சில ஆண்களுக்கு, திருமணமாகி விவாக ரத்து பெற்ற அல்லது கணவனை இழந்து விதவையாகிவிட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் சூழல் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம்?

ஒருவருக்கு வரப்போகும் மனைவி எப்படி இருப்பாள் என்பதைத் தெரிந்துகொள்ள 7-ஆம் பாவத்தை கவனிக்கவேண்டும். 7-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக இருக்கிறாரா அல்லது பாவகிரகத்துடன் 7, 8, 12-ல் இருக் கிறாரா என்பதைப் பார்க்கவேண்டும்.

ddd

7-ஆம் பாவாதிபதி 6-ல் இருந்து 7-ல் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு, ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்தான பெண்ணுடன் திருமணம் நடக்கும். விதவைப் பெண்ணைத் திருமணம் செய்யவும் நேரலாம்.

Advertisment

7-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு இருந்தால், அவருக்கு விவாகரத்து பெற்ற பெண்ணுடன் வாழ்க்கை நடத்தவேண்டிய நிலை உண்டாகும்.

சந்திர லக்னத்திலிருந்து 12-ல் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு, சூரியன் இருந்தால், அவர் விதவையைத் திருமணம் செய்துகொள்வார்.

7-ல் சனி, 8-ல் ராகு, நீச சுக்கிரன், செவ்வாய் இருந்தாலும்; 7-ல் சனி, 8-ல் ராகு, 12-ல் செவ்வாய் இருந்தாலும், அவர் விவாக ரத்து பெற்ற பெண்ணைத் திருமணம் செய்யவேண்டியதிருக்கும்.

Advertisment

லக்னத்தில் நீசச் செவ்வாய் இருந்து, 2-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக இருந்து, 4-ல் செவ்வாய், சூரியன் இருந்தால், அவர் கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

7-க்கு அதிபதி 12-ல் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அதே ஜாதகத்தில் 7-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியன் அல்லது புதன், சனி இருந்தால், அவருக்கு விவாகரத்து பெற்ற பெண்ணுடன் திருமணம் நடக்கும்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் கேதுவுடன் இருந்து, சந்திர லக்னத்திற்கு 7-ஆவது பாவத்தில் சுக்கிரன், ராகு இருந்து, சந்திரனிலிருந்து 8-ஆவது பாவத்தில் நீச சூரியன் இருந்தால், அவருக்கு விவாகரத் தான பெண்ணுடன் திருமணம் நடக்கும்.

7-ஆம் பாவத்தில் நீசச் செவ்வாய், 8-ல் சூரியன், சனி இருந்தால், அவர் விவாகரத்தான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

8-ல் சுக்கிரன், கேது, சனி இருந்தாலும்; 12-ல் செவ்வாய், சனி, ராகு இருந்தாலும் அவருக்கு விவாகரத்தான பெண்ணுடன் திருமணம் நடக்க வாய்ப்பிருக்கும்.

6-ல் சுக்கிரன், 7-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு, 7-க்கு அதிபதி விரய ஸ்தானத்தில் இருந்தால், ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தபிறகு அவருக்கு விவாகரத்தான பெண்ணுடன் திருமணம் நடக்கும்.

4-ல் செவ்வாய், 5-ல் சனி, 6-ல் நீச சூரியன், 7-ல் சுக்கிரன் இருந்தாலும்; 6-ல் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் 7-க்கு அதிபதி சூரியனுடன் இருந் தாலும் அவருக்கு விவாகரத்தான பெண்ணுடன் திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

7-ல் சூரியன், குரு, புதன், செவ்வாய் இருந்து, 8-ல் ராகு இருந்தால், அவருக்கு விவாகரத்து பெற்ற பெண்ணுடன் திருமணம் நடக்கும்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன், கேது, 7-ல் சூரியன், செவ்வாய், ராகு, 10-ல் சனி இருந்தால் சனியின் 10-ஆவது பார்வை 7-ஆவது பாவத்திற்கு இருக்கும். அதனால் அந்த ஜாதகர் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவருடைய வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும்.

லக்னத்தில் சனி, ராகு, 3-ல் சூரியன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால் விதவையுடன் திருமணம் நடக்கும்.

2-ஆம் பாவத்தில் செவ்வாய், 3-ல் சூரியன், சுக்கிரன், புதன், 9-ல் சனி, ராகு இருந்தால் விதவைப் பெண்ணுடன் திருமணம் நடக்கும்.

7-க்கு அதிபதி 8-ல் இருந்து, 7-ஆம் பாவத் தில் பாவகிரகம் இருந்து, அந்த பாவகிரகங்களை இன்னொரு பாவகிரகம் பார்த்தால், அவர் விவாகரத்து பெற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், வாழ்க்கை நன்றாக இருக்கும்.

லக்னத்தில் சூரியன், 6-ல் செவ்வாய், சனி, ராகு இருந்தால், அவருக்கு விவாகரத்து பெற்ற அல்லது விதவைப் பெண்ணுடன் திருமணம் நடக்கும்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 8-ல் செவ்வாய், ராகு, சனி இருந்தால், அவருக்கு விதவைப் பெண்ணுடன் திருமணம் நடக்கும். அந்த வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாகவும் இருக்கும்.

2-ல் கேது, சனி, 8-ல் ராகு, 12-ல் சூரியன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அவர் விவாகரத்து பெற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் மணவாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இருக்கும்.

செல்: 98401 11534