ரியல் எஸ்டேட் என்றால் நிலங்கள், வீடுகள், கட்டடங்கள் போன்றவற்றை விற்பது, வாங்குவது, வாடகைக்கு விடுவது ஆகியவற்றைத் தொழிலாகச் செய்வதைக் குறிக்கும். ரியல் எஸ்டேட் என்ற சொல்லைக் கேட்டாலே பலருக்கும் மனதில் இனம்புரியாத ஒரு சந்தோஷம் ஏற்படும். ஏனென்றால், சிறிய முயற்சியில் பெரும் லாபத்தைத் தரும் இந்தத் தொழிலை முயன்று பார்க்காதவர்களே கிடையாது. பெட்டிக்கடை வைத் திருப்பவர்கள்முதல் பெரிய தொழில் செய்பவர்கள்வரை ரியல் எஸ்டேட் தொழில்செய்து பணம் சம்பாதித்திருப்பார்கள்.
நாட்டில் பெரும் பணம் புரளும் தொழில்களுள் ரியல் எஸ்டேட்டும் ஒன்று. ரியல் எஸ்டேட் சீரமைப்பு சட்ட திட்டங்கள், ஜி.எஸ்.டி வரி போன்ற காரணங்களால் சிறிய அளவில் இத்தொழில் முடங்கினாலும், பெரும் பணம் புரளும் தொழில்கள் அதிகளவில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. யாருக்கு இந்த ரியல் எஸ்டேட் பெரியளவில் பணம் சம்பாதித்துக் கொடுக்கும்? யாருக்கு இந்தத் தொழில் எட்டாக்கனியாக இருக்கும் என்பதைக் காணலாம்.
ரியல் எஸ்டேட்டைக் குறிக்கும் காரக கிரகம் பூமிகாரகனான செவ்வாய்.
புதன்- கமிஷன் பெறு தலைக் குறிக்கும்.
சனி- கர்மக்காரகன

சனி- கர்மக்காரகன். விதிப் பயனைப் பெற்றுத்தருபவர்.
குரு- ஜீவனக் காரகன். தேவையான பொருளாதாரம் தருபவர்.
ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர் களின் கிரக அமைப்புகள்:
இந்தத் தொழிலை முதலீடு செய்து நடத்துபவர்களும் உண்டு. முதலீடின்றி கமிஷன் அடிப்படையில் செய்பவர் களும் உண்டு.
ஒருவர் பெரும் முதலீடு செய்து பணம் புரளும் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய வேண்டுமென்றால், அவரு டைய ஜாதகத்தில் 10-ஆம் இடம், 10-ஆம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ஆம் இடத் திலுள்ள கிரகங்கள், நவாம் சத்தில் 10- க்குடையவன் நின்ற ராசி, சனிக்கு 10-ஆம் இடம்,
லக்னம் ஆகியவை வலிமை பெற்றிருக்கும்.
4, 10, 11-ஆம் இடங்களுக்கு செவ்வாய், சனி, குரு சம்பந்த மிருக்கும்.
முதலீடின்றி கமிஷன் அடிப் படையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு 4, 10, 11-ஆம் இடங்களுக்கு புதன், செவ்வாய், சனி சம்பந்த மிருக்கும்.
சூரியன்
ஒருவருக்கு தொழிலைத் தரக்கூடிய கிரகம் சூரியனாக இருந்து, 4, 10-ஆமிடங்களுக்கு செவ் வாய், சனி சம்பந்தமிருந்தால், மலைமேடான பகுதி, எஸ்டேட், லாட்ஜ், அடுக்குமாடிக் கட்ட டங்கள், வணிகவளாகம் போன்ற வகையில் நல்ல லாபம் அடைவார்கள்.
சந்திரன்
ஒருவரின் 4, 10-ஆமிடங்களுக்கு சந்திரனுடன் சனி, செவ்வாய் சம்பந்தமிருந்தால், விவசாய நிலம், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் இருக்கும் நிலங்களை வணிகம் செய்து பயனடைவார்கள்.
செவ்வாய்
செவ்வாய், சனி சம்பந்தம் 4, 10-ஆமிடங் களுக்கு இருப்பவர்கள் வீடு, மனைகள் வாங்கல்- விற்றல் தொழில் செய்வார்கள். அத்துடன் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்து லாபம டைவார்கள்.
புதன்
தனுசு லக்னம், தனுசு ராசி அல்லது கன்னி லக்னம், கன்னி ராசி அல்லது மிதுனத்தில் புதன், சனி சம்பந்தம் அல்லது கன்னியில் புதன், சனி சம்பந்தமிருப்பவர்கள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், காலி நிலங்கள், காலி வீட்டுமனைகள், வங்கிக் கட்டடங்கள் போன்றவற்றின்மூலம் கமிஷன் அடிப்படையில் வணிகம் புரிவார்கள்.
குரு
4, 10, 11-ஆம் இடங்களுடன் குரு, சனி, செவ்வாய் சம்பந்தம் பெறுபவர்கள், கோடிக் கணக்கில் பணம் முதலீடு செய்து பெரிய கட்டடங்களை வாங்கி விற்பார்கள். அதுமட்டு மல்லாமல், வங்கியில் அடமானம் வைக்கப் பட்ட இடங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பார்கள். இந்த அமைப் பானது அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளான பினாமிகளுக்கு அதிக மிருக்கும்.
சுக்கிரன்
ஜாதகத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன் 4, 10, 11-ஆமிடங்களுடன் சம்பந்தம் பெறுபவர்கள், பழத்தோட்டங்கள், அழகு ஆடம்பர வீடுகள், புதிதாகக் கட்டிய வீடு ஆகியவற்றில் வணிகம் செய்பவர்கள். இவர்கள் முதலீடு, கமிஷன் அடிப்படையில் தொழில்புரிவார்கள்.
சனி
ஒருவரின் 4, 10, 11-ஆம் இடங்களுக்கு சனி, செவ்வாய் சம்பந்தமிருந்தால், முதலீடு செய்து பழைய வீடு, கட்டடங்களை வாங்கி, பழுது நீக்கி விற்று லாபம் சம்பாதிப்பார்கள்.
ராகு- கேது
ஒருவருக்கு 10-ஆம் இடத்துடன் ராகு- கேதுக்கள், சனி, செவ்வாய் சம்பந்தமிருந்தால், புறம்போக்கு நிலம், சட்டத்திற்குப் புறம் பான சொத்திற்கு போலிப் பத்திரங்கள் தயார் செய்து, வணிகம் செய்து வருவாய் ஈட்டுவார்கள்.
ஜாதத்தின் எந்த அமைப்பினர், எந்த வகை யான ரியல் எஸ்டேட் செய்வார்கள் என பார்த் தோம். யாருக்கு ரியல் எஸ்டேட் பெரும் வருமா னத்தைத் தரும் என்பதையும் பார்க்கலாம்.
ஜனன ஜாதகத்தில் ஒருவரின் பொருளா தாரத்திற்கு மிகமுக்கியமான கிரகச்சேர்க்கை யாகக் கருதப்படுவது குரு, சனி சம்பந்தமே.
மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் களைக்கூட உழைப்பால் உயர்த்தி உன்னத நிலையை அடையச் செய்யும் கிரகச்சேர்க்கை குரு, சனி சம்பந்தம். சனியுடன் குரு சம்பந்தம் இருப்பவர்கள் ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டிப் பறப்பவர்கள். இவர்களுக்கு உழைப் பிற்குமேல் வருமானம் கிடைக்கும். வேலை செய்வதற்கு முன்னே அதற்குரிய வருமானத் தைப் பெற்றுவிடுவார்கள். குருவுடன் சனி சம்பந்தம் நல்ல வருமானத்தைப் பெற்றுத்தரும். வேலை செய்து முடித்தபின்னே வேலைக்கான வருமானம் கிடைக்கும். இதில் குரு, சனி நீசம், அஸ்தமனம், வக்ரம் அல்லது மிகக் குறைந்த பாகை பெறாமல் இருக்கவேண்டும். சனி, குரு 6, 8, 12 சம்பந்தமுள்ளவர்கள் பெரிய தொழில் செய்து, பெரிய அளவில் நஷ்டமடைவார்கள். பொதுவாக சனி, குரு வக்ரமாக இருப்பவர்கள், முதலீடு இல்லாத ரியல் எஸ்டேட் செய்வது சிறப்பு. பரிகாரம்
பூமி தொடர்பான தொழிலில் இருக்கும் மந்தநிலை நீங்குவதற்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பஞ்சமி திதி அல்லது கேட்டை நட்சத்திரம் வரும் நாளில், மாலை நேரத்தில் வராகியம்மனுக்கு விசேஷ பூஜைசெய்து வழிபடவேண்டும்.
"ஓம் ஸ்ரீவராஹ மூர்த்தியே நமோ நமஹ' என்ற மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
செல்: 98652 20406