உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும், ஆபரணம், நகை என்றாலே அலாதிப்பிர்யம் உண்டுதான். இந்த நகை மோகம் என்பது ஜாதி, மத, இன பேதமின்றி அனைத்துலக மாந்திரிடமும் குடிகொண்டுள்ளது. ஏன் சில ஆண்கள்கூட நிறைய நகை அணிந்து கொள்வதைப் பார்க்கிறோம்.
ஜோதிடம் தங்க நகைகளைக் குறிக்க குருபகவானை குறிப்பிடுகிறது. வைர, வெள்ளி, நகைகளைக் குறிக்க சுக்கிரனை குறிக்கிறது.
ஒவ்வொருவர் பிறப்பு ஜாதகத்திலும் அமர்ந்த சுப குருவும், சுப சுக்கிரனும் ஜாத கருக்கு ஆபரண யோகத்தை தருவர்.
குரு அமர்ந்த இடமும் பலனும்
லக்னத்தில் அமர்ந்த சுப குரு, ஜாதகர் தன் சுய முயற்சியால் நகை வாங்குவதை கூறுவார். இதே லக்ன குரு, அசுபத் தன்மையுடன் இருந் தால், சொந்த காரணத்துக்காக நகைகளை விற்றுவிடுவார்.
2-ஆமிடத்தில் அமர்ந்த சுப குரு, குடும்ப நகைகளை அனுபவிக்கச் செய்வார். சிலர் தங்க நகை வியாபாரம் செய்யக்கூடும்.
இவ்விதம் 2-ல் அமர்ந்த சுப குரு தங்க ஆபரணங்களைவிட, தங்கக் காசுகளாக சேர்க்கச் செய்வார். 2-ல் அமர்ந்த அசுபத் தன்மையுடைய குரு, அவசர பணத் தேவைக்கு, நகைகளை விற்கச் செய்துவிடுவார். மேலும் நகை வாங்க போதிய பணமின்றி தவிக்கும் நிலை இருந்துகொண்டே இருக்கும்.
3-ல் அமர்ந்த சுப குரு: அனேகமாக தங்க பத்திரங்களாக வாங்கி சேர்க்கச் செய்வார். இவர்களில் சிலர், தங்கம் வாங்கி, விற்கும் தொழிலும், தங்கம் சம்பந்தமான தரகு வேலையும் செய்வர். 3-ல் அமர்ந்த அசுப குரு, தங்கத்தை அடமானம் வைக்கச் செய்வார்.
4-ல் அமர்ந்த சுப குரு: தாய்வழி நகைகளை வாரி வழங்குவார். 4-ஆமிடம் என்பது களஸ்திரஸ்தானத்தின் தொழில் இடம். எனவே, உங்களுக்கு வரும் வாழ்க் கைத்துணை நகை வியாபாரம், தங்கக்கடை வைத்திருப்பவராக அமைவார். 4-ல் அமர்ந்த அசுப குரு, ஒன்று தாய்வீட்டில், நகையையே கண்ணில் பார்க்கமுடியாத அளவில் இருக் கும். அல்லது தாய்வீட்டு சீதன நகையை விற்று விட நேரிடும்.
5-ல் அமர்ந்த சுப குரு: பூர்வீக நகை களை வாரி வழங்குவார். வேறு சிலருக்கு வாரிசுகள்மூலம் நகை வாங்கும் யோகம் உண்டு. இன்னும் சிலர் தங்க காசுகளை, போட்டி களில் பரிசாக பெறும் யோகம் கிடைக்கும். விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள், தங்க மெடலை பெறும் பாக்கியம் உண்டு. 5-ல் அமர்ந்த அசுப குரு, உங்கள் நகைகளை, உங்களின் வாரிசுகளின் பொருட்டு விற்க நேரிடும். அல்லது பூர்வீக ஆபரணங்களை கிடைக்கவிடாமல் செய்துவிடுவார்.
6-ல் அமர்ந்த சுப குரு: நகை கடையில் வேலை செய்யச் செய்வார். அல்லது நகை களை வைத்துக்கொண்டு செய்யும் வட்டி வியாபாரம் நடத்தச் செய்வார். 6-ல் அமர்ந்த அசுப குரு, ஜாதகரின் நகைகளை வட்டிக் கடைக்கு செல்ல வழிகாட்டுவார். அல்லது திருட்டு போகச் செய்துவிடுவார்.
7-ல் அமர்ந்த சுப குரு: திருமணத்தின் போது, நிறைய நகை அணியச் செய்வார். அல்லது வரும் வாழ்க்கைத் துணை, எக்கச் சக்கமான நகை நட்டோடு வந்துசேர்வார். சிலர் நகை வியாபாரம் பயிற்சியாளராக சிலர் இருப்பர். 7-ல் அமர்ந்த அசுப குரு- வாழ்க்கைத்துணைக்கும், நகைக்கும் சம்பந்தம் இல்லாமல் செய்துவிடுவார்.
8-ல் குரு அமர்வது அவ்வளவு சிலாக்யமில்லை. அவர் சுபராக இருப்பின், தங்கக் கடத்தலில் ஈடுபடச் செய்வார். அசுப ராக இருப்பின், நகை சம்பந்தமான திருட்டு போன்ற அவமான செய்களில் சிக்கச் செய்வார்.
9-ல் அமர்ந்த சுப குரு: எப்போதும் நகை அணிந்துகொண்டே இருக்கும் பாக்கியம் அளிப்பார். பழமையான நகைகள், இவர் களிடம் அதிகம் இருக்கும். பரம்பரை ஆபரணங் களை பாதுகாப்பாக வைத்திருப்பர். சிலருக்கு பேரன்- பேத்திகள் நகை வாங்கி கொடுப்பர். இவர்களின் தந்தை, ஆசை ஆசையாக நகைகள் வாங்கி கொடுப்பர். ஆபரண வகை அதிர்ஷ்டம் மிக்கவர்கள்.
9-ல் அமர்ந்த அசுப குரு: ஆபரண அதிர்ஷ்டம் இல்லாமல் செய்துவிடுவார். இவர் களின் தந்தை வீட்டில் குந்துமணி தங்கம்கூட இருக்காது.
10-ல் அமர்ந்த சுப குரு: தங்க நகை வியாபாரம் செய்யச் செய்வார். நகைகளினால், இவர்கள் வெகு கௌரவம் பெறுவர். சிலர், அரசிடமிருந்து, தங்கப்பதக்க கௌரவம் பெறுவர். சிலருக்கு தங்கப் புதையல் கிடைக்க வாய்ப்புண்டு. இவர்கள் குடும்பமும், பரம்பரையும் தங்க நகை விஷயத்தால் வெகு பிரபலம் அடைவார்கள்.
10-ல் அமர்ந்த அசுப குரு: தங்கத்தை திருடு போகச் செய்வார். மேலும் இக்குறிப்பிட்ட ஜாதகர்கள், தங்க நகையை திருடிவிட்டனர் எனும் வெகு அவமானம் வந்துசேரும். வெகுசிலரின், தங்க நகைகளை, அரசாங்கம் எடுத்துக்கொண்டு போய்விடும்.
11-ல் உள்ள சுப குரு: தங்க பெருக்கமும், தங்க நகை லாபமும் தருவார். தங்கச் சீட்டு நடத்தச் செய்வார். தங்கம் சார்ந்த வெளிநாட்டு வர்த்தகம் நடத்தச் செய்வார். தங்க நகை வர்த்த கம் நல்ல லாபம் தரும். இவர்கள் அரசியல்வாதி களாக இருப்பின், தங்க நகை சம்பந்தமான பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பர்.
11-ல் அமர்ந்த அசுப குரு: தங்கத்தை தங்க வைக்கவிட மாட்டார். எப்போதும் தங்க நகையை எண்ணி எங்கும் நிலையை உண்டாக்கி விடுவார். தங்கம் துரதிரஷ்டம் தரும்; தங்கம் தங்காது.
12-ல் அமர்ந்த சுப குரு: தங்க வியாபாரத் துக்கு முதலீடு செய்ய செய்வார். அல்லது தங்க வணிகம் செய்பவர்களுக்கு, பண முதலீட்டுக்கு உதவும் தொழிலில் இருப்பர். பலர் தங்க கட்டிகள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்வர். சிலர் வெளிநாட்டிலிருந்து, தங்கம் வாங்கி, விற்கும் வேலை செய்வர். அல்லது அது சார்ந்த அரசு வேலை கிடைக்கும். இவ்வித அமைப் புடைய பெண்கள், அடிக்கடி, இருக்கும் நகையை மாற்றி, புது, புது டிசைனில் நகை செய்து கொள்வர்.
12-ல் அமர்ந்த அசுப குரு: வீட்டில் இருக்கும் குந்துமணி தங்கத்தையும் விற்க வைத்துவிடுவார். தங்கத்தை கனவில்தான் காண முடியும். இதுபோன்ற பெண்களுக்கு, நிறைய நகை இருப்பினும், இந்த 12-ஆமிட தசை, புக்தி நடக்கும்போது, அத்தனை நகைகளையும் விற்றுவிட நேரிடும். சில ஆண்கள் வெளிநாடு களில் இருந்து, கள்ளத் தனமாக தங்க கடத்த -ல் ஈடுபடுவர்.
மேற்கண்ட விதத்தில், சுக்கிரன் சுபமாக அல்லது அசுபமாக அமர, வைர நகைகள் சம்பந்தமான மேற்கண்ட பலன்களே நடக்கும்.
கிரக சேர்க்கையும், தங்க நகையும்
குரு+ சூரியன்: இவ்விரு கிரகங்களும் சுபமாக இருப்பின், பரம்பரை தங்க நகைகள் கிடைப்பதோடு, அது பத்திரமாகவும் இருக்கும். பிறர் மெச்சத் தகுந்த அளவில் தங்க நகை சேர்க்கை அமையும். அமையும் நகைகள், நல்ல காத்ரமாக இருக்கும். பெருமளவு தங்கம் மட்டுமே, கற்களின்றி சேரும். மயில், தேர், சூரியன் வடிவமைப்பு அமையும்.
குரு+ சந்திரன்: இக்கிரக சேர்க்கை சுபமாக அமைந்திருப்பின், தாய்வழி நகைகள் சேரும். மேலும், தங்கத்தில் முத்துக்கள் சேர்ந்த நகைகளாக அமையும் பழங்கால டிசைனில் இருக்கும். கோபுரம் போன்ற வடிவமும் சதுரங்களான வடிவமைப்பும் நிறைந்திருக்கும்.
குரு+ செவ்வாய்: தங்க நகையில், உடன் பவளம் சேர்த்து செய்த நகைகள் நிறைய கிடைக்கும். சிலரின் உடன்பிறந்தோர் நகை வாங்கித் தருவர். நகையில் முக்கோண டிசைன் நிறைய இருக்கும். சிலருக்கு இந்த கிரக அமைப் பில் குற்றம் இருப்பின், தங்கத்தில் நிறைய செம்பு கலந்து செய்துவிடுவர். இவ்வமைப்பு சுபத்தன்மை குறைந்திருப்பின், கவரிங் நகை அணிவர்.
குரு+ புதன்: சுபத்தன்மையோடு இந்த கிரக அமைப்பு இருப்பின், தங்கமும் மரகத கற்களும் சேர்த்துசெய்த நகை அணிவர். அல்லது தங்கத்தில் நல்ல பச்சை கற்கள் சேர்த்து நகை செய்வர். நகையில் அம்பு போன்ற டிசைன் சேர்ந்திருக்கும். சிலரின் தாய்மாமன் இவ்வித நகை வாங்கித்தருவார். சிலர் சீட்டு போட்டு, இவ்விதம் நகை வாங்குவர். இந்த அமைப்பு பலங்குன்றி இருப்பின், போலி நகை வாங்கி அது பச்சைக் கலரில் பல்லிளிக்கும்.
குரு+ சுக்கிரன்: இவ்வமைப்பு சுபமாக அமையுமாயின், அவர்கள் கண்டிப்பாக வைர நகைகளை அணியும், வாய்ப்பு உண்டு. இதனை வாழ்க்கைத்துணை வாங்கித் தருவார். இதில் கருடனைப்போல் வடிவமைப்பு இருக்கும். அல்லது ஐங்கோண வடிவில் நகை அமைந் திருக்கும். நிறைய கலை, அழகு, கவர்ச்சி அம்சம் சேர்ந்த நகைகளாக இருக்கும்.
குரு+ சனி: இவ்வமைப்பு சுபமாக இருப்பின் தங்கத்தில் நீலக்கல் பதித்த நகைகள் அமையும். நகைகள் நல்ல கனமாக, மிக பழங்கால நகையாக இருக்கும். பரம்பரை நகைகளாக கிடைக் கும்.
குரு+ ராகு: குருவும், ராகுவும் சுபசாரம், சுபர் பார்வைப்பெற்று, முழு சுபராக இருப்பின், இவர்கள் தங்கத்தில் கோமேதகம் பதித்த நகை அணியும் வாய்ப்புண்டு. அல்லது ராசிக்கல் சம்பந்த வியாபாரம் பண்ணுவர். இந்த நகையில் பறவை டிசைன் நிறைந்திருக்கும். இதனை உங்களின் தந்தைவழி பாட்டனார் வழங்குவார். சிலர் வெளிநாட்டிலிருந்து தங்கக் கட்டிகள், தங்க கோமேதகம் பதித்த ஆபரணங்களை வாங்கி வியாபார விநியோகஸ்தராக இருப்பர்.
குரு+ கேது: இந்த இரு கிரகங்களும் முழு சுபத்தன்மை பெற்று இருப்பின் தங்கத்தில், வைடூர்யம் பதித்த நகைகளை அணியும் வாய்ப் புண்டு. இந்த நகையில் பருந்து, இராஜாளி போன்ற பறவைகள் வடிவம் இடம்பெற்றி ருக்கும். இதனை இவர்களின் தாய்வழி தாத்தா வழங்குவார். இவர்களில் சிலர் கோவில் விக்ரங்களுக்கு நகை செய்யும் பணியில் இருப்பர். சிலர் பெரிய விஷயங்களில். சிறிய மிகச் சிறிய அளவில், தங்கம், வைடூர்யம் சேர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பர்.
செல்: 94449 61845