Advertisment

தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? 12 லக்னத்தினருக்கும் பரிகாரங்கள்!

/idhalgal/balajothidam/who-has-chance-win-election-remedies-12-lakhs

ன்னர் ஆட்சி போய் உலகெங்கும் பல நாடுகளில் மக்களாட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்பது சுதந்திரமான தேர்தல் முறைப்படி மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்களின் பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாண்டு காலம்வரை பதவிவகிப்பார்கள்.

Advertisment

ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஆட்சியாளர்களைத் தீர்மானித்து, மக்கள் தங்கள் உரிமையை நிலைப்படுத்தும் பொதுத்தேர்தல் நமது தமிழ்நாட்டில் 6-4-2021 அன்று நடைபெறஉள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்று மக்களுக்கு சேவைசெய்ய எத்தனைப் பேர் விரும்பினாலும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே வெற்றிவாகை சூடுகிறார்கள். சிலரது அரசியல் வாழ்க்கை சரித்திரத்தில் இடம்பெறுகிறது.

அரசியலுக்காக உயிர்த் தியாகம் செய்த பலரது பெயர்கூட தற்போது வெளியில் தெரியாமல் போய்விட்டது.

Advertisment

ss

ஜோதிடரீதியாக அரசியலில் ஜொலிப்பவர் யார்? இந்த 2021-ஆம் ஆண்டுத் தேர்தலில் கோட்சார கிரகங்களின் நிலைப்படி எந்த லக்னத்தினர் வெற்றிவாய்ப்பைக் கையகப்படுத்தப் போகிறார்கள் போன்ற பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.

நவகிரகங்களும் அரசியலும்

சூரியன்: ராஜ கிரகம். அரச பதவி, அரசுமூலம் அனுகூலம், தலைமைப் பண்பு, நிர்வாகத்திறன், ஆளுமைத் தன்மை, பொறுப்புணர்வு, ராஜதந்திரம் ஆகியவற்றை வழங்கும் கிரகம்.

சந்திரன்: தூயமனம், பொறுமை, நிதானம், தன்னடக்கம், அன்பு போன்றவைற்றைத் தரும் கிரகம்.

செவ்வாய்: வேகம், விவேகம், ஊக்கம், வெற்றி, செயல்திறன், உடல் வலிமை, தைரியத்தை வழங்கும் கிரகம்.

புதன்: புத்தி சாதுர்யம், பேச்சுத் திறமை, ராஜதந்திரம், லாப- நஷ்டம் அறியும் திறன் பற்றிக் கூறும் கிரகம்.

குரு: ஒழுக்கம், நேர்மை, நியாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நிதி, நீதியைப் பயன்படுத்தும்விதம் போன்றவற்றை வெளிப்படுத்தும் கிரகம்.

சுக்கிரன்: ஆடம்பரம், உல்லாச நாட்டம் பற்றித் தெரிவிக்கும் கிரகம்.

சனி: சளைக்காமல் உழைக்கும் தன்மை, மக்கள் சக்தி, மக்கள் ஆதரவு, பிறரின் கஷ்ட- நஷ்டங்களைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றை அளிக்கும் கிரகம்.

ராகு: எதிரிகளை நேரம்பார்த்து வீழ்த்தும் தைரியம், பழகும் தன்மையை அறிய உதவும் கிரகம்.

கேது: சட்ட நுணுக்கம், ஆன்மிக நாட்டம், பிரச்சினையைத் தீர்க்கும் திறன் ஆகிய ஞானத்தை வெளிப்படுத்தும் கிரகம்.

பன்னிரு பாவகங்களும் அரசியலும்

லக்ன பாவகம்: அரசியலில் ஈடுபட விரும்பும் ஜாதகரின் தோற்றம் அனைவரையும் வசீகரிக்கும் தன்மையுடையதாக இருப்பது அவசியம். ஜாதகரின் விதி, வாங்கிவந்த வரம், கொடுப்பினை ஆகியவற்றின் அடிப்படையில் லக்னம் வலிமைபெற வேண்டும்.

இரண்டாம் பாவகம்: தனது வாக்கு சாதுர்யத்தால் இனிமையாகப் பேசி அனைவரையும் கவரும் தன்மையுடன் இருக்கவேண்டும். கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றும் நாணயம் மிகுந்திப்பது நல்லது.

மூன்றாம் பாவகம்: மூன்றாம் பாவகம் என்பது உப ஜெய ஸ்தானம். திட்டமிடுதலில் திறமையுடையவராக இரு

மூன்றாம் பாவகம்: மூன்றாம் பாவகம் என்பது உப ஜெய ஸ்தானம். திட்டமிடுதலில் திறமையுடையவராக இருப்பதுடன், எடுத்த முயற்சியில் வெற்றிபெறுவதற்குத் தேவையான தைரியம், வேகம், விவேகம், சிந்திக்கும் திறன்மிக்கவராக இருத்தல் அவசியம். அனைத்துவிதமான சகாயமும் தேடிவர வேண்டும். விசுவாசமான வேலையாட்கள் நிரம்பியவராக இருக்கவேண்டும்.கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும்படியாக தொண்டர்களின் ஆதரவு வேண்டும்.

நான்காம் பாவகம்: சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப புரிந்து செயல்படும் கல்விஞானம் மிக அவசியம்.

ஐந்தாம் பாவகம்: பூர்வப் புண்ணிய ஸ்தான வலிமையுடன் புத்திக்கூர்மை, எதிர்காலம் பற்றி உணர்ந்து யோசிக்கும் ஆழ்ந்த ஞானம் நிரம்பியிருக்க வேண்டும். நிதிநிலைமையை சீராக்கி நீதியை நிலைநாட்டும் ஆழ்மன சிந்தனை நிறைந் திருக்க வேண்டும்.

ஆறாம் பாவகம்: இரண்டாவது உப ஜெய ஸ்தானம். தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்பை வழங்கும் பாவகம். எதிரி என்ற ஒருவர் இருந்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையை அடையமுடியும். ஒரு அரசியல்வாதியின் சிந்தனையில் எப்பொழுதும் தனது அரசியல் எதிரியை எப்படி கவிழ்ப்பது என்ற நோக்கம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். எதிரிகளை வெல்லும் திறமையுடன், ஆரோக்கியம் நிரம்பியவராக இருக்கவேண்டும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத் தேவைகளை சரிசெய்யும் திறமை மிகமிக அவசியம். ஜனனகால ஜாதகத்தில் ஆறாமிடம் வலிமைபெற்றவர்களுக்கு அரசியலில் வெற்றிவாய்ப்பு உறுதி.

ஏழாம் பாவகம்: ஒரு அரசியல்வாதிக்கு கூட்டணிக் கட்சியின் ஒத்துழைப்பும், வாக்காளர்களின் ஆதரவும், கட்சி நண்பர்களின் அனுசரணையும் மிகமிக அவசியம். ஏழாம் பாவகம் வலுப்பெற்றவர்களுக்கு நிரந்தரமான வாக்காளர்கள் இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் ஆதரவு தரும் கூட்டணிக் கட்சிகள் இருக்கும்.

எட்டாம் பாவகம்: விபரீத ராஜயோகம், தீர்க்காயுள், வம்பு, வழக்கை எதிர்கொள்ளும் பக்குவம் எட்டாம் பாவகம் வலிமை பெற்றவர்களுக்கே சாத்தியம்.

ஒன்பதாம் பாவகம்: பாக்கிய ஸ்தான வலிமை பெற்றவர்களுக்கே தேர்தலில் வெற்றிபெறும் அதிர்ஷ்டம், தொடர்ந்து பதவியில் நீடிக்கும் வாய்ப்பும் தேடிவரும்.

பத்தாம் பாவகம்: பத்தாம் பாவகம் வலிமைபெற்றவர்களுக்கு பதவியை நிர்வாகிக்கும் திறமை, அதிகாரத்தைப் பயன்படுத்தும் திறன், தலைமைப் பண்புகள் நிரம்பியிருக்கும்.

பதினொன்றாம்

பாவகம்: 3-ஆம் பாவகத்திற்கு பாக்கிய ஸ்தானம் 11-ஆமிடமான லாப ஸ்தானம். ஒன்பதாம் பாவகத்தின் பாவாத் பாவம். தேர்தல் வெற்றியின்மூலம் கிடைக்கும் வளர்ச்சி.

பன்னிரன்டாம் பாவகம்: சேவை மனப் பான்மை, தொண்டுபுரியும் மனநிலை.

மேலே கூறியபடி பன்னிரண்டு பாவகங்களின் வலிமையும், நவகிரகங்களின் அனுக்கிரகமும் நிறைந்த ஜாதகர் இருப்பதற்கே வாய்ப்பில்லை. ஆனால் மனிதப்பிறவி எடுத்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைத்துப் பண்பு களையும் ஒருங்கே பெற்றவர். மகா பாரதத்தில் குருக்ஷேத்தி ரப் போரில் சனாதன தர்மத்தின்படி அரசியல் ராஜதந்திரத் தைக் கடைப்பிடித்து சத்தியத்தை நிலை நாட்டியவர். கீதோ பதேசத்தின் மூலம் மனிதர்கள் வாழ்க்கைத் தத்துவத்தை உபதேசித்தவர். எனவே கிரகங்களோ, பாவகங்களோ வலிமை குன்றியவர்கள், கிருஷ்ண பரமாத்மா தேரில் அமர்ந்திருக்கும் மகாபாரதக் காட்சியை வைத்து வழிபட்டால் அரசியல் வெற்றி யும் ஞானமும் கிடைக்கும்.

அரசியலுக்கான கிரக அமைப்புகள்

ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து முயற்சியிலும் வெற்றிவாகை சூட ஜனனகால ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமைபெற வேண்டும்.

அத்துடன் சனி பகவானின் வலிமை மிகமிக அவசியம். சனி கொடுத்தால் எவர் தடுப்பார்? சனியின் உதவி இல்லாது யாரும் பதவியில் அமரமுடியாது.

மிகக் குறிப்பாக காலபுருஷ ஒன்பதாம் அதிபதி குரு, கர்மாதிபதி சனியின் சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் அரசியல் வாய்ப்புண்டு. மேலும் காலபுருஷ ஐந்தாமதிபதி சூரியன் மற்றும் கர்மாதிபதி சனியின் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும், மக்களின் அமோக ஆதரவைப்பெற்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி.

தற்போதைய கோட்சாரமும் தேர்தல் வெற்றி வாய்ப்பும் 12 லக்னரீதியாக எவ்வாறு இருக்கும் என்று காணலாம்.

மேஷ லக்னம்

லக்னாதிபதி செவ்வாய் 2-ல் ராகு வுடன் இணைவதால் குறுக்குவழியை மனம் நாடும். பதவி ஸ்தானா திபதி சூரியன் 12-ல் மறைந்தாலும், 10-ல் ஆட்சிபலம் பெற்ற சனியின் பார்வை பெறுவது பாதகத்தைக் குறைக்கும். 6-ஆமதிபதி புதன் நீசபங்கமாவதும், 7-ஆமதிபதி சுக்கிரன் உச்சம்பெறுவதும் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுத் தரும். 8-ல் கேது இருப்பதால் குறுக்கு வழி செயல்பாட்டால், தவறான வாக்குறுதி யால் அல்லது பேச்சால் வம்பு, வழக்கு தேடித்வரும். வீண் வம்பு வழக்கைத் தவிர்த்து வெற்றிவாய்ப்பை அதிகரிக்க ஞாயிறு காலை 6.00-7.00 மணிக் குள் சிவவழிபாடும், சூரிய நமஸ்காரமும் அவசியம்.

ரிஷப லக்னம்

லக்னாதிபதி மற்றும் ஆறாமதிபதி சுக்கிரன் உச்சம்பெற்று லாபஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. 7-ஆமதிபதி மற்றும் விரயாதிபதி செவ்வாய் லக்னத்தில் ராகுவுடன் இணைவதால், வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தும். ஏழில் கேது இருப்பதால் கூட்டணிக் கட்சிகள் கடைசிநேரத்தில் காலை வாரும். நண்பர் களால் வஞ்சகம், வம்பு, வழக்கு உண்டு. இதுபோன்ற பாதகம் குறைய ஒரேநாளில் 21 விநாயகரை வழிபடவும்.

மிதுன லக்னம்

லக்னாதிபதி புதன் 10-ல் நீசபங்கம் அடைவதும், லக்னத்திற்கு குரு பார்வையும் சிறப்பு. பதவி ஸ்தானாதிபதி சுக்கிரன் 10-ல் உச்சம்- சூப்பர். 5-ஆமிடத்திற்கு குரு, சனி பார்வை அமோகமான பலன். 3-ஆமதிபதி சூரியனுக்கு சனி பார்வை அருமை. 6-ஆமதிபதி செவ்வாய் ராகுவுடன் இணைவதால் எதிரிகள் ஓடி ஒளிவார்கள். மிதுன லக்னத் தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு வெற்றிவாய்ப்பு உறுதி. மேலும் பாக்கியப் பலனை அதிகரிக்க புதன்கிழமை புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

கடக லக்னம்

கடக லக்னம் இயல்பிலேயே அரசியல் வாதிகளுக்கு உகந்த லக்னம். தமிழ்நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களில் கடக லக்னத் தைச் சேர்ந்தவர்கள் அதிகம். லக்னாதிபதி சனி 7-ல் ஆட்சிபலம் பெற்ற சனியுடன் இணைந்திருப்பதால் வாக்காளர்கள், கூட்டணிக் கட்சிகள், தொண்டர்கள், நண்பர்கள் ஆதரவும் வெற்றி வாய்ப்பும் உண்டு. 9-ல் உள்ள சூரியனுக்கு சனி பார்வை இருப்பதால் வெற்றி உறுதி. 6-ஆமதிபதி குரு 8-ல் இருப்பதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். பதவி ஸ்தானதிபதி செவ்வாய் ராகுவுடன் 11-ல் இருப்பதால் ஆதாய நோக்கம் மனதில் மிகுதியாக இருக்கும். ஆனால் 5-ல் கேது இருப்பதால் அரசியலைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியாது. சுபப் பலனை அதிகரிக்க திங்கட்கிழமை காலை 7.00-8.00 மணிவரையான சனி ஓரையில் 11 பேருக்கு தயிர்சாதம் தானம் தரவும்.

சிம்ம லக்னம்

லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைவது சுபமல்ல. பதவி ஸ்தானாதிபதி குரு 7-ல் இருந்து லக்னத்தைப் பார்ப்பதாலும், ஆறாமதி பதி சனி ஆட்சிபலம் பெற்றிருப்பதாலும் சாதகமான வாய்ப்புண்டு. லக்னாதிபதி பலம்குறைவதால் இவர்கள் திறமை கட்சிக்குப் பயன்படும். இவர்களுக்குப் பயன்படுமா? வெற்றிவாய்ப்பை அதிகரிக்க ஒரேநாளில் ஒன்பது சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்யவும்.

கன்னி லக்னம்

லக்னாதிபதி 7-ல் நீசபங்கம் பெற்றா லும் விரயாதிபதி சூரியனுடன் சேர்வதால் மதில்மேல் பூனை போன்ற நிலைதான். ஆனால் பதவி ஸ்தானாதிபதி சனி லாபாதிபதி சந்திரனுடன் சேர்ந்து நிற்பது சற்று சாதகத்தையும் தரலாம். அஷ்டமாதிபதி செவ்வாய் ராகுவுடன் இணைந்து ஒன்பதாமிடத்தில் நிற்பதால், இவர்கள் வெற்றிபெற்றாலும் இவர்கள் கட்சி வெற்றிபெறாது. பதவியில் அமரும் வாய்ப்பு குறையும். வெற்றியை சுவைக்க சனிக்கிழமை மதியம் 1.00-2.00 மணிவரையான சனி ஓரையில் ஐந்து முதியவர்களுக்கு தண்ணீருடன் உணவுதானம் செய்யவும்.

துலா லக்னம்

லக்னாதிபதி சுக்கிரன் 6-ல் உச்சம் பெற்றதாலும், விரயாதிபதி புதன் மற்றும் பாதகாதிபதி சூரியனுடன் இணைவதாலும் லக்னாதிபதியின் வலிமை குறைகிறது. லக்னத் திற்கு குரு பார்வை இருப்பதால் கௌவரம் உண்டு. ஆனால் பதவி கிடைப்பது சிரமம். ஏழாமதிபதி செவ்வாய் எட்டில் ராகுவுடன் இணைந்ததால் வாக்குப்பதிவு குறையும் அல்லது கூட்டணியால், எதிர்கட்சியால் குழப்பம், கலவரம் ஏற்படும். சாதகமற்ற கோட்சாரத்தால் ஏற்படும் மன சஞ்சலம் குறைய கையில் சிவப்பு ரட்சை கட்டவும்.

விருச்சிக லக்னம்

லக்னாதிபதி செவ்வாய் ராகுவுடன் இணைந்து 7-ல் நிற்பதால் சம்பந்தமில்லாத மூன்றாம் நபரின் குறுக்கீடு இவர்கள் கவனத்தை திசை திருப்பும் அல்லது வெற்றியைத் தட்டிப் பறிப்பார்கள். 7-ஆமதிபதி சுக்கிரன் 5-ல் இருப்பதால் வாக்காளர்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் ஆதரவுண்டு. பதவி ஸ்தானத்திற்கு சனியின் பார்வை இருப்பதும், பத்தாமதிபதி பதவி ஸ்தானத்தில் இருப்பதும் பதவியை உறுதிசெய்கிறது. தேர்தல் முடியும்வரை யாரையும் நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது. லக்னத்தில் கேது இருப்பதால் விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

தனுசு லக்னம்

லக்னாதிபதி குரு உப ஜெய ஸ்தானமான 3-ல் நிற்பது சிறப்பு. குருவின் பார்வை 7 மற்றும் 9-ஆமிடங்களுக்கு இருப்பது சுபப் பலன். சனியின் 3-ஆம் பார்வை பாக்கியாதிபதி சூரியனுக்கு இருப்பது மிக அருமை. பதவி ஸ்தானாதிபதி செவ்வாய் 6-ல் ராகுவுடன் இருப்பதாலும், செவ்வாயின் எட்டாம் பார்வை லக்னத்திற்கு இருப்பதாலும் கௌரவக் குறைவு உண்டாகும். விரும்பிய பதவி கிடைக்காது. நவகிரக வழிபாடு துணைபுரியும்.

மகர லக்னம்

லக்னாதிபதி சனி லக்னத்தில் ஆட்சிபலம் பெற்றிருக்கிறார். ஆறாமிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் எதிரிகளை வெல்லும் தைரியம் இருக்கும். பதவி ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சேர்க்கை இருப்பதால், உரிமையை விட்டுக்கொடுத்து மௌனம் காக்கவேண்டிய சந்தர்ப்பம் உருவாகும். ஸ்ரீ சரபேஸ்வரை சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழிபடவும்.

கும்ப லக்னம்

லக்னாதிபதி சனி 12-ல் ஆட்சி. லக்னத்தில் நிற்கும் லாபாதிபதி குருவின் பார்வை 5, 7, 9-ஆமிடத்திற்கு இருக்கிறது. சனி பார்வை 5 மற்றும் 7-ஆமதிபதிகளுக்கு இருப்பதால் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி நிச்சயம். லக்னாதிபதி வலிமைகுறைவதால் கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைவுபடும். சனிக்கிழமையில் சிவவழிபாடு செய்தால் சுபப் பலனை வாரிவழங்கும்.

மீன லக்னம்

லக்னாதிபதி 12-ல் மறைகிறார். 5-ஆமதிபதி மற்றும் லாபாதிபதி சேர்க்கை லாப ஸ்தானத் தில் இருப்பது சிறப்பு. லக்னத்தில் அஷ்டமாதி சுக்கிரன் உச்சம்பெறுவதாலும், 9-ல் கேது இருப்பதாலும் அரசியலே வேண்டாம் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுமளவு மனக்கசப்பு இருக்கும். வீண்பழி, வம்புவழக்கு உருவாகும். திருச்செந்தூர் முருகனை வழிபடுவதால் மன சஞ்சலம் குறையும்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத் தும் கோட்சாரப் பொதுப் பலன்கள். வேட்பாளரின் சுய ஜாதகத்திற்கும் தசாபுக்திக்கும் ஏற்ப பலன்கள் மாறுபடும். 6-4-2021 அன்றுள்ள கிரக நிலவரப்படி, பதவி ஸ்தானத்தைக் குறிக்கும் காலபுருஷ 5-ஆமதிபதி சூரியன் தன் வீட்டிற்கு 8-ல், காலபுருஷ 12-ஆமிடத்தில் மறைகிறார்.

எனினும் பதவி ஸ்தானமான சிம்மத்திற்கு குருவின் 7-ஆம் பார்வை இருப்பதால் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படலாம். காலபுருஷ பத்தாமதிபதி சனி (சனி = பொதுமக்கள்) சந்திரனுடன் இணைந்து தனது 3-ஆம் பார்வையால் காலபுருஷ 5-ஆமதிபதி சூரியனைப் பார்க்கிறது. அதனால் பொதுமக்களுக்கு நோய்த்தாக்கம் மற்றும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தேர்தல் நடைபெறுமா அல்லது தள்ளிப் போகுமா என்ற மன சஞ்சலத்தை அதிகரிக்கும். சனி, சந்திரன் சேர்க்கை இருப்பதால் தடை, தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்பு அல்லது சில தொகுதிகளில் மறுதேர்தல் வாய்ப்பும் உருவாகலாம். சனி, சந்திரனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் ராகுவும் சேர்ந்திருப்பதால், காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமிடையே கருத்து வேறுபாடு மிகும். அதிகளவு வன்முறை மற்றும் கலவரம் உருவாகலாம். மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி, நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கினால் பிரபஞ்சம் அனைவருக்கும் விரும்பிய மாற்றத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

செல்: 98652 20406

bala020421
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe