார். கெட்டவர் என தெரிந்தே மக்கள் ஓட்டுப் போடுவர். தைரியம் நிறைந்த வராக மாறுவார். ஆரம்ப நிலையைவிட உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துவிடும். நீசபலம் நல்ல வாழ்க்கையும், வக்ரபலம் கெடுதி குறைத்தும், ஒன்பதாமதிபதி ஆறில் பலவீனப்பட்டால் கெடு பலன் நேராமலும் பாதுகாப்பாக வாழ்வார்.
ஏழு
ஒன்பதாமதிபதி ஏழில் இருந்தால் மனைவி வழி அல்லது மனைவியால் அல்லது மனைவிக்கு அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். திருமணத்திற்குப் பின்பு நல்ல முன்னேற்றம், வாழ்க்கைவசதிகிடைக்கும்.தந்தைவழி சொந்தமாக அல்லது தந்தைவழி உறவினர்கள் மூலம் மனைவி அமைவார். பங்காளி, தொழில் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும். வெளிநாடு சென்று வரும், வெளிநாடு சென்று தொழில் செய்யும் யோகம் கிடைக்கும். ஜாதக ரின் தந்தை வெளிநாடுகளுக்குச் சென்று வருமானம் பெறுபவராகக்கூட இருப்பார். நல்ல குடும்பப்பாங்கான மனைவி அல்லது லட்சுமிகரமான பெண் கிடைத்ததும் வாழ்க்கை முன்னேற்றமாக அமையும். தந்தைவழி லாபம், சொத்துகள் கிடைக்கும். பிதுரார்ஜித சொத்துகள், பரம்பரை சொத்துகளால் லாபம் கிடைக்கும். ஆன்மிக அறிவுமிக்கவர். முன்னோர் கள், சித்தர்களால் ஆதாயம், ஆசிர்வாதம் உண்டு. பாவகிரகப் பார்வை, சேர்க்கை, தொடர்பு பலத்தைப் பொருத்து நன்மைகள் குறையும். ஒன்பதாமதிபதி ஏழில் கெட்டு நின்றால் மனைவி, தந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். வெளிநாடுகளில் அலைந்து திரியநேரும். மதிப்பு, மரியாதையை இழந்து மனம் நோக வேண்டி இருக்கும். பிறக்கும்போது இருந்த பாக்கியம் வளர வளர கெட்டுப்போகும்.
எட்டு
ஒன்பதாமதிபதி எட்டில் இருந்தால் தந்தை யாரின் சொத்துகளைப் பிறர் அபகரிக்க முயற்சிப் பார்கள். நோய், எதிரி, கடன் போன்றவற்றில் ஏதாவது ஒன்றால் தந்தை அவதிப்படுவார். ஜாதகருக்கு புத்திர தோஷமுண்டு. ஒன்பதாமதி பதி கெட்டால் தந்தையின் ஆயுள் பாதிக்கும். பக்தி குறைந்து பகுத்தறிவாளனாக மாற்றி விடுவார். ஜாதகர் கவனமாக இல்லையென்றால் ஏமாளியாக்கிவிடுவார். ஜாதகர் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டு மனம்நொந்து திரிவார். சுப கிரகங்கள் அதிக தொடர்புகொண் டால் தந்தை வறுமையிலும் நேர்மை கொண்ட வராக இருப்பார். இரண்டாவது பாதி வாழ்க்கை யில் தந்தை நினைத்ததை சாதித்து வெற்றி யாளராகத் திகழ்வார். ஒன்பதாமதிபதி சுபகிரகங் களின் பார்வை அல்லது இணைவுபெற்றால் அனைத்து பாக்கியங்களும் பெற்று சுகபோகத்து டன் வாழ்வார். ஒன்பதாமதிபதி நீசபங்கம் பெற்றால் அதியோக பலனைத் தந்து பெயர், புகழ், அந்தஸ்தைக் கொடுத்து உலகப் புகழ் பெறச் செய்யும். புத்திரர்களால் லாபம் உண்டு. பரம்பரை பெருமை மேலும்உயரும். வெளிநாடு சென்று முன்னேறுவார்.
ஒன்பது
ஒன்பதாமதிபதி ஒன்பதில் இருந்தால், தந்தை பெருமைமிகு குடும்பத்தில் பிறந்து ஊர்போற்றும் உத்தமராக வாழ்வார். பூரண ஆயுள் பெறுவார். தந்தைவழி உறவால் நன்மை யும் லாபமும் பெறுவார். ஆன்மிகத்திலும், தான தர்மம் செய்வதிலும் வள்ளலாகத் திகழ்வார். நண்பர், உறவினர் உதவி கிடைக்கும். வெளிநாடு சென்று சந்தோஷகரமான வாழ்க்கை பெறுவார். புதிதாக கோவில் கட்டு தல், கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷே கம் நடத்துதல் உள்ளிட்ட ஆன்மிக நாட்டம் கொண்ட அன்புமிக்கவராக இருப்பார். பதவி, புகழ், சந்தோஷம் கிடைக்கும். புத்திர வம்சத்தில் பேரும் புகழும் பெற்று பரம்பரை தழைக்கும். பாவ கிரகங்கள் வலுப்பெற்று தொடர்புகொண்டால் தந்தையை பாதிக்கும்.
ஒன்பதாமதிபதி சூரியனாகி ஒன்பதில் இருப்பது, தந்தையால் பாதிப்பு அல்லது தந்தைவழி பிரச்சினைகள் ஏற்பட்டு மனதை வாட்டும். நல்ல தசைகள் அமைய வில்லையென்றால் இருப்பதை இழந்துவிடக் கூடும். நல்ல தசை வந்தால் குறைகளின்றி நிறை வான வாழ்க்கையைப் பெறுவார். தந்தை யின் ஒத்துழைப்பு என்பது பொருளாதார ரீதியாகவோ, அறிவுரை, ஆலோசனையாகவோ இருக்கும். பெரிய இடத்துப் பிள்ளையாக, தந்தையின் புகழ் ஜாதகர் முன்னேற்றம் பெற உதவும். ஆன்மிகப் பயணம் ஆத்ம பலத்தையும், தெய்வ ஈடுபாட்டு நிலையையும் கொடுக்கும்.
பத்து
ஒன்பதாமதிபதி பத்தில் இருந்தால் தந்தையால் தொழில் அமையும். தந்தை ஆலோசனையால் அல்லது தந்தை வைத்திருந்த தொழிலைத் தொடர்வதாகக்கூட இருக்கும். தந்தை பணக்கார அந்தஸ்து மிக்கவராகவும், அவரைத் தொடர்ந்து அதேநிலையில் ஜாதகரும் இருப்பார். சிலர் தந்தையால் பயனின்றி அல்லது தந்தையில்லாமல், தந்தையைப் போன்றில்லாமல் முன்னேற்றமடைய வேண்டுமென போராடி சாதிப்பார். சமுதாயத்தில் பிறர் வியந்து பார்க்குமளவு அல்லது பிறரை ஆட்டிவைக்கும் பதவி, புகழ் அடைவார். தொழிலால் நல்ல பெயர், பணம் பெற்று, பெரிய பங்களா, வாகனம் வாங்கி முன்னேற்றம் காண்பார். நிலம், வீடு, வாகனம் ஒன்றுக்கு மேற்பட்டே இருக்கும். யாரும் எதிர்பாரா வளர்ச்சியும் மகிழ்ச்சியும் பெற்று பெருவாழ்வு வாழ்வர். கர்ம ஸ்தானத் தில் ஒன்பதாமதிபதி கெட்டால் தந்தையைக் கெடுப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையே போராட்டமாகி ஒரு பாக்கியமும் சரியாகக் கிடைக்காமல், தொல்லை நிறைந்த துன்பகர மான வாழ்க்கையே அடைவார். நல்ல தசா புக்திகள் முன்னேற்றத்தைத் தரும். புண்ணிய காரியங்கள், புண்ணியத் தலங்களுக்கு சென்றுவரும் யோகத்தைத் தரும்.
பதினொன்று
ஒன்பதாமதிபதி பதினொன்றில் இருந்தால் தந்தையால் யோகம், தந்தைக்கு யோகம், தந்தைவழி உறவுகளால் ஜாதகருக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும்.தந்தை பெயரைச் சொன் னால் தெரியுமளவு யோகம் மிக்கவராகவும், பெரிய அந்தஸ்து பெற்றவராகவும் வாழ்நாள் முழுவதும் இருக்கமுடியும். லாபஸ்தானத்தில் ஒன்பதாமதிபதி நின்றால் தந்தையால் அனைத்து சுகமும் யோகமும் கிடைக்கப்பெறும். தந்தை ஜாதகருக்கு சொத்துகள் வாங்கித் தருவார். நண்பர்கள், உறவினர்கள் கொண்டாடுவர். எந்தத் துறையில் எதனைச் செய்தாலும் லாபம் வந்துகொண்டே இருக்கும். இளைய மனைவியால் யோகம் உண்டாகும். சகல சௌகரியம் பெற்ற பாக்கியவான். சுபகிரகத் தொடர்புபெற்றால் ஆன்மிகவாதியாகவும், வள்ளலாகவும் திகழ்வார். பாவகிரகத் தொடர்பு ஏற்பட்டு பலவீனமானால் அனைத்து பெருமைகளையும் இழந்து நஷ்டத்தை சந்திப்பார். கவனமுடன் இல்லா விட்டால் கொடுத்த லாபத்தைப் பறித்து விடும். பாவகிரகப் பார்வை, இணைவு, தொடர்புபெற்றால் லாபங்களின்றி வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் தீய பழக்க வழக்கத்தால் தொலைத்துவிடுவார். பெண் களால் அவப்பெயர் உண்டாகும். நினைத்தது பலிக்காமல் தவிப்பார். மூத்த சகோதரர்கள் துன்பப்படுவர்.
பன்னிரண்டு
ஒன்பதாமதிபதி பன்னிரண்டில் இருந்தால் பாக்கியத்தைக் கெடுக்கும். தந்தைக்கு புகழ், அந்தஸ்து கெட்டு இஷ்டமில்லா வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வாழ்வார். தந்தை முயற்சி பல செய்து தோல்விகளைச் சந்திப்பார். தந்தையின் சொத்து, பணம், புகழ் நிலைக்காது. வீணான காரணத்தால் வீண் விரயத்தை சந்திப்பார். தந்தை யால் நஷ்டம், தொல்லையே உண்டாகும். தந்தைவழி சொத்துகளால் சட்டப் போராட்டம் செய்ய நேரும். உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி ஏழையாக ஏக்கத்துடன் வாழவேண்டி இருக்கும். அடிமைத் தொழில், அரசாங்கத் தொழிலை விட்டு சுயதொழில் செய்ய நேர்ந்தால் அதிக கஷ்டத்தையே தரும். நேரம் காலம் பார்த்து செய்யவில்லையென்றால் துன்பமே பிரதான பலனாக இருக்கும். ஏழையின் மகனாகப் பிறந்து, ஏழையாகவே போராட்டமிக்க வாழ்க்கையாக முடியும். பெண்களால் அவமானம், அவ மதிப்பு உண்டாகும். தன்மானத்தை இழந்து வாழ நேரும். அதுவே விரய ஸ்தானத்தில் ஒன்பதாமதி பதி கெட்டால், விபரீத ராஜயோகமானால் வெளிநாட்டு வாழ்க்கை, அனைத்து சிற்றின்ப சுகமும் கிடைக்கும். ஆன்மிக வள்ளல் என புகழடைவர். பல தலைமுறைக்கு சொத்து சேர்த்துவைத்து, சுகவாசியாக மாறும் யோகம் பெறுவார். நல்ல தசாபுக்திகளில் வேண்டிய சுகத்தை வாரி வழங்குவர். தந்தை நினைத்ததை சாதித்துப் புகழடைவார்.
பரிகாரம்
ஒன்பதாமதிபதி 3, 6, 8, 12-ல் இருந்தால் தந்தை, புகழ், கலாச்சாரம் கெட்டு நொந்து வாழ்வார். ஒன்பதாமதிபதி கிரகத்தைக் கண்டறிந்து, அந்த கிரகத்திற்குத் தேவையான பரிகாரம் செய்துகொண்டால், வீண் மன சங்கடங் கள், வீண் செலவு, இழப்புகளை சந்திக்காமல் நிம்மதியாக வாழ வழியைத் தரும். ஒன்பதாமதி பதி எவ்வளவு பலம் பெற்றிருக்கிறதோ அவ்வளவு தந்தையின் வாழ்க்கை முன்னேற்ற கரமாக இருக்கும். ஒன்பதாமதிபதியின் நவகிரக மந்திரத்தைச் சொல்லிவந்தால் துன்பம் நீங்கி நம்பிக்கையும் லாபமும் உண்டாகும். சுபகிரகத்தை வழிபட இன்பத்தை அதிகமாக்கலாம். பாவகிரகமாகி பலவீனமடைந்தாலும் துன்பத்தைக் குறைத்து நன்மையை அடையலாம்.
செல்: 96003 53748