"எவ்வளவு இன்பம் நிறைந்ததாயினும் வருங்காலத்தை நம்பாதே கடந்த காலத்தை புதைத்துவிடு. இன்றே செயலாற்று. மனசான்றுடன் இறை நம்பிக்கையுடனும்''.
- லாங்ஃபெல்லோ
சாஸ்திரங்கள் உருவான காலங்களும் நவயுகமும் நீண்ட இடைவெளிக்குப்பட்டது. எனவே கடந்த காலத்தை மறந்து புது கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றார்போல் ஜாதகம், எண் கணிதம், கைரேகை சாஸ்திரம். இந்த முப்பெரும் சாஸ்திர வாயிலாக ஆய்வு செய்து எந்த துறை யாருக்கு ஒத்துவரும் என காண்போம்.
அரசு உத்தியோகம் யாருக்கு மிக சுலபமாகும் பலரும் விரும்பும் அற்புத உத்தியோகம். அதிலும் மத்திய அரசு, மாநில அரசு, அரசு சார்ந்த தொழிற்சாலை என பல பிரிவில், நற்பலனை நிலையாக தரும் என்பது கண்கூடு. பணிக்கு பின் ஓய்வூதியம், அதன்பின் குடும்பத்திற்கு, இப்போதெல்லாம் அதன் தன்மை மாறுபட்ட கோணத்தில் செயல்படுவதாக செய்தியை பார்க்க இயலுகிறது. எனினும் அக்காலத்தில் காயமான உத்தியோகம் என வரன்கள் பெருமை சேர்க்கும்.
உங்களுடைய ஜாதகத்தை உற்று நோக்குங்கள் ப் லக்னத்திற்கு 5-ஆம் அதிபதியும், குருவும் இணைந்து பத்தில் இருப்பது ஜீவன ஸ்தானத்தை வலுப்பெற செய்யும்.
ப் லக்னாதிபதி 10-ல் பத்தாம் அதிபதி 9-ல் இருத்தல் நன்று.
ப் சூரியன் சந்திரன் இணைந்து 1, 7-ல் இருந்து அதில் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெறுவது போதுமானது.
ப் லக்னாதிபதியதிக்கோ (அ) 7-ஆம் அதிபதிக்கோ 5-ல் குரு சுக்கிரன், சந்திரன் யாராவது ஒருவர் இருப்பதும் உத்தியோகம் சுலபமாகும்.
ப் 10-ஆம் அதிபதி 10-ல் 6-ஆம், அதிபதி 6-ல் இருப்பதும் நன்மையே.
ப் குருவும், புதனும் ஒன்றாக இணைந்து பலன் பெறுவதும் போதுமான

ப் குருவும், புதனும் ஒன்றாக இணைந்து பலன் பெறுவதும் போதுமானது.
ப் உங்களுடைய ஜாதகத்தில் பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் சூரியன் அல்லது செவ்வாய் அல்லது இருவருமே இருந்தால் அட்டகாசம்.
ப் செவ்வாய் (அ) சூரியன் ராசி (அ) லக்னத்திற்கு 10-ஆம் வீட்டிற்கு சம்பந்தம்பெறுவது அந்த கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றால் இன்னும் சிறப்பாகும்.
ப் சந்திரனுக்கு 10-ல் சூரியன் பலமாக காணப்படுவதும் போதுமானது.
ப் செவ்வாய் 3, 6, 10, 11-ல் இருந்து குருவினால் பார்க்கப்படுவது மிக நன்று.
ஜாதகமே சீராக இல்லாமல் கைரேகை மூலம் அறிவது எப்படி?
ப் குரு மேடும்: சனி மேடும் உச்சமாகி தன ரேகை புத்தி ரேகையில் இருந்து உதயமாகி சனி மேட்டை அடைந்தால் தொழிலதிபராகலாம். அவர்களுக்குரியது சிமெண்ட், கல்- மார்பிள், கடல் சிப்பி சார்ந்த உபபொருட்கள்- கிரானைட் உற்பத்தி, டைல்ஸ் இவையாவும் லாபத்தை உருவாக்கும். உதாரண புருஷர் என். ஸ்ரீனிவாசன்- இந்தியா சிமெண்ட் 3 ஜனவரி 1945-ல் ஜனனம். நா. சீனிவாசன் என்ற நாராயணசாமி. தென்னிந்தியாவில் மிகப்பெரிய இந்தியா சிமெண்ட் நிறுவனத்தை நிறுவியவர். இவர் தந்தையும் பிரபல தொழிலதிபருமான டி.எஸ். நாராயணசாமி. சீனிவாசன் மக நட்சத்திரம் 7-ல் சுக்கிரன். தனுசில் சூரியன்- செவ்வாய்- கேது நல்ல புகழை தனதாக்கியவர். சாஸ்திரம் பொய் சொல்வதில்லை.
ப் சூரிய மேடும்: குருமேடும் உச்சம் பெற்று சீரான புதன் ரேகை தென்பட்டால். வர்ணங்கள் உற்பத்தி செய்யலாம். இன்டீரியர் டெக்கரேஷன், பெண்கள் எம்ராய்ட்டரி, ஆயுத்த ஆடை உற்பத்தி வியாபாரம் செழிப்பாகும். ஆடம்பரப் பொருட்கள் உற்பத்தி, பெரிய மால் உருவாக்கி வியாபாரம் ஒத்துவரும். லக்னத்திற்கு 10-ல் சுக்கிரன் இருந்தால் அதிவேக முன்னேற்றம் வரும்.
சதுர்முகி யோகமும் தொழில் மேன்மையும்
ஒருவருடைய உள்ளங்கையில், ஆயுள் ரேகையும் கங்கண ரேகையும் இணையும் பாகத்தில் மீன் குறி (மச்ச ரேகை) காணப்படுவதோடு நவலட்சுமி யோகத்திற்கான ரேகையும் தென்பட்டால். அதாவது தன ரேகை, சூரிய ரேகை, புதன் ரேகை மூன்றும் சனிமேடு அல்லது சூரிய மேட்டை அடைந்திருந்தால் இவர்கள் சிறிய முதலீட்டில் ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல அபரிமிதமான செல்வத்தை எதிர்பார்க்கலாம்.
பொதுவில் தொழில் புரட்சி செய்ய குரு, புதன் சூரிய மேடுகள் திடமாகவும் கங்கண ரேகைகள் தெளிவாகவும் இருக்கப்பெற்றால் எந்தத் துறையும் லாபத்தைத் தரும்.
மகாபாக்கிய யோகம் இது அற்புதமானது ஒரு ஆணின் ஜாதகத்தில் (பகலில் பிறந்தவர்கட்கு, லக்னம், ராசி, சூரியன் மூவரும் ஆண் ராசியில் இடம்பெறுவது. உள்ளங்கையில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மேடுகள் உச்சம்பெறுவது. மோதிர விரலின் அடிப்பாக மேடு சுண்டுவிரலின் அடிப்பாக மேடு, கட்டை விரலை தொட்டு காணப்படும் சுக்கிரமேடு ஆகியவை.
கோடீஸ்வர யோகம்
சாஸ்திரரீதியாக சுலபமாகுமா?
சாஸ்திரரீதியாக ஜாதகத்தில் சீரான அமைப்பு இருந்தாலே கோடீஸ்வர அமைப்பு சுலபமாகிவிடும்.
ப் லக்னாதிபதியை 5-ஆம் கிரகநாதர் பார்ப்பது, தனகாரகன் குரு உச்சம்பெறுவது, சூரியன் 11-ல் பலம்பெறுவது, செவ்வாய் 10-ல் ஆட்சி, உச்சமாகி சுக்கிரனுடன் இணைவது, 1, 4, 9-ஆம் அதிபதிகள் 4-ல் இருந்து குருவால் பார்க்கப்படுவது, சந்திரன், குரு, சுக்கிரன், ராகு இவர்கள் இருந்த வீட்டின் அதிபதிகள் பலம்பெற்று சந்திரன் (அ) சூரியனுக்கு கேந்திரம் பெறுவது இப்படி பல சூட்சமங் கள் கோடீஸ்வர யோகத்தை உருவாக்கும். பாரதத்தில் இரண்டாவது கோடீஸ்வரர் 24-6-1962-ல் ஜனனம். கௌதம் அதானி. அவர் ஜாதகத்தில் சுக்கிரனும் ராகுவும், பொருளாதார மேம்பாட்டிற்கு பக்கத்துணை, பத்தில் சனிபகவானும் கேதுவும். பதினொன் றில் சந்திரன் குரு மூன்றில் சூரியன். இரண்டில் புதன்: லக்னத்தில் செவ்வாய். எனவே கோடீஸ்வர யோகம்.
அலுவலகத்தில் எதிரிகள் தொல்லை ஏன்?
ப் நமது உள்ளங்கையில் பெரிய முக்கோணம் காணப்பட்டு அதில் சல்லடைபோல் தாறுமாறான ரேகை தென்பட்டாலும் கங்கண ரேகையிலிருந்து சிறு ரேகைகள் பல சந்திர மேட்டை நோக்கி சென்றாலும் நாம் கவனமாக பிறரிடம் பழகவேண்டும்.
ப் புதன் மேட்டின் நேர் கீழ்பாகம் மேல் செவ்வாய் மேட்டிலிருந்து பல சிறு ரேகைகள் மேல் நோக்கி செங்குத்தாக காணப்படும். மேலும் கங்கண ரேகையில் இருந்து ரேகை புறப்பட்டு ஆயுள் ரேகை வெட்டிச் செல்லும். எனவே இந்த அமைப்புடையோர் புறங்கூறலை சமாளிக்க நேரிடும்.
கைரேகை பலனை பரிகாரத்தால் மாற்ற இயலுமா?
"தூங்குக தூங்கிச் செயற்பல தூங்கர்க்க
தூங்காது செய்யும் வினை'.
-குறள்
காலந்தாழ்ந்து செய்யத் தகுந்தவற்றை காலம் தாழ்ந்தே செய்தல் வேண்டும். காலம் தாழ்க்காமல் செய்ய வேண்டியவற்றை விரைந்து செய்யவேண்டும். காலந்தாழ்க்க கூடாது.
நம் உள்ளங்கையில் தென்படும் பல அறிகுறிகள் விழிப்புடன் செயல்பட உணர்த்துவதுதான் கைரேகை பலன் மட்டுமல்ல, நமக்கு வரப்போகும் எந்த தீமைகளையும் பரிகாரத்தால் அறவே போக்க இயலாது. பரிகாரம் என்பது மனசாந்திதான். ஒருவரின் உள்ளங்கையில் ஆயுள் ரேகை மிக குட்டையாக இரு வலது- இடது கையில் காணப்பட்டால். அது வாகன ஓட்டிகளுக்கு விபத்தை சுட்டி காட்டுவதுதான். பரிகாரம் ஹெல்மட் அணிவதுதான். சுவையான மாம்பழத்தை ருசிக்க காலம் தந்த கால அளவு மூன்றே மாதம்தான். எல்லா பழத்தையும் "சீட் லஸ்' ஆக்கலாம். சில கனிகளை அவ்வாறு உற்பத்தி செய்ய இயலாது.
ப் ஒருவரின் உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கு நேர்கீழே அமைவது குருமேடு- அதில் சிறு சதுரம் காணப்பட்டால் நாம் எங்கோ ஏமாறும் இடத்தில் முதலீடு செய்ய போகிறோம் என்பதுதான்.
ஜாதகத்தில் 12-ஆமிடம் விரயஸ்தானம்.
அங்கு சனிபகவான் இருந்து உள்ளங்கையில் குரு மேட்டில் சதுரம் காணப்பட்டால், ஓரளவு முதலீட்டை சனிபகவான் பின்னா ளில் பெற்று தருவார். இதுதான் பரிகார மகிமை. ரேகை சாஸ்திரம் என்பது தேசிய நெடுஞ்சாலையில் காணப்படும் அறிவிப்பு பலகை போன்றதே, வளைவு வருகிறது. பாலம் உள்ளது. இரயில்வே கிராசிங் உள்ளது. குறுகலான பாதை இதுபோன்ற எச்சரிக்கை தருவது ரேகை சாஸ்திரம். உதாரணமாக வருமானத்தில் தினகூலி, தின வருவாய், மாத வருவாய், வருட வருவாய், வாடகை வருவாய், வட்டி வருவாய், நூதன வருவாய் இவற்றில் எவற்றால் முன்னேற முடியும். கைரேகை சுலபமாக உணர்த்தும் அதற்கேற்ற துறையில் முன்னேற முயல்வது பரிகாரம்.
பிறந்த குழந்தைக்கு தனரேகை தென்படாது. அக்குழந்தைக்கு புத்திரேகை, இதய ரேகை, ஆயுள் ரேகை இம்மூன்றும் சீராக இருந்தாலே போதுமானது. அது கல்வியில் சுமார் 21 வருடம் கல்வியில் மேம்பாடு அடையும்போது விதிரேகை (தனரேகை) உதயமாகும். அவை காணப் பட்டாலே நல்ல வேலைவாய்ப்பு வரும் என உறுதியாக நம்பலாம். பரிகாரத்திற்காக உரிய கிரக நாதர்களை வணங்குவது போதுமானது.
செல்: 93801 73464