ஜீவநாடி படிக்க ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். தங்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும், தாங்கள் விரும்பியபடி அந்த மகள்களுக்கு கணவர்கள் அமையவேண்டும்; அதற்காகத் தான் அகத்தியர் நாடியில் பலன்கேட்க வந்துள்ளதாகவும் குடும்பத் தலைவர் கூறினார்.
அவர் கூறியவை எல்லாவற்றையும் கேட்டு விட்டு அகத்தியரை வணங்கி, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
அகத்தியர் ஓலையில் தோன்றி எழுத்து வடிவாக அவர்களுக்குப் பலன் சொல்லத் தொடங்கினார்.
""இந்த மகன் சித்தர்கள் பூமியான தென்பாண்டி மண்டலத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தான். அரசு உதவித்தொகை பெற்று கல்லூரியில் படித்துப் பட்டமும் பெற்றான். அரசுப் பணிக்கான தேர்வெழுதி, அதிலும் தேர்ச்சியடைந்து அரசுப் பதவியில் அமர்ந்தான்.
இவனுடன் பணிபுரிந்த இந்த மங்கை நல்லாளை விரும்பி மணந்து கொண்டான். இவளும் இவனைப்போல் இப்போது உயர்ந்தபதவி வகிக்கின்றாள். திருமண வயதில் இருக்கும் மகள்களுக்குத் திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக
ஜீவநாடி படிக்க ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். தங்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும், தாங்கள் விரும்பியபடி அந்த மகள்களுக்கு கணவர்கள் அமையவேண்டும்; அதற்காகத் தான் அகத்தியர் நாடியில் பலன்கேட்க வந்துள்ளதாகவும் குடும்பத் தலைவர் கூறினார்.
அவர் கூறியவை எல்லாவற்றையும் கேட்டு விட்டு அகத்தியரை வணங்கி, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
அகத்தியர் ஓலையில் தோன்றி எழுத்து வடிவாக அவர்களுக்குப் பலன் சொல்லத் தொடங்கினார்.
""இந்த மகன் சித்தர்கள் பூமியான தென்பாண்டி மண்டலத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தான். அரசு உதவித்தொகை பெற்று கல்லூரியில் படித்துப் பட்டமும் பெற்றான். அரசுப் பணிக்கான தேர்வெழுதி, அதிலும் தேர்ச்சியடைந்து அரசுப் பதவியில் அமர்ந்தான்.
இவனுடன் பணிபுரிந்த இந்த மங்கை நல்லாளை விரும்பி மணந்து கொண்டான். இவளும் இவனைப்போல் இப்போது உயர்ந்தபதவி வகிக்கின்றாள். திருமண வயதில் இருக்கும் மகள்களுக்குத் திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
மகள்கள் இருவரும் மருத்துவக் கல்வி முடித்து, மருத்துவர்களாகப் பணி செய்கிறார்கள். அவர்களைப்போலவே மருத்துவம் படித்தவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அவர்களுக்குத் தனியாக மருத்துவமனை கட்டிக்கொடுத்து, ஒரே இடத்தில் தொழில் செய்யவும், தாங்களும் தன் மகள்களுடனேயே வாழ்நாளை முடிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனும் மணமகன் களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதுநாள்வரை பல மணமகன்களைப் பார்த்தும் இவர்கள் விரும்பியபடி அமைய வில்லை. சிலரிடம் வழிகேட்டுச் சென்றனர்.
அவர்கள் சில தோஷங்கள், இவர்கள் விருப்பம் நிறைவேறத் தடையாக இருப்பதாகவும், அதற்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷம் நிவர்த்தியாகி, விருப்பப்படி மாப்பிள்ளைகள் அமைவார்கள் என்றும் கூறியதை நம்பி, அவர்கள் கூறிய பரிகாரங்களைச் செய்தார்கள். ஆனால் விரும்பியபடி இன்னும் மாப்பிள்ளைகள் அமையவில்லை. இப்போது அகத்தி யரிடம் வழிகேட்டு வந்துள்ளார்கள். இதற்காகத்தான் அகத்தியனை நாடி வந்தார்களா, கேள்'' என்றார்.
""அகத்தியர் நாடியில் கூறியதைக் கேட்டீர்களா?'' என்றேன்.
""ஆமாம் ஐயா, அகத்தியர் நாடியில் கூறியது உண்மைதான். எங்கள் விருப்பம் போல், என் மகள்களுக்கு கணவர்கள் அமைய அகத்தியர்தான் அருள்புரியவேண்டும். நாடியைப் படித்து, நல்லவார்த்தையாகக் கூறுங்கள்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைத் தொடர்ந்து படித்தேன்.
""மகனே, உன் மகள்களுக்கு எந்த தோஷமுமில்லை. தோஷங்களால் தடையுமில்லை. உன் மகள்களுக்கு மணாளன் எப்படி அமையவேண்டுமென்று நீ ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் நீ விரும்பியபடி அந்த மகள்களுக்கு கணவர்கள் அமைய அமைப்பிருக்கவேண்டுமல்லவா. உங்கள் விருப்பப்படி அமையவில்லை என்று, அவர்களுக்குப் பருவ வயதில் நடக்கவேண்டிய சுபகாரியத்தைச் செய்துவைக்காமல் காலம் கடத்திக்கொண்டே வந்துவிட்டாய்.
உன் மகள்களுக்கு இப்பிறவியில் கணவர்களாக வரவேண்டியவர்கள் யார் என்று கூறுகின்றேன்.
பெரிய மகளுக்கு மருத்துவம் படித்தவன் கணவனாக அமையமாட்டான். ஆனால் இளைய மகளுக்கு மருத்துவத் தொழில் செய்பவன் கணவனாக அமைவான்.
உன் பெரிய மகளுக்கு உன்னைப்போல் அரசு வேலை செய்பவனே கணவனாக அமைவான். இது இவள் பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டது. அதனால்தான் உன் விருப்பப்படி திருமணம் செய்துவைக்க நீ செய்த அனைத்து முயற்சிகளும் பலன்தராமல் போய்விட்டன.
இவனும் நீ வசிக்கும் தலைநகரிலேயே வசித்துக்கொண்டிருக்கிறான். நீ பணி செய்யும் இடத்திலேயே, அவனும் உத்தியோகம் செய்கிறான். அவனுக்கு தந்தையும் இல்லை; உடன்பிறந்த சகோதர- சகோதரிகளும் இல்லை. தாய்மட்டும்தான் இருக்கிறாள். ஒரே மகன்.
உன் நண்பன் ஒருவன், உன் பெரிய மகளை அவனுக்குப் பெண் கேட்டு அவன் பிறப்பு ஜாதகத்தை ஏற்கெனவே உன்னிடம் கொடுத்துள்ளான். ஆனால் நீயோ மருத்துவத் தொழில் செய்பவனுக்குத்தான் மகளைத் தருவேன் என்று கூறி ஒதுக்கிவிட்டாய். அவனது ஜாதகம்கூட இப்போதும் உன் வீட்டில்தான் உள்ளது.
இன்று அவன் உன்னைப்போல் செல்வநிலையில் இல்லாமலிருக்கலாம்.
ஆனால், வருங்காலத்தில் அவன் மிகப்பெரிய பதவியை வகிப்பான். அவனால் சமூகத்தில் உனக்கு மதிப்புண்டாகும். உன் பெரிய மகளை அவனுக்கு மணம்முடித்து வைத்துவிடு. உன்னையும் பெற்றவர்களாய் மதித்துப் பேணிக் காப்பாற்றுவான்.
இளைய மகளுக்கு நீ விரும்பியதுபோல், மருத்துவத் தொழில் செய்யும், மருத்துவனே கணவனாக அமைவான். அவள் திருமணம் அவள் விரும்பியவனுடனே நடைபெறும். அவனுக்கே அவளைத் திருமணம் செய்து வைத்துவிடு.
இரண்டு மருமகன்களும், உனக்கு இரண்டு மகன்களாக இருந்து உங்களை மதித்துக் காப்பாற்றுவார்கள்.
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் யார் மனைவி? யார் கணவன் என்று அவர்களின் பிறப் பின்போதே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் இதனைப் புரிந்துகொள்ளாத பலர் சிலரின் தவறான வழிகாட்டுதலால் பருவத்தில் பயிர் செய்யாமல், ஏராளமான காளையரும், கன்னிகளும் "முற்றிய நாற்றாய்' வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்.
இவன் மகள்களின் திருமணம் தடையானதற்கு பாவ- சாப- தோஷம் என எதுவும் தடையாக இல்லை. பெற்றவர்களின் விருப்பம்தான் தடைப்படுத்தி, வருகிறது. இவர்களுக்கும், மகள்களுக்கும் அகத்தியனின் நல்லாசிகள்'' எனக்கூறி அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.
ஓலையை படித்துமுடித்துவிட்டு, ""ஐயா இனி உங்கள் மகள்களுக்குத் திருமணம் அகத்தியர் கூறியபடியா அல்லது உங்கள் விருப்பப்படியா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்'' என்றேன்.
கணவன், மனைவி இருவரும் ""அகத்தியர் கூறியபடியே நடத்திவிடுகின்றோம்'' என்று கூறி மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றனர்.
செல்: 99441 13267