ப்தரிஷி நாடி ஜோதிடம் பலன் கூறும் முறை, மற்ற பாரம்பரிய கணித ஜோதிடம். வேத ஜோதிடம், பலன் கூறும் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இன்றைய நாளில் ஜோதிடர்கள் ஒருவர் ஜாதகத்தைப் பார்த்து பலன் கூறும்போது 7-ஆவது ராசி, 8-ஆவது ராசி என்று பாவத்தை அந்த இடத்தை வைத்து பலன் கூறுகின்றார்கள்.

உதாரணமாக ஒருவருக்கு திருமணம் சம்பந்தமாக பலன் கூறும்போது, லக்னத்திற்கு 7-ஆவது ராசியை மட்டும் பார்த்துவிட்டு, அந்த ராசியில் உள்ள கிரகத்தை வைத்து பலன் கூறுகின்றார் கள். 7-ஆவது ராசியில் ராகு- கேது இருந்தால் அங்கு பாம்பு இருக்கின்றது, இது சர்ப்பதோஷம் இதேபோன்று சர்ப்ப தோஷம் உள்ளவரைத் தான் மணந்துகொள்ள வேண்டும் என்று கூறிவிடுகின்றார்கள். இதே போன்று செவ்வாய், ராகு- கேது இவைகள் 7-ஆவது ராசியில் இருந்தால், தோஷ ஜாதகம் என்று கூறுகின் றார்கள். 7-ஆவது ராசியில் எந்த கிரகமும் இல்லை என்றால் அதை சுத்த ஜாதகம் என்று கூறுகின் றார்கள்.

சப்தரிஷி நாடி முறையில் ரிஷி. முனிவர்கள் பலன் கூறும்போது, 7-ஆவது ராசி பாவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பலன் கூறுவது இல்லை. 7-ஆவது ராசிக்குரிய கிரகத்திற்கு பாவாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுத்து 7-ஆம் அதிபதி 12-ராசிகளில் எங்குள்ளது. அந்த கிரகம் எந்த கிரகத்தால் பார்க்கப்படுகின்றது. எந்த கிரகத்துடன் இணைந்து சேர்க்கைப் பெற்றுள்ளது என்பதை அறிந்து, ஆய்வு செய்து பலன்களைக் கூறியுள்ளார்கள்.

ss

லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் எந்த ராசியில் அமர்ந்திருந்தாலும், அதனுடன் ராகு- கேது சேர்ந்து இருந்தால் மட்டுமே இதனை "சர்ப்பதோஷ ஜாதகம்'' என்று கூறுகின்றார்கள். 7-ஆவது, 8-ஆவது ராசியில் ராகு- கேது தனித்து அமர்ந்து இருந்தால் சர்ப்பதோஷம் இல்லையென்பது ரிஷிகள் வாக்கு ஆகும்.

சப்தரிஷி நாடியில் ராசி அதிபதி கிரகங்களுக்கும், கிரக காரக தத்துவங்களுக்கும், முக்கியத்துவம் கொடுத்து பலன் கூறியுள்ளார்கள். ராசிகளுக்கு பலன் கூறவில்லை. சந்திரன் இருக்கும் ராசியை முதல் ராசியாக கொண்டு, கோட்சார பலன் கூறுவது சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு தசாபுக்தி பலன் நிர்ணயம் செய்வது சனி, குரு, ராகு- கேது பெயர்ச்சி சமயங்களில் கோட்சார பலன் கூறுவது சரியாக பலன் தராமல் போவது இதனால் தான், வேத கணிதமுறை ஜோதிடர்கள் ஒருவர் கூறிய பலன்முறைகளையே எல்லாரும் காலம், காலமாக கூறி வருகின்றார்கள். பலன் கிடைக்காத மக்கள் ஜோதிடத்தின் மீதே நம்பிக்கை இழந்து, ஜோதிடம் பொய் என்று சிலர் கூறுகின்றார்கள். அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில் இன்னும் சில ஜோதிட உண்மைகளை அறிவோம்.

இனி தடையில்லாமல் நிச்சயம் திருமணம் நடக்கும் கிரக அமைப்புள்ள ஜாதகங்களை தெரிந்துகொள்வோம்.

1. ஆண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம். லக்னத்திலேயே அமர்ந்திருந்தால், திருமணம் நிச்சயம் உண்டு. பெண் ஜாதகத்திலும் இதேபோன்று லக்னத் திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திலேயே அமர்ந்திருந்தால் அவளுக்கு திருமணம் நிச்சயம் உண்டு.

2. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலேயும், லக்னாதிபதி கிரகம் ஏழாமிடத்தில் அமர்ந்து இருந்தால் அவர்களுக்கு திருமண யோகம் ஏற்பட்டு நிச்சயம் திருமணம் நடக்கும்.

3. ஆண்- பெண் இருவர் ஜாகத்திலும், அவர்கள் ஜாதக லக்னாதிபதி கிரகத்திற்கு 7-ஆவது ராசியிலேயே, 7-ஆவது ராசிக்குரிய கிரகம் நின்றிருந்தாலும் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடைபெறும்.

4. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், அவர்கள் ஜாதகம் லக்னாதிபதி கிரகம் நின்ற ராசிக்கு 2, 12-ஆவது ராசிகளில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் அமர்ந்து இருந்தால் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடைபெறும்.

5. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், ஜாதக லக்னத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் அமர்ந்திருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும்.

6. ஆண்- பெண் ஜாதகத்தில், ஜாதக லக்னாதிபதிக்கு இரண்டு ஆட்சி வீடுகள் இருக்கும் பட்சத்தில் அந்த லக்னாதிபதியின் இரண்டு வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் நின்று அதனுடன் லக்னாதிபதி கிரகம் பரிவர்த்தனை மூலம், 7-ஆவது ராசிக்குரிய கிரகத்துடன் சேர்க்கை பெற்றாலும் திருமணம் நிச்சயம் நடக்கும்.

7. ஆண்- பெண் ஜாதகங் களில் களத்திர ஸ்தானமான 7-ஆவது ராசிக்குரிய கிரகத் திற்கு இரு வீடுகள் இருக்கும் நிலையில் 7-ஆவது வீட்டிற்குரிய இரண்டு ராசிகளில், ஏதாவது ஒரு ராசியில் லக்னாதிபதி கிரகம் அமர்ந்திருந்து 7-ஆவது ராசிக்குரிய கிரகம் பரிவர்த்தனைப் பெற்று லக்னாதிபதி கிரகத்துடன் சேர்க்கைப் பெற்றால் திருமணம் நிச்சயம் நடக்கும்.

8. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் அவரவர் ஜாதக லக்னாதிபதி இருக்கும் ராசிக்கு 4, 6, 8, 10-ஆவது ராசிகளில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் அமர்ந்திருந்தாலும், 7-ஆவது ராசிக்குரிய கிரகம் பரிவர்த்தனை பெற்று லக்னாதிபதி கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் வந்து அமர்ந்தால் திருமணம் நிச்சயம் நடக்கும்.

9. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், ஜாதகத்தில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருக்கும். ராசிக்கு 4, 6, 8, 10-ஆவது ராசிகளில், ஜாதக லக்னத்திற்குரிய லக்னாதி பதி கிரகம் அமர்ந்திருந்து, அந்த லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்று ஜாதகம் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் லக்னாதிபதி கிரகம் வந்து அமர்வானாகில் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் உண்டு.

10. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், ஜாதகத்தில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் "குருவாக'' இருந்து அந்த "குரு'' கிரகம் லக்னத்திற்கு திரிகோண ராசிகளான 1, 5, 9-ஆவது ராசிகளிலோ அல்லது கேந்திர ராசிகளான 1, 4, 7, 10-ஆவது ராசிகளிலோ, அமர்ந்திருந்தால் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடைபெறும்.

11. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் ஜாதகத்தில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம், லக்னத்திற்கு 1, 4, 7, 10-ஆவது ராசிகளில் அமர்ந்திருந்தால் திருமணம் நிச்சயம் நடக்கும்.

12. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், அவர்கள் ஜாதகத்தில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் "செவ்வாய்'' கிரகமாக இருந்து அந்த செவ்வாய் கிரகம் லக்னத்திற்கு 1, 4, 6, 7, 10-ஆவது ராசிகளில் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடக்கும்.

13. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், ஜாதக லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் "சனி'' கிரகமாக இருந்து, அந்த 7-மதிபதி சனி கிரகம், ஜென்ம லக்னத்திற்கு 1, 4, 7, 10, 11-ஆவது ராசிகளில் அமர்ந்திருந் தால் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடைபெறும்.

14. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் அவரவர் ஜாதக லக்னாதிபதி கிரகமும், 7-ஆவது ராசிக்குரிய கிரகமும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளில் எந்த ராசியில் இணைந்து, ஒரே ராசியில் இருந்தால் திருமணம் நிச்சயம் நடக்கும்.

15. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் லக்னாதிபதி கிரகம் நின்ற ராசிக்கு 7-ஆவது ராசியில், 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தாலும் அல்லது 7-ஆவது ராசிக்குரிய கிரகம் நின்ற ராசிக்கு 7-ல் லக்னாதிபதி நின்றாலும், நிச்சயம் திருமணம் நடக்கும்.

16. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், அவரவர் ஜாதக லக்னாதிபதி கிரகமும், லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகமும் பரிவர்த்தனைப் பெற்று அமர்ந்தாலும் நிச்சயம் திருமணம் நடக்கும்.

17. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், அவரவர் ஜாதக லக்னத்திற்குரிய கிரகமும், 7-ஆவது ராசிக்குரிய கிரகமும் அடுத்தடுத்த ராசிகளில் நின்றால் திருமணம் நிச்சயம் நடக்கும்.

18. ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், லக்னாதிபதி கிரகமும் லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகமும், ஒருவருக்கொருவர் திரிகோண ராசிகளான 1, 5, 9-ஆவது ராசிகளில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடக்கும். அடுத்து திருமண தடையாகும் ஜாதக கிரக நிலையை அறிவோம்.

செல்: 93847 66742