இந்தியாவில் பெரும்பாலான மக்கள், நாட்டில் நடக்கும் எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டுதான், என்ன நடந்தாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் . இங்கு யாரும் அப்பாவியோ, விவரமற்றவர்களோ கிடையாது. சினிமா கதா நாயகர்கள் போல, கெட்டது நடக்கும்போது தட்டிக் கேட்கும் தைரியம் இல்லாமல் இல்லை.
பிரச்சினையிலிலிருந்து விலகிப்போவதே தன்னை நம்பியிருக்கும் குடும்பத்திற்கு நல்லதென, சராசரி வாழ்க்கைக்குப் பலரும் சென்று விடுகிறார்கள். பொதுவாக இந்தியர்கள் தனக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் விதி என தேற்றிக் கொண்டு, இருப்பதை வைத்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்னும் மனப் பக்குவம் கொண்டவர்கள். இழப்புகள் எதையும் ஏற்று, அதில் போராடி வாழ்ந்துகாட்டுவதில் வல்லவர் கள்தான் நம் மக்கள்.
நம் கண் முன்பு நடக்கும் சமூக அவலங் களை நேரில் பார்க்கும்போது, நமக்கேன் நஞ்சு என்று போய்விட வேண்டும். அல்லது அதில் நமக்கு என்ன கிடைக்கும் என்று வரவேண்டும். இன்று இதுதான் அரசியல். இதுதான் ஜனநாயகத்தில் மக்கள் உச்சரிக்கவேண்டிய பணநாயக மந்திரம்.
அரசியலானது சமூக சேவையாகப் பார்க் கப்பட்ட காலம் போய், லாபம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது. தொழில் தொடங்கு வதற்கு முன்பு கடவுளுக்கு காணிக்கை கொடுத்துத் தொடங்குவதுபோல், அரசியல் வாதிகளும் மக்களுக்கு முன்பணம் கொடுத்தே தொடங்குகிறார்கள். கசாப்புக் கடை வியா பாரிடம் சென்று, உனக்கு ஈவு, இரக்கம், மனசாட்சி இருக்காதா? என கேட்பது நியாய மில்லை. தேர்தலிலில் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துவிட்டு, ""ஏன் இப்படி மனுசங்க இருக்காங்க"" என்று அப்பாவிபோல் கேள்வி கேட்பது அபத்தமானது. அப்பாவி யாய் அரசியலுக்கு வந்து, அடப்பாவி என்கிற அளவு மக்களை ஆட்டிவைக்கும் அரசியல்வாதி யாக வெற்றி பெறுபவர்கள் யார்? அரசியல் தொழிலில் லாபம் பெற்று,மக்கள் தலைவனாய் புகழடையும் யோகம் யாருக்கு?
நல்ல அரசியல்வாதி
பலகோடி பேர் வசிக்கும் நாட்டில், யாரோ சிலருக்கு மட்டும் தன் முன்னால் தவறு நடப் பதை ஏன் யாரும் தட்டிக் கேட்க முன்வர மறுக் கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. யாரும் கண்டு கொள்ளாமல் போனாலும் நான் தட்டிக் கேட்பேன் என்கிற தன்னார்வம் பிறக் கிறது. அவ்வாறு உதவி செய்ய எழுபவரே மக்கள் போற்றும் அரசியல் தலைவனாக மாறுகிறார்கள்.
மக்களுக்கு உழைப்பதற்கும், மக்களுக்காக வாழ்வதற்கும் தனித்தன்மை வாய்ந்த ஜாதக அமைப்பு இருந்தால்தான் தரணி ஆளும் எண்ணமே உருவாகும்.
பெரும்பாலான கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறுதல், நீச பங்கம் ராஜயோகம், விபரீத ராஜயோகம், தீய கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது கெட்டு ராஜ யோகத்தைத் தருவது, குருச் சந்திர யோகம், குரு மங்கள யோகம், புதாத்திய யோகம், கஜகேசரி யோகம், தர்மகாத
இந்தியாவில் பெரும்பாலான மக்கள், நாட்டில் நடக்கும் எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டுதான், என்ன நடந்தாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் . இங்கு யாரும் அப்பாவியோ, விவரமற்றவர்களோ கிடையாது. சினிமா கதா நாயகர்கள் போல, கெட்டது நடக்கும்போது தட்டிக் கேட்கும் தைரியம் இல்லாமல் இல்லை.
பிரச்சினையிலிலிருந்து விலகிப்போவதே தன்னை நம்பியிருக்கும் குடும்பத்திற்கு நல்லதென, சராசரி வாழ்க்கைக்குப் பலரும் சென்று விடுகிறார்கள். பொதுவாக இந்தியர்கள் தனக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் விதி என தேற்றிக் கொண்டு, இருப்பதை வைத்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்னும் மனப் பக்குவம் கொண்டவர்கள். இழப்புகள் எதையும் ஏற்று, அதில் போராடி வாழ்ந்துகாட்டுவதில் வல்லவர் கள்தான் நம் மக்கள்.
நம் கண் முன்பு நடக்கும் சமூக அவலங் களை நேரில் பார்க்கும்போது, நமக்கேன் நஞ்சு என்று போய்விட வேண்டும். அல்லது அதில் நமக்கு என்ன கிடைக்கும் என்று வரவேண்டும். இன்று இதுதான் அரசியல். இதுதான் ஜனநாயகத்தில் மக்கள் உச்சரிக்கவேண்டிய பணநாயக மந்திரம்.
அரசியலானது சமூக சேவையாகப் பார்க் கப்பட்ட காலம் போய், லாபம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது. தொழில் தொடங்கு வதற்கு முன்பு கடவுளுக்கு காணிக்கை கொடுத்துத் தொடங்குவதுபோல், அரசியல் வாதிகளும் மக்களுக்கு முன்பணம் கொடுத்தே தொடங்குகிறார்கள். கசாப்புக் கடை வியா பாரிடம் சென்று, உனக்கு ஈவு, இரக்கம், மனசாட்சி இருக்காதா? என கேட்பது நியாய மில்லை. தேர்தலிலில் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துவிட்டு, ""ஏன் இப்படி மனுசங்க இருக்காங்க"" என்று அப்பாவிபோல் கேள்வி கேட்பது அபத்தமானது. அப்பாவி யாய் அரசியலுக்கு வந்து, அடப்பாவி என்கிற அளவு மக்களை ஆட்டிவைக்கும் அரசியல்வாதி யாக வெற்றி பெறுபவர்கள் யார்? அரசியல் தொழிலில் லாபம் பெற்று,மக்கள் தலைவனாய் புகழடையும் யோகம் யாருக்கு?
நல்ல அரசியல்வாதி
பலகோடி பேர் வசிக்கும் நாட்டில், யாரோ சிலருக்கு மட்டும் தன் முன்னால் தவறு நடப் பதை ஏன் யாரும் தட்டிக் கேட்க முன்வர மறுக் கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. யாரும் கண்டு கொள்ளாமல் போனாலும் நான் தட்டிக் கேட்பேன் என்கிற தன்னார்வம் பிறக் கிறது. அவ்வாறு உதவி செய்ய எழுபவரே மக்கள் போற்றும் அரசியல் தலைவனாக மாறுகிறார்கள்.
மக்களுக்கு உழைப்பதற்கும், மக்களுக்காக வாழ்வதற்கும் தனித்தன்மை வாய்ந்த ஜாதக அமைப்பு இருந்தால்தான் தரணி ஆளும் எண்ணமே உருவாகும்.
பெரும்பாலான கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறுதல், நீச பங்கம் ராஜயோகம், விபரீத ராஜயோகம், தீய கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது கெட்டு ராஜ யோகத்தைத் தருவது, குருச் சந்திர யோகம், குரு மங்கள யோகம், புதாத்திய யோகம், கஜகேசரி யோகம், தர்மகாதிபதி யோகம், பரிவர்த்தனை யோகம் போன்ற ராஜ யோக அமைப்புகள் ஜாதகத்தில் இருக்கவேண்டும். மேலும், ராசி, லக்னாதிபதி வலுத்து, யோக கிரக அதிபதி தசையும் நடந்தால் மக்களால் போற்றப்பட்டு பெரும் புகழ் அடைவர்.
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் தான் மக்களுக்கு கடவுள்போல் உதவிசெய்யும் யோக அமைப்பு உருவாகும். ஐந்தாமிடமாகிய பூர்வ புண்ணியம் வலுத்தவர்களைத்தான் மக்கள் சேவைக்காக கடவுள் தேர்ந்தெடுக்கிறார். லக்ன, ராசிக்கு மூன்றில் இருக்கும் செவ்வாய், தியாகம் செய்வதில்தான் தனிப்பட்ட மகிழ்ச்சி இருப்பதாக உணரச் செய்வார். செவ்வாய்க்கு பத்தாம் இடத்து ஆதிபத்தியம் ஏற்பட்டால் ஆயுள்வரை மக்கள் தலைவராவார். மக்கள் போற்றும் தலைவராக கிரகங்கள் வலுத்தன்மை எவ்வளவு முக்கியதுவம் வகிக்கின் றனவோ, அதே அளவு களத்திர தோஷம், புத்திர தோஷம், காலசர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி, சராசரி மனிதன் வாழும் இல்லற வாழ்க்கை யைத் தராமல் தடுத்திருக்கும். வரலாற்றில் மக்கள் மனதில் இடம்பிடித்த பல நல்ல தலைவர்கள் தங்கள் மனதிற்கு சந்தோஷம் தராமல் இருந்திருப்பார்கள். நன்றி கெட்ட மக்களுக்காக வாழ்க் கையை தொலைத்துவிட்டோம் என்கிற ஆதங்கத்தை நல்ல அரசியல்வாதிக்கு ஒரு நாளாவது கேது பகவான் உணர வைத்து விடுவார்.
கெட்ட அரசியல் வாதி
அரசியல் மிகப்பெரிய ஆபத்தான தொழில். மக்களில் ஒருவரிடம் ஓட்டு வாங்குவதென்பது சாதாரண காரிய மில்லை. மக்களுக்காகவே வாழ்ந்தாலும், ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் எல்லாருக்கும் ஓட்டு கிடைக்காது. கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள், எத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடுபவர்களாக மக்களால் அறியப்பட்டாலும், அவரு டைய ஜாதகத்தில் யோக அமைப்புடன் சனி பலம்பெற்றிருந்தால், மக்கள் அவரை நம்பி ஓட்டு போடுவர்.
தினம் தினம் பத்திரிகை, தொலைக் காட்சி, சமூக வலைத்தளங்களில் கெட்ட வனாக வர்ணிக்கப்பட்டாலும், மக்களைக் கஷ்டபடுத்துகிற திட்டத் தைத் திணித்தாலும், மீண்டும் அவருக்கே ஓட்டளிப்பதெல்லாம் குரு, செவ்வாய், சூரியனின் வலுத் தன்மையால்தான். யோக தசை நடைபெறும்போது எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினாலும், தண்டனைக் குற்றவாளியாய் நிரூபித்தாலும் அடுத்தடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவால் தேர்வு செய்யப்படுவார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் கேவல மானவர்களாக இருந்தாலும், சூரியன், சந்திரன் லாபத்தன்மை பெற்றால் அதிசயிக்கும் திறமை பெற்று புகழ் பெறுவர். சனி பலம் மிக்கவர்கள் சனி தசை, ஏழரைச் சனிக் காலங்களில் திடீர் அதிர்ஷ்டத்தால் புகழ், பதவி பெறுவர். கிரக வலிமையானது ஜாதகருக்கு நன்மை- தீமை இரண்டையும் கலந்தே தரும். புகழ்பெற்ற அரசியல்வாதிகளின் ஆரம்ப கால வாழ்க்கை கொடுமையானதாக இருக்கும். ஏனென்றால் கஷ்டப்பட்ட ஒருவரால்தான் கஷ்டப்படும் மக்களின் வலிலியை உணரமுடியும். அதீத ஏமாற்றங்கள் பெற்றவர்களுக்கே பல்துறை ஞானம் இருக்கும். ஞானம் பெற்றவர்களால்தான் மக்களைக் கையாள முடியும்.
வலுப்பெற்ற சனியால்தான் அரசியல் தலைவர்கள் பலருக்கு நீண்ட ஆயுளும் நீடித்த புகழும் கிடைக்கிறது. சுயநலம் இல்லாத மனிதனே கிடையாது. தேனை எடுத்தவன் புறங்கை நக்காமல் இருப்பானா என நல்ல அரசியல்வாதியாக இருப்பவர்களையே கிண்டல் செய்யும் உலகம். உண்மையில் கெட்ட அரசியல்வாதி என யாருமில்லை. நல்ல அரசியல்வாதிக்கு ஜாதக அமைப்பு இருப்பதுபோல், நல்லதே செய்தாலும் கெட்ட அரசியல்வாதியாகவே பார்க்கப்படக் கூடிய ஜாதக அமைப்பும் சிலருக்கு அமைந்துவிடுகிறது. 7-ஆமிடம் மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய இடம். அது கெட்டு, சனி மற்ற பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டாலும் மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பர்.
தோற்ற அரசியல்வாதி
மக்கள் சேவை செய்ய எண்ணி ஒரு கட்சியில் சேர்ந்து, படிப்படியாக வயதையும் வாலிபத்தையும் தொலைத்து, கட்சிக்காகப் போராட்டம், கைது என மாடாய் உழைத்து, கட்சி மேலிடப் பார்வைபட்டு, பதவி கிடைக்கும் நிலையில் திடீரென்று கட்சியிலிலிருந்து ஒதுக்கப்படுவது, தேர்தல் தள்ளிப் போவது, வேட்பாள ராய் நிறுத்தப்பட்ட நிலையில் கட்சி ஊழல், தலைமை மாற்றத்தால் தேர்தலில் தோல்வி தருவது என பலவித போராட்டங்கள் சிலருக்கு அமைந்து விடும்.
செவ்வாய், சனி, ராகு ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றால் தோல்வியை ஏற்படுத்தி அவமானத்தைத் தரும். நல்ல ராஜ யோகங் கங்கள் இருந்தும் அதற்குரிய தசா புத்தி நடக் காமல்போனால், பிறரை ஏற்றிவிடும் ஏணியாக, அடுத்த வருடம், அடுத்த தேர்தல் என ஆயுள்வரை சிலருக்கு அரசியல் வாழ்க்கை ஏக்கத்துடன் தோல்வியில் முடிந்து விடுகிறது.
இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்தில் பாவகிரகச் சேர்க்கை பெற்றால், அரசியலில் வயதுக்கு மீறி பெரிய மனிதன் போல பேசத் தோன்றும். சமயத்தில் மூத்த பெரியவர்களுக்கு அதிக மரியாதை கொடுத்தும், சில நேரம் மரியாதையே இல்லாமலும் பேச வேண்டிய சூழல் வரும். பதவிக்காக வயதுக்குக் கீழானவர்களிடம் பேச்சு கேட்க வேண்டிய சூழலும் வரும். சிலருக்கு ஏழரைச் சனிக் காலத்தில் மக்களால் கேவலப்படவும் நேரும்.
புகழை நிரந்தரமாக்குவது, பதவியைக் கொடுப்பது ஐந்தாமிடத்தின் பலத்தைப் பொருத்து அமையும். ஐந்தாமிடம் கெட்டால் தன்மானம் விட்டு, கண்டவன் கால்களில் விழ நேரும். பத்தாமிடமும் கெட்டால், ஊரில் இருக்கும் எல்லாரும் நம்மைப் பார்த்து வணக்கம் வைக்கவேண்டுமென்னும் ஒரு பைத்தியம் பிடித்து, குடி போதையவிட மோசமான புகழுக்கு ஏங்கி, ஏதாவது கட்சியில் தானாகப் போய் வலையில் மாட்டி, வெளியே வரவும் முடியாமல் தவிக்க வைத்து விடும்.
12-ஆமிடம் கெட்டால் மரணக் கொடுமை அன்றாடம். தூங்க முடியாது. ஏழாமிடம் கெட்டவர்கள் இளம் வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்து, சீனியர்களால் ரேகிங் செய்யப்பட்டு, அடுத்த உயர்பதவிக்குச் செல்ல அன்றாடம் யோசித்து, குடும்பத்தை சரிவர நடத்த முடியாமல் ""இது தேவையா'' என போராடி, தினம் ஒரு கனவு கண்டு சந்தோஷம் அத்தனையும் காவு கொடுத்து விடுவர்.
ஐந்தாமிடமும் ஏழாமிடமும் கெட்டவர்கள், நினைத்ததை முடிப்பவர் என்று சொல்லிலிச் சொல்லி, உடன் இருக்கிறவர்கள் உசுப்பிவிட்டு, பார்க்கிற எல்லாரையும் நம்ம வளர்ச்சி மேல பொறாமைப் படுறாங்களோ என்று சந்தேகப் பட வைத்து, அதிக குழப்பத்தை அன்றாடம் ஏற்படுத்தி பைத்தியகார நிலையைத் தந்துவிடும்.
சனி பலமில்லாமல் போனால், கஷ்டபட்டுப் போராடி கட்சியில் சீட்டு வாங்கி, சொத்தை அடமானம் வைத்து, பலபேர் சொத்தைப் பறித்து, ஓட்டுக்கு கெத்தா பிச்சை எடுத்துப் போராடி னாலும், கடைசியில் தேர்தலில் தோல்வியையே தந்துவிடும்.
ராஜயோகத்தால் ஜெயித்தாலும், சிலருக்கு ஆறாம் அதிபதி தொடர்பால் அடிமையாக வாழ்வது போன்ற நிலையைத் தந்துவிடும். எட்டாம் அதிபதி தொடர்பு- மக்கள் சேவையும் செய்ய முடியாமல், சம்பாதிக்கவும் முடியாமல் பலரை வேதனைப்படுத்தும். அரசியலில் கவுன்சிலர் முதல் பிரதமர் வரை பதவி பெறுவதற்கு அவரவர் ஜாதகத்தில் நிற்கும் கிரகத்தின் வலுத்தன்மையே காரணம்.
அரசியல் வியாபாரி
இன்று மக்கள் பலரிடமும் நேர்மை, நீதி, நியாயம் இல்லை. தன் தேவைக்கேற்ப வாழ்ப வர்கள் அதிகரித்து விட்டனர். நல்லவனுக்கு ஓட்டு போட மாட்டார்கள். ஆதலால்தான் நல்லவர்கள் அரசியலுக்கு வந்து அவமானப்பட விரும்பாமல் விலகி விடுகின்றனர். பணக் காரனாய் இருப்பவர்களை விட பணம் தருபவர் களையே மக்கள் விரும்புகின்றனர். ஆதலால் தான் மக்களுக்குப் பணம் தரும் வியாபாரிகள் அரசியலுக்கு வரவேண்டிய நிர்பந்தமா கிவிட்டது.
வாக்கு ஸ்தானமாகிய இரண்டாமிடமும் பத்தாமிடமும் நல்ல முறையில் அமைந்தவர்கள், தான் சொன்னபடி மக்களுக்குப் பணத்தைக் கொடுத்து, அரசியல் தொழிலால் லாபமும் பெற முடியும். நிரந்தரத் தலைவர்களாக இருப்பவர்களுக்குதான் புகழுக்குரிய ஜாதக அமைப்பு தேவை. அரசியலை வியாபாரமாக எண்ணி முதலீடு செய்பவர்களுக்கு சனி வலுத்து சுப கிரகப் பார்வை பெற்றால் தேர்தலில் ஓட்டு பெற்று வெற்றி பெற்றுவிடலாம். தொழில் அதிபதியைவிட பதினொன்றா மிடமான லாபாதிபதி வலுத்தால் நல்ல லாபம் அரசியலில் கிடைக்கும். தொழில் தசை லாபதசை முடிந்ததும், அரசியல் தொழிலிலிருந்து விலகிவிடுவது நிம்மதி தரும்.
அரசியலில் நெடுநாள் இருப்பதற்கு செவ்வாய் பலம் அவசியம். ஏனென்றால் உடனிருப்பவர்களின் தொல்லைகளை சாமாளிக்க தைரியம் தேவை. ஆறாம் அதிபதி லக்னத்தில் அமைவது, எதிரிகளையும், உடனிருந்து கெடுக்கும் துரோகிகளையும் எதிர்கொள்ள உதவும். அரசியலில் எவ்வளவு பணம் சம்பாதித்து குடும்பத்திற்குக் கொடுத்தாலும் திருப்தியடைய மாட்டார்கள். சொந்தக்காரர்கள் எனக்கு மட்டும் சரியாகச் செய்யவில்லை என குறைபடுவர். மேலும் உடனிருப்பவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து கொண்டே இருக்கவேண்டும்.
இத்தனை காழ்ப்புணர்ச்சிகளையும் தாண்டி அரசியலில் நெடுநாள் பயணிக்க வேண்டுமானால் நவகிரகங்களும் ஜாதகத்தில் வலுப்பெற்று, சுபகிரக தசைகள் தொடர்ந்து நடந்தால்தான் யாரும் எதிர்க்காத சக்கரவர்த்தியாக, ஆயுள் வரை புகழ், அந்தஸ்துடன் வாழ முடியும்.
ஐந்தாமிடம்
புத்திர பாக்கியம், பூர்வ புண்ணியத்தை ஐந்தாமிடம் என்று குறிக்கப்படுவதன் நோக்கமே, நாம் சேர்க்கும் பாவ- புண்ணியங் களே நம் பிள்ளைகள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு மனிதனும் சொத்து சேர்ப்பது தன்னுடைய வாரிசுகளுக்காகதான். சுகவாசியாக சந்ததிகள் வாழ பரம்பரைக்கும் சொத்து சேர்த்து வைக்கவேண்டியது கடமை என நினைப்பது போல், புண்ணியத்தையும் சேர்க்க வேண்டும். சிவன் சொத்தை- அதாவது மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் குல நாசம் ஏற்படும். அரசியலுக்கு வரும்போது நல்லது செய்ய வேண்டுமென பேசி, அப்பாவி போல் நடித்து, பதவி பெற்றபின் அடப்பாவி என மக்கள் புலம்புமளவு கொடுமைகள் செய்யக் கூடாது. அவ்வாறு பாவம் சேர்த்த அரசியல்வாதி களுக்கு ஐந்தாமிட வலுக் குறைந்து போய் புத்திர பாக்கியம் தனக்கோ, வரிசுகளுக்கோ இல்லாமல் போகும். புத்திர தோஷத்தால் குழந்தைகளுக்குத் தீராதநோய், கடன் என அவமானம் தரும் பல தோஷம் ஏற்பட்டு பரம்பரை அழிந்துவிடும். அரசியலை சேவையாக அல்லாமல், ஒரு வியாபாரமாக எடுத்துக் கொள்ளை அடித்தாலும், குறைந்த பட்ச நேர்மையோடு நடந்துகொள்வதுதான் தொழில் தர்மம். அரசியல் தொழில் செய்யும் போது மக்களுக்கும், நாட்டுக்கும் ஏதாவது ஒரு நிரந்தரமான நல்ல காரியம் செய்து, மக்கள் ஆசியுடன் ஓய்வுபெறுவது, பூர்வபுண்ணிய ஐந்தாமிடத்தின் பலத்தை வலுப்படுத்தி சந்ததிகளுக்கு நல்லது நடக்க உதவும்.
பரிகாரம்
இந்த உலகம் இருக்கும்வரை நானே தவைவன் என்று நினைத்து சர்வாதிகாரம் செய்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை. உலகம் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஊருக்கு உழைக்க ஆசைப்பட்டு, ஊர் ஊராக சுற்றி அலைந்தாலும் நாம் யார் என்பதை உலகம் ஒரு நாள் மறந்தே போகும். நாம் இறந்தாலும் நம் புகழானது பல தலைமுறை வாழவைக்கும் என்பதெல்லாம் பழைய மொழி. இன்றைய மக்கள் இறந்து சில வருடங்களில் மறந்தே போய்விடுவர். யார் தேவையோ அவன் பின்னால் உலகம் ஓடும். புகழின் பின்னால் ஓடி அன்றாட சந்தோஷங்களை இழந்தவர்கள் கோடி. புகழுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கைய இழக்கிற அப்பாவிதான் அரசியல்வாதி. மக்கள் சேவை செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வந்துதான் செய்யவேண்டிய அவசியமில்லை. நம் முன்னால் கீழே விழப் போகிறவனைத் தூக்கி விடுவதும் அரசியல் சேவைதான். அருகிலிருக்கும் பசித்தோருக்கு உணவும், ஆடையில்லாதவருக்கு ஆடையும் வழங்கினால் மனநிம்மதியான வாழ்வு கிட்டும். நம் பரம்பரையும் கஷ்டமின்றி சுகமாக வாழ்வர்.
செல்: 96003 53748